PDA

View Full Version : நீயா? நானா?சிவா.ஜி
06-03-2008, 11:56 AM
என்னடா செல்லம்...ரொம்ப டயர்டா இருக்கியா...உனக்கு எத்தனை தடவை சொல்றது...எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்யாதேன்னு...கேக்கறதேயில்ல...உக்காரு...உன் காலை இப்படி என் மடி மேல போடு...

விடுங்க...யாராவது பாத்துடப்போறாங்க...புருஷன் பொண்டாட்டிக் காலை பிடிக்கறதா....

ஹய்யோ...ஹய்யோ...நீ எந்தக்காலத்துல இருக்க...இப்பெல்லாம் அந்த மாதிரி வித்தியாசமெல்லாம் யாருமே பாக்கறதில்ல..நீயும்தான் வேலைக்குப் போற..என்னை மாதிரியே..என்னை மாதிரியே என்ன..என்னைவிட அதிகமாவே சம்பாதிக்கற....அப்புறமென்ன வித்தியாசம்?

அதெல்லாம்..இருக்கட்டும்....எனக்கு என்னவோ போல இருக்கு...எங்க வீட்லயெல்லாம் நான் இப்படி பாத்ததே கிடையாது...எங்கப்பாவோட அதிகாரம்தான் கொடிகட்டி பறக்கும்...உக்காந்த இடத்துக்கே அவர் கேட்டதெல்லாம் வரணும்...

அவங்க வாழ்ந்த காலத்துக்கு அப்படி...இது நம்ம காலம்....அவங்க மாதிரி இருக்க முடியுமா?

இருங்க வாசல்ல யாரோ வந்திருக்கற மாதிரி இருக்கு..

இந்தாம்மா செல்வி...ரொம்ப நன்றிம்மா...கல்யாண வீட்ல எல்லாரும் என் பொண்ணையேத்தான் பாத்துக்கிட்டிருந்தாங்க...நெக்லெஸ் இவ்ளோ அழகா இருக்கேன்னு...உனக்கு ரொம்ப பெரிய மனசும்மா இவ்ளோ காஸ்ட்லியான நெக்லெஸை இரவல் குடுத்தியே....

பரவால்ல இருக்கட்டுங்க....

என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...

பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..

நல்ல மனசோடத்தான் குடுத்திருக்க...ஆனாலும்..ஏதோ கெட்ட நேரத்துல இது தொலைஞ்சி போயிருந்தா அவங்களால புதுசா வாங்கிக்குடுக்க முடியுமா?இந்த மாதிரி இன்னொரு தடவை பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணாத...

அப்ப நான் பண்னது பைத்தியக்காரத்தனமா...? நல்லது செஞ்சதைப் பாராட்டலான்னுலும் பரவால்ல...இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதீங்க...

உன் இஷ்டத்துக்கு இப்படி ஒரு தப்பை பண்ணிட்டு இப்ப என் கிட்டயே எதுத்து பேசறியா...

அதென்ன என்கிட்டயே....ஆம்பளங்கற திமிரா...ஏன் எனக்குன்னு எந்த முடிவும் எடுக்கற சுதந்திரம் எனக்கில்லையா..

மரியாதையா பேசு...என்னா திமிரு அதுன்னு...இன்னொரு வாட்டி இப்படி பேசுன.....

என்ன...என்ன பண்ணுவீங்க...அடிப்பீங்களா...என்னை என்ன காசு குடுத்தா கொத்தடிமையா வாங்கிட்டு வந்திருக்கீங்க...உங்ளைத்தான் காசு குடுத்து எங்கப்பா எனக்கு வாங்கி தந்திருக்காரு....

என்னா கொழுப்பு உனக்கு...மளிகை கடை வெச்சிருக்கறவனெல்லாம் என்னை வாங்கி உனக்கு குடுத்தானா...வரதட்சணை வாங்கினதை குத்திக் காமிக்கறயா...பெரிய ஊர்ல உலகத்துல இல்லாத பணம்...

