PDA

View Full Version : மேம்படுத்த முடியுமா?



சிவா.ஜி
04-03-2008, 03:32 AM
மேசைக் கணிணியில் PENTIUM-4 லிருந்து DUO CORE க்கு மேம்படுத்த முடியுமா?...அப்படி மேம்படுத்த முடியுமானால்...எந்தெந்த பாகங்களையும் மாற்ற வேண்டி வரும்?
உதவ முடியுமா?

தாமரை
04-03-2008, 05:01 AM
மேசைக் கணிணியில் PENTIUM-4 லிருந்து DUO CORE க்கு மேம்படுத்த முடியுமா?...அப்படி மேம்படுத்த முடியுமானால்...எந்தெந்த பாகங்களையும் மாற்ற வேண்டி வரும்?
உதவ முடியுமா?

மதர் போர்டைத்தான். ;)

முதலில் உங்கள் மதர் போர்ட் / சிப் செட் சப்போர்ட் செய்யுமான்னு Intel தளத்தில் செக் பண்ணுங்க

நுரையீரல்
04-03-2008, 05:46 AM
தங்களது Pentium-4 423 pinout (அ) 478 pinout வகையாகத் தான் இருக்கும். அதிலும் SD-RAM சப்போர்ட் செய்யும் மதர்போர்டாகத் தான் இருக்குமென்பது எனது கணிப்பு.

தற்போது வரும் Dual Core வகைகள் 775 pinout வகைகள், அதில் தங்களது பழைய processor-ஐ போட முடியாது, மதர்போர்டும், processor-ம் புதியது வாங்க வேண்டும். RAM SD-RAM வகையாக இருந்தால் அதையும் போடமுடியாது. புது மதர்போர்ட் DDR-2 தான் சப்போர்ட் செய்யும்.

ஒரு கம்புயூட்டரின் ஸ்பீட் என்பது வெறும் மதர்போர்ட் & processor-ஐ பொருத்து அமைவதல்ல. அதில் இடப்படும் RAM மற்றும் Hard disk-ஐயும் பொறுத்து அமையும்.

அதனால் தங்களுடைய பழைய Pentium-4ஐ spare ஆகவோ (அ) கிடைச்ச விலைக்கு விற்றுவிட்டு, புதிய Dual core Computer வாங்குவது தான் நலம்.

இது எதுவுமே செய்யாம ஸ்பீட் மட்டுமே அதிகப்படுத்த வேண்டி விரும்பினால், Hard disk-ல் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட partition-களை களைந்துவிட்டு ஒரே ஒரு partition மட்டும் வைத்து பயன்படுத்துங்கள். Hard disk-ஐ அடிக்கடி defragment செய்யுங்கள், இதுவும் வேகத்தை சற்று அதிகரிக்கும்.

உங்களது பழைய கணிணியில் உள்ள RAM - SD RAMஆ (அ) DDRஆ என்று பரிசோதித்துவிட்டு அதையும் அதிகப்படுத்துங்கள். உங்களது ஸ்பீட் அதிகமாகும்.

சிவா.ஜி
04-03-2008, 06:05 AM
நுரை என்னுடையது DDR-2 RAM தான் 512 போட்டிருக்கிறேன்.
மதர்போர்ட் Mercury, Hard disk-ல் 4 Partition இருக்கிறது.

(ஏற்கனவே ஒரு PENTIUM-2 மூலையில் இருக்கிறது..இதையும் அதோடு சேர்த்துவிடத்தான் வேண்டுமா?...ஏதாச்சும் நல்ல செய்தியா சொல்லுங்கப்பா)

சிவா.ஜி
04-03-2008, 06:07 AM
மதர் போர்டைத்தான். http://www.tamilmantram.com:80/vb/

முதலில் உங்கள் மதர் போர்ட் / சிப் செட் சப்போர்ட் செய்யுமான்னு Intel தளத்தில் செக் பண்ணுங்க
தாமரை அப்படி செக் பண்ணுவதற்கு ப்ராஸசரின் விவரம் மட்டும் கொடுத்து செக் பண்ன முடியுமா?

aren
04-03-2008, 06:31 AM
பேசாமல் புதிதாக ஒரு கணிணியை வாங்கிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு சீப்பாக இருக்கும். இப்படி மாற்றலாம் என்று நினைத்தால் அது புதியதைவிட விலை அதிகமாகும் என்பதே உண்மை.

இல்லையென்றால் இந்த மாதிரி கணிணி தயாரிப்பாளர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போய்விடுமே. அதனால்தான் ஒவ்வொரு முறையும் வேறு மாதிரியான பிராஸஸர்கள் வந்து முன்னால் இருப்பதை பிரயோஜனம் இல்லாமல் செய்துவிடுகிறது.

சிவா.ஜி
04-03-2008, 10:11 AM
பேசாமல் புதிதாக ஒரு கணிணியை வாங்கிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு சீப்பாக இருக்கும்.
இதைத்தான் செய்யவேண்டியிருக்குமென்று நினைக்கிறேன்...ஆரென்.

