PDA

View Full Version : இன்னும் ஏன் தாமதம்?



rocky
01-03-2008, 05:41 AM
நான் சாவதற்க்கான காரணங்கள்
எல்லாம் சண்டையிட்டுக் கொள்கின்றன,
இவன் என்னால்தான் சாவான், இல்லை
இவன் என்னால்தான் சாவானென்று,

நான் வாழ்வதற்க்கான ஒரே
காரணம் நீதான், என்
கண்ணீர் கன்னத்தைக்
கடக்கும் முன் உன்
கைகளைக் கொண்டுவா.

என் கண்களுக்குத் துணையாகக்
கண்ணீர் மட்டுமே வடிக்கத்
தெரிந்த பேனாவில் கவிதையெழுத - உன்
கண்மையைக் கொண்டுவா.

என் இதழில் மண்டிக்கிடக்கும்
மெளனத்தைக் களையெடுத்து விட்டு,
அங்கே புன்னகையைப் பயிர்செய்ய
உன் பார்வைகளைக் கொண்டுவா.

இன்னும் ஏன் தாமதம்?
என் தாகத்துக்கு நீருற்ற
நீ வந்தால் போதும்,
என் மரணத்திற்குப் பாலூற்ற
வந்து பயனில்லை.

நாகரா
01-03-2008, 06:51 AM
வருவாளே! அவள் வருவாளே!
உம் தாகத்துக்கு நீரூற்ற நிச்சயம் அவள் வருவாளே!

உள்ளத்தை உருக்கும் காதல் கவிதைக்கு நன்றி, ராக்கி
நன்னம்பிக்கையாம் 'ராக்'கை
நீவிர் விடாமலே பற்றியிருக்க
அவள் வருவாளே! நிச்சயம் அவள் வருவாளே!

rocky
01-03-2008, 08:38 AM
வருவாளே! அவள் வருவாளே!
உம் தாகத்துக்கு நீரூற்ற நிச்சயம் அவள் வருவாளே!

உள்ளத்தை உருக்கும் காதல் கவிதைக்கு நன்றி, ராக்கி
நன்னம்பிக்கையாம் 'ராக்'கை
நீவிர் விடாமலே பற்றியிருக்க
அவள் வருவாளே! நிச்சயம் அவள் வருவாளே!

மிக்க நன்றி நாகரா அவர்களே, உங்களின் வாழ்த்துக்கு அதையும் பாடலாகச் சொன்னதற்கு. :):)

சிவா.ஜி
01-03-2008, 09:38 AM
என் கண்களுக்குத் துணையாகக்
கண்ணீர் மட்டுமே வடிக்கத்
தெரிந்த பேனாவில் கவிதையெழுத - உன்
கண்மையைக் கொண்டுவா.

என் இதழில் மண்டிக்கிடக்கும்
மெளனத்தைக் களையெடுத்து விட்டு,
அங்கே புன்னகையைப் பயிர்செய்ய
உன் பார்வைகளைக் கொண்டுவா.


முழுக்கவிதையுமே...ஒரு அழகான பூந்தோட்டமாய் மணக்கிறதென்றாலும்...இந்த இரண்டு பத்திகளும்...மனதில் ஒட்டிக்கொண்டன.

கவி எழுதும் கண்களோடு உறவாடிய கண்மையூற்றி எழுதினால்..சோகமெழுதும் பேனா சுகராகம் பாடாதா...எனக் கேட்டது அழகு.
அதே போல மௌனத்தை தாங்கிய உதடுகளுக்கு சிரிப்பை உற்பத்தி செய்ய கற்றுக்கொடுக்க பார்வைகளை கேட்டதும் அருமை.
அழகான காதல் கவிதை ராக்கி.வாழ்த்துகள்.உங்கள் கவிதைகளில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது..நிறைய எழுதுங்கள்.

வசீகரன்
01-03-2008, 12:27 PM
என் கண்களுக்குத் துணையாகக்
கண்ணீர் மட்டுமே வடிக்கத்
தெரிந்த பேனாவில் கவிதையெழுத - உன்
கண்மையைக் கொண்டுவா.

என் இதழில் மண்டிக்கிடக்கும்
மெளனத்தைக் களையெடுத்து விட்டு,
அங்கே புன்னகையைப் பயிர்செய்ய
உன் பார்வைகளைக் கொண்டுவா.


அற்புதமான வரிகள் நண்பரே....!
ஆற்றாமையின் வெப்பம் தெரிகிறது.... நல்ல படைப்பு தொடருங்கள்
ராக்கி...!

அமரன்
01-03-2008, 06:16 PM
காதல்துணையை கசிந்துருகி வருந்தி அழைக்கும்கவிதை. புதிய நிறமடித்த சொற்கட்டுகள் சொக்கவைக்கின்றன. பாராட்டுகள் ராக்கி..

வாழும்போது நல்லது நடந்தால்
வயிற்றில் பால்வார்த்தது போல்..
மாண்டபின்னரும் அதே பால்...!!!!!

நீ வந்தால்
என்வயிற்றில் பால்..
வராவிட்டால்
என் காயத்துக்கு பால்.

பலே ராக்கி.. எனக்கான காந்த வரிகள் இவை.

பிச்சி
03-03-2008, 01:06 PM
அழகான காதல் கவிதை. உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளுகிறது.



என் இதழில் மண்டிக்கிடக்கும்
மெளனத்தைக் களையெடுத்து விட்டு,
அங்கே புன்னகையைப் பயிர்செய்ய
உன் பார்வைகளைக் கொண்டுவா.



இந்த வரிகள் ரொம்ப அருமை.. அனுபவிச்சி எழுதியிருக்கீங்க ராக்கி அவர்களே

அன்புடன் பிச்சி

rocky
04-03-2008, 04:46 AM
பின்னூட்டமிட்ட சிவா.ஜி, வசீகரன், அமரன், மற்றும் பிச்சி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்களின் இந்த தொடர் ஊக்கமே என்னை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி வருகிறது. இந்த ஆதரவை என்றும் எதிர்பார்க்கிறேன், உங்களின் வாழ்த்துக்களுக்கு தகுதியுள்ளவனாய் என்னை நான் ஆக்கிக்கொள்ள நிச்சயம் முயற்சித்துக்கொள்டே இருப்பேன். நன்றி.