PDA

View Full Version : கலைந்த புன்னகைகள்..!!பூமகள்
04-03-2008, 12:37 PM
கலைந்த புன்னகைகள்..!!எப்படி இருக்கே..
இந்தியாவில் பார்த்தது..
எப்போ இங்கு வந்தே...!!

(கண்கள் பார்த்து தோழி கேட்டு நின்றாள்)

இப்ப தான் மேரேஜ் ஆச்சு..
உன்ன பார்ப்பேன்னே நினைக்கல..
எப்படி இருக்கே நீ??
ஏதும் விசேசம்??

(எண்ணவோட்டத்தை பிடித்து பதில் கொடுத்தாள்)

ஆமாம்.. இப்ப தான் கன்பார்ம் ஆயிருக்கு..
2 மாசம்.. ;)

(நாணம் செவ்விதழில் சிந்தி பளிங்கு முழுக்க சிதறியது)

(வெட்கி சிவந்து, பின் அவளே பேசலானாள்.)

இந்தியாவே பார்ப்பது மாதிரி உன்ன பார்த்தது..
வா உன்னோடு நிறைய பேசனும்.. :)

கண்டிப்பா வர்றேன்..
ஆனா இப்போ இயலாத சூழல்..
அவர் காத்திட்டு இருப்பார்..
அவசரமா போனும்..!

(அலைபேசி இலக்கங்கள் இடமாறின..விடைபெற்று கிளம்பினேன்..)

ஒரு மாதமிருக்கும்..!
மீண்டும் காண்கிறேன்..!

ஹே... எப்படி இருக்கே??

(உற்சாகத்தில் நான்..!)

ம்.... இருக்கேன்..!

(விழியோரம் கசிந்தது நீர்த்துளி... வார்த்தையில் வெறுமையுடன் அவள்..)

ஏன் என்னாச்சு?
உடம்பு சரியில்லையா?
டாக்டரைப் பார்த்தியா??

(பதறிய மனத்துடன் நான்..)

போன வாரம் தான்
பார்த்தேன்.. கடைசியா..!!

(கடைசியா- இந்த வார்த்தையில் இருந்த அழுத்தம்
ஏதோ விபரீதத்தை உணர்த்தியது)

என்ன சொல்றே நீ??

(பதட்டம் குறையாமல் நான்)

என் பொண்ணை சாவடிச்சிட்டேன்..!
சாவடிக்க வைக்கப்பட்டேன்..!

(எங்கோ பார்த்து அழுகிறாள்.. என் கண் பார்க்க திராணியில்லை)

ஏன் என்னாச்சு??
ஏன் ஏன்??

(புரியாமல் மூச்சடைத்து நான்..)

பெண் பிறவி கூடாதாம்
பெரும் செல்வம் தின்னுமாம்..
வேண்டாம் என்று கை கழுவிட
தினம் நெருப்பில் சுட்டு பாரு காயம்..!

(வெந்த புண்ணை காலில் காட்டி.. துன்ப சுமையை என் நெஞ்சில் ஏற்றினாள்)

துடித்த இதழில்
தவித்து மறித்தன
வார்த்தைகள்..!!

(ஆறுதல் சொல்ல வார்த்தை எழவில்லை..!
கண்களால் பேசி..கரைந்து நகர்கிறேன்..!)

இங்கிலாந்தின்
இந்தியர் நிலையாக
ஓராயிரம் புன்னகை - நிதம்
கலைத்துவிடும் கதை
கருத்தாய்வுடன் மாண்பு
குலைத்து நிற்கிறது..!

செய்தி:
கருத்தாய்வு முடிவு: "இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்களிலிடையே
பெண்சிசுக்கருக்கலைப்பு அதிகமாகிறது.."

செந்தமிழரசி
04-03-2008, 12:45 PM
கதைப்போக்கில் கவிதை

செய்தி சொல்லவே
சீர்களை இழைத்திருப்பதாய்
தெரிகிறது.

