PDA

View Full Version : வேஷம்



srisha
26-02-2008, 10:18 AM
வெகு நாட்களாக
திண்ணையிலிருந்த அப்பா
வீட்டுக்குள் வந்தார் ----புகைபடமாக

அனுராகவன்
26-02-2008, 10:21 AM
ஓ!! சோகம் கலந்த கவி..!
நல்ல அருமையான வரிகள்..!
ம்ம் தொடர்ந்து வாருங்கள்..!
நன்றி ஸ்ரீஸா!!

ஆதி
26-02-2008, 12:03 PM
வெகு நாட்களாக
திண்ணையிலிருந்த அப்பா
வீட்டுக்குள் வந்தார் ----புகைபடமாக

சின்ன சின்ன கவிதைகளில் பெரிய வலிகளையும் விடயங்களையும் தைத்து வைத்துவிடுகுறீகள் வாழ்த்துக்கள் சகோதரி..

அன்புடன் ஆதி

ஜெயாஸ்தா
26-02-2008, 12:04 PM
ம்ம்...நல்ல கவிதை (கோவிச்சுக்காதீங்க அனு :icon_b:)

உயிரோடிருக்கு வரை
திண்ணையில்
இறந்தபின் வீட்டினுள்....!
மனிதமில்லாதவர்களின் செயலை சுட்டிக்காட்டிய கவிதை. தொடர்ந்து இது போன்ற நல்ல கவிதைகளை தாருங்கள் நண்பரே....

(அருமையான இந்த கவிதைக்காக..... 100 இணையகாசுகள் பரிசாக)

அமரன்
26-02-2008, 12:52 PM
நுனி சிறுத்த் ஆணிக்கவிதை..!
பாராட்டுகள்!!

வீம்பு வீழ்ந்து
வெளிவாசி அப்பா
உள்ளே நிழலாக!!

rocky
27-02-2008, 06:10 AM
தாகத்துக்குத் தண்ணீர் தராதவர்கள்,
திவசத்திற்குப் பால் ஊற்றுவார்கள்,

இவர்களை எல்லாம் கணக்கிலே எடுத்துக்கொள்ளவே கூடாது. மிகவும் அருமையான குருங்கவிதை ஸ்ரீஷா அவர்களே.

சிவா.ஜி
27-02-2008, 06:39 AM
நச் ரகக்கவிதை.சுருக்கென்று தைக்கிறது கருத்து.மிக்க பாராட்டுகள் ஸ்ரீஷா.

srisha
27-02-2008, 08:53 AM
:redface:முதியோர் இல்லத்தில் இருந்த
மாமியாரை சேர்த்துக் கொண்டாள்
மருமகள்-------குடும்ப அட்டையில்

சுகந்தப்ரீதன்
03-03-2008, 12:40 PM
:redface:முதியோர் இல்லத்தில் இருந்த
மாமியாரை சேர்த்துக் கொண்டாள்
மருமகள்-------குடும்ப அட்டையில்

அற்புதம் ஷ்ரிசா...!!

முரண்கவிதைகள் அருமையாக இருக்கிறது...!!

வாழ்த்துக்கள்...!!

மேலும் பல முரண்கவிதையை படிக்க இங்கே செல்லவும் 'முரண்தொடர்" (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8044)

பிச்சி
03-03-2008, 01:11 PM
நல்ல கைகூ..

அப்பாவை அப்படியாவது ஞாபகம் வைத்திருப்பவற்களுக்கு நன்றி..

அன்புடன்
பிச்சி

கீதம்
12-04-2010, 05:37 AM
வெகு நாட்களாக
திண்ணையிலிருந்த அப்பா
வீட்டுக்குள் வந்தார் ----புகைபடமாக

ஒரு நீண்டத் துயரக்கதை இங்கே மூன்றே வரிகளில் முடிவுற்றது. மிகப்பிரமாதம். பாராட்டுகள். தொடர்ந்து மன்றம் வந்து பங்களியுங்கள் ஸ்ரிஷா அவர்களே.

அக்னி
12-04-2010, 06:41 AM
அருமையான கவிதையொன்றை மேலெழுப்பி விட்டமைக்கு நன்றி கீதம் அவர்களே...

வாழ்வைத் தந்தவர்கள்,
தமக்காக இடத்தையும் படத்தையும்
தயார்ப்படுத்தி வைத்துவிட்டுச்
சாவுக்குக் காத்திருக்கின்றார்கள்...

கவிதை, தொடரும் பின்னூட்டங்கள் அனைத்தும் சுடுகின்றன...

govindh
12-04-2010, 09:25 AM
:redface:முதியோர் இல்லத்தில் இருந்த
மாமியாரை சேர்த்துக் கொண்டாள்
மருமகள்-------குடும்ப அட்டையில்

"சுடும்.....சுளீர் வரிகள்..."

பா.சங்கீதா
16-04-2010, 12:39 PM
இன்னும் கலக்குங்க...
வாழ்த்துகள்.....:)