PDA

View Full Version : மௌனப்பிரகடனம்!அமரன்
26-02-2008, 03:42 PM
நிதமும் நான் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் ஏராளம். நிகழ்வுகள் சில என்னில் கீறிச்செல்லும் எராழம். கீறலை கிளறி கண்டெடுத்தவை பல பகிரமுடியாதன. இதுகூட அப்படியான ஒன்றோ என்ற எண்ணம் என்னுள். இது அதீத வன்முறையாக இருக்கலாம், வக்கிரமாக தோற்றம் கொள்ளலாம். உங்கள் பார்வைக்கு எப்படிப் படுகிறதோ அதை தட்டிச்சொல்லுங்கள். கைதட்டாக இருந்தாலும், தலை தட்டாக இருந்தாலும் வணங்கி வாங்கிக்கொள்கிறேன்.


அடுத்த கல்வி ஆண்டு அனுமதியை தாங்கியிருந்த, அடுக்கி வைக்கப்பட்ட அறிவிப்பு அஞ்சல்களில், அடுத்தடுத்து அவனும் அவளும் காதலித்திருந்தார்கள். குறிப்பிட்ட சேருமிடத்தின் பிரகாரம் இருவரும் பிரிக்கப்பட, அவன் ஜேர்மனிப்பக்கம் தூக்கி அடிக்கப்பட்டான். அவளோ ஆஸ்திரேலிய தேசத்தில் வீசப்பட்டாள்.

செப்டெம்பர் 11. கேம்பஸ் மாணவர் குடியிருப்பிலிருந்து கேம்பஸ் நோக்கி பொடி நடையில் புறப்பட்டான் அவன். ஜேர்மனைவிட இதமான குளிரின் வருடலால் அவன் நடையில் துள்ளல் கலந்தது. ஹெட்செட்டின் உதவியுடன் ரிக்கி மாட்டின் செவிகளை உதைத்துக்கொண்டு இருந்தார். நான்கு சாலைகள் சந்திக்குமிடத்தில் வாகனச்சமிக்கை பச்சைக்கொடிகாட்ட, உறுமியபடி நின்ற பஸ்வண்டி சீறிப்பாய்ந்து, அவன் முகத்தில் கற்றைக் கூதல் காற்றை பிளிச்சி, சிலகணங்கள் அவன் கண்களின் கதவுகளை அடைத்தது. சூழல் கிரகித்து சுதாரித்து திறந்த விழிகளில் தட்டுப்பட்டாள் அவள்.

அவன் நின்ற சாலைக்கு எதிர்ப்புறச் சாலையில் நின்றவளை எங்கேயோ பார்த்த நினைவு. அவளுடன் பழகிய உணர்வு. இதயச்சுவர்களில் அவளுடன் நெருங்கிய உறவு படரத்தொடங்கியது. அவள் தலைகோதும்போது இவன் கண்மூடி அனுபவித்து சிலிர்த்தான். சந்தி சிரித்த தோற்றம் பரவியது. சுருக்கமாக சொன்னால், மேலைத்தேசத்தில் பிறந்துவளர்ந்த அவனுள்ளிருந்த தமிழிரத்தம் தன்னை வெளிக்காட்டியது. வெறித்துப் பார்க்கும் அவன் நின்ற இடம் நமதூராக இருந்திருந்தால் சந்திசிரிக்கும் நிலை அடைந்திருப்பான். இதயத்தில் அவள் வடம்பிடிக்க திசையில் இயங்கின அவன்கால்கள்.

நித்தியகல்யாணிகள் நிறைந்திருந்த வகுப்பறையில் பக்கத்து பக்கத்து ஆசனத்தில் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். விதவிதமான கமழ்வுகள் அவன்மனப்பிறழ்வை தீண்டிவிட மோனத்திலுருந்து காணலுக்கு வந்தான். அறிமுகப்படலம் அவர்கள் பெயர்களை சொல்லிச்சென்றது. அப்போது பற்றிக்கொண்ட ஹரீஸினதும் அபியினதும் உறவு நட்பு என்னும் பெயருடன் கேம்பஸ் காம்பவுன்ட் பூராகவும் பூத்து வியாபித்தது. தடுமாறிய அவனாங்கிலத்துக்கு தோள்கொடுத்த அவளாங்கிலப்புலமை பூக்களுக்கு வாசமானது. மனதளவின் ஹரீஸ் காதல் வசமானான்..

மேல்நாட்டுப் பாணியில் கைகுலுக்கலுடன் கன்னங்களை அபி உரசுவாள். கன்னக்கதுப்புகளில் விரச வெப்பம் விரவி பரவசத்துக்குள் அவன் அடைந்துகொள்வான். தோள் சேரும் அவள் மிருதுவான கைகளை ரோஜா இதழ் மாலை ஸ்பரிசமாக நினைந்து உருகுவான். சொல்லாமல் உள்ளுக்குள் மருகுவான். பொறியியல் பீடத்தில் சிக்குண்ட எலியாக வேண்டியவன் சிற்பிகளின் வேலைத்தளத்தில் பள்ளிகொள்ளும் நிலைக்காளானான். கடந்து சென்ற காலத்தில் அவனுக்கான காலம் கனிந்தது. அபியின் உணர்வுகளிலும் காதல் கனிந்தது. நட்பு வாசகங்கள் காதல் நிறம் பூசிக்கொண்டன.. நிறத்தில் பளீர் வெளிச்சம் குடும்பங்களை உறுத்தியது. ஒன்று சேர்க்கும் முயற்சியின் முதல்படியாக தொலைபேசி அளாவளாவல் ஆரம்பமானது..