கருத்தில் இருக்கும் வலி
கவிதையில் இல்லை.

செய்திக்கு நன்றி தோழி

வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
04-03-2008, 12:46 PM
பிறவிக்குணம் எங்கு போனாலும் மாறாதுங்கறதை மறுபடியும் நிரூபிப்பது போல் உள்ளது இந்த தகவல்...!!

அதை கவிதை வடிவில் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் பாமகளே..!!

உங்களின் முயற்சி தொடர வாழ்த்துக்கள்..பூ..!!

பூமகள்
04-03-2008, 12:53 PM
கதைப்போக்கில் கவிதை
கதையாகத் தான் எழுத நினைத்தேன். ஆகவே.. இங்கே கவிதை இல்லை.
இது கவிதை இல்லை என்பதால் வேறு இடத்துக்கு திரியை நகர்த்தப் பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்தில் இருக்கும் வலி
கவிதையில் இல்லை.கரு தான் முக்கியமெனப்பட்டதால்
கவிதை சீர்களுக்கு அதிகம் மெனக்கெடவில்லை தோழி..!

செய்திக்கு நன்றி தோழி
வாழ்த்துக்கள்.வாழ்த்தியமைக்கு நன்றிகள் தோழி செந்தமிழரசி.

பூமகள்
04-03-2008, 12:57 PM
பிறவிக்குணம் எங்கு போனாலும் மாறாதுங்கறதை மறுபடியும் நிரூபிப்பது போல் உள்ளது இந்த தகவல்...!!
உங்களின் முயற்சி தொடர வாழ்த்துக்கள்..பூ..!!
உண்மை தான் சுகந்தப்ரீதன்.
நெஞ்சு பொறுக்குதில்லையே..!! :traurig001::traurig001:
வாழ்த்தி பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சுகந்தப்ரீதன்.

செந்தமிழரசி
04-03-2008, 12:59 PM
கரு தான் முக்கியமெனப்பட்டதால்
கவிதை சீர்களுக்கு அதிகம் மெனக்கெடவில்லை தோழி..!படைப்பு படிப்பவரை பாதிக்காத பட்சத்தில்

ஆக்கத்தின் நோக்கம் அழிவையே தழுவும்.

சிவா.ஜி
04-03-2008, 01:35 PM
அங்குமா...என்ன கொடுமை இது?கல்பனா சாவ்லா,சுனிதா வில்லியம்ஸ்,கிரன் பேடி,க்ரன் மஜூம்தார்...இப்படி உழைப்பால் உயர்ந்த பெண்களைப் பார்த்துமா இந்த ஈனச்செயல்.
எப்போதுதான் திருந்தப்போகிறார்களோ...
செய்தியை கவியாக்கி சீராய்த் தந்த தங்கைக்கு பாராட்டுகள்.

ஷீ-நிசி
04-03-2008, 02:03 PM
வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்!

பூமகள்
04-03-2008, 03:36 PM
அங்குமா...என்ன கொடுமை இது?
செய்தியை கவியாக்கி சீராய்த் தந்த தங்கைக்கு பாராட்டுகள்.
ஆமாம் அண்ணா. ரொம்ப கொடுமை தான்..!
உங்க பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் சிவா அண்ணா. :)

வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்!
ஹை.. வாங்க ஷீ..!! நலமா??
உங்க பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி.. நன்றிகள் ஷீ. :)

அறிஞர்
04-03-2008, 04:17 PM
நிகழ் காலச் செய்திக்கு ஏற்ப... வரிகள்...
அருமை பூ....
பணம் இருக்கும் மக்கள் மத்தியிலும் இந்த மாதிரி கேவலமான செயலா...

அக்னி
04-03-2008, 04:42 PM
கருவறைக்குப் பெண் தேவை...
தொட்டிலுக்குப் பெண் தேவை

மணவறைக்குப் பெண் தேவை...
கட்டிலுக்குப் பெண் தேவை...

