PDA

View Full Version : கோரல் டிரா - வரலாறு 1 - கமலகண்ணன்.



க.கமலக்கண்ணன்
09-03-2008, 05:13 AM
வணக்கம் நண்பர்களே !

உங்களை இந்த கட்டுரையின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

அதற்கு மிக முக்கியமாக அனு அவர்களுக்கு மிக்க நன்றி. கணிணியில் வரையலாம் வாங்க!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7345&page=2) திரியில் #47 பின்னூட்டத்தில் அவர் கேட்டகேள்விக்கு ஆஹா நாமும் கிட்டதட்ட 12 வருடங்களாக கோரல்டிரா 4 இல் இருந்து உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பூர்வீகத்தை நாம் சரியாக தெரிந்து கொள்ளவில்லையே என்று நினைத்து அதற்கான தேடலை தொடங்கிய போது எனக்கே தெரியாத பல சுவாரசியமான செய்திகள் கிடைத்தன. அதை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த தொடரை எழுத தூண்டிய அனு அவர்களுக்கும் அந்த திரி தொடங்கி அந்த கேள்வியை கேட்க தூண்டிய ஆதவா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இதோ ஆரம்பிக்கிறேன்.

முன்னுரை

கோரல் டிரா இந்த பெயர் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பத்திரிக்கை, அச்சகத்துறை, விளம்பரத்துறை, வடிவமைப்பத்துறை இன்னும் பல துறைகளில் அடிக்கடி ஒலிக்கும் பெயர். உலகத்தில் உள்ள அனைத்து கணனியிலும் கிட்டதட்ட 80% இந்த கோரல்டிரா நிறுவப்பட்டிருக்கிறது என்பது உண்மை. இன்றைய தேதியில் கோரல் டிரா இல்லாத கணனியை நினைக்க முடியாது அப்படி கலந்து விட்ட மாபெறும் மென்பொருளின் வெற்றிக் கதை...

1. கோரல் நிறுவனத்தின் தொடக்கம்...


கோரல் (Corel) என்னும் நிறுவனத்தை தொடங்கிய Michael Cowpland 23 ஏப்ரல் 1943ல் இங்கிலாந்தில் பிறந்தார். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் Bsc பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கனடாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். Michael Cowpland தனது மேற்படிப்பையும் (1968) Ph.D.யும் (1973) ஒட்டவாவில் உள்ள கேரலிடன் பல்கலைகழகத்தில் முடித்தார். பின்னர் Bell Northern Research ல் வேலை செய்தார். 1973ல் MicroSystems International என்ற பெயர் மாறியது. அந்த நிறுவனத்தில் உடன் பணியாற்றியவர் Terry Matthews. பின்னர் Michael Cowpland, Terry Matthews இருவரும் இணைந்து Mitel Networks என்ற நிறுவனத்தை நிறுவினார்கள். அந்த நிறுவனம் தனியார் கிளை தொலைபேசி இணைப்பக மின்னனு இயந்திரத்தை உருவாக்கி விற்பனை செய்தார்கள். தொடக்கத்தில் நல்ல வெற்றிகரமாக இயங்கி அந்த நிறுவனம் இந்த இருவரையும் மில்லினர்களாக்கியது. மிக அதிகமாக 250மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை நடந்தது(தற்போது நம்ம ஊர் மதிப்புக்கு 4 கோடி). ஆனாலும் அதிக விரிவுபடுத்துதாலும் மேம்படுத்து பிரச்சனைகளாலும் British Telecom என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். 1984ல் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் உள்ள வேற்றுமையால் Michael Cowpland, Terry Matthews இருவரும் அதில் இருந்து வெளியேறினார்கள். Terry Matthews தான் தனியாக Newbridge Networks என்னும் நிறுவனத்தை கொடங்கினார்.

1985 வருடம் Michael Cowpland தனியாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கினார். "Cowpland Research Laboratory" என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் Corel என்று எல்லாராலும் அறியப்பட்டது(Corel என்பதன் விரிவாக்கம் "Cowpland Research Laboratory"). இன்டெல் அடிப்படையான மென்பொருளை உருவாக்க ஆரம்பித்தது. DTP என்னும் தொழில் நுட்பத்தில் மென் பொருள் உருவாக்கும் முதல் தனியான நிறுவனம் என்பது இதுதான்.

(DTP - Desktop publishing என்பது வடிவமைப்பு, புத்தகத்திற்கு தட்டச்சு செய்தல், பக்க வடிவமைத்தல், Image என்றும் போட்டோவை தொகுத்தல்(Editing), அட்டைப் பெட்டி (Package) வடிவமைப்பு, வெளிப்புற விளம்பர வடிவமைப்பு என்ற பல வகையான வடிமைப்புக்கு ஒட்டு மொத்தமாக DTP - Desktop publishing என்று பெயர்)

http://www.geocities.com/kamal_kkk/COWPLND.gif http://www.geocities.com/kamal_kkk/CowplandHome.gif http://www.geocities.com/kamal_kkk/corel1.gif
Michael Cowpland .......................... ஒட்டவாவில் உள்ள அவரது இல்லம் ...................................... கோரல் டிரா தொகுப்பு 1
நிறுவனர்,
கோரல் கார்பொரேசன்.

