PDA

View Full Version : தமிழ் அறிக....!.



அனுராகவன்
08-03-2008, 05:02 AM
தமிழ் அறிக


அசைத்தல்,அறைதல்,அரற்றுதல்
இசைத்தல்,இறுத்தல்,இயம்புதல்
உரைத்தல்,உளறுதல்,உன்னுதல்
என்னுதல்
ஓதுதல்
கதைத்தல்,கத்துதல்,கரைதல்,கழறுதல்
கிளத்துதல்
குயிலுதல்,குழறுதல்,குறித்தல்
கூறுதல்
சாற்றுதல்
செப்புதல்
சொல்லுதல்
நவிலுதல்
நுவலுதல்,நுதலுதல்
நொடித்தல்
பறைதல்,பகருதல்,பயிருதல்,பன்னுதல்
பிதற்றுதல்,பினாத்துதல்
பீற்றுதல்
புகலுதல்,புலம்புதல்,புகழுதல்
பேசுதல்
பொழிதல்
போற்றுதல்
மாறுதல்
மிழற்றுதல்
முழங்குதல்
மொழிதல்
விள்ளுதல்,விளத்தல்,விளம்புதல்,விடுத்தல்,விதத்தல்
வலித்தல்.

பொதுவாக, சொல்லுதல் என்னும் பொருளினை இச்சொற்கள் குறித்தாலும், கூர்ந்து நோக்குங்கால் நுட்பமான பொருட்சிறப்பினைத் தருவதாகவும் இருக்கின்றன.

குயிலுதல் - குயில் போலப் பேசுதல்
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
கதைத்தல் - கதைபோல் சொல்லுதல்
கரைதல் - காக்கைபோல் கரைந்து அழைத்துச் சொல்லுதல்
இயம்புதல் - இசைக் கருவியின் இனிமையுடன் பேசுதல்
உளறுதல் - ஒன்று கிடக்க ஒன்று சொல்லுதல்
பொழிதல் - மழைபோல் இடையறாது சொல்லுதல்
விளம்புதல் - சகலமானவர்களுக்கும் சொல்லுதல்.

கூறுதலைக் கூறத் தமிழில் இத்தனை சொற்களா? நம் புருவங்கள் உயர்கின்றன......

க.கமலக்கண்ணன்
08-03-2008, 08:21 AM
அருமை அனு

ஆனால்

இதற்கு விளக்கத்துடன்

ஈட்டியாய் கொடுத்தால் படிக்கும்

உள்ளங்களுக்கு மிகவும் அறிவு

ஊற்றாய் இருக்கும் அல்லவா

எண்ணி பாருங்கள் அனு

மனோஜ்
10-03-2008, 01:23 PM
சொற்களை சொன்னவிதம் அருமை அனுஅக்கா

அனுராகவன்
12-03-2008, 03:32 AM
நன்றி உங்களுக்கு..
தொடர்ந்து மற்றவரும் தரலாமே!!

க.கமலக்கண்ணன்
12-03-2008, 08:44 AM
நீங்கள் கொடு அருமை அனு ஆனால் சற்றே விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்...

செந்தமிழரசி
12-03-2008, 10:49 AM
அசைத்தல் - சொல்லுதல், ஆடுதல், ஆட்டுதல் என்று பலபொருள் கொண்டாலும் சொல்லுதலும் அசைதலுக்கு நிகரே.

அசை - அசைசொல், நேரசை, நிரையசை

அறைதல் - அறைகூவல், பறையறைதல், வலிய அழைத்தல், போருக்கு அழைத்தல்


அரற்றுதல் - சுரும்பரற்றும் சோலை (சங்ககால இலக்கியங்கள்), பேரொலி

இசைத்தல் - பேசுதல், அழைத்தல்

இறுத்தல் - வாக்குறுதி, வாக்கு, சத்தியம் செய்தல்

இயம்புதல் - சொல், ஒலி, இயம் - வாச்சியம் (musical instrument)

