PDA

View Full Version : SEO-ல் உதவி தேவை!

அரசன்
26-02-2008, 04:41 PM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம்! நான் இப்போது Search Engine Optimization என்ற SEO வேலையில் புதுசா சேர்ந்து வேலையைக் கற்றுக் கொண்டு செய்து வருகிறேன். அதனால் எனக்கு SEO புதுசு. எனவே எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. அதை நிவர்த்தி செயதுக் கொள்ள மன்ற நண்பர்களையே சார்ந்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அது சார்ந்த புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் இருந்தாலும் மறவாமல் எனக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

அமரன்
26-02-2008, 04:45 PM
புதுப்பணியில் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அரசன். இயலுமானவரை நண்பர்கள் உதவுவார்கள். திரிப்பக்கம் கவனத்தை ஈர்க்க தலைப்பை மாற்ற எனது ஆலோசனை..

அரசன்
26-02-2008, 04:52 PM
திரிப்பக்கம் கவனத்தை ஈர்க்க தலைப்பை மாற்ற எனது ஆலோசனை..

புரியவில்லை அமரன். தலைப்பை மாற்ற வேண்டுமா?

அமரன்
26-02-2008, 04:57 PM
ஆமாம்.. உதவி என்பதை தலைப்பில் கொடுத்தால் ஓடோடிவந்து உதவ சௌகரியமாக இருக்கும்.

அரசன்
26-02-2008, 05:05 PM
ஆமாம்.. உதவி என்பதை தலைப்பில் கொடுத்தால் ஓடோடிவந்து உதவ சௌகரியமாக இருக்கும்.

மிக நன்றி அவ்வாறே செய்கிறேன்.

selvamurali
18-06-2008, 08:53 AM
SEO Search Engine Optimization இணைய கடலில் உங்களுக்கு தேவையான தகவலை நீங்கள் எவ்வாறு வெகு எளிதாக பெற இயலும் என்பதை தீர்மானிப்பதுதான் சர்ச் என்ஜின் ஆப்டிமைசேசன் என்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு ஓட்டப் பந்தயத்தில் பல்வேறு நபர்கள் ஓடினாலும் இறுதியில் முன்னால் வருவது யார் என்பது போன்ற போட்டிதான் இந்த SEO.

ஒரு இணைய தள வடிவமைப்பாளர் அவரது இணைய தளத்தை எல்லா வகையான தேடல் தளங்களும் எளிதில் அடையாளம் கண்டு அவற்றால் தேடப்படும் தகவல்களை வெகுவிரைவில் தருவதுதான்.....

அதற்கென்று பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
meta tag, keywords , robots.txt என்று பல்வேறு வகையான உபகரணங்கள் இருக்கின்றன.
இதற்கென்று தனியாகவும் சில மென்பொருள்கள் இருக்கின்றன.

web CEO எனும் மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. அதில் முயற்சித்து பாருங்கள்.
வாழ்த்துக்கள்

சாம்பவி
22-06-2008, 12:46 PM
மின்னூல்கள்....

SEO Bible
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=395

SEO - An Hour a Day...
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=396

Professional Search Engine Optimization with PHP - A Developers Guide SEO
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=397

அரசன்
11-07-2008, 07:32 AM

மிக்க நன்றி செல்வமுரளி. மேலும் அதில் பல அடிப்படையான விசயங்கள் புரியவில்லை. உங்கள் பாராட்டுக்கு நன்றி!

மின்னூல்கள்....

SEO Bible
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=395

SEO - An Hour a Day...
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=396

Professional Search Engine Optimization with PHP - A Developers Guide SEO
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=397

மிக்க நன்றி சாம்பவி! பயன்படுத்திக்கொள்கிறேன்!

selvamurali
11-07-2008, 10:26 AM
உங்களுக்கு எவை எவை புரிய்யவில்லை என்று சொன்னால் விளக்கங்களை தர தயாராக இருக்கிறேன் நண்பரேஎ!