PDA

View Full Version : தவிப்பு



srisha
26-02-2008, 08:22 AM
:traurig001:இறக்கைக்ள்
இருந்தும் பறக்க
முடியவில்லையே....
அலுத்துக்கொள்கிறது
மின்விசிறி

ஆதி
26-02-2008, 09:05 AM
ஹைகூ போன்ற ஒரு பாணி அழகிய குறுங்கவிதை வாழ்த்துக்கள் சகோதரி..

அலுத்துக்கொள்கிற*து என்ப*தை இவ்வாறும் அ(லுத்)ழுதுக்கொள்கிற*து என்று போட்டிருந்தால் க*விதை இன்னும் அழ*காய் இருந்திருக்குமோ ?


:traurig001:இறக்கைக்ள்
இருந்தும் பறக்க
முடியவில்லையே....
அ(லுத்)ழுதுக்கொள்கிறது
மின்விசிறி

வாழ்த்துக்கள் சகோதரி..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
26-02-2008, 09:27 AM
குறைந்த பட்சம் சுதந்திரமாய் சுற்றவாவது முடிகிறது...விட்டத்தில் தொங்குவதால்....
மேசை மின்விசிறியின் நிலைமை படு மோசம்...இறகுகளும் கொடுத்து...சிறைக்குள்ளே அடைத்துவிட்டார்கள்....

அழகிய குறுங்கவிதை அருமை ஸ்ரீஷா.

அனுராகவன்
26-02-2008, 10:09 AM
நன்றி ஸ்ரீஷா அவர்களே!!
நல்லதொரு கவி..
முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்..

மின்விசிறி அந்தரத்தில்
சிலவிசிறி கீழே
அய்யோ!! பாவம்
அது சிறைக்குள்ளே

சிறையே அமைத்தது
யார்?? நாம் தானே
அதற்கு விடுவிப்போமே
அப்போது அதற்கு
சுதந்திரம் கிடைக்கட்டுமே!!!

நன்றி சிவா.ஜி
என் வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
03-03-2008, 12:48 PM
ஆஹா...கற்பனை கலக்கல்...!!
அதனால்தான் விசிறி சுற்றினால் சிலசமயம் குளிர்கிறதோ..?!

வாழ்த்துக்கள்...!! நன்றாக ஹைக்கூ எழுதுகிறீர்கள்..!! தொடருங்கள்..!!

அமரன்
03-03-2008, 05:52 PM
மின்விசிறியின் தவிப்பை
தனக்குள் ஆட்கொண்டு
தற்கொலை செய்கிறார்களோ
மடத்தன மனிதர்கள்!

அழகிய கற்பனை கவிதையாக மொழியப்பட்டுள்ளது. பாராட்டுகள் சாந்தி!

அமரன்
03-03-2008, 05:57 PM
குறைந்த பட்சம் சுதந்திரமாய் சுற்றவாவது முடிகிறது...விட்டத்தில் தொங்குவதால்....
மேசை மின்விசிறியின் நிலைமை படு மோசம்...இறகுகளும் கொடுத்து...சிறைக்குள்ளே அடைத்துவிட்டார்கள்....

அழகிய குறுங்கவிதை அருமை ஸ்ரீஷா.

ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா.. கலக்கல் சிவா!
இவ்வகை மின்விசிறிகளின் பின்பக்கமாக பாரம்குறைந்த பொருட்களை வைத்தால் கவரப்படுவதன் காரணம் இதுதானோ. கூண்டுப் பறவைகள் கூட்டுக்குடும்பதிற்கு கூப்பிடுகின்றனவோ. வெறுமை போக்க கூடிக்குலாவ அழைப்பு விடுக்கின்றனவோ..

அறிஞர்
03-03-2008, 05:59 PM
அருமையான பார்வை...
வீட்டுக்குள்ளே ஒரே இடத்தில்
பறவையாக மின்விசிறி...

ஓவியன்
03-03-2008, 11:20 PM
பறந்தால் பறவை
பறக்காததால் தான்
ஃபேன்.....!!! :D:D:D

பாராட்டுக்கள் ஸ்ரீஷா இன்னும் பல கவிதைகள் உங்களிடமிருந்து வரட்டும்...

இளசு
04-03-2008, 05:43 AM
''அட'' சொல்ல வைக்கும் வித்தியாசப் பார்வை. பாராட்டுகள் ஸ்ரீஷா அவர்களே!

நாகரா
04-03-2008, 06:24 AM
மின்விசிறியின் தவிப்பு
ஐந்து வரிகளில்
அசத்தல் கவிதை ஸ்ரீஷா
வாழ்த்துக்கள்