PDA

View Full Version : மொழி சொல்லாயோ...?



சிவா.ஜி
04-03-2008, 10:28 AM
பார்வையில் பேசி என்னை
பைத்தியமாக்காதே..
கயல்விழியின் மொழி புரிய
காதல் இன்னும் என்னுள்
கலக்கவில்லை....
ஆயிரம் அர்த்தம் சொல்லுமாம்
அல்லிமலர் விழிகள்...
அதன் ஓரர்த்தம் புரியாமல்
எத்தனைக் காலம்தான்
பித்தனைபோல் இருப்பது?
ஒளியுள்ள நிலவு நீ
ஒலியுள்ள நிலவாகாயோ...
மொழி சொல்லி என்
நிலை மாற்றாயோ...
உன்னில் நானுளனா
உனக்கென நானுளனா...
உரைத்து விடு பெண்ணே
உச்சந்தலையில் தட்டிக்கொண்டு
முச்சந்தியில் அலையுமுன்.....

பூமகள்
04-03-2008, 10:46 AM
விழி சொல்லும் சொல்
வினாவா விடையா
புரியாமல் நான்..!

வியந்து பார்த்து
அசந்து நிற்கிறேன்
உன் விழிக் கருப்பையில்
எனது பிம்ப மழலை..!

பூரித்து பூக்கிறது
எனது செவ்விதழ்
பூக்களும்...!
===============================
சிவா அண்ணா.. மொழி சொல்லாயோ..?? தலைப்பே அற்புதம். பாராட்டுகள் அண்ணா. :)

அண்ணியை நினைத்து இத்தனை காதலாகி கசிந்துருகிட்டீங்களே... அண்ணிட்ட கண்டிப்பா காட்டுங்க அண்ணா..!! :D:D

ஒளியுள்ள நிலவு நீ
ஒலியுள்ள நிலவாகாயோ...
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்..!! பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் சிவா அண்ணா.
தொடர்ந்து அசத்துங்க.. இன்னும் நிறைய காதல் கவிதைகள் கொடுங்க..!!
எங்களுக்கும் எதிர்காலத்தில் யூஸ் ஆகுமில்ல அண்ணா..!! ;) :D:D

யவனிகா
04-03-2008, 10:50 AM
எலுமிச்சை நிறத்தவளே...
உன் காதல் தா...
தலையில் தேய்த்துக் குளிக்க
பித்தம் அடங்குமா பார்க்கலாம்....?

அடடா...அண்ணா..ஏற்கனவே கறுப்புன்னா வெறுப்பான்னு சுடச்சுட ஒரு திரி ஓடிட்டு இருக்கு...இதில நான் வேற எழுமிச்சை நிறத்த இழுத்திருக்க்றேன்...யாரும் என்னைத் திட்டாதீங்க....

மறுபடி காதல் கவிதை...பொண்ணு யாருன்னு தெரிஞ்சாவாவது தலையில ரெண்டு தட்டி அண்ணணுக்காக சிபாரிசு செய்யலாம். கற்பனைக்கவிதைன்னு சொல்றீங்க...கற்றபனயிலேயே சம்மதம் சொல்ல வெச்சு...நாளைக்கு இன்னொரு கவிதை எழுதுங்க அண்ணா...

வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
04-03-2008, 10:55 AM
வியந்து பார்த்து
அசந்து நிற்கிறேன்
உன் விழிக் கருப்பையில்
எனது பிம்ப மழலை..!
அசத்தலான வரிகள்ம்மா நல்ல கற்பனை...எவ்ளோ வேகமா சிந்திக்குது என் தங்கச்சி....அபாரம்.

அண்ணிக்கிட்ட இதையெல்லாம் சொல்லி அசத்தறதுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம...கட்டி வெச்சுட்டாங்களே....என்ன செய்யறது...
ரொம்ப நன்றிம்மா.

செந்தமிழரசி
04-03-2008, 11:00 AM
வீழ்த்த பார்வை வீசி
மூழ்க மௌனத்தில் மொழிகள்
தாழடைத்த தண்நிலவே
சொல்லெடுத்து சொல்
உள்ளேநான் உனக்குள்
உள்ளேனா ?

