PDA

View Full Version : காதல் மொழி!.



அமரன்
09-03-2008, 06:57 PM
உதடுகள் உடைத்து
ஊத்தும் வார்த்தை மழை
உன்னை அண்மித்ததும்
காதலை துமிக்கிறது!

துடிக்கும் விழிமடல்கள்
உன்பேரை மந்திரம்போல்
நொடியும் உச்சரிக்கின்றன..!

தள்ளாடிய என்னடை
நீ மறைந்த மறுகணம்
துள்ளல் கொள்கிறது�!

ஏ..!காதலனே..!!!

காதலை மொழியென
நிதமும் நச்சரிக்கிறாயே
காதலின் மொழிதனை
அறியாத மூடனா நீ!!!

சுகந்தப்ரீதன்
11-03-2008, 10:53 AM
காதலை மொழியென
நிதமும் நச்சரிக்கிறாயே
காதலின் மொழிதனை
அறியாத மூடனா நீ!!!
மொழியை நல்லாவே மொழிஞ்சு விழியை விரிய வச்சிட்டீங்கண்ணா..!:lachen001:

சீக்கிரம் மூடத்தனத்தையும் ஓடவ்ச்சிருவீங்கண்ணா..:fragend005:

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் மூவகை கவிதையையும் மொழிந்தமைக்கு..!!:icon_b:

அமரன்
11-03-2008, 01:10 PM
நன்றி சுகந்தா...
பணிச்சுமை அதிகமாக இருந்தபோது, மனதை லேசாக்க எழுதிய கவிதை. பிழைகள் இருக்கின்றன என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. ஆனால் புலப்படவில்லை. உனக்குமா புலப்படவில்லை.:confused:

அனுராகவன்
13-03-2008, 07:27 AM
காதல் மொழி தன்னை
மறந்து திங்கள்
தொரும் தன்னை
எப்ப வரும்
என எதிர் பார்க்குமே
நல்லதொரு கவி
அதை படைத்த
அமரனுக்கு என்
வாழிய நன்றி..

க.கமலக்கண்ணன்
13-03-2008, 07:35 AM
சொற்ச்சுவையில்
பிழைஏற்பட்டால்
தவறில்லை
பொருட்சுவையில்
தவறு ஏற்படகூடாது
நல்ல கதைதையில்
குறை சொல்ல
முடியவில்லை அமரா...

அமரன்
13-03-2008, 08:04 AM
உங்களைப் போன்றவர்களின் உற்சாகமான ஊக்குவிப்பே ஆக்கங்களை தர உந்துகிறது.
அனு, கமல் இருவருக்கும் மனமார்ந்த நன்றி..

செல்வா
13-03-2008, 01:27 PM
காதல்மொழி கண்டவனே ஆயினும்
உன் மொழியில் மென்காதல்
கேட்குமோ என்காதில்
எனத் தவிக்கும் என்காதல்
அறியாயோ...?

அருமை குரு......
அது சரி அந்த துமிக்கிறது - என்பது நான் அறியாதச் சொல், பொருள் என்ன மறைக்கிறதா?

அமரன்
13-03-2008, 08:21 PM
அருமை குரு......
அது சரி அந்த துமிக்கிறது - என்பது நான் அறியாதச் சொல், பொருள் என்ன மறைக்கிறதா?
எங்க வட்டார வழக்கு...
மழை பெய்யுது என்றால் - அடைமழை
மழை தூறுது என்றால்- மிதமான மழை
மழை துமிக்குது என்றால் - பார்க்கமுடியாத ஆனால் உணரக்கூடிய மழை.. அதவாது அங்கொன்றும் இங்கொன்றுமாய் உடல் ஈரமாகும்..

நன்றி குருவே.. வருகைக்கும் உற்சாகத்துக்கும்.