ஆமா அப்ப ஒரு லட்ச ரூபா கேக்கும்போது மட்டும் உங்க கண்ணுக்கு டிபார்ட்மெண்டல் ஸ்டோரா தெரிஞ்சது இப்ப மளிகைக் கடையா...இவ்ளோ ரோஷம் இருக்கற ஆளு எதுக்கு பணம் வாங்கனும்...எங்கப்பாவாது மளிகை கடை முதலாளி...உங்கப்பா கையைகட்டி வேலை செய்யற சாதாரண கிளார்க்குதான...

ஆமா சாதாரண கிளார்க்குதான்...இருந்தாலும் எங்களையெல்லாம் படிக்க வெச்சு இன்னைக்கு நாங்க இந்த நிலையில இருக்க வெச்சார்...உங்கப்பனை மாதிரி கலப்படம் பண்ணி காசு சம்பாதிக்கல...அந்த பணத்துல சாப்பிட்டு வளர்ந்தவதானே நீ...உன் புத்தி எப்படி இருக்கும்...?

கொஞ்சம் மரியாதையா பேசுங்க...உங்க குடும்பம் என்ன பெரிய ராஜ பரம்பரையா.... என்ன பெரிய நிலைமையில இப்ப நீங்க இருக்கீங்க...உங்களைவிட அதிகமாவே நான் சம்பாதிக்கறேன்...இவங்க யோக்கியதைக்கு..எங்க குடும்பத்தைப் பத்தி பேச வந்துட்டாங்க...

நிறுத்துடி...இனி ஒரு வார்த்தை வந்தது.....

என்ன...டி போட்டுப் பேசறீங்க...நானும் டா போட எவ்ளோ நேரமாகும்...

உனக்கு அவ்ளோ தைரியம் வந்துடிச்சா...எங்க டா போடு பாக்கலாம்....

சர்தான் போடா....

ப்ளார்.......ப்ளார்....

என்னையே அடிச்சிட்டியாடி நீ.....

நீ என்னை அடிச்சா நானும் உன்னை அடிப்பேன்...நீ மொதல்ல கையை ஓங்கினா என் கை என்ன காய் நறுக்கிகிட்டிருக்குமா...பதிலுக்கு பதில்தான்....

இனி உன்கூட வாழறதுல அர்த்தமே இல்லை...இந்த மாதிரி திமிர் பிடிச்ச..அடங்காப் பிடாரி கூட எவனும் வாழமாட்டான்...கெளம்பு உன் வீட்டுக்கு....ஒரு நிமிஷம் நீ இங்க இருக்கக்கூடாது......

சர்தான் போய்யா....எங்க வீடு இல்லையா எனக்கு...போறேன்...இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு விவாகரத்து நோட்டீஸ் வரும்

போடீ....நீ என்னா அனுப்பறது....நானே அனுப்பறேன் உனக்கு................

(அப்படியே இந்த டேப்பை...ரீவைண்ட் பண்ணுவோமா...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........டொக்.....)

என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...

பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..

அட அட....என் பொண்டாட்டின்னா...பொண்டாட்டிதான்...எவ்ளோ நல்ல மனசு உனக்கு...இந்த மாதிரி நாலு பேருக்கு உதவலன்னா..நாமெல்லாம் என்ன மனுஷங்க....உன்னை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன்....செல்லம் ஐ லவ்யூடா....

ச்சீ...போங்க எனக்கு வெக்கமா இருக்கு.......
(இப்படியும் நிகழ்ந்திருக்கலாம்)


என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...

பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..

நல்ல மனசோடத்தான் குடுத்திருக்க...ஆனாலும்..ஏதோ கெட்ட நேரம் தொலைஞ்சி போயிருந்தா அவங்களால புதுசா வாங்கிக்குடுக்க முடியுமா?இந்த மாதிரி இன்னொரு தடவை பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணாத...

ஆமாங்க...நான்கூட இதை யோசிக்கல...அவங்களே பாவம் கஷ்டப்படற குடும்பம்...அப்படி ஏதாவது ஒண்ணு ஆகியிருந்தா..கண்டிப்பா அவங்களால திருப்பிக் குடுக்க முடியாது....நாமளும் அவ்ளோ பெரிய பணக்காரங்க இல்ல...போனாப்போகுதுன்னு விடறதுக்கு....சாரிங்க இனிமே இப்படி பண்னமாட்டேன்...