காதல் குழைத்து வரிகளில் கவிதை கனி இனிப்பு. வாழ்த்துக்கள் சிவா.ஜி

சிவா.ஜி
04-03-2008, 11:01 AM
பொண்ணு யாருன்னு தெரிஞ்சாவாவது தலையில ரெண்டு தட்டி அண்ணணுக்காக சிபாரிசு செய்யலாம். கற்பனைக்கவிதைன்னு சொல்றீங்க...கற்றபனயிலேயே சம்மதம் சொல்ல வெச்சு...நாளைக்கு இன்னொரு கவிதை எழுதுங்க அண்ணா...

வாழ்த்துக்கள் அண்ணா...
இவ்ளோ சீக்கிரம் சம்மதம் வாங்க முடியுமா...நிஜத்துல இருந்தாலாவது..நினைச்ச உடனே வரச் சொல்லிப் பேசி பஞ்சாயத்து வெச்சுக்கலாம்...கற்பனையிலங்கறதால....வரும்போதுதான் வருவா...அப்ப வேணுன்னா கேட்டுப் பாக்கறேன்...அப்றமா...வேற கவிதை எழுதறேன்...ஓக்கேவா...

மதி
04-03-2008, 02:13 PM
இவ்ளோ சீக்கிரம் சம்மதம் வாங்க முடியுமா...நிஜத்துல இருந்தாலாவது..நினைச்ச உடனே வரச் சொல்லிப் பேசி பஞ்சாயத்து வெச்சுக்கலாம்...கற்பனையிலங்கறதால....வரும்போதுதான் வருவா...அப்ப வேணுன்னா கேட்டுப் பாக்கறேன்...அப்றமா...வேற கவிதை எழுதறேன்...ஓக்கேவா...

இப்பல்லாம் பொண்ணுங்களே ரொம்ப கம்மின்னு எல்லோரும் புலம்பிகிட்டு இருக்கறப்போ... ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களுக்கு எதுக்கு புட்சு புத்சா காதலிங்க... ஹ்ம்ம்.. அண்ணா சரியில்ல..

மத்தபடி கவிதை நல்லாருக்கு.

rocky
04-03-2008, 02:41 PM
அன்புள்ள சிவா.ஜி அண்ணா,

பெண்னின் பார்வைகள் பல அர்த்தம் சொல்லும், அதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமே. ஆனால் என்ன செய்வது ஆண்களை வதைப்பதில் அவர்களுக்கு இருக்கும் சுகமே தனி. பெண்னின் மனதைப் புரிந்து கொள்வது கடவுள்(இருந்தால்?) அவராலும் முடியாத காரியம் நீங்கள் ஏன் இப்படி கெஞ்சுகிறீர்கள். அவர்கள் வாய் திரந்து சொல்ல வேறு வழி இருக்கிறது. நீங்கள் மற்ற பெண்களுடன் சிரித்து பேசி அவர்கள் முன் சந்தோஷமாக இருந்தாலே போதும் தானாக வந்து சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் ஆண்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் அவர்களுக்குத் தான் பிடிக்காதே? :D:D:Dகவிதை மிகவும் அருமையண்ணா. வாழ்த்துக்கள்.

இளசு
04-03-2008, 06:30 PM
அகராதி புடிச்சதாச்சே பாவையரின் விழிமொழி!
உச்சந்தலை தட்டினால் போதாதே!
உச்சிப்பாறையில் முட்டினாலும் ஆகாதே!

ஆழ்ந்த (அனுதாப) வாழ்த்துகள் சிவா!

கருப்பை +மழலை = பாமகளின் புத்துவமைக்கு சிறப்புப் பாராட்டு!

சிவா.ஜி
05-03-2008, 03:40 AM
வீழ்த்த பார்வை வீசி
மூழ்க மௌனத்தில் மொழிகள்
தாழடைத்த தண்நிலவே
சொல்லெடுத்து சொல்
உள்ளேநான் உனக்குள்
உள்ளேனா ?

அசத்தலான பின்னூட்டக் கவிதை செந்தமிழரசி.அழகான வார்த்தையாடல்.
மிக்க நன்றி.

சிவா.ஜி
05-03-2008, 03:44 AM
இப்பல்லாம் பொண்ணுங்களே ரொம்ப கம்மின்னு எல்லோரும் புலம்பிகிட்டு இருக்கறப்போ... ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களுக்கு எதுக்கு புட்சு புத்சா காதலிங்க... ஹ்ம்ம்.. அண்ணா சரியில்ல..

