PDA

View Full Version : தலைமை ஏற்க வா.....



நம்பிகோபாலன்
06-03-2008, 05:46 PM
பிடித்திருக்கிறது என்று நீ
சொன்ன பிறகு தான்
உன்னை மனதில்
குடிவைத்தேன்....
நிச்சயத்திற்க்கு நாட்குறித்து
மணமேடைக்கு பதிவுசெய்து
கனவில் உன்னோடுவாழ்கிறேன்...
நீயோ
என்னை பிடிக்கவில்லை என்று
கடித்ததில் அனுப்பினாய்.....
வருத்தம் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை
நண்பனே.....
உன்னுள் ஆயிரம் கவலைகள்
இருக்கட்டும்....
நிச்சயத்திலேயே நின்று போன
எனக்கு
சமுதாயம் கொடுக்க போகும்
பட்ட விழாவிற்க்கு
தலைமை ஏற்க வா.....

என்னவன் விஜய்
07-03-2008, 12:58 AM
நன்றாக உள்ளது.
அவளின் வாழ்க்கை அவப்பெயரோடுதான்....
தொடர்ந்து எழுதுங்கள்

ஜெயாஸ்தா
07-03-2008, 02:36 AM
'தலைமை ஏற்க வா' என்றதும் ஏதோ அரசியல் கவிதையோ என்று நினைத்து வந்தேன். வந்தால் இங்கோ, நிச்சயிக்கப்பட்ட திருமணம், நின்று போன வருத்தத்தை வடித்துள்ளீர்கள். நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளுக்கு வர்ணம் அடித்து, கவிதையை கனமாய் கொடுத்திருக்காலம் என்று தோன்றுகிறது.

தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை செம்மைப்படுத்துங்கள் நண்பரே.

நம்பிகோபாலன்
07-03-2008, 04:40 AM
நன்றி....நண்பரே..
என் தோழியின் கண்ணீர்க்காக இக்கவிதை எழுதினேன்....
தவறுகள் இருப்பின் மன்னிக்க

RRaja
07-03-2008, 04:43 AM
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்...



காதலி காரணமோ?
கவலை காரணமோ?
என் புற அழகு காரணமோ?
உன் பெற்றோர் காரணமோ?
சமுதாயம் காரணமோ?
திருமணம் எனும் நாடக மேடைக்குள்
எனக்குக் கணவனாக நடிக்கும் முன்பே
வெளுத்துப்போன உன் சாயம்....

நன்றி நண்பனே...
நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்.

சிவா.ஜி
07-03-2008, 05:32 AM
நிச்சயம் செய்த திருமணம் நின்று போவது நிச்சயமாக வருத்தம் தரும்.நம் சமுதாயம் அப்படி.ஆனால் உங்கள் தோழி வருந்த வேண்டியதில்லை...நன்பர் ராஜா சொன்னதைப்போல அவன் சாயம் வெளுத்துவிட்டது.அந்த வகையில் அவர் தப்பித்துவிட்டார்.

தோழிக்கான கவிதை அருமை கோபாலன்.வாழ்த்துகள்.

அமரன்
07-03-2008, 08:11 AM
ஆடை காக்கும் அவமானம்
காற்றில் பறக்கும்..
உயிர் கொண்ட ஆடைகள்
கக்கும் நச்சுவாயுக்களால்
நித்தம் சேரும் அவமானம்!!

மன்னிப்பதும்,
நாண நன்னயம் செய்தலும்
மாண்பு என்பதை
விஞ்சிய பண்பு...
இத்தலைமை தாங்கல் அழைப்பு.

அழகுக்கலை நிபுணராகவும் பரிணமித்தல் கவிஞருக்கு இன்னும் சிறப்பு.
வாழ்த்துக்கள் நம்பிகோபாலன்.

வசீகரன்
08-03-2008, 11:03 AM
நிச்சயத்திலேயே நின்று போன
எனக்கு
சமுதாயம் கொடுக்க போகும்
பட்ட விழாவிற்க்கு
தலைமை ஏற்க வா.....

பட்டம் கொடுப்பதர்க்கும்.... பாசாங்கு செய்வதற்க்கும் ஆர்வம் காட்டும் சமுதாயம் நாளை பரிகாசாத்திர்க்கு வந்து நீர்க்க போவதில்லை... அடுத்தவர் வாழ்வில் கானும்வாரைக்கும் வேடிக்கை ஆனால் அவர்களுக்கும்....வரும்போது.....வலி! எனவே சமுதாயத்தின் ஏளன பார்வையை பொருட்டாக எண்ணுவதை தவிர்த்து பெண்கள்.... தலை நிமிர்ந்து நடை போட வேண்டும்...!.

அனுராகவன்
09-03-2008, 09:39 AM
நன்றி நம்பிகோபாலன் அவர்களே!!
மிகவும் நல்ல முயற்சி..
நிச்சயம் வருவாங்க..

க.கமலக்கண்ணன்
09-03-2008, 10:11 AM
நலமே நன்றாக நினைத்து பார்த்தால் அனைத்து அடுத்துவருக்கு துன்பத்தை விளைவிக்காமல் செய்கை அனைத்தும் நலமே நன்றி உங்களின் கவிதைக்கு

சுகந்தப்ரீதன்
11-03-2008, 10:29 AM
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டால் சில ஏமாற்றங்களை தவிர்க்க முடியும் நண்பரே..!!

உங்கள் தோழியிடம் சொல்லுங்கள்.. வாழ்க்கை என்றாலே வளைவுகளால் ஆனதுதான்.. அதனால் வருந்த தேவையில்லை என்று..!!

வாழ்த்துக்கள்...உங்கள் கவி வரிகளுக்கு..!!