PDA

View Full Version : சாட்டையடி



srisha
26-02-2008, 08:24 AM
அந்த பிரபல இலக்கியவாதி பாராட்டு விழாவில் பேசினார்


"நான் இதுவரை 60 நாவல்கள் எழுதி இருக்கேன். 500க்கும் மேல் சிறுகதைகள் எழுதி உள்ளேன். இந்த சாதனைகள் போதாதா?" என்று பெருமிதப்பட்டார்.

வீட்டுக்கு வந்ததும், அவரது கடைக்குட்டி மகன் கேட்டான் " அப்பா நீங்க நிறைய எழுதி உள்ளதா சொன்னீங்க. நம்ம பாட்டி, அதான் உங்க அம்மா கிராமத்துல இருந்து 3, 4 கடிதம் எழுதியும் நீங்க பதிலே எழுதலையே.. ஏனப்பா..." என்றான்.

இலக்கியவாதிக்கு தன்னை சாட்டையால் அடிதது போலிருந்தது

சிவா.ஜி
26-02-2008, 08:59 AM
அகந்தையாளருக்கு பலமாகக் குட்டும்...குட்டிக்கதை....அதுவும் குட்டிப்பையன் குட்டிய கதை...அருமை ஸ்ரீஷா.

அமரன்
26-02-2008, 09:07 AM
"கதை"கள் எழுதும் பலருக்கு நிஜங்கள் கருகுவது தெரிவதில்லை. அவர்கள் தவத்தில் இருப்பதால் கறபனை புற்று மூடிவிடுகிறது போலும். என்ன இவர்கள் தவம் ஞானக்கண்களை திறப்பதில்லை அவர்களுக்கும் பிறருக்கும். குட் குட்டுக் கதை.. பாராட்டுகள்

மதி
26-02-2008, 09:20 AM
நல்ல சாட்டையடி கதை...
பாராட்டுக்கள்

சுகந்தப்ரீதன்
26-02-2008, 09:32 AM
ஸ்ரீஸாவின் முதல் சாட்டையடியே பலமாக இருக்கிறது...!!
பக்கம் பக்கமாக இல்லாமல் பத்திக்குள் பக்குவமாய் ஒரு கருத்தை உட்கொண்டு உரைத்த கதைக்கு பாராட்டுக்கள் பல..!!
தொடர்ந்து எழுதுங்கள்...!!

இளசு
16-03-2008, 10:02 AM
சுளீர்.. பளீர்!

பாராட்டுகள் ஸ்ரீஷா!

அனுராகவன்
16-03-2008, 11:09 AM
இப்படியும் உண்டா..?
வீட்டிலும் எதையும் மறைக்க முடியாது..
எங்கும் எதிலும் ஒன்றாக இருந்தால் தான் சுகம் போல
நன்றி ..

மன்மதன்
16-03-2008, 11:31 AM
நல்ல குட்டிக்கதை...

தொடர்ந்து எழுதுங்க..

யவனிகா
16-03-2008, 12:42 PM
சின்னக் கதை
சிந்திக்க வைக்கும் கதை...வாழ்த்துக்கள் ஸ்ரீஷா.