PDA

View Full Version : உறவுகள் பலவிதம்.



அமரன்
04-03-2008, 07:12 PM
இரவுப்பணி முடித்து
இரவி வீடேகும் போது
விழிமலர்ந்து
விழி மலர்விப்பாய்..

தூரிய சேதிகளை
தூறியதும் நூரும் நம்முறவு
தொடர்வண்டி பயணத்தின் பின்
தொடர்கிறது மீண்டும்..

நமதுறவுப் பாசனத்தில்
குறுக்கோடும் இடையூறுகளால்
ஊறிய பசியுடன் காத்திருப்பேன்
நீ தரும் போசனத்துகாய்.

வீடடையும் வேளைதனில்
என்னிலை உணர்ந்து
நாணிச் சிவக்கும் வானம்.
தளிர்க்கும் வாடிய நம்வதனம்.

உரசல்களும் ஊடல்களும்
அமைத்த பஞ்சணையில்
துவங்கும் ஆட்டத்தின் முடிவில்
உறங்குவோம் திருப்தி மடியில்..

நான் நலங்கெட்ட நாட்களில்
உன்விரல் தீண்டல் கிட்டாது
மங்கிப்போகும் என் முகம்..
இரட்டையாக உன் முகம்..

எனக்கு நானே வினவுகிறேன்
என்ன உறவு
எமக்கிடையான இவ்வுறவு
மடிக்கணினியே கணி நீயே!

மலர்
04-03-2008, 07:53 PM
வர வர அமரு கன்னியை கணிணியா நினைத்து
சே..... கணிணியை கன்னியா நினைச்சி
கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாரு.....
ஹீ..ஹீ..... சும்மா.....சும்மா....

அமரு உங்க கவிதை
மலருக்கு புரிஞ்சிட்டு.........!!!
புரிஞ்சிட்டு.........!!!
புரிஞ்சிட்டு.........!!!

இனிமே தைரியமா கதை எழுதலாம்......:D :D

சுகந்தப்ரீதன்
05-03-2008, 06:49 AM
அண்ணனுக்கு சீக்கிரம் ஆத்துல உள்ளவங்களுக்கிட்ட சொல்லி கல்யாணம் கட்டிப்போட வேண்டியதுதான்...!!

எப்படிதான் உங்களால முடியுதோ... உங்கள் பார்வைகள் பலவிதம்... எல்லாமே தனிரகம்..!!

வாழ்த்துக்கள் அண்ணனே...!! தொடருங்கள் கவி மன்னனே..!!

அமரன்
05-03-2008, 01:43 PM
பாருங்கப்பா பாசமலர்களை.. பாருக்குள்ள உங்களைப்போல் யாரையும் பார்த்ததில்லப்பா.. எம்புட்டுப்பாசம் என்னைய மாட்டிவிட.. அதிப்பூவாட்டம் பிறத்தியாக இருந்தமலரை கவிச்சோலைக்கு இழுத்து வந்தவகையில் வெற்றி அடைந்துவிட்டது இக்கவிதை. உற்சாக உதவிக்கு நன்றி இருவருக்கும்..

சிவா.ஜி
05-03-2008, 01:47 PM
கன்னிக்கும் கணிணிக்குமாய் நல்லதொரு கவிதை....அழகான வார்த்தை தேர்ந்தெடுப்பு அமரன்...கடைசிவரை சஸ்பென்ஸ் அசத்தல்....
கலக்குறீங்க....வாழ்த்துகள்.
(மலருக்கு கவிதை புரிஞ்சிடுச்சே....டுச்சே....ச்சே....சே....)

தீபா
05-03-2008, 04:55 PM
செய்தொழில் தெய்வம்
தெய்வமே அன்னை
அன்னையிலும் மேல் மனை

தொழில்பொருள் காதல்,
தொலைவில்லாத வாழ்க்கைப் பயணம்

உறவு என்ன உறவு?
இது ஆசைகள் பேணிய துறவு..

அமரன்
11-03-2008, 01:14 PM
செய்தொழில் தெய்வம்
தெய்வமே அன்னை
அன்னையிலும் மேல் மனை..
என் போன்றவர்களைப் பொறுத்தமட்டில் இம்மூன்றுக்கும் ஆணிவேராக இருப்பது கணினி. அந்த உறவு பல இதம்தானே தென்றலே.. இந்தப்பக்கம் வீசிய தென்றலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

கருத்துப் பதிந்து ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

பூமகள்
06-04-2008, 07:27 AM
இரு பொருள் ஒன்றாக
ஒரு பொருள் புரிவித்ததோ?

