PDA

View Full Version : NTFS, FAT32 இடையேயான வித்தியாசம் - விளக்கம்

வவுனியன்
10-03-2008, 11:55 AM
கணினிவன்தட்டினை அழித்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்தினை மீள நிறுவும் போது, அதனை எந்த பைல் சிஸ்டத்தில் அதனை மீள நிறுவுவது சிறந்தது?
அதாவது NTFS மற்றும் FAT32 ஆகிய பைல் சிஸ்டம்களுக்கிடையில் என்ன வித்தியாசம்? அத்துடன் இவை இரண்டிலும் எது சிறந்தது?
இதை பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து சற்று விளக்கமாக கூறுவீர்களா?

praveen
10-03-2008, 12:33 PM
FAT32 தனிநபர் பயன்பாட்டிற்கு உகந்தது அதுவும் 32GB அளவிற்குள் ஒரு தடுப்பு (பார்ட்டீசன்) இருப்பது போல பார்த்து கொள்ள வேண்டும். அதிக செக்யூரிட்டி மற்றும் விஸுவல் ஸ்டுடியோ, இனையத்தில் சர்வராக ரண் செய்வது போன்ற வற்றிற்கு NTFS சிறந்தது. இது GB லிமிட்டெல்லாம் இல்லை 250 GB கூட ஒரே பார்டிஸானாக போட்டுக்கொள்ளலாம்.

FAT32 எனில் அவசரத்திற்கு விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ஒரு windows 98 startup disk or bootable CD போட்டு ஹார்ட் டிஸ்க் சென்று பைலை காப்பி செய்து கொள்ள இயலும், வேறு டிரைவிற்கு மாற்ற இயலும். NTFS என்றால் சாமானியத்தில் இயலாது.

NTFSல் கம்ப்ரசன் செய்து இடத்தை மிச்சப்படுத்தலாம், மல்டி யூசர் என்றால் போல்டர், பைல் களுக்கு தனித்தனியாக அனுமதி வழங்கலாம். அனுமதியில்லாத ஒருவர் பைலை பார்ப்பதை/காப்பி செய்வதை/அழிப்பதை இப்படி பலவற்றை தவிர்க்கலாம். முழு டிரைவையுமே என்கிரிப்ட் செய்து ஹார்டு டிஸ்க் திருட்டு போனாலும் அதில் உள்ள டேட்டாவை யாரும் பார்க்க முடியாத படி செய்யலாம்

இப்படி பலப்பல சாத பாதகங்கள், சூருங்க சொல்லி மாளாது. நிறைய தட்டச்சு செய்ய என்னால் இயலாது :)

அக்னி
10-03-2008, 12:52 PM
NTFSல் கம்ப்ரசன் செய்து இடத்தை மிச்சப்படுத்தலாம், மல்டி யூசர் என்றால் போல்டர், பைல் களுக்கு தனித்தனியாக அனுமதி வழங்கலாம். அனுமதியில்லாத ஒருவர் பைலை பார்ப்பதை/காப்பி செய்வதை/அழிப்பதை இப்படி பலவற்றை தவிர்க்கலாம். முழு டிரைவையுமே என்கிரிப்ட் செய்து ஹார்டு டிஸ்க் திருட்டு போனாலும் அதில் உள்ள டேட்டாவை யாரும் பார்க்க முடியாத படி செய்யலாம்
இது எப்படி என்று விளக்குவீர்களா...?
முடிந்தால் விளக்கப்படத்தின் மூலம்... (ஏனென்றால், எனது OS Vista ஆங்கிலத்திலில்லை. படம்பார்த்தால் இலகுவில் பிடித்துவிட முடியும்.)
முக்கியமாக,

D: Drive இனுள் மற்றைய User நுழைவதைத் தடுப்பது எப்படி?
அத்தோடு Folder, File என்பவற்றை மற்றைய User திறப்பதைத் தடுப்பது எப்படி?

praveen
10-03-2008, 02:18 PM

எப்படி NTFS டிரைவை கம்ப்ரஸ் செய்வது என்று தெரிந்து கொள்ள
http://pubs.logicalexpressions.com/pub0009/LPMArticle.asp?ID=427

எப்படி ஒரு டிரைவ் + போல்டர் + பைலை மற்றவர் உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்துவது என்பதற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள். நேரமில்லாததல் தமிழில் தரவில்லை.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/filesecurityinNTFS.jpg

அக்னி
10-03-2008, 02:51 PM
ரொம்ப நன்றி பிரவீண்...
வாசித்து விளங்கிவிடுகின்றேன். தெரிந்துவிடுகின்றேன்.

அறிஞர்
10-03-2008, 03:16 PM
வாவ் பெரிய விளக்கமா இருக்குதே...

பகுருதீன்
11-03-2008, 06:25 PM
இவ்வளவு நாளா இதைதான் தேடிக்கிட்டு இருந்தேன் மிகவும் நன்றி ப்ரவீன்

அன்புரசிகன்
11-03-2008, 06:44 PM
அழகாக விளக்கம் உள்ளது. மிக்க நன்றி பிரவீன்...

தனிப்பட்ட பாவனைக்கு FAT32 சிறந்தது என்பது எனது எண்ணம்.

