PDA

View Full Version : எப்படி இது??



சிவா.ஜி
29-02-2008, 07:42 AM
நேற்று இரவு நானும் என் நன்பரும் நாங்கள் தங்கியிருக்கும் ஊரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரத்துக்கு நன்பருடைய உறவினரை சந்திக்கப் போயிருந்தோம்.திரும்ப வரும் வழியில் ஒரு சிக்னலில் எங்கள் காரை நிறுத்தியிருந்தேன்.சிக்னல் மாறி பச்சையானதும் வண்டியை கிளப்பி நான்கு அடி தூரம் கூட போகவில்லை என்னுடைய இடது புறத்திலிருந்து மின்னல் வேகத்தில் வந்த ஒரு சவுதிக்காரரின் கார்....சிக்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டது..ஒரே ஒரு நொடி தாமதித்து நான் பிரேக்கை அழுத்தியிருந்தால்...எங்கள் காரும்,நாங்களும்...கானாமல் போயிருப்போம்.கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போய்விட்ட அந்த சவுதிக்காரரின் காரையும் அதன் வேகத்தையும் இப்போது நினைத்தாலும் நடுக்கமேற்படுகிறது.

இது நடந்தபோது இங்கே நேரம் இரவு 10:30....காலையில் எழுந்ததும் என்மனைவி என்னை அலைபேசியில் அழைத்தார்...முதல் வார்த்தையே உங்களுக்கு ஒன்றுமில்லையே...நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை...விவரம் கேட்டதற்கு...நேற்று இரவு ஒரு கனவு கண்டேன்....அதில் உங்களுக்கு விபத்து நேர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதைப் போலவும் ஆட்களோடு நானும் அருகே அமர்ந்து அழுவதைப்போலவும் நிகழ்ச்சிகள் அந்த கனவில் வந்தது...திடுக்கிட்டு விழித்துப் பார்த்து அது கனவென்று உணர்ந்து கொள்ளவே சிறிது நேரமானது...மனதெல்லாம் நடுங்கிவிட்டது...அப்போதே அழைத்திருப்பேன்...ஆனால் தூக்கத்தில் தொந்தரவு கொடுக்கவேண்டாம் என்பதால் அழைக்கவில்லை...அதனால் இப்போது அழைத்தேன் என்றார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம்...நான் திரும்ப அவரிடம்...எழுந்து அமர்ந்தபோது அங்கே மணி எத்தனை என்று கேட்டதற்கு இரவு 1 மணி என்றார்.சரியாக இந்த நாட்டின் நேரத்துக்கு 10:30........(சவுதியைவிட இந்தியநேரம் இரண்டரை மனிநேரம் அதிகம்)

எப்படி இது சாத்தியம்.என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை....இதற்கு விஞ்ஞானம் என்ன சொல்கிறது...?புரியவில்லை.

மதி
29-02-2008, 07:57 AM
அண்ணா உங்களுக்கு காயங்கள் ஏதும் இல்லையே..
இது மனவியல் சம்பந்தப்பட்ட விஷயம். எனக்குத் தோன்றியதைத் தருகிறேன். மனது ஒருமுகப் படும் போது அதன் எல்லைகள் விரிகிறது. தூரங்களைத் தாண்டிப் போகிறது. நாம் ஒன்றைப் பற்றியோ ஒருவரைப் பற்றியோ தீவிரமாக நினைத்துக் கொண்டிருந்தால் சில உணர்வுகள் அவருக்கு நேருவதை காட்டிக் கொடுக்கும்.

இதே தான் உங்களுக்கும் நடந்திருக்கும். எல்லா நேரமும் நீங்க எப்படி இருக்கீங்க..சரியா சாப்டீங்களான்னு அண்ணி நினைக்கையிலே இப்படியான உணர்வுகள் கனவுகளா வந்திருக்கு.

அறிவியல் ரீதியா இதை எப்படி விளக்குவதென்று தெரியவில்லை. ஆயினும் இனி வண்டி ஓட்டும் போது பார்த்து ஓட்டுங்கள்..

ஆதி
29-02-2008, 07:59 AM
இதில் எந்த ஆட்சயர்மும் இல்லை சிவா அண்ணா உடல்கள் தூரமிருந்தாலும் உள்ளம் ஒத்துப்போனவரோடு மனம் பேசிக்கொண்டுதான் இருக்கும், சில வேளைகளில் நாம் மனதுக்குள் நினைத்த பாட்டை நம் அருகில் உள்ள நண்பர் பாடுவதில்லையா அப்படிதான்..

உள்ளம் ஒன்றிணைந்துவிட்டால் தூரங்கள் அதற்கு பெரிதில்லை.. சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் தலைவன் தலைவியை சந்திக்க சென்று கொண்டிருப்பான் அப்போது அவன் அவன் நெஞ்சைப்பார்த்து சொல்லும் படியாக ஒரு பாடல் உண்டு நான் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் என் நெஞ்சே நீ முன்பே தலைவியிடம் சென்றுவிட்டாய்.. எனப்துபோல் வரும்..

