PDA

View Full Version : குங்குமம் வைப்பதன் நன்மைகள்!.



அனுராகவன்
02-03-2008, 01:24 AM
குங்குமம் வைப்பதன் நன்மைகள்!

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.

குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக் கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்!


நன்றி :சக்தி விகடன்
.

sarcharan
04-03-2008, 05:42 AM
நெற்றியில் பின்னாளில் கறுப்பாக அது ஒரு மார்க் ஆகிவிடும்.
எனது பாட்டிக்கு அப்படித்தான் ஆகிவிட்டது.
குங்குமம் நாளாக நாளாக நச்சாகும்.

அக்னி
04-03-2008, 07:39 PM
எதுங்க உண்மை..?
யாராச்சும் சொல்லுங்களேன்...

சுகந்தப்ரீதன்
05-03-2008, 06:41 AM
எதுங்க உண்மை..?
யாராச்சும் சொல்லுங்களேன்...
ரெண்டுமே உண்மைதான் அக்னியாரே...!!

அனு அக்கா சொன்னதும் உண்மை...!!
அதை தொடர்ந்து கடைப்பிடிச்சா சரத் அண்ணா சொன்னதும் உண்மையாகும்...:fragend005:
கீழ பாருங்க...அகினியாரே...!!


நெற்றியில் பின்னாளில் கறுப்பாக அது ஒரு மார்க் ஆகிவிடும்.
எனது பாட்டிக்கு அப்படித்தான் ஆகிவிட்டது.
குங்குமம் நாளாக நாளாக நச்சாகும்.

க.கமலக்கண்ணன்
05-03-2008, 01:46 PM
அனு சொன்னது உண்மைதான் நம் உடலில் மிகவும் சக்தியை பெறும் இடம் நெற்றி. அதனால் அந்த இடத்தில் குங்குமம் வைத்தால் அனு சொன்னது போது தீய சக்திகள் நம் உடலில் தீண்டாது. மற்றும் மஞ்சள் போன்ற மூலிகை இருப்பதால் சூரிய ஒளியால் உடலுக்கு வைட்டமின்கள் சேர்க்கிறது என்பதும் உண்மை.


நெற்றியில் பின்னாளில் கறுப்பாக அது ஒரு மார்க் ஆகிவிடும்.
எனது பாட்டிக்கு அப்படித்தான் ஆகிவிட்டது.
குங்குமம் நாளாக நாளாக நச்சாகும்.

இவர் சொன்னது போல சுத்தமான மஞ்சல் குங்குமத்தை உபயோகப்படுத்தினால் வராது. குங்குமம் போன்ற சாயத்தை உபயோகப்படுத்தினால் கண்டிப்பா அவ்வாறு வரும். (சுத்தமான குங்குமம் என்பது வெள்ளை காகிதத்தில் மடித்து வைத்தால் காகிதத்தில் மஞ்சள் வண்ணமாக மாறும்)

சிவா.ஜி
05-03-2008, 01:51 PM
கமலக்கண்ணன் ரொம்ப சரியாச் சொன்னீங்க.....சரவணன் சொன்னது...கெமிக்கல் கலந்த குங்குமமாய் இருக்கும்...நீங்கள் சொன்னதைப் போல...மஞ்சள் கலந்த குங்குமத்தால் எந்த பாதிப்புமில்லை.

சுகந்தப்ரீதன்
05-03-2008, 02:01 PM
(சுத்தமான குங்குமம் என்பது வெள்ளை காகிதத்தில் மடித்து வைத்தால் காகிதத்தில் மஞ்சள் வண்ணமாக மாறும்)
உபயோகமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி கமல் அண்ணா...:icon_b:

அனுராகவன்
08-03-2008, 04:36 AM
அடடே !!
என்ன அருமையான பின்னோட்டங்கள்

க.கமலக்கண்ணன்
08-03-2008, 09:02 AM
நன்றி அனு நன்றி

அனுராகவன்
09-03-2008, 07:48 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
தொடர்ந்து வாங்க..

