PDA

View Full Version : எங்கே எனது கவிதை?பிச்சி
03-03-2008, 12:45 PM
இரவு பானத்தை அருந்திய
பகல் பொழுதொன்றில்

நிலமகளின் நெஞ்சில் மிதித்து
குருதி குடித்த வாரிசுகளிடம்
ஒதுங்கிய கற்பனை
ஒருதுளியேனும் உண்டோ எனக் கேட்டேன்

விழிகளை ஏற இறக்கி
நரம்பு அற்று சொன்னார்கள்
ஒருதுளியுமில்லை என்று.

விரலிடுக்கில் காலம் வதைத்து
ஓடும் கடிகாரத்தை
ஒருதுளி நிறுத்தி
மிஞ்சிய காதல்
கவிதையில் உண்டோ எனக்கேட்டேன்

சிறையடைந்த துன்பம்
சிறிதுமின்றி காலம் சொன்னது
கரு சிக்கவில்லை பெண்ணே
காத்திரு கவிதைக்கு என்று

கற்பனைக் கர்ப்பத்தை
கவிதைக்குள் இடம்மாற்றி
வார்த்தை பெற்றெடுக்கும் கவிஞனிடம்
வானம் பொடிந்து வார்த்தை மலராதா என
நீர் நிறைந்து நா தழுக்கக் கேட்டேன்

திமிர் ஏறிய பற்கள் சொன்னது
ஊறிய கவிதை விற்றுத் தீர்ந்தது
வயிற்றுக்காக அல்ல
வானம் வசப்பட என்று..

இறுதியில்
என் உயிரோசையை
தமிழுக்குள் இடித்து
உள்ளெழும் ஒலிகண்டு
உயிர்த்தெழுந்த இசையிடம் கேட்டேன்

தடுமாறிய ராகத்தில்
நாணம் புதைத்து பாடியது
அது..

அன்புடன்
பிச்சி.
--------------------------------------------

நாகரா
04-03-2008, 06:05 AM
இறுதியில்
என் உயிரோசையை
தமிழுக்குள் இடித்து
உள்ளெழும் ஒலிகண்டு
உயிர்த்தெழுந்த இசையிடம் கேட்டேன்

தடுமாறிய ராகத்தில்
நாணம் புதைத்து பாடியது
அது..

உன் உயிர்ப்பின் ராகத்தைப்
பாடும் நற்றமிழ்க் கவிதை
என் செவிகட்கு இனிக்கிறது
பிச்சி, என் வாழ்த்துக்கள்

கற்பனை வளமும், சொற்களின் ஆளுமையும் அபாரம், நன்றி.

சுகந்தப்ரீதன்
04-03-2008, 06:16 AM
ஆஹா..பிச்சி..பாப்பா..!!

கவிதையில பிச்சிட்டீங்க போங்க...!! எப்படி முடியுது எல்லோரும் ரொம்ப ஆழமா கருவையும் தமிழையும் பயன்படுத்தி எழுதுறீங்களே...?!:icon_b:

தொடருங்கள்...வாழ்த்துகளும்...பாராட்டுகளும்...பாப்பாவுக்கு..!!:icon_rollout:

பிச்சி
22-04-2008, 03:55 PM
மிக்க நன்றி சுகந்த ப்ரீதன் அண்ணா நாகரா அண்ணா..

அன்புடன்
பிச்சி

சிவா.ஜி
22-04-2008, 04:37 PM
ஆரம்ப வரிகளில் அசத்த ஆரம்பித்து கடைசிவரி வரை பிரமிக்க வைத்த கவிதை. எப்படியோ தவறி விட்டதே என் சிந்தனையிலிருந்து. முன்பே ஒருமுறை வாசித்துவிட்டு அசந்துபோய் என்ன எழுதுவது என்று தெரியாமல் விட்டு விட்டேன். என்னையே நொந்துகொள்கிறேன் அதற்கு இப்போது.

வசப்பட்ட வார்த்தைகள், வாரி எறியப்படாமல் வாகாய்க் கோர்த்த வார்த்தைப்பூக்கள்.

உண்மையிலேயே உயிரோசையை இடித்து உள்ளிருந்து ஒலித்த குரலாய் மிளிர்கிறது கவிதை.

பிரமாதம்மா. பிச்சிட்டே பிச்சி. வாழ்த்துகள்.

ஓவியா
22-04-2008, 07:26 PM
கற்பனை வளமும், சொற்களின் ஆளுமையும் அபாரம், நன்றி.

