PDA

View Full Version : அம்மையும் அப்பனும்...



சிவா.ஜி
28-02-2008, 10:16 AM
அம்மாவின் அன்பு
இருப்பதையெல்லாம்
கொடுத்துவிடும் கர்ணனின்
கொடை போன்றது....

அப்பாவின் அன்போ
அம்மாவின் சிறுவாட்டைப் போல
அவ்வப்போது வெளிப்படும்
அவசியத்துக்குத் தரப்படும்!

பிள்ளையின் தவறென்பது
அம்மாவின் பார்வையில்
அத்தனைப் பெரிதல்ல...
அப்பாவின் பார்வையிலோ
ஆராய்ச்சிக்குட்படுவது...
அடுத்தமுறை இழைக்காவண்ணம்
தடுப்பு மருந்து தடவப் படுவது!

மகன் படிக்கிறானென்பதே
தாய்க்குப் பெருமை...
எப்படிப்படிக்கிறானென்பது
தந்தையின் கவலை...

தாயின் சிலநேர கண்மூடிய பாசம்
தனயனை தடம் மாற வைக்கும்
தகப்பனின் சிலநேரக் கண்டிப்பு
தொலைநோக்கில் சென்று
நிலை உயர வைக்கும்!

mania
28-02-2008, 10:36 AM
அருமை சிவாஜி.....எனக்கே...!!!! தெளிவாக புரிந்துவிட்டது....எளிய நடையில் சொல்லப்பட்ட உண்மைகள்.....
அன்புடன்
மணியா...:)

சிவா.ஜி
28-02-2008, 10:45 AM
ஆஹா மணியா சாரின் முதல் பின்னூட்டம் என் கவிதைக்கு....ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.ரொம்ப நன்றி மணியா சார்.

mania
28-02-2008, 11:13 AM
ஆஹா மணியா சாரின் முதல் பின்னூட்டம் என் கவிதைக்கு....ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.ரொம்ப நன்றி மணியா சார்.
எனக்கும் முன்னாலே அமர் வந்து படித்துவிட்டு ஒரே ஓட்டம்....!!!!!
அதான் என் பின்னோட்டம்.....!!!!
சந்தோஷத்துடன்
மணியா....:D:D

சிவா.ஜி
28-02-2008, 11:22 AM
எனக்கும் முன்னாலே அமர் வந்து படித்துவிட்டு ஒரே ஓட்டம்....!!!!!
அதான் என் பின்னோட்டம்.....!!!!
சந்தோஷத்துடன்
மணியா....http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

அமர் இன்னும் அப்பாவாகவில்லையே.....

mania
28-02-2008, 11:25 AM
அமர் இன்னும் அப்பாவாகவில்லையே.....

அப்பப்பா.....:D:D
அப்பப்பா(தாத்தா) மணியா...:D:D

அமரன்
28-02-2008, 06:59 PM
குடும்ப விளக்கின் வெளிச்சமாக அம்மா. விளக்கில் இருக்கும் இருட்டாக அப்பா!
இருட்டு இருட்டல்ல. நிறைதகனம். இரண்டும் அழகுதான். இரண்டும் தேவைதான்..
இணைபிரிந்தால் பிரகாசமில்லை.. பிரகாசம் இன்றேல் வழிதோன்றல்களின் கதி..
புரிந்தவர்கள் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். மற்றவர்கள்....!!!!!!!!
பாராட்டுகள் சிவா. அம்மையப்பன் தத்துவம் "மக"த்துவ மருத்துவம்.

rocky
29-02-2008, 05:20 AM
அன்புள்ள சிவா.ஜி அண்ணனுக்கு,

மிகவும் அருமையான வாழ்வியல் கவிதையண்ணா, எனக்கு இதுபோன்ற எதார்த்தமான கவிதைகள் மிகவும் பிடிக்கும், கற்பனைக் கவிதைகளை விட. தந்தையின் கண்டிப்பை நியாயப் படுத்தும் ஒரு தந்தையின் கவிதை. மிகவும் ரசித்தேன். நீங்கள் கூறுவது உண்மைதான் அண்ணா, சில நேரங்களில் கண்டிப்பு அவசியமாகிறது.