சரி..சரி...பரவால்ல....விடு...

(இப்படியும் நிகழ்ந்திருக்கலாம்)

சர்தான் போய்யா....எங்க வீடு இல்லையா எனக்கு...போறேன்...இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு விவாகரத்து நோட்டீஸ் வரும்

போடீ....நீ என்னா அனுப்பறது....நானே அனுப்பறேன் உனக்கு................

(ஆனால் இப்படி நிகழ்ந்ததற்கான காரணம்....புரிந்துணர்வும்..பேச்சில் அன்பும் இல்லாததுதானே.....எதற்கும் உதவாத வெறும் ஈகோ...எதை சாதிக்கும்....??)

மதி
06-03-2008, 12:38 PM
புரிந்துணர்வை பற்றி அழகான கதை...
சம்பாஷனைகள் அற்புதம்...

ஈகோவை விட்டொழித்தால் என்றும் நல்லா வாழலாம் என்னும் கருத்து அருமை...

நுரையீரல்
06-03-2008, 12:39 PM
ரொம்ப ரொம்ப யோசிச்சு போட்டிருக்கீங்க, மிக்க நன்றி அண்ணா..

யவனிகா
06-03-2008, 12:54 PM
நல்ல கதை அண்ணா...வாழ்க்கையில் சில விசயங்களை ரீவைண்ட் செய்து திருத்தி அமைக்க முடிந்தால்...எப்படி இருக்கும்...வடுவாய் வலிக்கும் நினைவுகளைத் தவிர்த்திருக்கலாம்.

12பி கதை போல இரண்டு முடிவுகளா?ரன் லோலா ரன் என்ற திரைப்படத்தில் மூன்று முடிவுகள் வரும்...

நம்முடையே குறையே எல்லா உணர்ச்சிகளையுமே எக்ஸ்ட்டீரிமில் காட்டுவது தான்...கொஞ்சினால் தலைமேல் தூக்கி வைத்துக் கொஞ்சுவது...சண்டையானால் காலில் போட்டு மிதிப்பது...அடுத்தமுறை கொஞ்சும் போது போன முறை சண்டையில் சொன்ன வார்த்தைகளை மறப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

டைவர்ஸ் பேப்பரெல்லாம் அனுப்பமாட்டாங்கன்னா...எல்லாரும் வந்து பின்னூட்டம் போட்டு முடிவதற்குள்,,,அந்தம்மா அவருக்கு சுடச்சுட காபி கொண்டு வந்து தரப்போறங்க பாருங்க...

மன்னிச்சுக்க...நான் அதிகமாப் பேசிட்டேன்...உன்னை அடிச்சிருக்கக்கூடாது.இதுவே உன்னை அடிக்கறது கடைசி முறை.

நானும் தான்,எனக்கு வாய் கொஞ்சம் அதிகம்.கொஞ்சம் பொறுமையாப் போயிருக்கலாம்...நீங்க அடிக்காம வேறு யார் அடிப்பாங்க? ஆனா டைவர்ஸ் பேப்பர்ரெல்லாம்...

அடிப்போடி பைத்தியம் உன்னைவிட்டா எனக்கு யார் கிடைப்பா...இவ்வளவு அனுசரணையா...சும்மா உன்னை பயமுறுத்தச் சொன்னா...நீ எவ்வளவு வெள்ளந்தி...

அண்ணா...கை நிறுத்த மாட்டீங்குது....தொடரும் போட்டு...தொடர் கதை எழுத ஆரம்பிச்சிருவேன் போல.

நல்ல கதையை...தேவையான கதையக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா...

நேசம்
06-03-2008, 01:09 PM
புரிந்துனர்தல் அவசியம் என்பது சொல்லும் விதமாக இருவிதமாக முடிவுகளை கொடுத்து இருப்பது அருமை.வாழ்த்துகள்

அக்னி
06-03-2008, 05:18 PM
விட்டுக் கொடுத்தலும், தட்டிக் கொடுத்தலும் தாம்பத்தியத்தை தளம்பாது வைத்திருக்கும் என்றுணர்த்தும் கதை.
புரிந்துணர்வு, கசப்புணர்வுகளைத் தராது.
யவனிகா+அக்கா சொன்னதைப் போல, 12பி படம் எனக்கும் நினைவுக்கு வந்தது.
பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
07-03-2008, 04:33 AM
புரிந்துணர்வை பற்றி அழகான கதை...
சம்பாஷனைகள் அற்புதம்...