கிறிஸ்துவ சமயத்தை பரப்ப வந்த இரு நண்பர்களில் ஒருவர் மதுரையில் இருந்தார் ஒருவர் வடமதுரையில் இருந்தார், மதுரையில் இருந்தவரை வெட்டி கொன்றார்கள் அதே சமயத்தில் அப்படி ஒரு கனவு வடமதுரையில் இருந்தவர்க்கு வந்தது கண்ட கனவு உண்மையாயும் ஆனது..

இது சாத்தியமே அண்ணா..

அண்ணா உங்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை இல்லை நீங்க நல்லா இருக்கீங்க இல்ல.. டேக் கேர் அண்ணா..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
29-02-2008, 08:01 AM
இல்லை மதி எனக்கு எதுவும் ஆகவில்லை.ஆனால் ஒரே நொடிதான் எது வேண்டுமானாலும் ஆகியிருக்கும்.
நீங்கள் சொல்வது சரிதான் மதி...ஒரே சிந்தனையில் இருப்பவர்களின் எண்ன அலைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு நிலையிலேயே இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
உங்கள் அக்கறைக்கு மனமார்ந்த நன்றி மதி...நாம் எத்தனைதான் எச்சரிக்கையாக இருந்தாலும் இப்படி கண்மூடித்தனமாக வண்டி ஓட்டும் சவுதிக்காரர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது?

சிவா.ஜி
29-02-2008, 08:04 AM
ஓ...அப்படியானால் இதுபோல நடப்பது சாத்தியம்தான் இல்லையா ஆதி?
எப்படியோ எதுவும் ஆகாமல் போனதே...அதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.மிக்க நன்றி தம்பி.

sarcharan
29-02-2008, 08:08 AM
கடவுள் தான் உங்களை காப்பாத்தியிருக்காரு...

எனக்கும் இதுபோல தோஹாவில ஒரு தடவை நடந்தது. ஒரு நொடி தாமதித்திருந்ததால் பிழைத்தேன்.

அமரன்
29-02-2008, 08:11 AM
எண்ண அலைகளுக்கு ஏது எல்லைக்கோடுகள்.
மனித உடல்களுக்குத்தான் கூறு போட்ட பூமி கோடுகள்.
பவித்ரமான, திவ்வியமான, பரிசுத்த (இன்னும் எத்தனை வாத்தையோ அத்தனையும் போடுங்கள்) இரு மனங்களின் ஒருமித்த இணைவு உங்கள் இல்லறம் என்பதற்கு இன்னொரு சான்று..
கவனமாக பயணங்களை மேற்கொள்ளுங்கள் சிவா.. அதிவிரைவு நெடுஞ்சாலையானாலும், நாம் விதிகளை மதித்து நிதானத்துடன் வாகனமோட்டினாலும், வா(க)ன விரட்டிகளும் எம்முடன் உள்ளார்கள் என்பதை உள்ளே நிலைநிறுத்துங்கள்..
எல்லாம் வல்ல "சக்தி"யின் அனுக்கிரகம் உங்களுடன் கூட இருக்கும்..

சிவா.ஜி
29-02-2008, 08:20 AM
கடவுள் தான் உங்களை காப்பாத்தியிருக்காரு...
இந்த அரபிகள் இப்படித்தான்...

எனக்கும் இதுபோல தோஹாவில ஒரு தடவை நடந்தது. ஒரு நொடி தாமதித்திருந்ததால் பிழைத்தேன்.

ஆமா சரவணன்...ட்ராஃபிக் ரூல்ஸ் எதையுமே மதிக்கறதில்ல...நாமதான் ஜாக்கிரதையா இருக்கவேண்டியதா இருக்கு...ஒரு நொடியில் எல்லாமே மாறிடுது.

சிவா.ஜி
29-02-2008, 08:24 AM
எண்ண அலைகளுக்கு ஏது எல்லைக்கோடுகள்.
நாம் விதிகளை மதித்து நிதானத்துடன் வாகனமோட்டினாலும், வா(க)ன விரட்டிகளும் எம்முடன் உள்ளார்கள் என்பதை உள்ளே நிலைநிறுத்துங்கள்..


சரிதான் அமரன்...எண்ன அலைகளுக்கு எல்லைக் கோடுகளே இல்லை.நினைத்த நொடி நினைத்த இடத்துக்குப் பறக்கும்.

நன்றி அமரன்...கவனமாய்த்தான் இருக்கிறேன்...இனி கூடுதல் கவனம் செலுத்துகிறேன்.

யவனிகா
29-02-2008, 08:26 AM
என்னன்னா இது...அதிர்ச்சியாக இருக்கிறது.
நம்ம ஒழுங்கா ஓட்டினாலும்...வண்டிக்குப் பேய் பிடிச்சது போல எதுக்குத்தான் இவ்வளவு வேகமாப் போவாங்களோ?
தினமும் எனக்கு திக் திக் தான்.
உண்மையான அன்பு...தூரங்கள் தாண்டியும் உணரப்படும் அப்படீங்கறதுக்கு அண்ணி நல்ல எடுத்துக்காட்டு.