1. கோரல்டிராவின் முதல் தொகுப்பு வெளியீடு...

பலவடிவங்களுக்கு பின் உருவானதுதான் கோரல்டிரா. கோரல் நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட Michel Bouillon மற்றும் Pat Beirne ஆகியோரால் பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டது. அதில் மிகவும் வெற்றிகரமானது என்று நினைக்கப்பட்ட CorelDRAWவும் அந்த காலகட்டத்தில்தான் உருவானது. 1989ல் முதன்முதலாக CorelDRAWவின் 1வது தொகுப்பு வெளிவந்தது. மிக அற்புதமான வரவேற்பை பெற்றது முதல் தொகுப்பு. அடுத்தாக அதன் உழைப்பு மிகவும் அற்புதமானது.

(தொடரும்)


.

பாரதி
09-03-2008, 06:30 AM
மிக சுவாரசியமான செய்திதான் கமலக்கண்ணன்.
ஆர்வத்துடன் செய்திகளை சேகரித்து, இனிய நடையில் மன்றத்தில் பரிமாறுவதற்கு மிக்க நன்றி.

க.கமலக்கண்ணன்
09-03-2008, 06:50 AM
மிக சுவாரசியமான செய்திதான் கமலக்கண்ணன்.
ஆர்வத்துடன் செய்திகளை சேகரித்து, இனிய நடையில் மன்றத்தில் பரிமாறுவதற்கு மிக்க நன்றி.

நன்றி பாரதி. உங்களின் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி...

அனுராகவன்
09-03-2008, 07:37 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
மிக்க மகிழ்ச்சி..
ஆகா!! என்ன அருமையான வரலாறு..
தொடர்ந்து தாருங்கள்..
மிக்க உபயோகமான தகவல்கள்..

க.கமலக்கண்ணன்
09-03-2008, 08:58 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
மிக்க மகிழ்ச்சி..
ஆகா!! என்ன அருமையான வரலாறு..
தொடர்ந்து தாருங்கள்..
மிக்க உபயோகமான தகவல்கள்..


நன்றி அனு. உங்களின் ஊட்டமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தொடரும் இதன் அடுத்த பகுதி...

rajaji
17-03-2008, 05:16 AM
மிகவும் சுவாரசியமான செய்திகள்.......

நானும் கோரல் ட்ராவைப் பயன்படுத்துபவன்...... ஆனாலும் அதன் வரலாற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில்லை.......

நண்பர் கமலக்கண்ணனது முயற்சியால் இன்று அறிந்து கொள்ளுகிறேன்.....

தங்கள் இப் படைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்....

க.கமலக்கண்ணன்
17-03-2008, 05:51 AM
நன்றி ராஜாஜி உங்களின் ஆர்வமுட்டும் பின்னூட்டத்திற்கு

நன்றி... மிக்க நன்றி

அனுராகவன்
17-03-2008, 07:02 AM
திரு.கமலகண்ணனே!!
அடுத்த பாடம் எப்போது?
நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம்..
விரைவில் தொடருங்கள்..!!

க.கமலக்கண்ணன்
17-03-2008, 10:17 AM
உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. அடுத்த பாடம் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் பதிக்கிறேன்.

reader
08-04-2008, 12:35 PM
இது போன்ற அரிய விஷயங்களை சேகரித்து தொகுத்து வழங்கும் கமலக் கண்ணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
சில விஷயங்களை தேடிப் பிடித்து படிப்பது என்பது ஒரு அருமையான விஷயம் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் போது ஏற்படும் ஆத்ம திருப்தி......... சொல்லி தெரிவதில்லை அது... செய்தால் மட்டுமே உணர முடியும்.

க.கமலக்கண்ணன்
26-04-2008, 02:32 PM
நன்றி தோழரே... நீங்கள் சொல்வது உண்மைதான்...

சூரியன்
21-05-2008, 05:45 AM
மிகவும் உபயோகமான திரி .
தொடருங்கள் கமல் அண்ணா.

ஆர்.ஈஸ்வரன்
25-02-2010, 09:22 AM
மிகவும் உபயோகமான திரி .

அக்னி
25-02-2010, 09:34 AM
ஆமா... ஆனால் வாத்தியாரத்தான் ரொம்ப நாளாக் காணோம்...

ஆர்.ஈஸ்வரன்
25-02-2010, 09:50 AM
வாத்தியாருக்கு தேர்வு நேரமாக இருக்குமோ?

AARUL
26-02-2010, 03:43 PM
CORAL DRAW, PHOTO SHOPஎன்ன வித்தியாசம்