பாரதி
04-03-2008, 03:31 PM
அன்பு சிவா,
என்ன காரணத்திற்காக நீங்கள் புதிய கணினி வாங்க விழைகிறீர்கள்..?
பெண்டியம் -4 பொதுவாக வீட்டு உபயோகத்திற்கு இது போதுமானது. நீங்கள் விஸ்டா... வேண்டும் என நினைத்தால் மட்டும்... புதுக்கணினி வாங்குங்கள். இல்லையெனில் ராஜா கூறியது போல...

நினைவகத்தின் அளவைக்கூட்டுங்கள்.

ஆப்பரேடிங் சிஸ்டம் நிறுவப்பட்ட பகுதியில் போதுமான அளவு வெற்றிடத்தையும் வைத்துக்கொள்ளுங்கள்.

ரெஜிஸ்டிரியையும், டெம்பரரி ஃபோல்டர்களையும் அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.

தேவையில்லாத, அடிக்கடி உபயோகிக்காத மென்பொருட்களை நீக்கி விடுங்கள்.

வாரம் ஒரு முறையேனும் டீஃப்ராக்மெண்ட் செய்யுங்கள்...

இல்லை... மூலையில்தான் ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தீர்களானால்.. எனது வீட்டில் நிறைய மூலைகள் வெறுமனே இருக்கின்றன.. ஹி..ஹி..

தாமரை
04-03-2008, 04:30 PM
இல்லை... மூலையில்தான் ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தீர்களானால்.. எனது வீட்டில் நிறைய மூலைகள் வெறுமனே இருக்கின்றன.. ஹி..ஹி..

மூளைகளும் தான் என நினைக்கிறேன்..ஹி ஹி..

சொல்லப்போனால் தனியாய் ஒரு பிராஸஸர் வாங்குவதை விட கம்ப்யூட்டர் வங்குவது சிறந்தது..

எந்த ஒரு சிலிகானுக்கும் ஆயுள் உண்டு.. சராசரியாக ஏழு ஆண்டுகள் ஒரு மதர்போர்ட் பிரச்சனை இல்லாமல் செயல்படலாம் என்பது ரிலையபிளிட்டி கணக்கு. அதனால் தான் கணினிக் கம்பெனிகள் 5 வருட வாரண்டி கொடுத்து வாரிக் குவிக்கின்றன, உங்கள் கணினி வாங்கி இப்போதே நான்கைந்து வருடங்கள் ஆகி இருக்கும்.

இரண்டாவது, கடந்த சில வருடங்களில் பிராஸஸர் கோர் வோல்டேஜ் பகுதியில் மாற்றங்கள் வெகுவாக ஏற்பட்டு விட்டன. எனவே சாக்கெட் அதேதான் என்னும் பட்சத்திலும், இதன் விளைவாக பயன்பாடு இல்லாமல் போகும்.

மூன்றாவதாக பயாஸ் இல் பிராஸஸர் டைப் செட் செய்யப்ப்பட்டு இருக்கும். இந்த மதர் போர்ட் குறிப்பிட்ட பிராஸஸரை சப்போர்ட் செய்யாத பட்சத்தில், அன்னோன் பிராஸஸர் என்று சொல்லி விட்டுப் பெப்பே என முழிக்கும்...

அதே போல கிளாக் ஸ்பீட் ஜம்பர் செட்டிங்ஸ் தலையைச் சுற்ற வைக்கும். ஃபிரண்ட் சைட் பஸ் ஸ்பீட் உங்களது சிப் செட்டின் வேகத்தையும் பொறுத்தது..

ஆக, அழுக்குத் துணி சுமக்க யானை வாங்கிய கதையாக இருக்கும்

சும்மா ஒரு பிஸி வாங்கிப் போடுங்க. இருக்கிற பி.சி யை தானம் பண்ணிடுங்க..

எத்தனையோ குட்டிப் பள்ளிகளுக்கு அது தேவைப்படலாம்.. ;)

பூமகள்
04-03-2008, 04:35 PM
சிவா அண்ணா...!!
ஒரு சந்தேகம்.. இப்போ Intel - Centrino Processor வந்திருக்கே புதுசா??? Duo Core -க்கு அடுத்தது தானே அண்ணா இது??

எது சிறந்தது?? Intel Centrino ஆக மாற்ற என்ன செய்யனும்??

நுரையீரல்
04-03-2008, 04:54 PM
ஒரு சந்தேகம்.. இப்போ Intel - Centrino Processor வந்திருக்கே புதுசா??? Duo Core -க்கு அடுத்தது தானே அண்ணா இது??

எது சிறந்தது??
Centrino என்பது வயர்லெஸ் சேவையுடன் மடிக்கணினிகளில் பயன்படுத்தும் ஒரு டெக்னாலஜி. Centrino டெக்னாலஜி desktop-களில் பயன்படுத்த முடியாது.

Core என்றால் 32bit mobile x86 CPU (processor), Core 2 என்றால் 64 bit mobile x86 CPU. Dual Core (அ) Core Duo-வை விட Core 2 Duo நல்லது.


Intel Centrino ஆக மாற்ற என்ன செய்யனும்??

