PDA

View Full Version : முளை கட்டிய பயறு

அனுராகவன்
02-03-2008, 01:19 AM
முளை கட்டிய பயறு

100 கி முளை கட்டிய பயறில் உள்ள சத்து:
கலோரிஸ் .................- 30
புரதச்சத்து ................- 3 கி
கார்போஹைட்ரேட்... - 6கி
நார்ச் சத்து ................- 2 கி
முளை கட்டிய பயறு மிகவும் சத்தான ஒரு உணவு. மற்ற தானியம் போல முளை கட்டிய பயறு வகை வாயுத்தன்மை இல்லாதவை. ஆகவே இது நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாகிறது. இதில் லைசின் எனப்படும் அமினோ ஆசிட் அதிக அளவில் உள்ளது. கால்சியம், ஃபாஸ்ஃபரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி, சி அடங்கியது.

டென்னிஸ், டான்ஸ் போன்ற உடல் பயிற்சி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடல் பலத்தை அளிக்கக் கூடிய ஒரு உணவு. அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு ஊட்டச் சத்து.

முளைகட்டிய பயறில் மருத்துவ குணங்கள் பல உள்ளன... காய்ச்சல், தலைவலி மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக சீன மருத்துவத்தில் மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

இது இப்போதெல்லாம் எல்லா பெரிய நகரங்களிலும் Department Stores இல் விற்கிறது. சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். பச்சைப் பருப்பு - பாசிப் பயறு என்றும் சொல்வார்கள்.

பச்சை பயறை ஒரு பிடி எடுத்து சில மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டிப் பின் ஒரு ஓட்டைப் பாத்திரம் அல்லது காய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்து விட்டால் மறு நாள் காலை முளை விட்டு இருக்கும்.

சிலர் துணியில் மூட்டை கட்டுவார்கள். சில சமயம் நாற்றமெடுக்கும். அதனால் காற்றுப் போகக் கூடிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். இதை ப்ரிஜ்ஜில் 4-5 நாட்கள் வரை கூட கெடாமல் வைத்திருக்கலாம்.

நானும் இதை செய்து உண்டு வருகிறேன்..

நன்றி:வெப்துனியா

மலர்
01-04-2008, 08:08 PM
பயறு வகைகள் எல்லாமே உடம்புக்கு நல்லது...
அதிலும் முளை கெட்டிய பயறு ரொமப நல்லது.....
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அனு..

அனுராகவன்
05-04-2008, 06:17 AM
நன்றி மலர்...
தொடர்ந்து வா..

பென்ஸ்
05-04-2008, 09:23 AM
நன்றி அனு....

யவானிகா... இந்தமாதிரி இடத்தில் நீங்கள் புகுத்து ஆலோசனைகளை அள்ளி வீச வேண்டாமா...?? :-)

பென்ஸ்
05-04-2008, 09:26 AM
அனு (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), சாம்பவி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), செல்வா (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), பென்ஸ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), மலர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), யவனிகா (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), ரதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), Basheera (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), Shanmuhi (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), sujeendran (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#)

ஐயா.. என்ன .. இது ஆரோக்கியம் பெண்களுக்கு மட்டும் தானா... பஷிரா, சுஜேந்திரன் , அப்புறம் நான் .. நாங்க மட்டும் தான் உடலை கவனிக்க வேண்டும் என்ற கருத்து கொண்ட ஆண்களா.... ;-)

shibly591
05-04-2008, 09:53 AM
அனு எப்போதும் பயன் மிகு தகவல்களையே தருவார்..நன்றி நண்பி இந்தக்குறிப்பு எனக்கு நல்ல பயனாக உள்ளது

meera
05-04-2008, 10:15 AM
முளை கட்டிய பயறு

நானும் இதை செய்து உண்டு வருகிறேன்..

அனு நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி. நானும் முயற்சிக்கிறேன். நல்லா இருந்தா நானே சாப்டுக்கறேன். நல்லா இல்லையோ பார்சல் வாங்கறதுக்கு நீங்க ரெடியா இருங்க.:wuerg019:

சரிதானே? :icon_b::icon_b::icon_b:

மலர்
05-04-2008, 04:14 PM
அனு (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), சாம்பவி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), செல்வா (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), பென்ஸ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), மலர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), யவனிகா (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), ரதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), Basheera (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), Shanmuhi (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#), sujeendran (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=339701#)

ஐயா.. என்ன .. இது ஆரோக்கியம் பெண்களுக்கு மட்டும் தானா... பஷிரா, சுஜேந்திரன் , அப்புறம் நான் .. நாங்க மட்டும் தான் உடலை கவனிக்க வேண்டும் என்ற கருத்து கொண்ட ஆண்களா.... ;-)
பென்ஸ் அண்ணா...
செல்வாவை விட்டுட்டீங்களே..... :D :D
ஒரே ஊர்க்காரல மறக்கலாமா.... :eek: :eek:

மலர்
05-04-2008, 04:17 PM
அனு நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி. நானும் முயற்சிக்கிறேன். நல்லா இருந்தா நானே சாப்டுக்கறேன். சரிதானே? :icon_b::icon_b::icon_b:
மீராக்கா....
முளைகட்டின பயறு என்ன அடையாறு ஆனந்தபவன் ஸ்வீட்
டேஸ்டுலையா இருக்கும்...??
ம்ம் ஆரோக்கியத்துக்காக சாப்பிடலாம்.... அவ்ளோ தான்
பி.கு..
ஆரோக்கியம் யாருன்னு கேட்டு டென்ஷனை ஏத்தப்படாது... :sauer028: :sauer028:

அன்புரசிகன்
05-04-2008, 04:30 PM
ஆரோக்கியம் யாருன்னு கேட்டு டென்ஷனை ஏத்தப்படாது... :sauer028: :sauer028:

இப்படியான கேள்வி கேட்பவரே நீங்கள் தானே........... அப்புறம் எதுக்காக மீராக்காவை மாட்டிவிடுறியள்??????????????:eek:

மலர்
05-04-2008, 04:40 PM
இப்படியான கேள்வி கேட்பவரே நீங்கள் தானே........... அப்புறம் எதுக்காக மீராக்காவை மாட்டிவிடுறியள்??????????????:eek:
ம்ம்ம் நற.......நற.......
பொறாமை...........பொறாமை இப்பிடி ஒரு புத்திசாலி புள்ளையான்னு பொறாமை.... :eek: :eek:
ஏன் எதுக்குன்னு கேட்டா தான் அறிவு வளருமாம்....
அதான் புள்ளை கேக்குது... :icon_rollout: :icon_rollout:
ஏன்னா மலரு அறிவாளிபுள்ளை... :icon_b: :icon_b:

யவனிகா
05-04-2008, 07:14 PM
நன்றி அனு....

யவானிகா... இந்தமாதிரி இடத்தில் நீங்கள் புகுத்து ஆலோசனைகளை அள்ளி வீச வேண்டாமா...?? :-)

பென்ஸ்..முளைகட்டிய பயிறு சாப்பிட்டா ஒருக்கால்...இன்னொரு கால் எக்ஸ்ட்ரா வளருமோ?

meera
06-04-2008, 05:22 AM
இப்படியான கேள்வி கேட்பவரே நீங்கள் தானே........... அப்புறம் எதுக்காக மீராக்காவை மாட்டிவிடுறியள்??????????????:eek:

நல்லா சொன்னீங்க அன்பு அண்ணா.

நன்றி நன்றி.

எங்களுக்கும் சப்போர்ட்க்கு ஆள் இருக்கு மலரு க்கும். :cool::cool:

meera
06-04-2008, 05:26 AM
பென்ஸ்..முளைகட்டிய பயிறு சாப்பிட்டா ஒருக்கால்...இன்னொரு கால் எக்ஸ்ட்ரா வளருமோ?

யவனியக்கா, இது பற்றி நம்ம அறிஞரை ஒரு ஆராய்ச்சி பண்ண சொல்லலாமா???:sprachlos020::sprachlos020:

அவருக்கு வேற வேலை இல்லாம ரொம்ப கஷ்டபடராராம். :wuerg019::wuerg019:

மலர்
06-04-2008, 05:40 AM
எங்களுக்கும் சப்போர்ட்க்கு ஆள் இருக்கு மலரு க்கும். :cool::cool:
அன்பு.....
ஹூம்.....:icon_tongue::icon_tongue: ஹூம்......:icon_cool1::icon_cool1: ஹூம்...... :icon_shout::icon_shout:
இப்போ நிம்மதியா......... :traurig001: :traurig001:

மீராக்கா பி.கு போட்டதே அன்பு மாதிரி இடக்கு மடக்கு
கேள்விகேக்குற ஆக்களுக்கு....
அவரு என்னடான்னா இப்பிடி திருப்பி உட்டுட்டு போயிட்டாரு.... :sauer028: :sauer028:
இது தெரியாம நீங்க தங்காச்சியை காச்சிட்டீங்களே.... :frown: :frown:

பூமகள்
06-04-2008, 06:49 AM
நல்லதொரு பயன்மிக்க தகவல்...!!
அடிக்கடி உணவில் சேர்த்து வருகிறோம்..!!
நினைவூட்டியமைக்கு நன்றிகள் அனு அக்கா. :)

----------------------------------------
ஒரு சின்ன வேண்டுகோள்..!!

வேற்று தளங்களிலிருந்து எடுத்து வரும் செய்திகளை அது எடுத்த தளத்தின் பெயரையும் நன்றி சொல்லிக் குறிப்பிட்டு மதிப்புக் கொடுக்கலாமே..!! அது தான் தமிழ்மன்றத்தில் வழமை.

செய்வீர்களா அனு அக்கா..??!!

எண்ணம்
26-04-2008, 02:44 AM
நல்லதொரு உணவு முறை. ஆனால் இது போன்ற உணவுகளை உண்ணும் பொழுது ஏதேனும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கேள்வி பட்டிருக்கிறேன்.