PDA

View Full Version : பயன் படுத்தாத இமெயில்..



mgandhi
25-02-2008, 05:27 PM
பயன்படுத்தாத இமெயில்

பல வாசகர்கள் இப்பகுதிக்குக் கடிதங்கள் எழுதுகையில் தங்களுடைய இமெயில் கடிதங்கள் மற்றும் அக்கவுண்ட் இருக்குமா என்று கேட்டுள்ளனர். நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அந்த அக்கவுண்ட் காலியாகும்.

இன்டர்நெட்டில் பல தளங்கள் இலவசமாக இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொள்ளும் வசதியைத் தருகின்றன. இதனால் நினைத்த போதெல்லாம் அல்லது முன்னர் பதிந்து வைத்த இமெயில் அக்கவுண்ட் பெயர் அல்லது பாஸ்வேர்ட் மறந்து போகும் போதெல்லாம் சிலர் புதிய இமெயில் அக்கவுண்ட்களைத் தொடங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவரும் நாளுக்கொரு வாரத்திற்கொரு அக்கவுண்ட் திறந்தால் எவ்வளவு பெரிய சர்வர் இதற்கென இருந்தாலும் ஓரளவிற்கு மேல் தாக்குப் பிடிக்காது. இதற்காகவே சில இணைய தளங்கள் குறிப்பிட்ட நாட்கள் நீங்கள் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்க்காமல் இருந்தால் தானாகவே அவை நீக்கப்படும் வகையில் செட் செய்திருக்கின்றன. இதனை அறியாமல் பல வாசகர்கள் இப்பகுதிக்குக் கடிதங்கள் எழுதுகையில் தங்களுடைய இமெயில் கடிதங்கள் மற்றும் அக்கவுண்ட் இருக்குமா என்று கேட்டுள்ளனர். நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அந்த அக்கவுண்ட் காலியாகும்.

ஆனால் அந்த அக்கவுண்ட் பெயரை யாருக்காவது கொடுத்திருந்து அவர்கள் அந்த பெயருக்கே மெயில் அனுப்பினால் அதனை ஏற்றுக் கொள்ள முன்பு இருந்த மெயில் பாக்ஸ் இருக்காது. இது சார்ந்த பிரச்னைகளைக் காணலாம்.

1. ஹாட்மெயில் மற்றும் யாஹூ அக்கவுண்ட் இமெயில்களை 30 நாட்கள் பயன்படுத்தாத நிலை இருந்தால் உடனே அதனை நீக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பின் நீக்கப்படுகின்றன. என்ன முயன்றாலும் பழைய அக்கவுண்ட் கிடைக்காது. புதியதாகத்தான் தொடங்க வேண்டும்.

2. இவ்விஷயத்தில் கூகுள் 9 மாதங்கள் வரை கால அவகாசம் தருகிறது. அதனுடைய கணக்குப்படி ஒருவர் தன் அக்கவுண்ட்டை 9 மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அவருக்கு அது தேவை இல்லை என்றே பொருள். எனவே நீக்குவதில் தவறில்லை.

3. உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை நீங்கள் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரிடமிருந்து கட்டணம் செலுத்திப் பெற்றிருந்தால் இந்த கண்டிஷன் இருக்காது. நீங்கள் செலுத்திய பணம் உள்ளவரை அல்லது குறிப்பிட்ட காலவரையறை வரை நீங்கள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் இமெயில் அக்கவுண்ட் இருக்கும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் நீங்கள் செலுத்தும் பணத்திற்கேற்ப உங்களுக்குக் குறிப்பிட்ட அளவில் மெயில் பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். நீங்கள் உங்கள் மெயில் பாக்ஸைத் திறந்து உங்களுக்கு வந்த மெயில்களைக் காலி செய்யவில்லை என்றால் அந்த பாக்ஸ் பார்க்காத மெயில்களால் நிறைந்துவிடும். அதன்பின் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும் மெயில்கள் எல்லாம் திரும்ப அனுப்பப்படும். பின் நீங்கள் உங்கள் சர்வீஸ் புரவைடரிடம் பேசி சரி செய்திட வேண்டும். உங்கள் அக்கவுண்ட்டை அவர்களிடம் வாங்குகையில் உங்களின் இன்னொரு மெயில் அக்கவுண்ட் இருந்தால் அந்த முகவரிக்கு இது குறித்து கடிதம் அனுப்பப்படும். அதற்கும் பதில் அளிக்கவில்லை என்றால் கட்டணம் கட்டிய காலம் வரை மெயில் பாக்ஸ் நிறைந்ததாக இருந்து கொண்டு புதிய மெயில்கள் எல்லாம் திரும்ப அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் பெற்றுள்ள இலவச மற்றும் கட்டண மெயில் அக்கவுண்ட்டுகளை அவ்வப்போது பார்வையிடுவதே நல்லது.


.

மனோஜ்
25-02-2008, 07:30 PM
பகிந்தமைக்கு நன்றி காந்தி அண்ணா

ஜெயாஸ்தா
26-02-2008, 02:05 AM
இது பழைய செய்தியா நண்பா? ஏனென்றால் தற்போது யாகூவில் ஒரு மாதம் பயன்படுத்தாவிட்டால் நமது கணக்கை நீக்குவது போன்று தெரியவில்லையே.. அதனால் கேட்டேன்.

SathyaThirunavukkarasu
09-05-2008, 04:25 AM
ஹாட்மெயில் கூட தற்போது 6 மாதம் ஆனாலும் நீக்குவதில்லை

அன்புரசிகன்
09-05-2008, 06:01 AM
Hotmail yahoo போன்றவை நீக்குவதாக தெரியவில்லை...

ஒருவேளை மீண்டும் அவ்வாறு செய்யப்போகிறார்களோ தெரியாது. முயன்று பார்ப்போம்.