அக்னி
17-03-2008, 12:06 PM
தூய குங்குமத்தால் பின்விளைவுகள் ஏற்படாது என்பதை தெளிவுறுத்திய கமலகண்ணன், சிவா.ஜி அவர்களுக்கு நன்றி...

அனுராகவன்
18-03-2008, 12:45 AM
என் நன்றி சிவா.ஜிக்கும்..
நல்ல தெளிவு..

க.கமலக்கண்ணன்
18-03-2008, 08:51 AM
என் நன்றி சிவா.ஜிக்கும்..
நல்ல தெளிவு..

எனக்கு இல்லையா அனு...

செல்வா
18-03-2008, 09:26 AM
சந்தனம் வைப்பதால் தான் குளிர்ச்சி எனக் கேள்விப்பட்டுள்ளேன்.... குங்குமம் வைப்பதால் குளிர்ச்சி என்பது புதிது... உண்மையா?

க.கமலக்கண்ணன்
18-03-2008, 09:29 AM
சந்தனம் வைப்பதான் குளிர்ச்சி என்பது உண்மைதான் ஆனால் குங்குமம் வைப்பதால் குளிர்ச்சி கிடையாது. அதனால் உடலுக்கு தேவையான வைட்டமின்களை அளிக்கவும், தீயசக்திகளிடம் இருந்து காக்கவும் மஞ்சள் என்ற மூலிகை செயல்படுகிறது...

பென்ஸ்
18-03-2008, 01:56 PM
நல்ல பயனுள்ள தகவல் தோழி...
ஆனால் இதை வேறு எங்கோ வாசித்தது போல் ஒரு உணர்வு....
வெட்டி ஒட்டியதாக இருந்தால் நீங்கள் நன்றி சொல்லுவது அவசியம் என்பது என் கருத்து....
மேலும் , அது பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்... இது எழுதுபவர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

meera
18-03-2008, 02:40 PM
அட இப்படி ஒரு விஷயம் இருக்கா இதுல. தகவலுக்கு நன்றி அனு.

எண்ணம்
20-04-2008, 01:44 PM
ஆம்.நெற்றியில் குங்குமம் சந்த்ன்ம் மஞ்சள் இவை வைப்பதனால் நெற்றியில் உள்ள சுரப்பி தூண்டப் படும். இது நமக்கு மன ஓர்மையை கொடுப்பதோடு முகத்திற்கு வசீகரத்தன்மையையும் கொடுக்கும் . நன்றி

visu_raj87
20-04-2008, 02:52 PM
பயனுள்ள விஷயம்.ஆனால் இப்போது குங்குமம் கலப்படம் செய்வதால் பலருக்கு அரிப்பு ஏற்படுகிறது.அதை தடுக்க வேண்டும்.

நன்றியுடன்
விசு

அனுராகவன்
20-04-2008, 02:56 PM
எனக்கு இல்லையா அனு...
கமலகண்ணன் உங்களுக்குதான்..
கண்களுக்கு குளிர்ச்சி...
கருத்துக்கு நன்றி

அனுராகவன்
20-04-2008, 02:59 PM
நன்றிகள் எண்ணம் மற்றும் விசு அவர்களுக்கு..

தாமரை
20-04-2008, 04:34 PM
குங்குமம் எந்த மூலப் பொருட்களைக் கொண்டு எப்படித் தயாரிக்கப்படுகிறது?

SathyaThirunavukkarasu
20-04-2008, 04:48 PM
சரியாக சொன்னீர்கள் இப்பொழுதெல்லாம் யார் குங்குமம் வைக்கிறார்கள்

அனுராகவன்
20-04-2008, 04:54 PM
சரியாக சொன்னீர்கள் இப்பொழுதெல்லாம் யார் குங்குமம் வைக்கிறார்கள்
என்ன சரியாக என்று விளக்கம் தாங்க தங்கையே!!
இப்போது ஸ்டீக்கர் தானே வைக்கிறார்கள்..