பூர்வாங்க பேச்சுகளில் பூர்வீகம் அலசப்பட குடும்பங்கள் நெருக்கமானது. தொடர்ந்தபோது சொந்தங்கள் இடைவெளி குறைத்தன. ஒரு கட்டத்தில் அங்கத்தவர்கள் ஒன்றானார்கள். நீயா நானா என்ற கர்வக் கயிறுழுத்தலால், சகோதரச் சங்கிலியின் ஒருமுனை ஆஸ்திரேலியாவிலும் மறுமுனை ஐரோப்பாவிலும் அறுந்து எப்போதோ விழுந்தது, இப்போது தலையில் இடியாக விழுந்தது.. தலையிலடித்துக் கதற தெம்பில்லாமல் காதல் பிரிவு மௌனப்பிரகடனம் செய்யப்பட்டது. அந்தபிரகடனத்தில் உறவுகளின் பரிமாறல்களின் அவசியம் கொடியேற்றம் செய்யப்பட்டது

சுகந்தப்ரீதன்
27-02-2008, 05:26 AM
ஹய்யோ..ஹைய்யோ...!!

உங்க கவிதைகள் போலவே உங்க கதையையும் இருமுறை படிச்சிதான் ஏதோ..கொஞ்சமாவது புரிஞ்சுக்க முடியுது...எப்போதோ பிரிந்து மறுபடியும் சந்தித்து..காதல் பறிமாறி..பின் இருவீட்டு சம்மதம் பெற்று இணையும் வேளையில் ஏற்பட்ட கர்வ கோளாறால் காதல் கைவிடப்பட்டதாக... இதை படிக்கையில் எனக்கு தோன்றுகிறது...!!

அது சரியா..? தப்பா...? அண்ணன் அமரந்தான் சொல்ல வேண்டும்...!
எது எப்படியோ...வித்தியாசமான உரைநடை...உடனடியாக எனக்கு புரியாத வடிவில்...வாழ்த்துக்கள்...அண்ணா..!!

ஓவியன்
29-02-2008, 01:41 AM
அமர், கொஞ்சம் நெருடுகிறது...

அபியின் ஹரீஸ் மீதான அன்பு காதல் தானா...???
அது காதலெனின் முன்னர் அவுஸ்திரேலியா வர முன்னர் ஹரீஸின் சகோதரன் மீது இருந்தது....???

(எனக்கு இந்தக் கதை ஒரு முக்கோணக் காதலாகவே புரிகிறது, அண்ணன் காதலித்தவனை தம்பி கரம் பற்ற முயல....
கர்வக் கயிறு இழுப்பால், சகோதர சங்கிலிகள் அறுந்து.....
காதல் பிரிவு மெளனப் பிரகடனம் செய்யப்படுகிறது....
சரியா அமர்........???? )

மலர்
04-03-2008, 08:17 PM
அது சரியா..? தப்பா...? அண்ணன் அமரந்தான் சொல்ல வேண்டும்...!
சரியா அமர்........????
அமரு..
ரெண்டு புத்திசாலிங்க :sprachlos020: :sprachlos020: (அண்ணனும் தம்பியும்)பதில் போட்டிருக்காங்க....
கொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன்...... :icon_rollout: :icon_rollout:

சுகந்தப்ரீதன்
05-03-2008, 06:37 AM
அமரு..
ரெண்டு புத்திசாலிங்க :sprachlos020: :sprachlos020: (அண்ணனும் தம்பியும்)பதில் போட்டிருக்காங்க....
கொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன்...... :icon_rollout: :icon_rollout:
ஏன் நீதான் கொஞ்சம் அவ்ரு கையை புடிச்சி கூட்டிட்டு வாயேன்...மல்ரு:mini023:

அமருதான் மௌனபிரகடனம் பண்ணிட்டாரே அப்புறம் எப்படி வந்து வாயை திறப்பாரு...?:traurig001::icon_rollout:

இளசு
19-03-2008, 09:52 PM
புலம்பெயர்தலின் இன்னொரு சிக்கல்..

அண்ணன் -தங்கையே காதலர்களான கொடுமை..
இனப்படுகொலகளால் சிதறும் சமூகம்...
பண்பாட்டுக்கொலை செய்ய வாய்ப்புகள் உருவாக்கும் அவலம்..

உதிர வண்ணத்தில் பதிக்கப்பட்ட உறுத்தல் கதை!

பொறியியல் பீட எலி..? இல்பொருள் உவமையா?

வாழ்த்துகள் அமரா!