ஈகோவை விட்டொழித்தால் என்றும் நல்லா வாழலாம் என்னும் கருத்து அருமை...
ரொம்ப நன்றி மதி.அதேதான்...ஈகோ எப்பவுமே ரெண்டுபேரையும் நிம்மதியா வாழ அனுமதிக்காது...விட்டுக்கொடுத்து போய்ட்டா பிரச்சனையே இல்லை.


நல்ல கதை அண்ணா...வாழ்க்கையில் சில விசயங்களை ரீவைண்ட் செய்து திருத்தி அமைக்க முடிந்தால்...எப்படி இருக்கும்...வடுவாய் வலிக்கும் நினைவுகளைத் தவிர்த்திருக்கலாம்.


அண்ணா...கை நிறுத்த மாட்டீங்குது....தொடரும் போட்டு...தொடர் கதை எழுத ஆரம்பிச்சிருவேன் போல.

நல்லா சொல்லியிருக்கீங்க யவனிகா...வாழ்க்கையில மட்டும் ரீவைண்ட் இருந்தா...எத்தனையோ கசப்புகளை இனிப்பாக்கலாம்..

ஏன் நிறுத்தறீங்க...அப்படியே தொடர்ந்து எழுதுங்க இதோட தொடர்ச்சியா...இன்னொரு பாகத்தை...நல்லாருக்குமே....


ரொம்ப ரொம்ப யோசிச்சு போட்டிருக்கீங்க, மிக்க நன்றி அண்ணா..
ரொம்ப நன்றி நுரை.ஒரு ரொம்பதான் யோசிச்சேன்...ஹி...ஹி...வாழ்க்கையில நடக்கறதுதானே...

புரிந்துனர்தல் அவசியம் என்பது சொல்லும் விதமாக இருவிதமாக முடிவுகளை கொடுத்து இருப்பது அருமை.வாழ்த்துகள்
ரொம்ப நன்றி தம்பி.புரிந்துணர்வுங்கறது...வாழ்க்கையை சசரவு இல்லாம வெச்சிருக்கும்...அதை புரிந்து கொள்ள வேண்டும்.

விட்டுக் கொடுத்தலும், தட்டிக் கொடுத்தலும் தாம்பத்தியத்தை தளம்பாது வைத்திருக்கும் என்றுணர்த்தும் கதை.
புரிந்துணர்வு, கசப்புணர்வுகளைத் தராது.
யவனிகா+அக்கா சொன்னதைப் போல, 12பி படம் எனக்கும் நினைவுக்கு வந்தது.

ரொம்ப சரி அக்னி.இல்லறம் நல்லறமா இருக்கணுன்னா...முக்கியத்தேவைகள் இவை.
நான் 12பி படம் பாக்கல...நல்ல படமா?

இளசு
07-03-2008, 05:53 AM
தம்பதிகள் அவர்களுக்குள் எத்தனையும் வாக்குவாதம் செய்தாலும்,
சிறுபிள்ளைகள் சண்டைபோல் வடு இன்றி ஆறும் வாய்ப்பு அதிகம்!

கோபமாய் பேசவே கூடாது - என்பது ''ஐடியல்'' - பிராக்டிகல் இல்லை!
அப்படி பேசும் கணங்கள் அமைந்துவிட்டால் -

1) சுருக்கமாய் கோபம் தந்த அந்த நிகழ்ச்சி மட்டும் பற்றி பேச உறுதி வேண்டும். பழைய பரண்குப்பை எல்லாம் கிளறத் துடிக்கும் நினைவுத்துரட்டியை அடக்கவேண்டும்.

2) நிச்சயமாய் மற்ற குடும்பத்தினர், பரம்பரை -அந்தஸ்து பற்றி பேச அது நேரமில்லை.

3) மூன்றாவது நபர் இருந்து மூக்கை நுழைத்தால் காயம் வலுக்கும்.

4) குழந்தைகள் இருந்தால் சண்டை சடுதியில் வலுவிழக்கும்.

