PDA

View Full Version : முதலில் அனைவரும் தமிழில் பெயர் எழுத முயறĮ



தமிழ்குமரன்
04-04-2003, 08:30 AM
தலைவரே தாங்களே வழிகாட்டுங்கள்
இராஜகுமாரன் தமிழில் மிக அழகாக உள்ள்து.

poo
04-04-2003, 01:09 PM
நல்ல விஷயம்தான் அன்பரே... ஆனால் உங்களைப் போன்ற சொந்த கணினி வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமானால் அது சாத்தியப்படலாம்.. வெளியில் இணைய மையத்தில் இருந்து தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்க வேண்டி இருக்கும்.. (தமிழ் எழுத்துரு இல்லாமல்.. ) ஆதலால் உள்ளே வருவதற்காவது ஆங்கில பெயர் அவசியமாகிறது... (வந்த பின்னர்தானே எழுத்துருகூட இறக்க முடிகிறது!!!).

ஆகவே.. பொருத்தருளுங்கள்.. எங்களுக்கும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஆசைதான்!!!..

siva
04-04-2003, 04:34 PM
முரசு சில சமயங்களில் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. எப்படி தமிழில் பெயர் எழுதி உள்ளே நுழைவது நண்பரே. மன்னிக்கவும்

aren
05-04-2003, 10:04 AM
முடிந்தவரை தமிழில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். முடியாத பட்சத்தில் ஆங்கிலத்தை அனுமதிப்பதில் தவறில்லையே நண்பரே.

இராசகுமாரன்
05-04-2003, 11:23 AM
தமிழில் பெயர்வைக்கும் போது சில சமயம் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அதாவது ஒரு புள்ளி வைப்பதற்க்கு பதில் இரண்டு புள்ளி வைத்தாலும் அது ஒன்று போல் தான் தெரியும், ஆதனால் உள்ளே வர சிலசமயம் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அப்படி பிரச்சனை ஏதும் வந்தால் உடனே என்னை தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு பிரச்சனை வந்தால் என் Admin பாஸ்வேர்ட் உபயோகப்படுத்தி சரி செய்துவிடுவேன், எனக்கே வந்து விட்டால்? அதனால் முடிந்தவர்கள் உபயோகப்படுத்துங்கள். நான் தக்க நடவடிக்கைகள் எடுத்து விட்டு பிறகு உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

anushajasmin
05-04-2003, 12:29 PM
தலைவரே பயத்தைக் கிளப்பி விடாதீர்கள்...

jasmin
06-04-2003, 12:55 PM
poo கூறுவது சரிதான். அதனால் ஆங்கிலத்தில் பெயர்யிருப்பது தவறு இல்லை. இந்த வலையின்
பயனை, வலை மையம் நடத்துபவரிடம் கூறவும். அப்போது தான் வலை மையத்தில் இருக்கும்
கணனி அனைத்திலும் எழுத்துருவி இறக்கிவைப்பார்.

ஜாஸ்மின்
மல்லிகை தோட்டம்

madhuraikumaran
07-04-2003, 10:41 PM
தலைவரே... பெயரைத் தமிழில் மாற்றி விட்டீர்கள் போலிருக்கிறது?... வாழ்த்துக்கள் !!!
(எனக்கு இன்னும் பயாமாகத்தான் இருக்கிறது... ஆகவே கொஞ்ச நாள் போகட்டும்... பின் என் பெயரைத் தமிழில் மாற்றிக் கொள்கிறேன் !)

poo
08-04-2003, 02:44 PM
மதுரைக்குமரா அஞ்சாதே... அருமைத்தலைவர் இருக்கிறார்..(வழக்கமா நம்ம நாராயணா செய்வார் இந்த வேலையை!!?)

madhuraikumaran
08-04-2003, 04:06 PM
நன்றி... பூ...

suma
08-04-2003, 05:15 PM
என்பேரை மாற்றிவிட்டேன்.

தமிழ்குமரன்
10-04-2003, 04:28 PM
தமிழ் மீது அளப்பறிய காதல் கொண்ட அனைவருக்கும் நன்றி
தலைவருக்கு நன்றி.
100 நண்பர்களும் தமிழில் பெயர் எழுதும் நாள் பொன்னாள்.

Nanban
05-06-2003, 06:39 PM
நடுவே இரண்டு மூன்று நாட்களுக்கு, தமிழிலே பெயர் வைத்திருந்தேன். ஆனால், ஒரு நாள் வேறு ஒரு கணிணி மூலம், உள்ளே நுழைய முயற்சித்தும் முடியவில்லை. F12 key வேலை செய்யாததால் வந்த பிரச்னை. பின்னர் மீண்டும் ஆங்கிலத்திற்கே மாற்றி விட்டேன்.

சேரன்கயல்
06-06-2003, 12:27 PM
நானும் தமிழில் எழுத முயற்சித்து முடியாமல் போயினும், விக்கிரமாதித்தன் போல போராடி, இப்போது தமிழில் பதிவு செய்துகொண்டிருக்கிறேன்...ஏ கலப்பை துணையுடன் உழுதுகொண்டிருக்கிறேன்...
முயன்றால் அனைத்தும் முடியும்...வாழிய தமிழ்...

___________________
நலம் வாழ்க...
சேரன்கயல்...

karikaalan
07-06-2003, 09:49 AM
தமிழில் பெயர் எழுத ஆவல்தான்; முன்னர் ஒருமுறை அவ்வாறேதான் இருந்தது.

பிறருடைய கணினிமூலம் எப்போதாவது விடுப்பு பற்றி செய்தி சொல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டால் என்செய்வது என்ற காரணம் பொருட்டே, எனது பெயரை ஆங்கிலத்தில் பதிகிறேன்.

===கரிகாலன்

puthusu
07-06-2003, 08:31 PM
திரு. கரிகாலன் அவர்கள் கூறும் பிரச்சினையே எனக்கும்...
பலநாள் வரவெ முடிவதில்லை.வேலைப்பளு.
கிடைத்த இடத்தில் சட்டென எட்டிப்பார்க்க இதுவே வசதி..