மத்தபடி கவிதை நல்லாருக்கு.
எதுக்குப்பா புலம்பறீங்க....உங்களுக்குன்னு ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க பொறந்திருக்காமயா இருப்பாங்க....காத்திருந்தா காட்சி தருவாங்க...அப்ப உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லும் இதுதான் எனக்கான தேவதைன்னு....அப்படியே பிடிச்சிக்கிங்க.
(கவிதைக்கு மட்டும்தான் மதி கற்பனைக் காதலி....நீங்க வேற...குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடாதீங்க....அம்புட்டுதான்...ஆஞ்சிபுடுவாய்ங்கே)

சிவா.ஜி
05-03-2008, 03:45 AM
அவர்கள் வாய் திரந்து சொல்ல வேறு வழி இருக்கிறது. நீங்கள் மற்ற பெண்களுடன் சிரித்து பேசி அவர்கள் முன் சந்தோஷமாக இருந்தாலே போதும் தானாக வந்து சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் ஆண்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் அவர்களுக்குத் தான் பிடிக்காதே? http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/
அடடா அனுபவம் பேசுது...அசத்துங்க ராக்கி.

சிவா.ஜி
05-03-2008, 03:48 AM
அகராதி புடிச்சதாச்சே பாவையரின் விழிமொழி!
உச்சந்தலை தட்டினால் போதாதே!
உச்சிப்பாறையில் முட்டினாலும் ஆகாதே!

ஆழ்ந்த (அனுதாப) வாழ்த்துகள் சிவா!

கருப்பை +மழலை = பாமகளின் புத்துவமைக்கு சிறப்புப் பாராட்டு!
ஆஹா....அப்ப...ஞஞ்ஞன்னு....தட்டிக்கிட்டு முச்சந்தியிலருந்து....மொட்டப்பாறைக்குத்தான் போகனும்....
உங்கள் அனுதாபத்திற்கு...அழுதுகொண்டே...நன்றி இளசு.

செல்வா
05-03-2008, 03:53 AM
இரவு முழுக்க விழித்திருந்து என் விழியே வீங்கிப்போயிருக்கு
இப்போ வேற எந்த விழியும் தெரியாது மொழியும் புரியாது ...
அப்புறமா வரேன்.... அடிதடி நடத்த தயாரா இருங்க....

சிவா.ஜி
05-03-2008, 03:56 AM
இந்த நேரத்துல செல்வாவான்னு ஆச்சர்யமா பார்த்தேன்....இதுதான் விஷயமா....சரி சரி...போய் தூங்குங்க...பைய வாங்க.

வசீகரன்
05-03-2008, 04:23 AM
ஆயிரம் அர்த்தம் சொல்லுமாம்
அல்லிமலர் விழிகள்...
அதன் ஓரர்த்தம் புரியாமல்
எத்தனைக் காலம்தான்
பித்தனைபோல் இருப்பது?
ஒளியுள்ள நிலவு நீ
ஒலியுள்ள நிலவாகாயோ...
QUOTE]

நல்ல வரிகள் அண்ணா....!ஆனா பசங்க காதலுக்காக உருகறது சரி இல்ல சிவா அண்ணா.... பசங்கள்லாம்
கில்லி மாதிரி.... அது பொண்ணுங்களுக்கு தெரியரதில்லை....

[QUOTE]நிறைய காதல் கவிதைகள் கொடுங்க..!!
எங்களுக்கும் எதிர்காலத்தில் யூஸ் ஆகுமில்ல அண்ணா..!!

இரு பூ... உங்க வீட்டில சொல்லிடறேன்....!

சிவா.ஜி
05-03-2008, 05:16 AM
[quote=சிவா.ஜி;331015] நல்ல வரிகள் அண்ணா....!ஆனா பசங்க காதலுக்காக உருகறது சரி இல்ல சிவா அண்ணா.... பசங்கள்லாம் கில்லி மாதிரி.... அது பொண்ணுங்களுக்கு தெரியரதில்லை.... என்னோட கருத்தும் அதுதாம்ப்பா....ஆனா கவிதைன்னு வரும்போதுதான் உருக,மருக,மன்றாட,மண்டிபோட எல்லாமே வேண்டியிருக்கு. காதலுக்காக அலையக்கூடாது...காதல் வந்துட்டா...விலகக்கூடாது.... ரொம்ப நன்றி வசீ.

