PDA

View Full Version : சிறு கிறுக்கல்



அனுராகவன்
02-03-2008, 01:57 AM
மழை விவசாயம் தழை
மேகம் நமக்கு சுவாசம்
மின்னல் தூரத்து இன்னல்
காடு சிலருக்கு வீடு
சொந்தம் தனி பந்தம்
வாழ்க்கை ஒரு செயற்கை
சாதனை சிலருக்கு வேதனை
கடவுள் காண் அது உனக்குள்



-அனு

நாகரா
02-03-2008, 04:13 AM
கடவுள் காண் அது உனக்குள்
-அனு

நல்ல போதனை அனு, உமது சிறு கிறுக்கலுக்கு உயிர் சேர்க்கிறது இப்போதனை, நன்றி பல, தொடருங்கள் உம் கவிப் பயணம்.

அனுராகவன்
17-03-2008, 09:18 AM
நன்றி நாகரா..
உன் ஊக்கதற்கு என் வாழ்த்து..
தொடர்ந்து பகிருங்கள்

Keelai Naadaan
20-03-2008, 06:12 AM
சகோதரி,
நான் இந்த தளத்துக்கு புதியவன்.

கிறுக்கல்- என நீங்கள் குறிப்பிடிருப்பது உங்கள் தன்னடக்கத்தின் வெளிப்பாடு.

சிறு சிறு வார்த்தைகளாய் இருப்பதால் இன்னும் சற்று விரிவாக இருக்கலாம் என தோன்றுகிறது.

கடவுள் காண் உனக்குள் என்ற வரிகள் அற்புதம்.

மின்னல் தூரத்து இன்னல் என்பது படிக்க நல்லாயிருக்கு. ஆனால் மின்னலும் ஒரு அற்புதம் இல்லையா..?

அன்புடன்..கீழை நாடான்.

அனுராகவன்
20-03-2008, 07:25 AM
சகோதரி,
நான் இந்த தளத்துக்கு புதியவன்.

கிறுக்கல்- என நீங்கள் குறிப்பிடிருப்பது உங்கள் தன்னடக்கத்தின் வெளிப்பாடு.

சிறு சிறு வார்த்தைகளாய் இருப்பதால் இன்னும் சற்று விரிவாக இருக்கலாம் என தோன்றுகிறது..
நன்றி நண்பரே!!
ஏதோ என் சிறிய வரிகள் .
உங்கள் பின்னோட்டத்திற்க்கு என் நன்றி...
நான் எழுதுவது இது தொடக்கமே..


கடவுள் காண் உனக்குள் என்ற வரிகள் அற்புதம்.

மின்னல் தூரத்து இன்னல் என்பது படிக்க நல்லாயிருக்கு. ஆனால் மின்னலும் ஒரு அற்புதம் இல்லையா..?

அன்புடன்..கீழை நாடான்.
உங்கள் பார்வைக்கு நான் எழுதியது நல்லாயிருக்கா?
நான் ஏதோ சிறு கிறுக்கலே.
அதைதான் தலைப்பு,..
எனக்கு கவிதை எழுத கற்று வருகிறேன்...
இனி உங்கள் உதவியும் தேவைபடும்..
நன்றி கீழை நாடான்..
தொடர்ந்து வாருங்கள்..