சிவா.ஜி
29-02-2008, 08:40 AM
ஆமாம்மா...ராஜாவையும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே ஓட்டச் சொல்லுங்க...பேய்தான் பிடிச்சிருக்கு இவங்களுக்கு.
(ஆனா இந்த சம்பவத்தை வெச்சு ஒரு ஜோக் எழுதிட்டேனே)

செல்வா
29-02-2008, 09:23 AM
அப்பாடா... உங்க கிட்ட பேசுனப்புறம் தாண்ணா நிம்மதி....
என்ன பண்றதுண்ணா இவனுங்க வண்டிலல உக்காந்தாலே விமானம் ஓட்ட உக்காந்த மாதிரி நெனப்புல ஓட்டுறானுக....

அமரன்
29-02-2008, 11:55 AM
என்னன்னா இது...அதிர்ச்சியாக இருக்கிறது.
நம்ம ஒழுங்கா ஓட்டினாலும்...வண்டிக்குப் பேய் பிடிச்சது போல எதுக்குத்தான் இவ்வளவு வேகமாப் போவாங்களோ?
தினமும் எனக்கு திக் திக் தான்..
வண்டிக்கு பேய் பிடிக்கவில்லை. வண்டியின் ஸ்டேரிங்கை (தமிழ் என்னங்க வாகனசுக்கானா வாகனதிருப்பியா) பேய் பிடிச்சு இருக்கு..

சாலைஜெயராமன்
29-02-2008, 12:15 PM
கடல் கடந்து பிழைப்பின் நிமித்தம் வருபவர்கள் அனைவரையும் வெளிநாட்டினர் கேவலமாகத்தான் நடத்துகிறார்கள்,

உங்கள் ஆருயிரின் இனிய மிகப் பாதுகாப்பான னினைவு வளயம்தான் உங்களைக் காப்பாற்றியிருக்கிறது. இது ஏதோ தற்செயலான விஷயம் இல்லை திரு சிவா. எண்ண அலைகளுக்கு அதீத சக்தி இருப்பதை உங்கள் துணைவியார் நிருபித்து இருக்கிறார்.

இங்கே ஒரு செய்தி தரவிரும்புகிறேன்.

மன்றத்தின் உங்கள் திருமண நாள் வாழ்த்துக்களைப் படித்துவந்து கொண்டே இருந்தேன். திடீரென்று உங்கள் மணவாழ்க்கையை நீங்கள் அதீதமாக புகழ்ந்து கொண்டே வந்தபோது மனதில் ஒரு தடுமாற்றம். அன்றிலிருந்து இன்றுவரை திரு சிவா உங்களுக்காக என் தினசரி பிராத்தனையில் எந்த தீய ஆவியின் பாதிப்பும் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் அணுகாதிருக்க வேண்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.

எண்ணத்திற்கு அவ்வளவு சக்தி. அன்பின் நினைவலைகளுக்கு கண்டம் கண்டம் பாயும் அபூர்வ ஆற்றல் உண்டு. இதைக் கவனக் குளிகை என்றும், அன்னம், புறா வாசி என்ற வாகனத்தில் இறைவன் எழுந்தருளுவதாக புராணங்கள் கூறுவதும் அரூப தெய்வ சக்தியும் அதற்கு மாற்றான தீய சக்தியும் ஒன்று இருக்கிறது என்பதற்கு சாட்சியாய் இருக்கிறது.

சர கதி, சர்ப்ப கதி, மயூர கதி போன்ற வார்த்தைகள் எப்போவாவது கேள்விப்பட்டதுண்டா திரு சிவா-?

பகுத்தறிவுவாதியான எனக்குக் கூட எண்ண அலைகளின் சக்தியின் மீது அபார நம்பிக்கை உண்டு. செல் போனின் செயல்பாடுகள் கூட இதன் அடிப்படையில்தான் என்று அழுத்தமாக நம்புகிறேன்.

உங்களுக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து இறையருளால் காப்பாற்றப்பட்டதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் கவனமாக இருக்க விழைகிறேன்.

இனி எந்த ஆபத்தும் உங்களை நெருங்காது, பேராபத்திலிருந்து தப்பித்து விட்டீர்கள். நானும் நிம்மதி அடைந்தேன்.

வெளிநாடுகளில் வாழும் நம் மன்ற உறவுகள் அனைவரும் கவனமாயிருக்க வேண்டிக் கொள்கிறேன்.

அக்னி
29-02-2008, 01:42 PM
சிறிய வயதில் ஒரு கேட்டறிந்த ஒரு கதை...

ஒரு தாயும் குழந்தையும் படுத்திருந்த அறைக்குள், பாம்பு ஒன்று நுழைந்துவிட்டதாம். அது அவர்களின் மிக அருகில் படம் எடுத்தபடி நின்றிருக்கையில், கவனித்துவிட்ட ஏனையோர் தாயை எழுப்ப முயற்சித்தனராம். என்ன சத்தமிட்டும் தாய் விழிக்கவில்லை. அவர்களும் உள்ளே செல்ல முடியாதவாறு குறுக்கே பாம்பு. சிறிய பொருட்களினால் எறிந்து தாயை எழுப்ப முயற்சித்தும் கைகூடவில்லை.
ஈற்றில் ஒருவர், ஒரு பூவை குழந்தைமேல் எறிய, தாய் விழித்தெழுந்து குழந்தையைக் காப்பாற்றினாராம். தாயின் உணர்வுகள் குழந்தை மேல் முழுமையாக இருந்ததால், குழந்தையின் மேல் விழுந்த பூவின் தாக்கத்தையும் உணர்ந்து கொண்டதாக அந்தக் கதை அமைந்திருந்தது.

