PDA

View Full Version : கெமிக்கல் அலிக்கு தூக்கு:



mgandhi
01-03-2008, 05:28 PM
கெமிக்கல் அலிக்கு தூக்கு: ஜனாதிபதி உறுதி செய்தார்
பாக்தாத், மார்ச். 2

ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி தூக்கில் போடப்பட்டார். தனது அரசியல் எதிரிகளையும் 148 ஷயா முஸ்லிம்களையும் கொன்றதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

அவரது சகோதரர் மற்றும் உதவியாளர்கள் சிலரும் தூக்கில் போடப்பட்டனர். சதாம்உசேனின் நெருங்கிய உறவினர் அலிஹசன் அல் மஜத். "கெமிக்கல் அலி" என்றே இவரை அழைத்து வந்தனர். சதாம் உசேன் ஆட்சி காலத்தில் இவர் சதாமுக்கு எதிராக போராடிய குர்து இனத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கானவர்களை விஷ வாயு செலுத்தி கொல்ல உத்தரவிட்டார்.

இது தொடர்பாக கெமிக்கல் அலி மீது ஈராக்கின் புதிய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கெமிக்கல் அலிக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. ஆனால் அவரது தண்டனை நிறைவேற்றப்படாமல் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது அப்பீல் மனுவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் தலை மையிலான குழு விசாரித்தது. கெமிக்கல் அலிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இந்த குழு இப்போது உறுதி செய்து விட்டது. எனவே எந்த நேரத்திலும் கெமிக்கல் அலி தூக்கில் போடப்படுவார்.