மீண்டும்
கருவறையில் பெண் என்றால் மட்டும்,
கல்லறை கட்டுவதேன்..?

ஆண்கள் மட்டுமா கொத்தனார்கள்...
பெண்களும் கூடத்தான் சித்தாள்கள்...

பாரதி
04-03-2008, 04:52 PM
பெண்களைப் பொறுத்தவரை, உசிலம்பட்டியும் சரி... உலகை ஆண்டதாக மார் தட்டிக்கொள்ளும் இங்கிலாந்தும் சரி... ஒன்றுதான் போலும்.

தாய்வழி சமூகத்தில் வளர்ந்த இனம் செய்யக்கூடிய வேலையா இது?

கருச்சோதனை செய்வதை கட்டாயம் ஒழிக்க வேண்டும்.

சற்று வித்தியாசமான முயற்சி பூ. பாராட்டுக்கள்.படைப்பு படிப்பவரை பாதிக்காத பட்சத்தில்
ஆக்கத்தின் நோக்கம் அழிவையே தழுவும்.

படிப்பவர்கள் அனைவரின் மன நிலையும் ஒன்றாகவா அமைந்திருக்கும்? ஒருவருக்கு பிடிக்கவில்லையெனில் அனைவருக்கும் பிடிக்காதென பொருள் கொள்ளலாகாதே..?

படைப்பின் நோக்கம் கருத்தை கொண்டு செல்வது.
ஏற்பதும் ஏற்காதததும் படிப்பவரின் விருப்பம்.

ஆக்கத்தின் நோக்கம் அழிவைத்தழுவும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நன்றி.

செந்தமிழரசி
04-03-2008, 05:11 PM
படிப்பவர்கள் அனைவரின் மன நிலையும் ஒன்றாகவா அமைந்திருக்கும்? ஒருவருக்கு பிடிக்கவில்லையெனில் அனைவருக்கும் பிடிக்காதென பொருள் கொள்ளலாகாதே..?

படைப்பின் நோக்கம் கருத்தை கொண்டு செல்வது.
ஏற்பதும் ஏற்காதததும் படிப்பவரின் விருப்பம்.

ஆக்கத்தின் நோக்கம் அழிவைத்தழுவும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நன்றி.

ஆமாம், அனைவரின் மனநிலையும் ஒன்றாகவே அமைந்திருக்காது ஏற்புடைய கருத்து.

படைப்பாளி கையெடுத்திருக்கும் கரு கனமானது. உக உகமாய் காலைச் சுற்றி இருக்கும் பாம்பு.

ஆராரிரோ பாடி மெத்தென தட்டு கொடுத்து உறங்க வைக்க வேண்டியக் கைகளே உயிர் குடிக்கும் கள்ளிப்பால் கொடுத்து மரணத்தினுள் அணுப்பி வைக்கும் அவலத்தைப் பாடும் படைப்பு. வெறும் செய்தியை மட்டும் தந்துவிட்டுப் போய்விடக் கூடாது என்கிறப் பதைப்போடே சொன்னேன் ஒழிய படைப்பை குறைச் சொல்ல அல்ல.


பெண் படைப்பாளி பெண்களுக்கு இழைக்கப்படும் சமுதாயக் கொடுமையை இன்னும் ஆழச் சென்று பாட இயலும்.

பூமகள் அவர்களின் மற்றக் கவிதைகளையும் படித்திருக்கிறேன் இந்த படைப்பில் மற்றப் படைப்பில் இருந்த அளவு உயிரில்லை என்பதைக் கண்டதாலேயே இப்படி சொல்ல வேண்டியிருந்தது.

என் கருத்தை நீங்கள் ஏற்க வேண்டும் என்பதை எதிர்ப்பார்க்கவில்லை. நீங்கள் சொன்னது என் கருத்துக்கும் ஒவ்வும் படிப்பவரின் மனநிலை ஒன்றாக இருப்பதில்லை.