Keelai Naadaan
20-04-2008, 05:58 PM
சரியாக சொன்னீர்கள் இப்பொழுதெல்லாம் யார் குங்குமம் வைக்கிறார்கள்

அதாவது வைக்கிறார்களே..! அதற்காக சந்தோசப்படுவோம்.

கண்மணி
20-04-2008, 10:17 PM
படிகாரமும் சரி சுண்ணாம்பும் சரி, நீருடன் சேரும் பொழுது, சூட்டை உண்டாக்குபவை..

அதுமட்டுமல்ல சற்று அளவு கூடினாலும், வியர்த்தால் அரிக்க ஆரம்பித்து விடும்.

ஆக வீட்டிலேயே குங்குமம் தயாரித்தாலும் ;) கஷ்டம்தான்.

namsec
29-04-2008, 10:00 AM
அருமையான தகவல் இன்றைய மகளிர் அறியாத அறிய தகவல் கொடுத்தமைக்கு நன்றி

அனுராகவன்
03-05-2008, 05:28 AM
நன்றி கண்மணி,சித்தர் அவர்களுக்கு!!
குங்குமம் நெற்றியில் வைப்பதால் நெற்றிகண் மூன்றாவது கண் (ஞானிகளுக்கு உள்ளது போல) திறக்கவும் வாய்ப்பு இருக்கு..
அதனால்தான் பெண்கள் அறிவாளிகளாக உள்ளனர்.
திரிநூறு எடுத்து பட்டை போடுவதால் நச்சு கிருமிகள் அழியும்..

விகடன்
03-05-2008, 05:35 AM
நல்லதொரு தகவல் அனு.

பெரும்பாலான பதிவுகளில் நீங்கள் ஒரு பெண் என்பதனை சுட்டிக்காட்டிய வண்ணமே உள்ளீர்களே!
என்ன பிரச்சினை உங்களுக்கு?
நான் நம்பிவிட்டேன். மற்றவர்களும் நம்பிடுங்கப்பா.... அனு ஓர் பெண்தான் என்பதை!!!

MURALINITHISH
03-05-2008, 06:49 AM
நல்ல பயனுள்ள தகவல் தோழி...
ஆனால் இதை வேறு எங்கோ வாசித்தது போல் ஒரு உணர்வு....
வெட்டி ஒட்டியதாக இருந்தால் நீங்கள் நன்றி சொல்லுவது அவசியம் என்பது என் கருத்து....
மேலும் , அது பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்... இது எழுதுபவர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மைதான்
கோயில்களில் படித்திருக்கிறேன்
இருந்தாலும் படிக்காத சிலருக்கு உபயோகமாக இருக்கும்
என் மனைவி குங்குமம் எப்போதும் வைக்க மாட்டாள் கோயிலுக்கு செல்லும் போதும் மட்டுமே
அதற்கு காரணம் இப்போதெல்லாம் நல்ல குங்குமம் கிடைப்பதில்லை

அனுராகவன்
03-05-2008, 06:56 AM
என் மனைவி குங்குமம் எப்போதும் வைக்க மாட்டாள் கோயிலுக்கு செல்லும் போதும் மட்டுமே
அதற்கு காரணம் இப்போதெல்லாம் நல்ல குங்குமம் கிடைப்பதில்லை
அப்படியா!!நல்ல பக்திதான் போங்க..
தினமும் வீட்டில் பூசை செய்யலாம்..
ஸ்டிக்கர் போட்டு வைக்ககூடாது..
நன்றி உங்கள் பதிலுக்கு..........

ஓவியன்
03-05-2008, 08:25 AM
குங்குமம் வைப்பதன் நன்மைகள்!

[B]மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

.


[COLOR="Navy"]சக்தி விகடனில் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=9489&pid=357176&st=0&#entry357176) வந்த தகவலை அப்படியே பிரதி செய்து இங்கே பதித்திருக்கின்றீகளே அனு....!! :frown:

உங்களை எச்சரித்து எச்சரித்தே என் பதிவுகள் கூடுகின்றன... :lachen001:

ilango
05-05-2008, 01:11 AM
தகவலுக்கு நன்றி.