சிவாவின் காலத்தேவைக் கதை படித்து வந்த கருத்துகள் இவை..-
படைத்தவருக்குப் பாராட்டாய்!

சிவா.ஜி
07-03-2008, 05:56 AM
ஆஹா....அருமையான கருத்துகள்.அச்சிட்டு வைத்துக்கொண்டு..அச்சரம் பிசகாமல் மேற்கொள்ள வேண்டிய வாக்கியங்கள்.அத்தனையும் சத்தியம்.

மிக்க நன்றி இளசு.

க.கமலக்கண்ணன்
08-03-2008, 08:19 AM
புரிந்து கொண்டால்தான் வாழ்க்கை

புரியாவிட்டால்

புதிர்தான் தன் அது நமக்கு

புதிதாய் பிறந்திடுங்கள்

புத்துணர்ச்சியாய் வாழ்ந்திடுங்கள் அருமையான கருத்துக்கு நன்றி...

சிவா.ஜி
08-03-2008, 09:27 AM
சமம் இருவருமென்று
சதியும் பதியும் நினைத்தால்
சத்தான இல்லறம்
சர்க்கரையாய் இனிக்கும்....
சரியான பின்னூட்டத்திற்கு நன்றிகள் கமலக்கண்ணன்.

பூமகள்
08-03-2008, 03:40 PM
மிகத் எதார்த்தமாக ஒரு வீட்டில் நடக்கும் சம்பவத்தையும்.. அதன் பரிணாமங்களையும் உள்ளடக்கிய அழகிய கதை சிவா அண்ணா.

இளசு அண்ணாவின் சொற்கள்
நாம் செல்ல வேண்டிய வழிகள்..!

உளவியல் பார்வையில் பார்க்க வைத்த கதை..!!

எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு சரியான வழிகாட்டி இக்கதை அண்ணா.

இது போல் நிறைய தாருங்கள்.

பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவா.ஜி
09-03-2008, 04:14 AM
ரொம்ப நன்றிம்மா...ரொம்ப சுலபமா இருக்க வேண்டிய வாழ்க்கையை சில பேர் இப்படித்தான்...புரிஞ்சிக்காம...கஷ்டமாக்கிகறாங்க..
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று....என்பதை அறிந்து கொண்டாலே போதும்.

அமரன்
09-03-2008, 09:53 AM
மூன்று கோணத்தில் ஆக்கியவரே பார்த்து, பின்னூட்டமிட முடியாமல் செய்துவிட்டார். அப்படி இருந்தும் நூல்பிடித்து தரமான கருத்து நெசவு செய்துவிட்டார்கள் விற்பன்னர்கள் சிலர். அதையும் தாண்டி நான் என்ன சொல்ல..

கதைநிகழ்வு வைத்து அசைபோட்டால் இரவல் கொடுத்த பெறுமதி மிக்க ஆபரணம் தொலைந்து போனால் பணநஷடம் உரிமையாளர்களுக்கு.. வாங்கியவர்கள் நல்லுள்ளங்களாக இருந்தால் உறுத்தலால் மனக்கஷ்டம் அவர்களுக்கு.. அந்த வகையில் கணவன் சொன்ன ஞாயத்தை மனைவி புரிந்துகொள்ளவில்லை. இருவரும் தடித்த வார்த்தைப்பிரயோகம் செய்திருக்க கூடாது.. ஆக.. நல்லதோ கெட்டதோ சொல்லும் இதத்திலும் கேட்கும் விதத்திலும் விளைவு தங்கி உள்ளது என்பது வெளிச்சமாகிறது..

வீட்டின் சுத்தம் பேண சுவாசத்தை அசுத்தமாக்குகிறோம். அகமசுத்தமாதல் அதிகமானால் வடிகட்டி அணிந்துகொள்கின்றோம். அதே போல காலப்பரணை தூசு தட்டும்போது அணியாமல் இருப்பது சோதனை தரும் வேதனை. அதையும் ஆணித்தரமாக சொல்லி உள்ளது ஆக்கம்.