அறிஞர்
04-03-2008, 05:40 PM
பூமகள் அவர்களின் மற்றக் கவிதைகளையும் படித்திருக்கிறேன் இந்த படைப்பில் மற்றப் படைப்பில் இருந்த அளவு உயிரில்லை என்பதைக் கண்டதாலேயே இப்படி சொல்ல வேண்டியிருந்தது.

என் கருத்தை நீங்கள் ஏற்க வேண்டும் என்பதை எதிர்ப்பார்க்கவில்லை. நீங்கள் சொன்னது என் கருத்துக்கும் ஒவ்வும் படிப்பவரின் மனநிலை ஒன்றாக இருப்பதில்லை.
இதை பூமகளின் கவிதையாக பார்க்காமல்..
சாதரண வரிகளாக காணுங்கள்..
மனதிற்கு தோன்றியவுடன் உடனே எழுதியிருப்பார்.. அன்பரே...

இந்த கருத்தை ஒத்த.. ஒரு ஆழமான கவிதையை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

செந்தமிழரசி
04-03-2008, 06:39 PM
இதை பூமகளின் கவிதையாக பார்க்காமல்..
சாதரண வரிகளாக காணுங்கள்..
மனதிற்கு தோன்றியவுடன் உடனே எழுதியிருப்பார்.. அன்பரே...

இந்த கருத்தை ஒத்த.. ஒரு ஆழமான கவிதையை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

படைப்புகள் அனைத்தும் ஏதாவது ஒரு பொறியின் உந்துதலால் பிறப்பதே.

நறுமணக்கும் மலர் சூடி நம்மை கடந்த பெண் போனபிறகும் உலவும் வாசம் போல படித்து முடித்த பிறகும் படைப்பின் கனம் மனதில் அழுந்த வேண்டும், அந்த அழுத்தம் படிப்பவரை ஏதாவது செய்யும், இதைத் தழுவி இதுபோல் பலப் படைப்புகளும் பிறக்கலாம் அதற்கு வழி செய்ய வேண்டும்.

நான் பூமகளிடம், கனிமொழியையோ, தேன்மொழியையோ, தாமரையையோ, தமிழச்சியையோ, பொன்மணி வைரமுத்துவையோ எதிர்ப்பார்க்கவில்லை. பூமகளிடம் பூமகளைத்தான் எதிர்ப்பார்க்கிறேன்.

யவனிகா
04-03-2008, 07:02 PM
பூவு எந்தப் பகுதியில் பதிக்கலாம் என்று கேட்ட போது நான் தான் கவிதைப் பகுதியில் பதிக்கக்கோரினேன். கவிதைப் பகுதியில் பதிந்தால் நிறையப் பேரைச் சென்று சேரும் என்று எண்ணினேன்.

நம்ப முடியாத...நிஜம். வேதனையாக இருக்கிறது. அங்குமா மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்...நம்மவர் எல்லாம் மெல்ல மெல்ல மாறிவரும் போது...

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் பூமனம்..உடனடியாக பதிவு போட்டிருக்கிறது...வாழ்த்தோ பாராட்டோ சொல்ல மனம் வரவில்லை. செய்தி அப்படி...துக்க வீட்டுக்குப் போனா சொல்லிட்டுப் போகக் கூடாதுங்கற மாதிரி இந்தப் பதிவுக்கு வருந்தத் தான் முடியும்.

மனம் வருந்திப் பதிவிட்ட பூவின் சோகத்தில் நானும் பங்கேற்கிறேன்.

இளசு
04-03-2008, 07:08 PM
உண்மை நிகழ்வென்றால்...
உள்ளம் நொறுங்குகிறது..

மென்மனப் பாமகள்
மனபாரம் புரிகிறது..

எந்த ஊர் சென்றாலும் - அட
நம்மூரு மனம் மாறுமா????

நல்லவை மாறாதிருந்தால் நல்லது..
அல்லாது இவையும் தொடர்ந்தால்?