சிவா.ஜி...
பாசத்தின் வலிமை, எவை பிரித்திருந்தாலும், மயக்கியிருந்தாலும் எண்ணங்களால் சேர்த்துவைக்கப்படும் என்பதை கதையாக அறிந்திருந்த எனக்கு உங்கள் இந்த அனுபவம் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்.

எனது மாமா அடிக்கடி சொல்வார். (தாயகத்தில் அவரது உந்துருளியைத்தான் நான் எடுத்துச் செல்வேன்.)
என்னதான் நாம் வாகனமோட்டுவதில் கவனமாக இருந்தாலும், எம்மேல் தவறே இல்லை என்றாலும் பின்னால் வருபவர்களால் கூட விபத்தில் நாம் சிக்க நேரிடும்என்று.
எனவே, மிகுந்த அவதானம் தேவை என்பார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாவற்றிற்கும் மேலான இறைவன் பாதுகாப்பே, எம்மை அநர்த்தங்களிலிருந்து பாதுக்காக்கும் வலிமையான காப்பு.

அதுவே உங்களையும் காத்து நிற்கின்றது.

mania
29-02-2008, 02:03 PM
இதுதான் டெலிபதி......... மனைவியும் டெலிஃபோனில் பதியுடன் பேசியிருக்கிறாளே....!!!!!
ஆச்சர்யத்துடன்
மணியா...

அறிஞர்
29-02-2008, 02:35 PM
தாங்கள் சுகமாக இருப்பது சந்தோசமான செய்தி....
----
தெய்வீக சக்தியுள்ளவர்களால் பலவற்றை கணிக்க இயலும்.

அது போலவே... தங்கள் மீது உள்ள ஈர்ப்பால்... கனவில் இது தோன்றியிருக்கலாம்.

மன்மதன்
29-02-2008, 02:57 PM
ஆச்சரியமாக இருக்கிறது.. நல்லவிதமாக உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது மகிழ்ச்சியான விசயமே.. இறைவனுக்கு நன்றி..

பூமகள்
29-02-2008, 05:07 PM
படிச்சதும் அதிர்ந்தேன்..!! சிவா அண்ணா நலமா இருக்கீங்க தானே..
பத்தாயிரம் கண்கள் கொண்டு பார்த்து சாலையில் போங்க அண்ணா...!! ப்ளீஸ்..!
அதன் அதிர்வுகள் தீரும் முன்.. அண்ணியின் உரையாடல் நிகழ்வு படித்து சிலிர்த்தேன்..!!

அன்யோன்யத்தின் வெளிப்பாடு இதைவிட அழகாய் வேறு எங்கே காண முடியும்..!!

உற்றவர் மனத்தோடு பேசி.. உணர்வுகளில் கலந்தால் மட்டுமே.. இப்படியான உள்ளுணர்வுகள் எழும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..!!

இன்று பார்த்து அதிசயக்கிறேன்..!!
தங்கைக்காகவேனும்.. இனி அதீத எச்சரிக்கையாய் சாலையில் பயணியுங்கள் அண்ணா..!!

அன்புடன் பூந்தங்கை,

தங்கவேல்
01-03-2008, 02:02 AM
சிவா படிக்கும் போது மனசெல்லாம் பட பட வென வந்து விட்டது. இறை சக்தி தான் உங்களுக்கு உதவி இருக்கின்றது. அக்னி சொல்லி இருப்பது போல சகோதரியின் எண்ணப்பிணைப்பு தான் கனவுக்கு காரணம் என்று நம்பலாம். பார்த்து இருங்க...

சிவா.ஜி
01-03-2008, 03:21 AM
இதுதான் டெலிபதி......... மனைவியும் டெலிஃபோனில் பதியுடன் பேசியிருக்கிறாளே....!!!!!
ஆச்சர்யத்துடன்
மணியா...

தல தல தான்....டெலிபதிக்கு புது விளக்கம்...சூப்பர்.

சிவா.ஜி
01-03-2008, 03:24 AM
ஜெயராமன் அய்யா உங்களின் அன்பான அக்கறைக்கும்,அறிவுரைக்கும் மிக்க நன்றி.நிச்சயம் கவனமாக இருப்பேன்,

சிவா.ஜி
01-03-2008, 03:27 AM
பாசத்தின் வலிமை, எவை பிரித்திருந்தாலும், மயக்கியிருந்தாலும் எண்ணங்களால் சேர்த்துவைக்கப்படும் என்பதை கதையாக அறிந்திருந்த எனக்கு உங்கள் இந்த அனுபவம் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்.

நானும் உணர்கிறேன் அக்னி...ஜெயராமன் அய்யா சொன்னதைப் போல எண்ண அலைகைன் சக்தி அதிசயமானது.உங்களின் அந்த தாய்-சேய் கதையிலும் அதுதான் வெளிப்படுகிறது.

சிவா.ஜி
01-03-2008, 03:28 AM
தங்கைக்காகவேனும்.. இனி அதீத எச்சரிக்கையாய் சாலையில் பயணியுங்கள் அண்ணா..!!