ஆனால் எனக்கு விஷயமே வேறு மாதிரி, என் தந்தையும் நீங்கள் கூறுவது போல் கண்டிப்பானவர்தான், எ.கா. நான் பத்தாம் வகுப்பில் 77 விழுக்காடு மதிப்பெண்தான் பெற்றேன், என் அம்மாவுக்கு நான் பாஸானதே மகிழ்ச்சி, ஆனால் அப்பாவோ இந்த வருடம் சென்னையில் ஒரு பெண் 496 மார்க் வாங்கியிருக்கு, என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார், இத்தனைக்கும் நான் வீட்டில் புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்ததே இல்லை, ஆனால் வெளியே சென்று பக்கத்து வீட்டுக்காரரிடம் எல்லாம் நல்ல மார்க்தான் வாங்கியிருக்கான்னு சொல்லிட்டிருந்தார். அதுதான் தந்தையின் குணம், இதை உங்கள் கவிதையில் முழுமையாக உணர முடிந்தது.

ஆனால் பல நேரங்களில் இந்த தலைமுறையினறை மிரட்டியோ கண்டித்தோ நல்வழியில் நடத்த முயற்சிப்பது தோல்வியில் முடியலாம், காரணம் நான் நல்ல பையனாக இருப்பது என் தந்தையின் கண்டிப்பால் அல்ல, என் தாய் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையால்தான். இது என் விஷயம் மட்டுமே அண்ணா, மற்றபடி உங்கள் கருத்தும் நிச்சயம் உண்மையே. நன்றி.

சிவா.ஜி
29-02-2008, 05:27 AM
ஆனால் பல நேரங்களில் இந்த தலைமுறையினறை மிரட்டியோ கண்டித்தோ நல்வழியில் நடத்த முயற்சிப்பது தோல்வியில் முடியலாம், காரணம் நான் நல்ல பையனாக இருப்பது என் தந்தையின் கண்டிப்பால் அல்ல, என் தாய் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையால்தான். இது என் விஷயம் மட்டுமே அண்ணா, மற்றபடி உங்கள் கருத்தும் நிச்சயம் உண்மையே. நன்றி.

ரொம்ப ரொம்ப சரி ராக்கி...எதுக்கு மிரட்டனும்...அப்பா என்றால் மரியாதை இருக்கனும் பயம் இருக்கக்கூடாது.
அதே மாதிரி கண்டிப்பு என்றால் சில அப்பாக்கள் செய்வதைப் போல மிலிட்டெரி கண்டிப்பு கூடவே கூடாது.
மகன் ஏதாவது தவறு செய்தால்...அட விடுங்க சின்னப் பையந்தானே போகப் போக சரியாப் போயிடுவான்னு அம்மா சொன்னா அப்பாவும் தலையாட்டக்கூடாது...அதே போல அப்பா சொன்னாலும் அம்மா தலையாட்டக்கூடாது...ஒரு சமயம் ஆதரிக்கனும்,ஒரு சமயம்..கண்டிப்பை காட்ட வேண்டும்...காட்ட வேண்டுமே தவிர திணிக்கக் கூடாது.அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்கள் தாய் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை மதித்து அதற்கு தகுந்தார்போல வாழும் உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன்.நம்பிக்கை வைப்பது மிக அவசியம்..அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது அதைவிட அவசியம்.

சிவா.ஜி
29-02-2008, 05:30 AM
குடும்ப விளக்கின் வெளிச்சமாக அம்மா. விளக்கில் இருக்கும் இருட்டாக அப்பா!
இருட்டு இருட்டல்ல. நிறைதகனம். இரண்டும் அழகுதான். இரண்டும் தேவைதான்..


அருமையான கருத்து அமரன்.இதைப் புரிந்து கொண்டவர்கள் பிரச்சனையின்றி வாழ்ந்து ஜெயிக்கிறார்கள்.நன்றி அமரன்.