புரிந்து சிலிர்த்து
நெகிழ்ந்தேன்..!

கவியும் கவிப்பொருளும்
கடைசியில் முத்தாய்ப்பாக
முடிவு சொல்லின
வார்த்தை ஜாலத்தில்
சொக்க வைத்தன.!!

இரு கோணங்கள்
எப்போதும் என்னை
இனிமையாக சுவைக்க
வைக்கும்..!!

நல் கவிவிருந்து
சுவைத்த திருப்தி..!!

பாராட்டுகள் அமரன் அண்ணா. :)

மலர்
06-04-2008, 07:42 AM
பாருங்கப்பா பாசமலர்களை.. பாருக்குள்ள உங்களைப்போல் யாரையும் பார்த்ததில்லப்பா..
பீரையும்:rolleyes: சரி.... பாரையும் :rolleyes: சரி மல்ரு இதுவரை பாத்ததே இல்லை... :icon_rollout: :icon_rollout:
அப்பிடி பட்ட எங்களை போயி பாருக்குள்ள பாத்தேன்னு
பொய் சொல்ற அமரை வன்மையாக கண்டிக்கிறேன்.... :sauer028: :sauer028:

சுகந்தப்ரீதன்
06-04-2008, 08:28 AM
பீரையும்:rolleyes: சரி.... பாரையும் :rolleyes: சரி மல்ரு இதுவரை பாத்ததே இல்லை... :icon_rollout: :icon_rollout::sauer028: :sauer028:

மல்ரு நீ கண்ண மூடிட்டு பீர் குடிக்கறதை இப்படி சொல்லியா மாட்டிக்கறது...??:cool:



அப்பிடி பட்ட எங்களை போயி பாருக்குள்ள பாத்தேன்னு
பொய் சொல்ற அமரை வன்மையாக கண்டிக்கிறேன்....


பாருக்குள்ள போன உடனே நம்ப அமருக்கு உலகம் கண்முன்னாடி சுத்த ஆரம்பிச்சுடும்.. அதாத்தான் அவரு மறைமுகமா பாருக்குள்ள பாத்தேன்னு சொல்லுறாரு...:wuerg019:

(எப்படியும் இந்த ரெண்டு பதிவும் அரட்டை பகுதிக்கு வந்து சேர்ந்திடும்ங்கிற நம்பிக்கைதான்..!!)

அமரன்
06-04-2008, 04:02 PM
பாருங்கப்பா பாசமலர்களை.. பாருக்குள்ள உங்களைப்போல் யாரையும் பார்த்ததில்லப்பா...
பார்த்தேன்னு சொல்லலையே!!!!!



பீரையும்:rolleyes: சரி.... பாரையும் :rolleyes: சரி மல்ரு இதுவரை பாத்ததே இல்லை... :icon_rollout: :icon_rollout:
அப்பிடி பட்ட எங்களை போயி பாருக்குள்ள பாத்தேன்னு
பொய் சொல்ற அமரை வன்மையாக கண்டிக்கிறேன்.... :sauer028: :sauer028:
பார்த்த பின்பு என் பார்வை குறைபாடோன்னு சந்தேகிக்கிறேன்

poornima
07-04-2008, 10:41 AM
//நான் நலங்கெட்ட நாட்களில்
உன்விரல் தீண்டல் கிட்டாது
மங்கிப்போகும் என் முகம்..
இரட்டையாக உன் முகம்..
//
இதையே ஒரு பெண் சொல்வதாய் எடுத்துக் கொண்டாலும்
கருத்து குன்றாத தன்மை இக்கவிதைக்கு இருக்கிறது.மடிக்கணிணி,மனதிற்கு
பிடித்த கன்னி என இரண்டு படிமங்களையும் ஒன்றிணைக்கும் பாங்கு
உள்ள கவிதை.பாராட்டுக்கள்

ஷீ-நிசி
07-04-2008, 10:59 AM
ஹா ஹா.. அருமை அமரா..
முதலில் மடியில் கன்னி என்றே நினைத்திருந்தேன்...
முடிவில் மடிக்கணிணி என்றதும் சிரித்துவிட்டேன்..

அமரன்
07-04-2008, 02:31 PM
கருத்துரைத்து உற்சாகமளித்த பூர்ணிமா, ஷீ-நிசி இருவருக்கும் நன்றி.