அன்புடன் பூந்தங்கை,

பாசத்தங்கையின் அன்பு கட்டளையை ஏற்று எப்போதும் எச்சரிக்கையாய் இருக்கிறேன்ம்மா.

சிவா.ஜி
01-03-2008, 03:31 AM
தாங்கள் சுகமாக இருப்பது சந்தோசமான செய்தி....
----

நன்றி அறிஞர்.எதுவும் ஆகவில்லை.ஆனால் இங்கு கார் ஓட்டுவது ரிஸ்க்கான விஷயம்தான்....சவூதிகளில் பெரும்பாலோனோர் சாலை விதியை மதிப்பதேயில்லை.நாம்தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

அறிஞர்
01-03-2008, 04:55 AM
நன்றி அறிஞர்.எதுவும் ஆகவில்லை.ஆனால் இங்கு கார் ஓட்டுவது ரிஸ்க்கான விஷயம்தான்....சவூதிகளில் பெரும்பாலோனோர் சாலை விதியை மதிப்பதேயில்லை.நாம்தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எங்க ஊருக்கு எதிர்மாறாக இருக்கிறது.... இங்கு சாலைவிதிகளை மதிக்காவிட்டால்... சட்டம் தனது கடமையை சரியாக செய்யும்.

நுரையீரல்
01-03-2008, 05:57 AM
ஐயோ விஷயம் கேட்டதும், உங்களுக்கு ஒன்றும் ஆகாமல் தப்பித்தீர்கள் என்பதை அறிந்து மனது சந்தோஷப்பட்டது...

ஆனா அண்ணிக்கு இதே நேரத்துல வந்த கனவு எப்படினு யோசிக்க ஆரம்பிச்சு அதுக்கு ஆயிரம் விளக்கம் சொல்லியோ / நம்பவோ ஆரம்பிச்சோம்னா அப்புறம் லைஃப்ல கனவுக்கு விளக்கம் சொல்லும் புத்தகங்கள் மட்டும் தான் படிச்சிட்டு இருக்கணும்.

அறிவியல் பூர்வமா இதுக்கு சாத்தியம் கிடையவே கிடையாது. எண்ண அலைகள் ஐயாயிரம் கிலோ மீட்டர் தாண்டிப்போய் அண்ணியை தாக்கியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏன் பக்கத்துல இருக்கற ரூமுக்கு கூட எண்ண அலைகள் பாயாதுங்குறப்ப, 5000 கி.மி நோ சான்ஸ்.

நீங்க இந்த தடவை ஊருக்கு போனவுடனே வேணும்னா சோதனை பண்ணி பாருங்க.. நீங்க ஒரு ரூமில இருந்துட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆழ்ந்த தியானத்துக்குப் போயிடுங்க, அப்படி ஆழ்ந்த தியானத்துக்குள் போயிருக்கும் போது எந்த விஷயத்தைப் பற்றி நினைத்தீர்களோ, அது என்ன என்று பக்கத்து ரூமில் இருக்கும் அண்ணியிடம் கேட்டு பதில் வந்தால், உங்களிருவரின் எண்ண அலைகள் கடல் கடந்து பயணிக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்..

முழிச்சிட்டு இருக்கும்போதே அடுத்தவரோட எண்ண அலைகளைப் புரியாத நமக்கு, கனவுலயா புரிய முடியும்..

சரி, பிராக்டிகலா கேட்குறேன், உங்ககூட இன்னொருத்தர் இருந்தாரே அவரோட மனைவிக்கு கனவு வந்துச்சா..

அண்ணா இதையெல்லாம் கண்டுபிடிக்கணும்னு நினச்சு மனச வருத்தாதீங்கனா..

அமரன்
01-03-2008, 06:43 AM
எங்க ஊருக்கு எதிர்மாறாக இருக்கிறது.... இங்கு சாலைவிதிகளை மதிக்காவிட்டால்... சட்டம் தனது கடமையை சரியாக செய்யும்.

இங்கே ஐந்துபுள்ளி கொடுக்கிறார்கள்... படிப்படியாக குறைச்சு பூச்சியமானதும் நடைராஜாவை சிபாரிசு செய்கிறார்கள் வலுக்கட்டாயமாக.. அங்கேயும் அப்படித்தானா??

அன்புரசிகன்
01-03-2008, 06:47 AM
நாம் நினைத்துக்கொண்டுசெல்லும் பாடலை எதிரில் வருபவர் பாடிக்கொண்டு வருவது போல் தூர இருந்தாலும் உங்களின் எண்ண அலைகள் அண்ணியை எந்தவித இடையூறுமின்றி செல்கிறது போலும்.

அன்புரசிகன்
01-03-2008, 06:50 AM
ஐயோ விஷயம் கேட்டதும், உங்களுக்கு ஒன்றும் ஆகாமல் தப்பித்தீர்கள் என்பதை அறிந்து மனது சந்தோஷப்பட்டது...

ஆனா அண்ணிக்கு இதே நேரத்துல வந்த கனவு எப்படினு யோசிக்க ஆரம்பிச்சு அதுக்கு ஆயிரம் விளக்கம் சொல்லியோ / நம்பவோ ஆரம்பிச்சோம்னா அப்புறம் லைஃப்ல கனவுக்கு விளக்கம் சொல்லும் புத்தகங்கள் மட்டும் தான் படிச்சிட்டு இருக்கணும்.

