PDA

View Full Version : முடி சூடிக்கொள்வதோ



pathman
06-03-2008, 06:43 AM
நீ
குளித்துவிட்டு தலையில்
துண்டை சுற்றிகொள்கிறாயே !
ஓ..
இதற்கு பெயர்தான்
முடி சூடிக்கொள்வதோ!

அமரன்
06-03-2008, 08:39 AM
ஹ...
முடி சூடிக்கொண்ட துணி.
முடியான சூடிக்கொண்ட துணி.
நல்ல கற்பனை.

இராணியாக மங்கை
குறுங்காலம் மட்டுமென்பதை
கூறும் கவிதை!

பாராட்டுகள் பத்மன்!

அமரன்
06-03-2008, 08:44 AM
தயவு செய்து
தலைக் குளித்து "முடி"த்ததும்
துண்டால் மூடாதே!
என் பார்வையை விட்டு
அகன்ற குழல்கள்
கண்ணீர் கசிகின்றன பார்!

யவனிகா
06-03-2008, 10:20 AM
இராணியாக மங்கை
குறுங்காலம் மட்டுமென்பதை
கூறும் கவிதை!

பாராட்டுகள் பத்மன்!

இதற்காக தலையைத்துவட்டாமலே இருந்தால் சளிப்பிடிக்காது...
சரி தலைகோதிதான் வீரவாளோ
நல்ல கவிதை...நல்ல பின்னூட்டம்...

சிவா.ஜி
06-03-2008, 10:57 AM
தனக்குத்தானே முடி சூட்டிக்கொள்ளும் பரிதாப பட்டத்துராணி....அதுவும் குறுங்கால அரசி.
ஆசையாய்,அன்பாய் கணவன் அதே துண்டால் அவள் தலை துவட்டினால்...அவள் ஆயுட்கால அரசி.

சிறிய நிகழ்வைக் அழகான கவிதையாக்கிய பத்மனுக்கு வாழ்த்துகள்.

அமரன்
06-03-2008, 01:41 PM
இதற்காக தலையைத்துவட்டாமலே இருந்தால் சளிப்பிடிக்காது...
சரி தலைகோதிதான் வீரவாளோ
நல்ல கவிதை...நல்ல பின்னூட்டம்...
உங்கமுன்னாடி நின்று பேசும்போது கவனமாக பேசவேண்டும் போல..
அருவாளுக்கெல்லாம் வீரவாள்னு பட்டம் கொடுத்துட்டாங்களா.:confused:
இனிமேலாவது தமிழ்ப்பட ஹீரோக்களை ஏய்..ஊய்னு கத்தாமல் வெற்றிவேல் வீரவேல்னு 'கத்தி' சண்டை போடச்சொல்லுங்கப்பா

அமரன்
06-03-2008, 02:04 PM
இதுபோலவே எப்போதும்
ஈரக் குழல்களுக்கு முடியிடு.
இல்லாவிட்டால்
'வழுக்கி' விழுந்துவிடுவேன்!

மன்மதன்
06-03-2008, 02:08 PM
நல்ல கவிதை..!

அக்னி
06-03-2008, 04:34 PM
முடி சூடிக் கொள்கின்றார்கள்..,
தலைக் கனத்தால்...

pathman
10-03-2008, 04:15 AM
தனக்குத்தானே முடி சூட்டிக்கொள்ளும் பரிதாப பட்டத்துராணி....அதுவும் குறுங்கால அரசி.
ஆசையாய்,அன்பாய் கணவன் அதே துண்டால் அவள் தலை துவட்டினால்...அவள் ஆயுட்கால அரசி.

சிறிய நிகழ்வைக் அழகான கவிதையாக்கிய பத்மனுக்கு வாழ்த்துகள்.


கண்டிப்பாக என் பட்டத்து ராணிக்கு நானே தலைதுவட்டி அவளை என் ஆயுட்கால ராணியாக்கிகொள்வேன்

ஆர்.ஈஸ்வரன்
10-03-2008, 09:35 AM
நல்ல கவிதை

M.Jagadeesan
20-01-2013, 02:56 PM
நம்வீட்டுப் பெண்கள் எல்லோருமே வெள்ளிக்கிழமை வந்துவிட்டால், தனக்குத்தானே முடி சூட்டிக்கொள்வார்கள்.