PDA

View Full Version : ஞாபகம்செந்தமிழரசி
10-03-2008, 01:28 PM
ஒரு பெரிய மரம்
நிரம்பிய வெயிலில்
வழியும் நிழல்.

அசைவுகளை அள்ளி
கொட்டி செல்கிற காற்றால்
இலைகளின் நுனிகளில் இருந்து
சிந்தித் தெறிக்கிற
வெளிச்ச சொட்டுக்களில்
மீண்டும் நெளியும் நிழல்
எனக்கு ஞாபகமூட்டுகிறது
இருளையும் ஒளியையும்
மாறி மாறி சிமிட்டும்
காலத்தின் இமைகளை.

சிவா.ஜி
10-03-2008, 01:32 PM
வாவ்.....அருமை....இலையின் நுனி சொட்டும் வெளிச்சத்துளி....அபாரம்..
கண் சிமிட்டும் காலம்....அழகான வார்த்தைப் பிரயோகங்கள்....சுகமான காற்றை சுவாசித்ததைப்போல தெள்ளிய கவிதை.

மிகப் பாராட்டுகள் செந்தமிழரசி....வாழ்த்துகள்.

யவனிகா
10-03-2008, 01:34 PM
வெளிச்சச் சொட்டுகள்
கவிதைச் சொட்டுகளாய்
தெரித்திருக்கிறது...
வாழ்த்துக்கள்.

செந்தமிழரசி
10-03-2008, 02:37 PM
வாவ்.....அருமை....இலையின் நுனி சொட்டும் வெளிச்சத்துளி....அபாரம்..
கண் சிமிட்டும் காலம்....அழகான வார்த்தைப் பிரயோகங்கள்....சுகமான காற்றை சுவாசித்ததைப்போல தெள்ளிய கவிதை.

மிகப் பாராட்டுகள் செந்தமிழரசி....வாழ்த்துகள்.

நிறைய வாசிச்சிருக்கேன் ஒழிய எனக்கு கவிதை எழுதவே தெரியாது எதோ முயற்சிக்கிறேன் அந்த முயற்சிக்கு முத்தாய்ப்பாய் பின்னூட்டமிட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் சிவா.ஜி அவர்களே. நன்றி.

செந்தமிழரசி
10-03-2008, 02:41 PM
வெளிச்சச் சொட்டுகள்
கவிதைச் சொட்டுகளாய்
தெரித்திருக்கிறது...
வாழ்த்துக்கள்.

சகோதரி உங்களின் அற்புதமான படைப்புகளை வாசித்திருக்கிறேன், உங்களைப் போன்ற திறன்மிக்க படைப்பாளிகளின் வாழ்த்துக்கள் என்னை மேன்மேலும் எழுத முயற்சிக்க வைக்கும்.நன்றி.

சுகந்தப்ரீதன்
10-03-2008, 02:57 PM
நிறைய வாசிச்சிருக்கேன் ஒழிய எனக்கு கவிதை எழுதவே தெரியாது எதோ முயற்சிக்கிறேன் .
உங்கள் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துக்கள் தமிழரசி அவர்களே...!! ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் ஆகாதுங்கோ... செல்லக்கடியில சொல்லின் செல்வரை நீங்க கடிச்சதை நாங்களும் பார்த்தமாக்கும்... ஆழமான தமிழ் உங்க பேருக்கு ஏத்தமாதிரி உங்ககிட்ட இருக்கு.. அப்புறமென்ன..குழப்பம்...கண்டிப்பா..உங்களால ரொம்பவே நல்லா எழுதமுடியும்..??

கவிதை எழுதுவது எப்படி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8497)-ங்கற திரி உங்களுக்கு உதவுமான்னு ஒருமுறை பாருங்க...!!

அமரன்
10-03-2008, 03:04 PM
பூ அண்ணனின் திரைவிலக் காத்திருக்கின்றேன் என்ற கவிதையின் தலைப்பு நினைவுக்கு வருகிறது. புயல் மையல் கொண்டால் மழை மண்ணில் உண்டு வரிகளும் நினைவுத்தடாகத்தில் குமிழிகளை உருவாக்கிச் செல்கின்றது.

மர நிழல் என்ற விதத்தில் அர்த்தம் கொண்டால் தப்பிதமாகிவிடும் அபாயம் கவிதையில் நூலோடுகிறது. மற்றப்படி, வெளிச்சமே பலசமயங்களில் விரும்பப்பட்டாலும், இருட்டையும் சில சம்பவங்கள் அவசியமாக்கின்றன.. மானிடர்கள் சிலரோ தம்மை இருளுக்குள்/ஒளிக்குள் வலுக்கட்டாயமாக நுழைத்துக்கொள்வதும் கண்கூடு..இருளோ ஒளியோ தொடர்ந்து இருப்பதும் இல்லை.. இருளுக்குள்ளோ வெளிச்சத்துக்குள்ளோ தொடர்ந்து ஒளிந்திருப்பதும் மடமை..