அறிவியல் பூர்வமா இதுக்கு சாத்தியம் கிடையவே கிடையாது. எண்ண அலைகள் ஐயாயிரம் கிலோ மீட்டர் தாண்டிப்போய் அண்ணியை தாக்கியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏன் பக்கத்துல இருக்கற ரூமுக்கு கூட எண்ண அலைகள் பாயாதுங்குறப்ப, 5000 கி.மி நோ சான்ஸ்.

நீங்க இந்த தடவை ஊருக்கு போனவுடனே வேணும்னா சோதனை பண்ணி பாருங்க.. நீங்க ஒரு ரூமில இருந்துட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆழ்ந்த தியானத்துக்குப் போயிடுங்க, அப்படி ஆழ்ந்த தியானத்துக்குள் போயிருக்கும் போது எந்த விஷயத்தைப் பற்றி நினைத்தீர்களோ, அது என்ன என்று பக்கத்து ரூமில் இருக்கும் அண்ணியிடம் கேட்டு பதில் வந்தால், உங்களிருவரின் எண்ண அலைகள் கடல் கடந்து பயணிக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்..

முழிச்சிட்டு இருக்கும்போதே அடுத்தவரோட எண்ண அலைகளைப் புரியாத நமக்கு, கனவுலயா புரிய முடியும்..

சரி, பிராக்டிகலா கேட்குறேன், உங்ககூட இன்னொருத்தர் இருந்தாரே அவரோட மனைவிக்கு கனவு வந்துச்சா..

அண்ணா இதையெல்லாம் கண்டுபிடிக்கணும்னு நினச்சு மனச வருத்தாதீங்கனா..

உங்க சிக்னல் வீக் என்று நினைக்கிறேன். :lachen001: :D :p

நுரையீரல்
01-03-2008, 07:38 AM
உங்க சிக்னல் வீக் என்று நினைக்கிறேன். :lachen001: :D :p
ஆமா என் சிக்னல் வீக் தான்.. உங்களுக்கு இன்னும் சிக்னலே விழுகலையே... எப்ப சிக்னல் விழுந்து, எப்ப அதை டெஸ்ட் பண்ணி.. துபாய்ல இருக்கற பேச்சலர்சுக்கு கனவுல கூட சிக்னல் விழுவாதுனு சுகந்தன் சொல்லியிருக்காரு ஒரு தடவை, நீங்க வேற அவரைக் கூப்பிட்டு தேங்காய்ப்பாலோட தடபுடலா விருந்தெல்லாம் கொடுத்திருக்கீங்க, இனி கண்டிப்பா சிக்னல் விழவே விழாது..

மனோஜ்
01-03-2008, 08:22 AM
உணர்வுகள் ஒன்றியதில் அன்னி இதை பார்த்திருக்கிறார்கள் சர்வஜாக்கரதையாக இருங்கள் சிவா அவர்கலே

சிவா.ஜி
01-03-2008, 09:21 AM
அக்கறையான விசாரிப்புக்கு நுரைக்கு ரொம்ப நன்றி.வழக்கமான பிராக்டிகல் பின்னூட்டம்...ஆன வாழ்க்கையின் சில சமயங்களில் பிராக்டிகல் தோத்து போயிடுது...என்ன செய்யறது உணர்வுபூர்வமா வாழ்ந்து பழகிட்டோம்...அதுல எநத பாதகத்தையும் பாக்கல...அதனால அப்படியே இருக்கட்டும்ன்னு விட்டுட்டோம்.வாழ்க்கையில் எல்லாத்தையும் பிராக்டிகலா பாத்து வாழ்ந்துகிட்டிருந்தா...என் இனிய கணவா....மனைவியே அப்படீங்கறதுக்கு பதிலா இன் இனிய இயந்திரமேன்னுதான் ரோபோ குரல்ல பேச வேண்டியிருக்கும்....
இதெல்லாம் வாழுற வாழ்க்கையில வர்ணத்தை சேர்ப்பது....கறுப்பே போதுன்னு நினைச்சா...இயந்திரமா வாழ்ந்துடலாம்.
வேற என்னத்த சொல்ல...

lolluvathiyar
01-03-2008, 12:51 PM
அறிவியல் பூர்வமா இதுக்கு சாத்தியம் கிடையவே கிடையாது.


அறிவியல் ரீதியாக சிந்தித்தால் நுரையீரல் சொல்வது தான் உன்மை,
என்ன அலைகள் பல தூரம் பாயுமா பாயாதா என்று அறிவியலால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை, பாயும் என்றும் நிருபிக்க முடியவில்லை பாயாது என்று நிருபிக்க முடியவில்லை.
ஆனால் சில சமயம் நம் வாழ்கையில் சிவா சொன்னது போல அதிசயமான நிகழ்ச்சிகள் நடந்து தான் இருகிறது.

