PDA

View Full Version : ஏக்கம்!



அமரன்
09-03-2008, 06:52 PM
உன்னைத் தின்று
என்னில் சேர்க்கிறது
கண்கள்..

என்னுள்ள உன்னை
பிரிக்க முடியாது மூழ்கிறது
மனது.

மிதவையாக மாறாதோ
கண்களின்
இன்னொரு தின்னல்
ஏக்கத்தில் கழிகிறது காலம்!.!

pathman
10-03-2008, 10:29 AM
அழகிய கவிதை வாழ்த்துகள்

சுகந்தப்ரீதன்
11-03-2008, 10:46 AM
இந்த கவிதைக்கு யாராவது விளக்கம் கொடுத்தா என்னோட ஏக்கம் தீந்துரும்...!!

உங்க கவிதையை பாத்து எனக்கு ஏக்கமா இருக்கு.. இப்படி என்னால முடியலியேன்னு..?!

வாழ்த்துக்கள் அண்ணா.. என்ன ஏங்க வைக்கிற உங்க கவிதைகளுக்கு..!!

அமரன்
11-03-2008, 01:04 PM
இந்த கவிதைக்கு யாராவது விளக்கம் கொடுத்தா என்னோட ஏக்கம் தீந்துரும்...!!!
அந்தளவுக்கு என்னிடம் நற்திறமை இல்லை சுகந்தா.

சிவா.ஜி
11-03-2008, 01:54 PM
ஒற்றைப் பார்வை..அவளைக் கவர்ந்து கொண்டுவந்து...உயிருடன் கலந்துவிட்டது....
கலவையில் அவளெங்கே எனத்தெரியாமல்...முங்கித் தேடுகையில் முடியாமல் முழுவிட்டது மனம்....

மூழ்கிய மனதை வெளிக்கொணரும் மிதைவையாக, மீண்டும் ஒரு பார்வை வாய்க்காதா எனும் ஏக்கம் அழகான கவிதையாய் அரங்கேறியிருக்கிறது அமரன்.வாழ்த்துகள்.

செல்வா
13-03-2008, 01:45 PM
இரு நோக்கு இவளுன்கண் உள்ளது ஒரு நோக்கு நோய்நோக்கு மற்றந்நோய்க்கு மருந்து

பெண்ணே நீ ஒருமுறை பார்த்தாய் என் மனதில் முள்தைத்தது எங்கே இன்னொரு முறையும் பார் - முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்

இது அவளின் பார்வையைப் பற்றியது .... குருவின் கவிதையோ அவனின் பார்வை (வாசகன் நான் என்பதால். உண்மையில் கவிதை இருபாலர்க்கும் பொருந்தும்.)
கண்கள் உண்ண முடியுமா ? முடியும் என்கிறது காதல்...
மனம் அமிழுமா? அமிழும் என்கிறது அவள் நினைவு
இன்னும் இன்னும் அவளை அவள் காதலை கிடைக்கப் பெற்றால்
வாழ்க்கையில் அமிழாமல் முன்னேறுவீரோ....?

அமரன்
13-03-2008, 08:13 PM
இன்னும் இன்னும் அவளை அவள் காதலை கிடைக்கப் பெற்றால்
வாழ்க்கையில் அமிழாமல் முன்னேறுவீரோ....?
குருவே...
கன்னியர் கடைக்கண் காட்டி விட்டால் மட்டுமில்ல
கன்னியரைக் கடைக்கண் காட்டிவிட்டாலும்
மாமலையும் கடுகாகும் மாந்தர்க்கு..
அப்புறம் என்ன..

நயமான பின்னூட்டம் தந்த சிவாவுக்கும், குருவுக்கும் மனமார்ந்த நன்றி.

kavitha
14-03-2008, 10:53 AM
ரசிக்கும்படி இருக்கிறது வரிகள். வாழ்த்துகள் அமரன்.

"மூழ்கிய மனதை வெளிக்கொணரும் மிதைவையாக, மீண்டும் ஒரு பார்வை வாய்க்காதா எனும் ஏக்கம் "
இல்லை சிவா.. அப்படி பொருள்கொள்ள முடியாது.


"மிதவையாக மாறாதோ
கண்களின்
இன்னொரு தின்னல்"

மிதவையாக மாறாதோ... என்பது
மிதவையாக மாற்றாதோ என்றிருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரி..

தன்னையே மிதவையாக கொண்டு சேர்க்காதோ என்பது போல பொருள் கொள்ள வைக்கிறது. சரியா அமரன்?

அமரன்
14-03-2008, 11:08 AM
மிகச்சரி.. அக்கா...
நான் சொல்ல வந்ததுக்கு மாற்றாதோ என்பதே பொருத்தமானது..
ஓரெழுத்து வித்தியாசத்தில் கருத்தே மாறிவிட்டது..

புதிய பாடம் கற்பித்திருக்கிறீர்கள்.. நன்றி கவிக்கா.