Log in

View Full Version : கருணை கொலை



இன்பா
26-02-2008, 03:18 AM
இயல்பானவனாய் இருந்த
என் கண்களுக்கு
ஏன்??????
அவளை பார்க்கும்
சூழ்நிலை வகுத்தாய்

இந்த காதல் வலியை
தாங்கும் வலிமை
என்னில் இல்லை

இறைவா...! என் காதலை கொடு
இல்லையேல் கருணை கொலை செய்.

ஓவியன்
26-02-2008, 03:38 AM
இறைவா
காதலைக் கொடு இல்லையேல்
கருணைக் கொலை செய்...

வித்தியாசமான வேண்டு கோள் தான் வரிப்புலியாரே
ஆனால், காதல் இல்லையென்றால் இறந்துபோக விரும்புவதை
என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது...

வாழ்க்கைக்கு காதலும் முக்கியமானதே
ஆனால் காதல் மட்டும் வாழ்க்கை இல்லையே....!!

சிவா.ஜி
26-02-2008, 04:08 AM
காதல் இல்லையேல் சாதலா....தேவையில்லையே தோழரே....
கிட்டாதாயின் வெட்டென மற...
கிட்டியால் கட்டுண்டு கிட..
உற்சாகமான அடுத்த கவிதைக்கு வாழ்த்துகள் வரிப்புலி.

வசீகரன்
26-02-2008, 04:34 AM
வரிபுலியாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால்.... ஏக்கம்தான் போல....நல்ல கவிதை நண்பரே.... ஆயினும்..... நம்பிக்கைதான் இந்த உலகின் சுழர்சியே....!மறந்து விடுங்கள் மாற்றத்தை நோக்கி நடை போடுங்கள்....!

அமரன்
26-02-2008, 08:01 AM
கவிதையான் என்னுள் உணர்ச்சிகளின் ஊர்வலம்... அதில் கேட்ட கோசங்கள் சில....
கோபக்கோசம்: வலி தாங்கமுடியாதவன் உலகுக்கு வேண்டாம்..
நேசக்கோசம்: காதல் பூவாக இருக்கலாம்.. அதில் முட்களும் இருக்கலாம்.. ஆனால் இதயம் அரும்பல்ல.. கொடி.. செடி..


அன்புக்கு நாமிட்ட நாமங்களில் ஒன்று காதல். நீங்கள் சொல்லும் "கருணை" இன்னொன்று. அன்பால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் அன்பாலேயே தலைதுண்டிக்கப்படவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.. அன்பால் தண்டிக்கலாமே அவளை/அவனை..

கருணைக்கொலை என்ற பெயரில் தயவுசெய்து கருணையை கொலைசெய்யத்தூண்டாதீர்கள்..

கவிதைக்குப் பாராட்டுகள் புலியாரே

இன்பா
26-02-2008, 08:30 AM
அன்பால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் அன்பாலேயே தலைதுண்டிக்கப்படவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.. அன்பால் தண்டிக்கலாமே அவளை/அவனை..

அன்பு என நீங்க குறிப்பிட்டது கடவுளைதானே !

அமரன்
26-02-2008, 08:37 AM
அன்பு என நீங்க குறிப்பிட்டது கடவுளைதானே !
ஆமாம்...
நீங்களும் அப்படி நினைத்ததால் தானே கருணைக் கொலை செய் இறைவா என்று இரைஞ்சினீங்க..:)