ஒரு நிமிட உறுதியின் உரசலில் பற்றிய தீ நன்மையும் செய்யும் தின்மையும் தரும் என்பதை புரிந்தால் வாழ்வியல் சிக்கல்கள் பலவற்றுக்கு சுலபமாக தீர்வு காணலாம். இதை அழகாக மொழிமாற்றம் செய்துள்ளது முக்காலத் தேவைப்பதிவு.

பாராட்டுகள் சிவா.. அவசியக் கதை..

சிவா.ஜி
10-03-2008, 01:18 PM
ஒரு நிமிட உறுதியின் உரசலில் பற்றிய தீ நன்மையும் செய்யும் தின்மையும் தரும் என்பதை புரிந்தால் வாழ்வியல் சிக்கல்கள் பலவற்றுக்கு சுலபமாக தீர்வு காணலாம்.

அருமையான...வாக்கியங்கள்.சமைக்கவும் பயன்படும்,சாகடிக்கவும் பயன்படும் தீயை...எப்படி எங்கே பயன்படுத்துகிறோமோ...அப்படியே அதன் பலனும் கிடைக்கிறது.

ஆழ்ந்த,அழகான,அவசியம் உணர்த்திய பின்னூட்டம்.மிக்க நன்றி அமரன்.

SathishVijayaraghavan
08-05-2008, 06:12 AM
இரண்டு கைகள் அடித்தால்தான் சத்தம் வரும் என்பதை நாசூக்காக எடுத்தது மிக அழகு

இராஜேஷ்
10-05-2008, 03:36 AM
நன்றி அண்ணா, எந்தவித உறவிலும் விரிசல் வருவதற்கு முக்கிய காரணம் ஈகோவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமல் இருப்பதே. சமிப காலமாக விவாகரத்து அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் கணவன் மனைவியிடையே புரிந்துனர்வு இல்லமையே.

மேலும் ஒருவர் தவறு செய்துவிட்டால், நாம் உடனடியாக அவரை பழிசொல்லக்கூடாது மாறாக அந்த சூழலை நாம் புரிந்துகொண்டு நாம் அந்த சூழலில் என்ன செய்திருப்போம் என்பதை புரியவைத்தால் பிரச்சணையே வராது.

அன்புடன்
இராஜேஷ்

இராஜேஷ்
10-05-2008, 03:37 AM
நன்றி அண்ணா, எந்தவித உறவிலும் விரிசல் வருவதற்கு முக்கிய காரணம் ஈகோவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமல் இருப்பதே. சமிப காலமாக விவாகரத்து அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் கணவன் மனைவியிடையே புரிந்துனர்வு இல்லமையே.

மேலும் ஒருவர் தவறு செய்துவிட்டால், நாம் உடனடியாக அவரை பழிசொல்லக்கூடாது மாறாக அந்த சூழலை நாம் புரிந்துகொண்டு நாம் அந்த சூழலில் என்ன செய்திருப்போம் என்பதை புரியவைத்தால் பிரச்சணையே வராது.

அன்புடன்
இராஜேஷ்

MURALINITHISH
22-09-2008, 08:34 AM
உண்மைதான் சில வேளைகளி நாம் பேசும் சில வார்த்தைகளில் உள்ள கோபங்கள் அடுத்தவருக்கு வலியாகி போகின்றது அதனால் இயற்கையே நமக்கு ஒரே ஒரு நாக்கு கொடுத்துள்ளது அப்படி இருந்தும் சில வேளைகளில் வார்த்தைகளால் அடுத்தவர்களை காயபடுத்தி விட்டு அவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்

சிவா.ஜி
22-09-2008, 09:01 AM
ஆமாம் முரளி. ஒற்றை நாக்குதான் ஆனால் அது சிலசமயங்களில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் தீயைவிட தீயவையாகிவிடுகின்றன. புரிந்துணர்வு இருந்தால் பல பிரச்சனைகள் வெகு சுலபமாக தீர்ந்துவிடும். நன்றி முரளி.

Narathar
22-09-2008, 09:25 AM
புரிதலைப்பற்றிய ஒரு அழகான கதை..........
அதைவிட அழகான ஒரு பதிவு கொடுத்திருக்கின்றிற்கள் வாழ்த்துக்கள்

சிவா.ஜி
27-09-2008, 05:46 PM
அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் நாரதர்.