Desktop PC-ஐ தூக்கி கடாசிவிட்டு நல்ல laptop வாங்க வேண்டும் ஹிஹி..

பூமகள்
04-03-2008, 05:07 PM
நல்ல விளக்கம் நுரை அண்ணா. ரொம்ப நன்றிகள் அண்ணா. :)

தங்கச்சிக்கு அப்படின்னா ஒரு மடிக்கணினி அண்ணா வாங்கியாறது..!! ;) :D:D

(ஹூம்..:rolleyes: நானும்.. இங்கே மடிக்கணினி விலைவாசி பற்றியெல்லாம் ஒரு திரி துவங்கினேன்..!! நானோவுக்கு அடுத்து மடிக்கணினி புரட்சி..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14708) ஆனாலும் எந்த அண்ணாவும் வாங்கித் தருகிற மாதிரி தெரியலையே..!!:traurig001::traurig001:)

சிவா.ஜி
05-03-2008, 03:25 AM
சும்மா ஒரு பிஸி வாங்கிப் போடுங்க. இருக்கிற பி.சி யை தானம் பண்ணிடுங்க..

எத்தனையோ குட்டிப் பள்ளிகளுக்கு அது தேவைப்படலாம்.. http://www.tamilmantram.com:80/vb/
தாமரை கிரேட்....ரொம்ப ரொம்ப நல்ல யோசனையைச் சொல்லியிருக்கீங்க...நான் யோசிச்சதைவிட மேலான யோசனையா இருக்கு....வசதியில்லாத எங்கள் உறவினர் பையன் கஷ்டப்பட்டு பொறியியல் படிப்பு படிக்கிறான்...அவனுக்கு கொடுக்கலாமென்று இருந்தேன்...நீங்கள் சொல்வது படி செய்தால் நிறையபேருக்கு பயன்படும்.
(2005-ல் தான் வாங்கினேன் தாமரை)

சிவா.ஜி
05-03-2008, 03:27 AM
சிவா அண்ணா...!!
ஒரு சந்தேகம்.. இப்போ Intel - Centrino Processor வந்திருக்கே புதுசா??? Duo Core -க்கு அடுத்தது தானே அண்ணா இது??

எது சிறந்தது?? Intel Centrino ஆக மாற்ற என்ன செய்யனும்??


Duo Core -க்கு முந்தையதுதான் Centrino அது மடிக்கணிணிக்கு மட்டுமென்றுதான் நினைக்கிறேன்ம்மா..(நுரையோட பதிவைப் பாக்காம நான் பதிந்து விட்டேன்...சூப்பர் விளக்கம் நுரை சார்)

praveen
05-03-2008, 12:23 PM
நமக்கு முன்னே பதில் தர நுரை முந்திக்கொண்டாரே, ஆனால் அவரின் சரியான பதிலை ஜீரணிக்க (பழைய கம்ப்யூட்டரை பிரிய மனமில்லை :) ) சிவா.ஜியால் முடியவில்லை. வேறு ஏதாவது பதில் வராதா என்று அவர் மனது அலை பாய்கிறது. எல்லோருக்கும் ஏற்படும் மனக்கஸ்டம் தான். சிறிய அளவில் செலவு என்றால் ராம் மட்டும் கூட்டுங்கள், இப்போது ராம் விலையெல்லாம் மிகவும் குறைந்து விட்டது.

கம்ப்யூட்டரின் வேகம் கூட கூட அதன் சிஸ்டம் பஸ் கூடும். எனவே தற்போதைய கம்ப்யூட்டராக மாற்ற புராசசர்+மதர்போர்டு+ராம் மற்றும் தேவைப்பட்டால் எஸ்.எம்.பி.எஸ் (ஆம் அதிக மின் சக்தி தேவை) மாற்றியாகனும். அத்தோடு முன்னர் ஐ.டி.ஈ ஹார்ட் டிஸ்க் என்றால் தற்போது வரும் மதர்போர்டில் சரியாக ஒரு ஐ.டி.ஈ ஹார்ட் டிஸ்க் மற்றும் ஒரு டி.வி.டி டிரைவ் தான் மாற்ற முடியும். எனவே ஹார்ட் டிஸ்க்கும் எஸ்.ஆட்டா விற்க்கு மாறனும்.

அதற்கு தான் நுரை சொன்னது போல புத்தம் புதிதாக வாங்கினால் ஒரே மன+பண கஷ்டம் தான். இல்லாவிட்டால் பகுதி மாற்றியும் பிரச்சினை வந்து சேரும்.

சிவா.ஜி
05-03-2008, 01:22 PM
மிக்க நன்றி பிரவீன்...நீங்கள் சொல்வதை யோசித்துப் பார்க்கும்போது...புதிதாய் வாங்கிவிடுவதே மேல் என்று தோன்றுகிறது.தாமரை சொன்னதையும்,நுரை சொன்னதையும் வைத்து கிட்டத்தட்ட அந்த மனநிலைக்கு வந்துவிட்டேன்...இப்போது நீங்களும் சொன்ன பிறகு...வேறு வழியில்லை..புதிதாக வாங்கிவிட வேண்டியதுதான்..