நுரையீரல் அவர்களே எங்கிரு ந்தோ மைக்ரோ வேவ் அலைகள் சாட்டிலைட் மூலம் மனிதன் செலுத்தி இன்றூ மொபைல் போன் பேசுகிறானே. அது போல ஏன் இயற்கையா எதோ ஒரு கன்னுக்கு புலபடாத கடத்தி மூலம் என்ன அலைகள் பாய்ந்திருக்க கூடாது.
அறிவியாத வரை ஆன்மீகம், அறிந்தபின் அறிவியல்
என்ன அலைகள் பயனிப்பதை அறிய இன்னும் அறிவியல் வளர வில்லை என்று கூட எடுத்து கொள்ளலாம் அல்லவா


முழிச்சிட்டு இருக்கும்போதே அடுத்தவரோட எண்ண அலைகளைப் புரியாத நமக்கு, கனவுலயா புரிய முடியும்..

முழுச்சிகிட்டு இருக்கும் போது என்னங்கள் ஒரு சீராக இருக்காது. தூங்கி கொன்டு இருக்கும் போது சீராக இருக்கும் அதனால் அப்படி ஏற்படலாம்.


நம் மீது அன்பு வைத்திருப்பவர்களின் என்ன அலைகள் நம்மை வட்டமடிக்கும் என்று நம்பும் வரை நாம் தைரியமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்

இளசு
04-03-2008, 06:23 AM
அன்பு சிவா

''பச்சை விளக்கு '' விழுந்தால் போகலாம் என்று அர்த்தம். ஆனாலும்
பிரேக் பிடிக்காத ஒரு ராட்சத லாரி இடப்பக்கம் இருந்து சீறி வந்துகொண்டிருந்தால், '' Right of Way'' எனக்குத்தான் என நாம் போகமுடியுமா?

எனவே பச்சை விழுந்தாலும் இட-வலம் பார்த்தே ஆக்சிலேட்டரை முடுக்க வேண்டும் .

இது இங்கே பாலபாடம்.

பிரேக் பிடிக்காத தற்செயல் அசம்பாவிதங்களுக்காகவே இந்த எச்சரிக்கை என்றால் -

பிரேக்கே ''பிடிக்காத'' கிராதக ஓட்டிகள் நிறைந்த நாடுகளில் பன்மடங்கு எச்சரிக்கை தேவைதானே?

விபத்து தவிர்த்தது நிம்மதி.

இணையின் ''டெலி -பதி'- (தலயைத் தனியா கவனிக்கிறேன்..)
'para -science'' எல்லைகளுக்குப் போய்விடுவதால்
நம் நம்பிக்கை மட்டுமே விளக்கங்கள் தரும். நிரூபணம் இருப்பவை
எல்லாம் science ஆகிவிடுமே!

இவ்வகை உணர்வு இழைகள் தாய் -பிள்ளை, கணவன் -மனைவி , நல்ல நட்புகள் இடையே ஊடுவதாய் நான் ''நம்புகிறேன்''.

சிவா.ஜி
04-03-2008, 06:29 AM
எனவே பச்சை விழுந்தாலும் இட-வலம் பார்த்தே ஆக்சிலேட்டரை முடுக்க வேண்டும் .

பிரேக் பிடிக்காத தற்செயல் அசம்பாவிதங்களுக்காகவே இந்த எச்சரிக்கை என்றால் -

பிரேக்கே \'\'பிடிக்காத\'\' கிராதக ஓட்டிகள் நிறைந்த நாடுகளில் பன்மடங்கு எச்சரிக்கை தேவைதானே?

இவ்வகை உணர்வு இழைகள் தாய் -பிள்ளை, கணவன் -மனைவி , நல்ல நட்புகள் இடையே ஊடுவதாய் நான் \'\'நம்புகிறேன்\'\'.

ரொம்பச் சரி இளசு...நானும் எப்போதும் ஓரிரு வினாடிகள் தாமதித்துதான் வண்டியை கிளப்புவேன்...அன்று அவன் மின்னல் வேகத்தில் வந்ததால் அப்படி ஆகிவிட்டது...பிரேக்கே பிடிக்காதவர்கள்தான் இங்கு அதிகம்.அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.இனி இட வலம் பார்த்துதான் ஆக்ஸிலேட்டரை முடுக்க வேண்டும்.

நானும் அந்த உணர்வுகளை நம்புகிறேன். இளசு...இது தற்செயலென்று நினைக்க முடியவில்லை...பல சந்தர்ப்பங்களில் அப்படி நிகழ்ந்திருக்கிறது..

இதயம்
27-03-2008, 07:05 AM
அடடே.. இது எப்பொழுது நடந்தது..? படித்ததில் நிம்மதி பெருமூச்சு வந்தது. நல்லவேளை.. அசம்பாவிதம் ஏதுமில்லாமல் தப்பித்தீர்கள்..!!

பொதுவாகவே காதல் தொடர்பானவற்றை மிகவும் இரசிக்கும் நான் இந்த பதிவையும் மிகவும் இரசித்தேன். இது போன்ற விஷயங்கள் காதலில் நிகழ்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். இப்படிப்பட்ட விஷயங்கள் இருவருக்கும் இடையிலான காதலை இன்னும் அதிகம் வலுப்படுத்தும். காதலென்பது மிகவும் அதிசயமாக அறியப்படும் உணர்வு. அதனால் நிகழும் நிகழ்வுகள் விஞ்ஞானத்தையே சில நேரம் சந்தேகிக்க வைக்கும். இப்படிப்பட்ட மர்ம விஷயங்கள் தான் காதலின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்த பெரும் காரணமாக இருக்கிறது.