வவுனியன்
11-03-2008, 07:18 PM
மிக்க நன்றி பிரவீன்!!!!!

raj144
06-03-2009, 07:20 AM
நிண்ட நாட்களக இருந்த இச்சந்தேகத்தை விளக்கி விளக்கம் அளித்துள்ள பிரவின் அவர்களுக்கும் மிக்க நன்றி.

ஷீ-நிசி
06-03-2009, 01:41 PM
நீண்ட நாட்களாக எனக்கும் இதில் சிறு குழப்பம் இருந்தது. நன்றி ப்ரவீன்!

AARUL
08-03-2009, 03:15 PM
அண்ணா எனது கணினிஈல் க்ஸ்ப் ; விஸ்டா ;இன்ஸ்டால் பண்ணி உள்ளான் ;எக்ஸ்ட்ரா விண்டோஸ்செவென் இன்ஸ்டால் ஸய்ய விளக்கம் இதை பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து சற்று விளக்கமாக கூறுவீர்களா .எனது ஈமெயில் முகவரி. aarul.mmani@gmail.com

அன்புரசிகன்
08-03-2009, 06:48 PM

உங்கள் கேள்வி புரியவில்லை. முக்கிய சொற்களை ஆங்கிலத்தில் தாருங்களேன்.

அக்னி
08-03-2009, 08:25 PM
அண்ணா எனது கணினிஈல் க்ஸ்ப் ; விஸ்டா ;இன்ஸ்டால் பண்ணி உள்ளான் ;எக்ஸ்ட்ரா விண்டோஸ்செவென் இன்ஸ்டால் ஸய்ய விளக்கம் இதை பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து சற்று விளக்கமாக கூறுவீர்களா .எனது ஈமெயில் முகவரி. aarul.mmani@gmail.com (aarul.mmani@gmail.com)
உங்கள் கேள்வி புரியவில்லை. முக்கிய சொற்களை ஆங்கிலத்தில் தாருங்களேன்.
பொழிவு:
எனது கணினியில் xp, vista இரண்டும் install பண்ணியுள்ளேன். மேலதிகமாக windows 7 ஐ எப்படி install செய்வது?

AARUL
10-03-2009, 02:21 AM
எனது கணினியில் xp, vista இரண்டும் install பண்ணியுள்ளேன். மேலதிகமாக windows 7 ஐ எப்படி install செய்வது?
__________________

அன்புரசிகன்
10-03-2009, 02:28 AM
நானறிந்த வரையில் விஸ்டா மற்றும் வின்.7 போன்றவற்றை நிறுவும் முறையில் பெரிதாக மாற்றமில்லை. ஆனால் உங்கள் கணியில் உள்ள hard disk ல் இன்னொரு partition ல் நிறுவுவது சிறந்தது. காரணம் xp vista win7 போன்றவற்றில் அனேகமான folder கள் ஒரே பெயர்களின் வருகின்றன.

இதன் விளைவுகள் தெரியவில்லை. காரணம் என்னிடம் எல்லாம் ஒன்றாக இல்லை. ஆனால் முன்பு xp - win98 ஐ ஒன்றாக வைத்து பட்ட கஷ்டத்தினால் அதை பற்றி யோசிப்பதில்லை... ஆனால் நீங்கள் பாவிப்பதனால் பிரச்சனை இல்லை. ஏற்கனவே இரண்டு OS நீங்கள் நிறுவியிருக்கிறீர்கள். ஆகையால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. உங்களுக்கு குறிப்பாக எதில் ஐயம்???

AARUL
10-03-2009, 05:36 PM
நன்றி இன்ஸ்டால் முடி வடிந்தது.

ராசராசன்
12-03-2009, 04:43 PM
"NTFS"ல் இன்னொரு முக்கியமான அம்சம் "hot fixing".
ஒவ்வொரு முறையும் தகவல்கள் ஆங்காங்கே பதிந்து முடிந்தவுடன் அவற்றை மீண்டும் சரியாக பதிந்துள்ளதாவென சரிபார்த்துக்கொள்ளும் முறை.

இதனாலேயே இது சர்வரில் பயன்படுத்தப்படுகிறது

விகடன்
17-03-2009, 09:21 AM
NTFS இல் தாங்கள் குறிப்பிட்டதுபோல் வசதிகள் இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறேன். பலதடவை அதனை எவ்வாறு செய்வத்நூ என்பதறியாமல் குழம்பிப்போயிருக்கிறேன். இறுதியில் வெறுத்தி அதனை அறிந்துகொள்ளும் முயற்சியிலிருந்து விலகிவிட்டேன். இப்போதுதான் இந்தத்திரியை பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதை கண்டதும் நான் விட்ட இன்னோர் தவறையும் உணர்ந்தேன். ஓர் பதிவு இங்கே திரியாக போட்டிருந்தால் என் தேடலிற்கு உரிய பதில் சில வருடங்களுக்கு முன்னரே கிடைத்திருக்கும். என்பதுதான்...

விளக்கங்களை அள்ளித்தந்திட்ட பிரவீனிற்கு மிக்க நன்றிகள்.
அத்துடன், இந்த விளக்கத்திற்கு வித்திட்ட வவுனியனிற்கும் நன்றிகள்.

பரஞ்சோதி
17-03-2009, 09:54 AM
அருமையான விளக்கங்கள், நானும் கற்றுக் கொண்டேன். நன்றி தோழர்களே!