வார்த்தகளை தேர்ந்தெடுத்ததும் கோர்த்ததும் தேர்ந்த கவிஞனுக்குரிய இலாவகம். அதற்காக பிரத்யேகமான பாராட்டுகள்..

செந்தமிழரசி
10-03-2008, 03:07 PM
உங்கள் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துக்கள் தமிழரசி அவர்களே...!! ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் ஆகாதுங்கோ... செல்லக்கடியில சொல்லின் செல்வரை நீங்க கடிச்சதை நாங்களும் பார்த்தமாக்கும்... ஆழமான தமிழ் உங்க பேருக்கு ஏத்தமாதிரி உங்ககிட்ட இருக்கு.. அப்புறமென்ன..குழப்பம்...கண்டிப்பா..உங்களால ரொம்பவே நல்லா எழுதமுடியும்..??அப்படிலாம் இல்லீங்க, ஒரு சின்ன சந்தேகமே அதைத்தான் அவர்கிட்ட கேட்டேன் மற்றபடி அவ்வளவு ஆழமா எனக்கு தமிழ் அறிவு இல்லை. நானும் கவிதை எழுத எனக்காக ஒரு திரி தேடி எடுத்து வந்து தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே.

செந்தமிழரசி
10-03-2008, 04:23 PM
மர நிழல் என்ற விதத்தில் அர்த்தம் கொண்டால் தப்பிதமாகிவிடும் அபாயம் கவிதையில் நூலோடுகிறது. மற்றப்படி, வெளிச்சமே பலசமயங்களில் விரும்பப்பட்டாலும், இருட்டையும் சில சம்பவங்கள் அவசியமாக்கின்றன.. மானிடர்கள் சிலரோ தம்மை இருளுக்குள்/ஒளிக்குள் வலுக்கட்டாயமாக நுழைத்துக்கொள்வதும் கண்கூடு..இருளோ ஒளியோ தொடர்ந்து இருப்பதும் இல்லை.. இருளுக்குள்ளோ வெளிச்சத்துக்குள்ளோ தொடர்ந்து ஒளிந்திருப்பதும் மடமை..ஒரு படைப்பின் கரு கச்சிதமாக கைப்பற்றப்பட்டு, அதை புரிந்து தரப்படுகிற விமர்சனங்களை விட அலாதியான இன்பம் வேறென்ன இருக்கிறது. வரும் விமர்சனம் கனியோ கல்லோ படைப்பை உள்ளற்றுப் பார்த்து தந்ததாய் இருந்தால் படைப்பாளி அதில் நிறைவடைந்து கொள்வார். அப்படி ஒரு பின்னூட்டம் தந்த அமரன் அவர்களுக்கு நன்றிகள் பல.

அறிஞர்
11-03-2008, 12:48 AM
இலை வழி வரும் ஒளியை பற்றி
எளிமையான வரிகள்.
அழகான முயற்சி அன்பரே.....
இன்னும் அதிகம் எழுதுங்கள்...

செந்தமிழரசி
11-03-2008, 05:46 AM
இலை வழி வரும் ஒளியை பற்றி
எளிமையான வரிகள்.
அழகான முயற்சி அன்பரே.....
இன்னும் அதிகம் எழுதுங்கள்...

விமர்சனமே ஒரு படைப்பாளியின் ஊக்கி, தங்களின் ஊக்கத்திற்கு நன்றி அறிஞர் அவர்களே.

க.கமலக்கண்ணன்
11-03-2008, 07:26 AM
அருமையாக எளிமையாக

அத்தனை ஒளியிலும் ஓவியமாய் எழுதி

அற்புதமாய் காவியம் படைத்து விட்டீர்கள்...

அசத்துங்கள்

அடுத்தடுத்து...

செந்தமிழரசி
11-03-2008, 07:42 AM
அருமையாக எளிமையாக

அத்தனை ஒளியிலும் ஓவியமாய் எழுதி

அற்புதமாய் காவியம் படைத்து விட்டீர்கள்...

அசத்துங்கள்

அடுத்தடுத்து...

அ வரிசையில் அழகிய பின்னூட்டம் தந்தமைக்கு நன்றிகள் பல.