PDA

View Full Version : நிலவிடம் சில கேள்விகள்



rocky
26-02-2008, 01:41 PM
நிலவே! சூரியனிடம் பெற்ற
ஒளியைத்தானே நீயும் தருகிறாய்,
பின் உன்னால் மட்டும் எப்படி முடிகிறது,
நெருப்பையும் இத்தனை இதமாய்த்தர?

ஒருவேளை கடன் வாங்கிய
வெளிச்சம் என்பதால்தான் இப்படி
கஞ்சத்தனம் செய்கிறாயோ?

நிலவே! எதனால் நீ
தேய்ந்து மறைகிறாய்?
அப்படியென்ன துயரமுனக்கு?

ஒருவேளை இரவல் வாங்கி
ஒளிரும் நிலையை எண்ணி
இளைத்து விடுகிறாயோ?

நிலவே! எதனால் நீ
மீண்டும் வளர்கிறாய்? அதற்குள்
என்ன மாற்றம் உன்னுள்?

ஒருவேளை வாங்கிய
கடனுக்கெல்லாம் ஒருநாள் வட்டியை
கட்டிவிட்டு வந்துவிடுகிறாயோ?

நிலவே! தொலைவினில்
அழகாய்த் தெரியும் நீ
அருகினில் கரடுமுறடாய்
இருப்பது எதனாலோ?

ஒருவேளை இந்தக்
கவிஞர்களெல்லாம் உன்னைப்
பெண்களுடன் ஒப்பிட்டதாலா?

சிவா.ஜி
26-02-2008, 01:54 PM
அழகான கற்பனை...ரசிக்க வைக்கும் கேள்விகளை வான்மதியை நோக்கி வீசியிருக்கிறார் ராக்கி.
கடன் வாங்கி ஒளிரும் திங்கள்
வட்டியாய் மாதம் ஒருநாள்
ஆதவனுக்குப் படைக்கிறதோ பொங்கல்!

அருமையான கவிதைக்கு வாழ்த்துகள் ராக்கி.

rocky
26-02-2008, 02:14 PM
அழகான கற்பனை...ரசிக்க வைக்கும் கேள்விகளை வான்மதியை நோக்கி வீசியிருக்கிறார் ராக்கி.
கடன் வாங்கி ஒளிரும் திங்கள்
வட்டியாய் மாதம் ஒருநாள்
ஆதவனுக்குப் படைக்கிறதோ பொங்கல்!

அருமையான கவிதைக்கு வாழ்த்துகள் ராக்கி.

உங்களின் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.

இளசு
26-02-2008, 05:07 PM
இயற்பியல் உண்மைகளை
கவியியல் மனவண்ணம் சேர்த்து
ராக்கி குழைத்த கவிதை..

சாடையாய்ப் பெண்களைச் சாடும் ஆண்மனப் பார்வை வேறு!

பாராட்டுகள் ராக்கி..

சொற்கள் இன்னும் குழைய வேண்டும்... குறைக்க வேண்டும்..

rocky
27-02-2008, 10:17 AM
இயற்பியல் உண்மைகளை
கவியியல் மனவண்ணம் சேர்த்து
ராக்கி குழைத்த கவிதை..

சாடையாய்ப் பெண்களைச் சாடும் ஆண்மனப் பார்வை வேறு!

பாராட்டுகள் ராக்கி..

சொற்கள் இன்னும் குழைய வேண்டும்... குறைக்க வேண்டும்..

உங்களின் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றிகள் அண்ணா,

நீங்கள் சொன்னது போல் இன்னும் கொஞ்சாமாவது கவிதையைப் போல் எழுத முயற்ச்சிக்கிறேன் அண்ணா,

அமரன்
29-02-2008, 07:53 AM
மானிடா!!
எத்தனை பட்டமானாலும்
என் பெயர் "துணை"க்கோளன்றோ!

வெப்பங்களை தகனித்து
குளிர்ச்சியை தருவது
கோதையர் குலமன்றோ!

ஆடவர் விஸ்ரூபம் எடுக்க
பெண்டிரை உண்பது
நீ அறியாயோ மானிடனே!

தோல்விகள் எதிர்கொள்ளும் போது
மங்கயரை சிகண்டிகளாவது
தெரியாதோ உனக்கு!

எட்டத்து நங்கையரை
தொட்டுவிட்டால்
மாந்தர்கள் மாறுவது
கண்டதில்லையா நீ!

இப்போது சொல்..
எனக்குவமை பெண்ணா..
பெண்ணுக்குவமை நானா!

பாராட்டுகள் ராக்கி.