அமரன்
05-03-2008, 02:02 PM
பார்வையில் பேசி என்னை
பைத்தியமாக்காதே..
கயல்விழியின் மொழி புரிய
காதல் இன்னும் என்னுள்
கலக்கவில்லை....

காதலுக்கும் மொழியுண்டு.
காதல் கலக்காமால்
மொழியாத தன்மை அதற்குண்டு.
கலந்துவிடு காதலே!!!


ஆயிரம் அர்த்தம் சொல்லுமாம்
அல்லிமலர் விழிகள்...
அதன் ஓரர்த்தம் புரியாமல்
எத்தனைக் காலம்தான்
பித்தனைபோல் இருப்பது?
அல்லி இராச்சிய வாசலா
காப்பவிழ்த்த கண்மலர்கள்..
"பித்து"ப் பிடித்து பழுத்தனவே
காதல் க(னி)சிந்த உன்விழிகள்.

ஒளியுள்ள நிலவு நீ
ஒலியுள்ள நிலவாகாயோ...
மொழி சொல்லி என்
நிலை மாற்றாயோ...
உன்னில் நானுளனா
உனக்கென நானுளனா...
ஒளிநிலவில் ஒளிந்தபடி
ஔவைப்பாட்டி..
சொன்ன அன்னை சொன்னது
"உயர்ந்தால் உயரத்தில்"
புரிந்ததா என்னுளனே..
காதலில் உயர்ந்துவிடு..
காதலை உயர்த்திவிடு!


உரைத்து விடு பெண்ணே
உச்சந்தலையில் தட்டிக்கொண்டு
முச்சந்தியில் அலையுமுன்.....

எப்படி உரைப்பது..
காதலைச் சொல்ல வார்த்தைகளேது..
நடை உடை பாவனையில்
காதல் சொல்லாது தப்பியதேது...


இப்போதுகூடப்பார்..
சுண்டல் பொட்டலத்துடன்
தெருவோரம் நீ போகைலும்
புரைஏறுகிறது..
உச்சந்தலையில் உன்மனைவி
செல்லமாய் அடித்தபடி..

அருமை சிவா.. கலக்கலான கவிதை..
கற்பனைக் குதிரையில் வலம் வரும் சிவாவுக்கு ஆழ்ந்த நான் ஆழாத விட(ய)த்துக்கான அனுதாப வாழ்த்துக்கள்..

தீபா
05-03-2008, 05:10 PM
பார்வையில் பேசி என்னை
பைத்தியமாக்காதே..
கயல்விழியின் மொழி புரிய
காதல் இன்னும் என்னுள்
கலக்கவில்லை....
ஆயிரம் அர்த்தம் சொல்லுமாம்
அல்லிமலர் விழிகள்...
அதன் ஓரர்த்தம் புரியாமல்
எத்தனைக் காலம்தான்
பித்தனைபோல் இருப்பது?
ஒளியுள்ள நிலவு நீ
ஒலியுள்ள நிலவாகாயோ...
மொழி சொல்லி என்
நிலை மாற்றாயோ...
உன்னில் நானுளனா
உனக்கென நானுளனா...
உரைத்து விடு பெண்ணே
உச்சந்தலையில் தட்டிக்கொண்டு
முச்சந்தியில் அலையுமுன்.....

பார்வையால் பைத்தியம்
கயல்விழி
அர்த்தம் சொல்லும் அல்லிவிழி
பித்தனைப் போல இருப்பது
ஒளியுள்ள நிலவு
உன்னில் நான்
உனக்கென நான்

ஆகிய பழையன தவிர்த்து
ஏனையன புதுமைப்படுத்த

இன்னும் மிளிரும் காதல் கவி.

சிவா.ஜி
06-03-2008, 03:27 AM
காதலுக்கும் மொழியுண்டு.
காதல் கலக்காமால்
மொழியாத தன்மை அதற்குண்டு.
கலந்துவிடு காதலே!!!

அனுதாப வாழ்த்துக்கள்..
நீண்ட நாட்களுக்குப் பிறகு..வரிக்கு வரி அழகுதமிழில் வசீகர விமர்சனம்...கவிநாயகன் அமரனிடமிருந்து....ஆனந்தமாய் இருக்கிறது.

கவிதையை விட பின்னூட்டம் மிளிரும் இன்னொரு பதிவு அழகு.

இங்கும் அனுதாப வாழ்த்துகளா....ஹய்யோ.....ஹய்யோ....

மிக்க நன்றி அமரன்.