இதைத் துடைத்தெறியும் அளவு
எப்போது பெண்மை வலிமை பெறும்???

அக்னி
04-03-2008, 07:13 PM
இதைத் துடைத்தெறியும் அளவு
எப்போது பெண்மை வலிமை பெறும்???
இந்த ஆதங்கம்தான் அண்ணா,

ஆண்கள் மட்டுமா கொத்தனார்கள்...
பெண்களும் கூடத்தான் சித்தாள்கள்...

இப்படி வெளிப்பட்டது.

இந்த கொடுமையை எரிக்க பெண்கள்தான் முழுமையாக வலிமையாக வேண்டும்.
இன்று தனக்கு நேர்ந்ததை நாளை தனது சந்ததியில் பழிதீர்ப்பவர்கள் இல்லாமலில்லை.

இந்த மனநிலையில் மாற்றம் வந்தாலே, இந்நிலை மாற்றமடையும்.

அமரன்
07-03-2008, 09:36 AM
கனேடி நாட்டு வண்ணத்துப் பூச்சிகள்
காலநிலை சீரின்மையின் போது
மெக்சிக்கோ தேசம் நோக்கி பறப்பில்...
கடுங்குளிர் தம்மை அளிக்கும் நிலையில்
தன்னினம் புவியில் நிலைக்கும் நோக்கில்
புரட்டாதி மாதத்தில் நெடுந்தூரப் பயணத்தில்...
இனம் காத்து இனம் பெருக்க
இயற்கையைப் புரட்டிப் போடுகிறன..
ஆம்..
சாதராணமான இரு மாத ஆயுட்காலம்
அடைகின்றது நீட்டிப்பு இசைவாக்கம்...
மெக்சிக்கோ தேசத்தில் இருக்கும் வரை
பிறப்பு உறுப்புகள் பருவம் அடைவதில்லை.
மீளவும் கனேடியம் கொண்டதும்
இனம்பெருக்கி மரணித்து விடுகின்றன..
இவைகள் போல் மானிடப் பெண்டிர் சிலரும்
தடம் மாற மாட்டார்களோ.. ஏங்குகின்றேன்..
"பூ" வடிக்கும் செங்கண்ணீரில் பங்கெடுக்கிறேன்..

நேசம்
07-03-2008, 01:32 PM
மனிதர்களின் மனம் மாறாத நிலையில் இது போன்ற சம்ப்வங்கள் எங்கே வேண்டுமென்றால் செய்வார்கள் நம்ம ஆட்கள்.படித்த செய்தியை வித்தியாசமாக பகிர்தந்துக்கு வாழ்த்துகள்

வட்டா
07-03-2008, 06:49 PM
படைப்புகள் அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள்

வசீகரன்
08-03-2008, 11:17 AM
[CENTER][U]கலைந்த புன்னகைகள்..!!

[B]செய்தி:
[COLOR=Blue]கருத்தாய்வு முடிவு: "இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்களிலிடையே
பெண்சிசுக்கருக்கலைப்பு அதிகமாகிறது.."


ஒரு பக்கம் மகளிர் தின கொண்டாட்டம் என்ற செய்தியை படித்து கொண்டிருக்கிறோம்..
மறுபக்கம் இப்படி....!

பூமகள்
11-03-2008, 06:49 PM
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் பூமனம்..உடனடியாக பதிவு போட்டிருக்கிறது...வாழ்த்தோ பாராட்டோ சொல்ல மனம் வரவில்லை. மனம் வருந்திப் பதிவிட்ட பூவின் சோகத்தில் நானும் பங்கேற்கிறேன்.
மிக்க நன்றி யவனி அக்கா.
உங்க மனமும் இந்த பூவின் மனமொத்த மென்மனம் என்பது நானறிந்திருக்கிறேன். உங்களின் இரங்கலுக்கு நன்றிகள் அக்கா.

