PDA

View Full Version : கடவுள் மீண்டும் மிருகமாய்



kavitha
03-03-2008, 09:50 AM
(1)

தவழ்ந்து வரும்
பச்சிளம்குழந்தை நான்

தூரத்தில் சிரிக்கும்
கல் கடவுள் நீ

உன் சிரிப்பே உயிர்ப்பு
என்றெண்ணி
உன் பாதம் நெருங்குகையில்
வேலெடுக்க நினைக்கலாகுமோ...

என்னை நோகடித்தல்
உனக்கு லாபமோ?

சிவா.ஜி
03-03-2008, 11:02 AM
வேலுக்கு வேறு வேலை வைத்திருக்கும் வேலய்யா...பச்சிளம் குழந்தையை வேலைக் காட்டி அச்சுறுத்துவாரா..

ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு....கவிதா....

நோகடிக்கும் வேலையைத்தான் வேலனும் அவன் அப்பனும் எப்போதும் செய்கிறார்களே...கேட்டால் திருவிளையாடல் என்பார்கள்....

இந்தக் கவிதையை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை கவிதா....கொஞ்சம் விளக்குவீர்களா?

பிச்சி
03-03-2008, 12:51 PM
எனக்கும் புரியவில்லை. கடவுள் யார்? குழந்தை யார்? விளக்கமாக சொல்லுங்கள் அக்கா

அமரன்
03-03-2008, 05:39 PM
மேம்போக்காக பார்த்தால் நம்பினோர் கெடுவதில்லை என்பதன் நம்பகத்தன்மை மீதான கோபம் நலிந்து வேதனை விசும்பலாக பரிமாறப்பட்டுள்ளது போல உள்ளது.. "துன்பம்வரும் வேளையிலும் நீ தாழ் தொழுது நீ இன்பம் சேர்க்க மாட்டாயா" என்று சோதிப்பதே சோதிவடிவான கடவுளர் தொழிலோ/பொழுதுபோக்கோ என்ற கேள்வியை எழுப்பி விடுகிறன பல நிழல்படங்களும், நிஜப்பாடங்களும்..

அக்கா தெளிவுபடுத்துவார் என்று எண்ணுகின்றேன்.
மீண்டும் கவீக்காவின் கவிதைகளை காண்பதில் மகிழ்ச்சி.. தொடருங்கள் அக்கா.

இளசு
04-03-2008, 05:54 AM
தூரத்தில் இருக்கும் கற்சிலையைத் தவழ்ந்து அடைதலில் புரிவது
மழலையின் முயற்சி, ஆர்வம், பிரமிப்பு மட்டுமல்ல -
அதன் vulnerability-யும்!

நோகடிக்க வாகாக வாய்ப்பு வந்தால் யாரும் தவறவிடுவதில்லை!
''கடவுளும்'' அதற்கு விதிவிலக்கில்லை!

(1) பார்த்தால் தொடர்கவிதை எனத் தெரிகிறது. கவீ..
தொடரட்டும்... மனப்புண்ணகழ்ந்து நிணமூற்றும் இத்தொடர்!

பென்ஸ்
06-03-2008, 05:47 PM
ஆம் இளசு எனக்கும் அப்ப்டிதான் தெரிகிறது....

கவி... உங்கள் கவிதைகளை மீண்டும் படிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நன்மையும் தீமையும் அறிந்ததாலே அவர் கடவுள்... வேல் எடுத்தால் .. வேங்கை பின்னால் இருக்கிறதா என்று பாருங்கள் குழப்பம் வேண்டாம்...

அறிஞர்
06-03-2008, 10:18 PM
ஒரு புறம்... சிரிப்பு..
மறு புறம் பயமுறுத்தல்.....

சிரிப்பு குழந்தைக்கு...
பயமுறுத்தல் பகைவனுக்கு.. என்று எண்ணலாமா...

அல்லது
அன்பும், கண்டிப்பும் உள்ள உருவம் என எண்ணலாமா..

meera
22-03-2008, 11:23 AM
ஆ கவிதாவின் கவிதை ...............
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களின் கவிதை வாசிப்பது மகிழ்ச்சி.
ஆணால் ஹி ஹி எனக்கும் புரியலை.

கவி இளசு அண்ணா சொன்னதுதான் அர்த்தமா?

kavitha
29-03-2008, 06:44 AM
சிவா, பிச்சி, அமரன், இளசு அண்ணா, பென்ஸ், அறிஞர், மீரா
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் தாழ்மையான நன்றிகள்.


கவி இளசு அண்ணா சொன்னதுதான் அர்த்தமா?
ஆமாம் மீரா.

kavitha
29-03-2008, 06:55 AM
கடவுள் மீண்டும் மிருகமாய்
(2)

வானுக்கு மேகம்
மண்ணுக்கு மலை
பெண்மைக்குக் கணவன்
பிறப்புக்கு நீ - என்றே
அரண் கொண்டால் - என்னை
அரற்றலாகுமோ நாளும்?
வேலிக்கு வேலி ஏதைய்யா?
விதிக்கு பதில் சொல்லைய்யா!

நாகரா
29-03-2008, 07:07 AM
(1)

தவழ்ந்து வரும்
பச்சிளம்குழந்தை நான்

தூரத்தில் சிரிக்கும்
கல் கடவுள் நீ

உன் சிரிப்பே உயிர்ப்பு
என்றெண்ணி
உன் பாதம் நெருங்குகையில்
வேலெடுக்க நினைக்கலாகுமோ...

என்னை நோகடித்தல்
உனக்கு லாபமோ?

பச்சிளங்குழந்தையாம் நீ
வளர்ந்து
அறிவில் முதிர்ந்து
எனக்கும் உனக்கும் இடையில்
இருக்கும் மாயத்தூரங் கடந்து
கல்மனம் பிளந்து
நான் இருக்கும் சேம இடமாம்
இருதயம் கண்டு
உன் பாதங்களில் என் பாதம்
பொருந்தியிருக்கும் மெய்ம்மையுணர்ந்து
என்னில் வேறற ஒன்றி
வேலெடுத்து
நோகடிக்கும் பொய்யை
சாகடித்தே
ஆன்ம லாபம் பெறுவாயே!

kavitha
29-03-2008, 07:15 AM
கல்மனம் பிளந்து
அதை உடைக்கும் உளியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் நாகரா.
பதில் கவிதை ஆறுதல். நன்றி.

நாகரா
29-03-2008, 07:16 AM
கடவுள் மீண்டும் மிருகமாய்
(2)

வானுக்கு மேகம்
மண்ணுக்கு மலை
பெண்மைக்குக் கணவன்
பிறப்புக்கு நீ - என்றே
அரண் கொண்டால் - என்னை
அரற்றலாகுமோ நாளும்?
வேலிக்கு வேலி ஏதைய்யா?
விதிக்கு பதில் சொல்லைய்யா!

யாமிருக்க பயமேன்!
என்ற உன் அம்மையப்பனாம்
என் மந்திர வார்த்தையை மறந்து
உன் மனபயத்துக்கு
வெறுங்கல்லை அரணாகக் கொண்ட
உன் கதியை
நானோ விதித்தேன்!
பதில் சொல் மகனே(ளே)!

நாகரா
29-03-2008, 07:18 AM
அதை உடைக்கும் உளியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் நாகரா.
பதில் கவிதை ஆறுதல். நன்றி.

உம் உள்ளொளியாம் உளியால் மனக்கல் பிளப்பீர், கவிதா. நன்றி