உரைத்தல் - உரைப்பது, உரையாற்றுவது , உரை - நீளமானப் பேச்சு

உளறுதல் - தொளதொளத்தல்

உன்னுதல் - பேச வாய் கூடுதல்

என்னுதல் - வெளிப்படுத்தல், என்று சொல்லுதல்

ஓதுதல் - கற்பது, கற்றுக்கொடுப்பது, கத்துவது, முணுமுணுப்பது

கத்துதல் - முழங்குதல்

கழறுதல் - இடித்துரைத்தல்

கிளத்துதல் - பொருள் விளங்க பேசுதல், வெளிப்படுத்தல்

குழறுதல் - திக்குதல், தள்ளாடிப் பேசுதல், குழம்பி பேசுதல், தெளிவில்லா பேச்சு

குறித்தல் - கணித்து பேசுதல், ஒன்றை குறித்து பேசுதல்

கூறுதல் - குறை சொல்லுதல், கோட் சொல்லுதல், உறுதி கூறுதல்

சாற்றுதல் - விளம்பரப்படுத்துதல்

செப்புதல் - சொல்லுதல் (தெலுங்கு மொழியில் வழங்கப்படும் சொல், தெலுங்கு என்றால் தெள்ளியதமிழ், தூயத்தமிழ் என்றும் பொருளுண்டு)

சொல்லுதல் - இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை வார்த்தையும் சொல்லுதலைக் குறிக்கும்

நவிலுதல் - கற்றல், கற்று சொல்லுதல்

நுவலுதல் - சொல், கல்வி நூல் என்றும் பொருளுண்டு

நுதலுதல் - கருதுதல், கூறுதல்

நொடித்தல் - குறை சொல்

பறைதல் - பறை முழங்கில் சொல்லுதல்

பகருதல் - உணர்த்துதல்

பயிருதல் - வன்மையாய் பேசுதல்

பன்னுதல் - பேசுதல்

பிதற்றுதல் - அலட்டுதல், வளவளத்தல், உளறுதல்

பினாத்துதல் - உளறுதல், தொணுதொனுத்தல்

பீற்றுதல் - அலட்டுதல், நடவாத ஒன்றை நடந்ததாய் சொல்லி பெருமையடித்துக் கொள்ளுதல்

புகலுதல் - விருப்பம் சொல்லுதல்

புகழுதல் - புகழ்ந்து பேசுதல்

போற்றுதல் - கடவுளர்களைப் பாடுதல், உயர்த்தி பாடுதல்

மாறுதல் - உரைக்கலங்குதல், குழப்புதல்

மிழற்றுதல் - மழலை மொழி

முழங்குதல் - உரக்க சொல்லுதல்

மொழிதல் - மறுத்து பேசுதல், பதில் சொல்லுதல், மறுமொழி

விள்ளுதல் - வெளிப்படையாய் பேசுதல்

விளத்தல் - சோதிக்க பேசுதல், விளக்கமாய் பேசுதல்

விளம்புதல் - விசாரித்தல்

விடுத்தல் - விடைதருதல்

விதத்தல் - சிறப்பாக பிரித்து எடுத்துரைத்தல்

வலித்தல் - வல்வழக்குரைத்தல்

நான் கற்றதையும் கேட்டதையும் வைத்து அறிந்த விளக்கம் தந்திருக்கிறேன், பிழை இருக்குமானால் தோழர்கள் திருத்தலாம்.

அனுராகவன்
13-03-2008, 12:53 AM
நன்றி செந்தமிழயரசி அவர்களே!!
மிகவும் நல்ல விளக்கம்..
தொடந்து பல தமிழ் சொற்களை பயில வாருங்கள்,பகிருங்கள்
என் வாழ்த்துக்கள்

க.கமலக்கண்ணன்
13-03-2008, 07:28 AM
உங்களின் பெயர் மட்டும் செந்தமிழ் அரசி அல்ல

உண்மையிலேயே செந்தமிழுக்கும் அரசி நீங்கள் தான்

உயர்வான விளக்கத்தோடு மிக அற்புதமாய் படைத்திட்ட

உங்களுக்கு நன்றிகள் பல செந்தமிழரசி...

அமரன்
13-03-2008, 07:43 AM
நல்ல விடயம். தமிழில் அ..ஆ..இ நிலையில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு உபயோகமானது. கற்கும் ஆவல் அதிகரிக்கிறது. தொடருங்கள்.
ஓட்டத்தை தொடங்கிவைத்தவருக்கும் தொடர்ந்தவருக்கும் இதயபூர்வமான நன்றி.

