PDA

View Full Version : நான் எழுதா கவிதை..



rambal
05-07-2003, 07:33 PM
நான் எழுதா கவிதை..

நடைமுறைச் சிக்கலில்
சதாய் உழன்று
எதேச்சையாக வந்தமரும்
அழுக்கை...

ஒரவிழிப்பார்வையில்
தெரித்து விழும்
எண்ணற்ற கனவுகளை..
பிறிதொரு நாள்
அது தரும் கண்ணீரை..

அவ்வப்பொழுது நியாபகத்திற்கு
வந்து போகும் அம்மாவை..
கில்லி விளையாண்ட பால்யத்தை..
சைக்கிள் கற்க
விழுந்து எழுந்த மைதானத்தை..
கண்ணை உறுத்தும்
என் தேச அவலங்களை..
பிரிந்து வந்த கிராமத்தை...
மறந்து போன நண்பனை...
முதுகில் குத்திய
துரோகியை..

வானக் கண்ணாடி பார்க்க
வந்து போகும்
நிலவை, நட்சத்திரங்களை..
அகக்கண்ணாடி கொண்டு பார்க்கும்
சுயத்தை, மனதை..

எங்கோ இருந்து ஒலிக்கும்
அதிகாலை நேரத்து கீதத்தை..
மார்கழி நேரத்தில்
வண்ணப்பாவாடை அணிந்திருக்கும்
என் தெருவை..

இவைகள் இல்லா கவிதை
எழுத விழைகிறேன்..
மந்திரமாய் ஒலிக்க வைக்கும்
அந்த ஒரு சொல் தேடி...

rambal
05-07-2003, 07:33 PM
நான் ஒன்றும் பெரிதாய் எழுதிவிடவில்லை..
இதுவும் பெரிய கவிதை அல்ல.. அப்படியிருக்க சிலர் விரும்பிக் கேட்டதின் பேரில்...
இந்தக்கவிதை அந்த நல்ல ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம்..

இளசு
05-07-2003, 07:38 PM
தொடரட்டும் ராமின் கவிவெள்ளம்..
பாராட்டும் வாழ்த்தும் ராமுக்கு...

நண்பன், பூ, லாவண்யா, நிலா, சுமா இன்னும் பலர்
என ஒரு நதியணியும்
இசாக், சிநேகா, கரவை, சுஜாதா, குருவிகள், புதுமை
இன்னும் பலர் என ஒரு புது அணியும்

இணைந்து சங்கமமாய்
இனிய கவிவெள்ளம் பொங்கட்டும்..

lavanya
06-07-2003, 11:22 AM
நல்ல நினைவுகளை கவிதையாக்கி தந்தமைக்கு நன்றி ராம்பால்ஜி
குறிப்பாய் மூன்றாம் பத்தி....

சுஜாதா
06-07-2003, 04:03 PM
நன்றி ராம்..
அருமையான கவிதை..
இதைத்தான் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்..
தொடரட்டும் உனது முழக்கம்..

Narathar
07-07-2003, 05:57 AM
ராம்.....................
உங்கள் கவிதையை வாசிக்கையில்
கடந்தகாலத்தை நோக்கி பயணித்த
ஒரு உணர்வு எனக்குள்ளும்...........
தொடரட்டும் உங்கள் கவிப்பணி

noveltv
07-07-2003, 07:10 AM
நல்ல கவிதை.....
உங்கள் கவிவெள்ளத்தில் சிறுதுளி..
உயிர்வரை கலந்த உண்மையொளி!
தேடல் தொடரட்டும்
மானுடம் விழிக்கட்டும் மனிதநேயத்தோடு!

-புதுமை

karavai paranee
07-07-2003, 07:14 AM
நான் எழுதா கவிதை என்றீர்

இதைவிட வேறு என்ன எழுதிக்கொள்வீர்

எல்லாக்கவிதைகளையும் ஒன்றிலேயே தின்றுவிட்டீரே நண்பரே
அருமை அருமை