உணரப்படும் காதலென்பது சம்பந்தப்பட்ட இருவருக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயம். ஆனால், அந்த இன்பத்தை அறியா அல்லது அறிய முடியாதவர்களின் இயலாமையை தூண்டி அவர்களை வேதனைப்படுத்தவும் செய்யும் (இதனால் நம் காதலுணர்வை நம்மைத்தவிர மற்றவருடன் பகிரக்கூடாது என்பது என் மனைவியின் கருத்து). அந்த இருவரின் காதல் மற்றவர்களுக்கும் ஏதோ ஒரு வழியில் மகிழ்ச்சியின் கொடுக்குமாயின் அது காதலால் கிடைக்கும் கூடுதல் பயன்பாடு. ஆனால், இயல்பாக அப்படி நிகழ்வதில்லை. அதனால் தான் காதல் செய்பவர்களை தவிர மற்றவர்களால் அது விரும்பப்படுவதில்லை. காதல் என்ற உணர்வு முழுக்க, முழுக்க ஆன்மீகம் போல் நம்பிக்கை அடிப்படையிலானது. அது தொடர்பில் நடக்கும் அதிசயங்கள், மாயங்கள் விஞ்ஞானத்தால் கண்டறியப்படுவதில்லை. எனவே பார்த்தும், முகர்ந்தும் இரசிக்க வேண்டிய காதல் என்ற மலரை பிய்த்து போட்டு விஞ்ஞானம் கொண்டு ஆராய்தல் அவசியமற்றது. நானும் காதலுணர்வில் மயங்கி இது போன்ற பலவற்றை உணர்ந்திருக்கிறேன், இயல்புக்கு பொருந்தா பலவற்றை மன்றத்தில் எழுதியுமிருக்கிறேன். அது காதலுணர்வால் ஆட்பட்ட என்னை, என் இணையை திருப்திப்படுத்தவும், என் காதலுணர்வால் மகிழ்ச்சி கொள்ளும் மற்றவர்களை மகிழ்விக்கவும் தான். அவற்றில் நானெழுதிய பலவற்றை விஞ்ஞானக் கண் கொண்டு பார்த்தால் அர்த்தமற்றது. அதற்கு விஞ்ஞானப்பார்வை அவசியமற்றதும் கூட.!

வாழ்க்கையில் இது போன்ற பல விஷயங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் மனதிற்குள் வரைந்து மதிக்கப்பட வேண்டியவை, இரசிக்கப்பட வேண்டியவை. முடிவாக சொல்லவேண்டுமென்றால், இந்த நிகழ்வை விஞ்ஞானம் உண்மை என்று இது வரை நிரூபிக்கவே இல்லை. ராஜா சொன்னது போல் பக்கத்திலிருப்பவனின் மன உணர்வை அறிய முடியாத போது, பல ஆயிரம் மைல் தூரம் தாண்டிய நிலையில் இதற்கு வாய்ப்பில்லை. அது மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் நம் இணை அருகில் இருக்கும் போது நிகழ்வதில்லை. காரணம், காதல் தொடர்பான தேடல் அவசியமற்று போவதால் தான். ஆனால், சிவாவின் நிகழ்வு காதலை பிரிவதால் ஏற்படும் மனத்தேடல் பல வழிகளில் வீரியம் பெற்று நினைவாய், கனவாய் தன் எல்லைகளை விஸ்தரிக்கும் நிலையென்று எண்ணுகின்றேன்.

இத்தனை இரசிக்கும்படியான ஒரு காதல் நிகழ்வை சொன்ன சிவா இறுதியில் இதன் தொடர்பில் விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்ற கேள்வியை கேட்டிருக்கக்கூடாதோ என நினைக்கிறேன். காரணம், காதல் ஆராயப்பட வேண்டியதல்ல, அனுபவிக்கப்பட வேண்டியது..!!

சிவா.ஜி
27-03-2008, 07:26 AM
இத்தனை இரசிக்கும்படியான ஒரு காதல் நிகழ்வை சொன்ன சிவா இறுதியில் இதன் தொடர்பில் விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்ற கேள்வியை கேட்டிருக்கக்கூடாதோ என நினைக்கிறேன். காரணம், காதல் ஆராயப்பட வேண்டியதல்ல, அனுபவிக்கப்பட வேண்டியது..!!

மிக மிக உண்மைதான்...நான் அப்படிக் கேட்டிருக்கக்கூடாது.ஏனெனில் அனுபவித்தவர்களுக்குத் தெரியும்...இது விளங்கவைக்க முடியாத உணர்வு என்பது.அதனால்தான் அத்தனைப் பின்னூட்டங்களும் இந்த உணர்வை சிலாகித்தனவே தவிர...விஞ்ஞானத்தை இதனோடு தொடர்புபடுத்தவில்லை.
மிக்க நன்றி இதயம்.(தப்பிச்சதுனாலத்தான் நீங்க ஊர்லருந்து திரும்பி வந்து என்னை என் நாற்காலியில் பார்க்கமுடிந்தது....)