இதைத் துடைத்தெறியும் அளவு
எப்போது பெண்மை வலிமை பெறும்???
உட்காந்து பார்த்து யோசிச்சாலும்
உலக நியதிகளின் நீதி
என்று மாறுமோ...
அன்று நிச்சயம் மாற்றம் வரும்..!!

சூரியனின் பெருவெடிப்பு கூட
அதனுள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பின் உந்துதல் தானே..!!

இப்படியான பிறழ்வுகள் அதிகரிக்கையில்
நிச்சயம் பெண்மை தானாய் வலிமை பெறும்..!!

காத்திருக்கிறேன்......!
பெண்மை வெடித்து பூமி காப்பாற்ற, பூவுலகில் பூக்க காத்திருக்கும் பூமகள்களுக்காக..!! :icon_ush:

உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றிகள் அண்ணலே..!! :)

பூமகள்
11-03-2008, 06:54 PM
"பூ" வடிக்கும் செங்கண்ணீரில் பங்கெடுக்கிறேன்..
என் வருத்தத்தில் பங்கெடுத்தமைக்கு நன்றிகள் அமரன் அண்ணா. :)

மனிதர்களின் மனம் மாறாத நிலையில் இது போன்ற சம்பவங்கள் எங்கே வேண்டுமென்றால் செய்வார்கள் நம்ம ஆட்கள்.படித்த செய்தியை வித்தியாசமாக பகிர்தந்துக்கு வாழ்த்துகள்
உண்மை தான் நேசம் அண்ணா.
கொடுமையிலும் கொடுமை. :mad::mad:
எத்தனை சுனாமி வந்தாலும் இவுங்க மாற மாட்டாங்க..!! :sauer028::sauer028:
உங்க பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் நேசம் அண்ணா. :)

படைப்புகள் அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் சகோதரர் வட்டா.

ஒரு பக்கம் மகளிர் தின கொண்டாட்டம் என்ற செய்தியை படித்து கொண்டிருக்கிறோம்..
மறுபக்கம் இப்படி....!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................................!!
உண்மை தான்..!!
இரு பக்கத்தில் எந்த பக்கத்தில் நின்று மகிழ்வது..:icon_ush: இல்லை அழுவது..:confused: புரியவில்லையே சகோதரரே...!! :frown::frown:
பின்னூட்டம் போட்டமைக்கு நன்றிகள்.

meera
18-03-2008, 03:51 PM
பூ,

இந்த கவிதை ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறெது.இந்த கொடுமை பெண்களுக்கு இன்று தொடர்வது தான் மனதை மிகவும் பாதிக்கிறது.

கருவுற்ற பெண்கள் கருவை மட்டும் சுமப்பதில்லை கனவுகளையும் சேர்த்து சுமப்பது இவர்களுக்கு ஏனோ புரியதில்லை

பூமகள்
09-04-2008, 01:03 PM
உண்மை தான் மீரா அக்கா..!!
இவுங்களுக்கு எல்லாவற்றிற்கும் பெண்கள் தேவை.. ஆனால் குழந்தையாக மட்டும் பெண் குழந்தை வேண்டாம்..!!

இந்தக் கொடுமையில் கொஞ்சமேனும் பெண்களுக்கும் பங்கு இருக்கத் தான் செய்கிறது. அது தான் என்னில் இன்னும் வேதனையை உண்டாக்குகிறது மீரா அக்கா..!!

பெண்களே பெண்களுக்கு எதிரி என்பது இது தானோ?? மனம் நொந்த செய்தி..!!

பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள் மீரா அக்கா. :)

ஆதி
09-04-2008, 02:30 PM
இந்தக் கவிதையை நவீனத்துவ இலக்கணத்தினுள் சேர்த்துவிட இயலும், அதனால் இது கவிதைதான் செந்தமிழரசி.. சிசுக்கொலை எனும் சமூகக்கொடுமையை சுமக்கும் படைப்பு இது என்பதால் முடிவை கொஞ்சம் கனமாய் இன்னும் ஈரமாய் தந்திருக்கலாம்..