பிச்சியின் தமிழ் புலமையை எத்தனை முறை பாராட்டினாலும் சலிக்காது.

பிச்சி ஒரு அதிசய குழந்தைதான், தமிழுக்கு கிடைத்த பொக்கீஷம். ஆனாலும் தன் திறமையை சரியாக பயன்படுத்துவது மிகவும் குறைவு. :cool::cool::cool:

அனுராகவன்
23-04-2008, 04:15 AM
பிச்சியின் கவி வரிகள் அருமை...
பிரித்து பொருள் காணலாம்..

பிச்சி
04-05-2008, 07:34 AM
ஆரம்ப வரிகளில் அசத்த ஆரம்பித்து கடைசிவரி வரை பிரமிக்க வைத்த கவிதை. எப்படியோ தவறி விட்டதே என் சிந்தனையிலிருந்து. முன்பே ஒருமுறை வாசித்துவிட்டு அசந்துபோய் என்ன எழுதுவது என்று தெரியாமல் விட்டு விட்டேன். என்னையே நொந்துகொள்கிறேன் அதற்கு இப்போது.

வசப்பட்ட வார்த்தைகள், வாரி எறியப்படாமல் வாகாய்க் கோர்த்த வார்த்தைப்பூக்கள்.

உண்மையிலேயே உயிரோசையை இடித்து உள்ளிருந்து ஒலித்த குரலாய் மிளிர்கிறது கவிதை.

பிரமாதம்மா. பிச்சிட்டே பிச்சி. வாழ்த்துகள்.

மிகவும் நன்றி அண்ணா. தேடி படித்து பாராட்டியமைக்கு நிரம்பவும் நன்றி.

அன்புடன்
பிச்சி

பிச்சி
04-05-2008, 07:37 AM
பிச்சியின் தமிழ் புலமையை எத்தனை முறை பாராட்டினாலும் சலிக்காது.

பிச்சி ஒரு அதிசய குழந்தைதான், தமிழுக்கு கிடைத்த பொக்கீஷம். ஆனாலும் தன் திறமையை சரியாக பயன்படுத்துவது மிகவும் குறைவு. :cool::cool::cool:

அக்கா. என்னை ஓவரா புகழுறீங்க. எப்படி இருக்கீங்க அக்கா? உங்களை மன்றத்திலே பார்க்கவே முடியலை. முன்னல்லாம் எங்க பார்த்தாலும் உங்க பதிவுகள் தான் இருக்கும்.

செல்லத்துடன்
பிச்சி

பிச்சி
04-05-2008, 07:37 AM
பிச்சியின் கவி வரிகள் அருமை...
பிரித்து பொருள் காணலாம்..

மிக்க நன்றி அனு அக்கா,.

ஓவியா
04-05-2008, 10:20 AM
அக்கா. என்னை ஓவரா புகழுறீங்க. எப்படி இருக்கீங்க அக்கா? உங்களை மன்றத்திலே பார்க்கவே முடியலை. முன்னல்லாம் எங்க பார்த்தாலும் உங்க பதிவுகள் தான் இருக்கும்.

செல்லத்துடன்
பிச்சி

இல்லமா நான் அனுதினமும் வருகிறேன். என் மன்ற பற்று என்றுமே மாறாது. காரணத்துடந்தான் விலகி இருக்கின்றேன். :)

பிச்சி
13-05-2008, 04:09 PM
இல்லமா நான் அனுதினமும் வருகிறேன். என் மன்ற பற்று என்றுமே மாறாது. காரணத்துடந்தான் விலகி இருக்கின்றேன். :)

அப்படி என்றால் சரி. மன்றத்தை மறக்க முடிவது நம்மை நாமே மறப்பது இல்லையா அக்கா?

அன்புடன்
பிச்சி

பென்ஸ்
14-05-2008, 01:23 AM
கவிதை வாசிக்க ஆரம்பித்து
கவிதையில் சிக்க வைத்துவிட்டாய்...

குழந்தை...

நலமா...!!!!

கவிதைக்கு தலைப்பிடுவதே ஒரு கவிதை நயம் தான்...

வரிகளின் வலிமை யாரோ சிலருக்கு சாட்டையடி...

ஷீ-நிசி
14-05-2008, 01:41 AM
என்னே வரிகள்.. தமிழ் புலமை தாண்டவம் ஆடுகிறது கவிதையில்...

வாழ்த்துக்கள் பிச்சி...