செந்தமிழரசி
13-03-2008, 07:48 AM
நல்ல விடயம். தமிழில் அ..ஆ..இ நிலையில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு உபயோகமானது. கற்கும் ஆவல் அதிகரிக்கிறது. தொடருங்கள்.
ஓட்டத்தை தொடங்கிவைத்தவருக்கும் தொடர்ந்தவருக்கும் இதயபூர்வமான நன்றி.

தோழரே தன்னைத் தாழ்த்திக்கொளல் உயர்ச்சி நானும் அறிவேன். உங்கள் காதல் மொழி கவிதையில் உள்ள வார்த்தைப் பிரையோகங்கள் சொல்லும் நீங்கள் அ, ஆ நிலையில் உள்ளவரா ஆழ மூழ்கி அமிர்த தமிழ் அறிவு பெற்றவரா என்று.

அனுராகவன்
17-03-2008, 08:10 AM
நல்ல விடயம். தமிழில் அ..ஆ..இ நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு உபயோகமானது..
அமரன் அவர்களே!!
நாங்கள் எல்லாம் இப்போதுதான் தவழ்ந்து தத்தி தத்தி ஏதோ சொல்கிறோம்.
ஆனால் நீங்கள் அனுபவம் கொண்டவர்கள்..


நீங்க கற்கும் ஆவல் அதிகரிக்கிறது. தொடருங்கள்.
ஓட்டத்தை தொடங்கிவைத்தவருக்கும் தொடர்ந்தவருக்கும் இதயபூர்வமான நன்றி.
நன்றிக்கு என் வணக்கம்..
நீங்களும் எங்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்..
தொடர்ந்து வருகிறோம்..

அறிஞர்
17-03-2008, 02:58 PM
வாவ் பல பல புதிய சொற்கள்.... நன்றி நண்பர்களே..
------
அனு...
என்னுதல் என்றால் என்ன?

அனுராகவன்
18-03-2008, 01:22 AM
என்னுதல் - வெளிப்படுத்தல், என்று சொல்லுதல்
என்னம்-வெளிப்படுத்து என்று பொருள்.
எண்ணம்- நினைப்பது..(சொல்,எழுத்து)
என்னுதல்..
உதாரணம்: நான்- தன்னுடைய என்பதை என்னுகிறேன் என்று சொல்லாம்..
தன் சுய கருத்தை மற்றவரிடம் சொல்லுதல்.

க.கமலக்கண்ணன்
18-03-2008, 09:34 AM
நன்றாக இருக்கிறது அனு, தொடங்கள். செந்தமிழரசி எங்கே காணும்?...

Ram-Sunda
18-03-2008, 09:59 AM
அனு நீங்க எங்க இத எல்லம் புடிச்சிங்க? பாதிக்குக்கு மேல நான் கேள்விபட்டதுகூட இல்ல.....
வழ்த்துக்கள்

ஆதி
18-03-2008, 12:17 PM
என்னுதல் - வெளிப்படுத்தல், என்று சொல்லுதல்
என்னம்-வெளிப்படுத்து என்று பொருள்.
எண்ணம்- நினைப்பது..(சொல்,எழுத்து)
என்னுதல்..
உதாரணம்: நான்- தன்னுடைய என்பதை என்னுகிறேன் என்று சொல்லாம்..


அக்கா ஒரு சிறு ஐயம்

எண்ணம் இருக்கு தெரியும்..

என்னம் என்னும் சொல் இருக்கிறதா ?

என்னுதல் *- என்னும் - என்று சொல்லுதல் இது புரிகிறது.

என்னம் எப்படி வெளிப்படுத்தல் ஆகும்.

கொஞ்சம் விளக்கம் தருவீங்களா ? அக்கா..

அன்புடன் ஆதி

கௌதமன்
10-12-2010, 05:31 PM
பார்த்தேன், மலைத்தேன்
குடித்தேன் தமிழ்த்தேன்.
அனுவிற்கு என் உளமார்ந்த நன்றிகள்!