PDA

View Full Version : எனக்கே எனக்கா...?சிவா.ஜி
25-02-2008, 07:35 AM
தோழிகள் புடைசூழ
சாலையில் நடக்கையில்
நீ சிந்துகின்ற சிரிப்புகளை
சேகரிக்கவே..உன்னைத் தொடர்ந்தேன்
சேகரித்த சிரிப்புகளில்
எனக்கானது எதுவென்று
தரம் பிரிக்கின்றேன்....
ஏதோ ஒரு சமயத்தில்
இடது புறம் தலை சாய்த்து
விழியின் ஓரத்திலிருந்து
ஒற்றைக் கீற்றை
என்மீது பாய்த்தாயே...
அந்த நேரச் சிரிப்பு
எனக்கானதா...?
பேருந்துக்குள் ஏறுகையில்
படியில் பாதம் வைத்து
நொடிப்பொழுது நோக்கினாயே
அக்கணச் சிரிப்பு
எனக்கானதா..?
பிரித்து வைத்த
சிறப்புச் சிரிப்புகளுடன்
உன் மாலை வருகைக்காய்
என் வேலை விடுத்து
காத்திருக்கிறேன்....
ஆய்வு செய்து அறிவித்துவிடு
இரண்டில் ஒன்றேனும்
எனக்காகவென்றால்
நான் உனக்கானவன் என
உறுதி செய்துகொள்கிறேன்!

அக்னி
25-02-2008, 07:38 AM
சிரிப்பில் தெரிந்தது பாசமா...
சிரிப்பே வேசமா...
என்று தெரியாமல்,
விசமாகக் கொல்கிறதே உன் சிரிப்பு...
யாசகம் கேட்கின்றேன்
உன்னிடம்...
உன் நேசம் கிடைக்குமா..?
உன் சிரிப்பு
எனக்காய் மலர்ந்து
வாசம் வீசுமா..?

அருமை சிவா.ஜி...
அழகான எதிர்பார்ப்பு... இனிமையான கவிதையாக...
பாராட்டுக்கள்...

சிவா.ஜி
25-02-2008, 07:42 AM
அக்னியின் அழகிய பின்னூட்டக் கவிதை....அருமை. நன்றி அக்னி.
வேசமில்லா சிரிப்பில்தானே நேசமிருக்கும்.

ஆதி
25-02-2008, 07:56 AM
நீ
சிரித்த பொழுதெலாம்
தெறித்து சிதறின
வர்ணமின்னல்கள்..

பறந்த குழலொதிக்கி
பாதிவிழியால் பார்த்து
பிறை உதட்டில்
பனிமுறுவல் பூத்தாயே..
ஐய்யொ
பிறழ்வு கொண்டது
என் இதயம்..

மென்னிதழ் விரித்த
பொன்னெழில் புன்னகை
எனக்கானது தானோ
எனச்சொல்லிவிடு
எனதைய்யம் தீர்த்துவிடு..

சிரிப்பை சித்திரமாய் தீட்டிய கவிதை.. நீ உதுத்த ஒரு சிரிப்பாவது எனக்கானது என உரைத்துவிடு தோழி என் உலகத்தில் சுவரகம் சேர்த்துவிடு எனும் தவிப்பு காதல் இமைகடந்து வழிகிறது..
இதயம் ஏந்திய அந்த கேள்விக்கு இதழ் திறந்து அவள் என்ன சொல்லப்போகிறாளோ என என் நெஞ்சம் பதைக்கிறது..

காட்சிகளை கண்ணுற வைத்த உயிரோட்டமுள்ள கவிதைக்கும் சிவா அண்ணாவிற்கும் பாராட்டுக்கள்..

அன்புட*ன் ஆதி

அக்னி
25-02-2008, 08:14 AM
நீ
சிரித்த பொழுதெலாம்
தெறித்து சிதறின
வர்ணமின்னல்கள்..

சிதறியது வர்ண மின்னல்கள்
என்றாலும்,
தாக்கியதால்
வர்ணமிழந்து கருகிவிட்டேன்...
அரும்பும் புன்னகையை
எனக்காகத் தந்து,
மீண்டும் துளிர்க்க வைப்பாயா..?

உன் பற்கள் செதுக்குமா
எனக்காக ஒரு புன்னகை..?
எனக்காக ஒரு சிரிப்பைத்
தருமா சிற்பம்..?

செல்வா
25-02-2008, 08:19 AM
எனக்கே எனக்கு
என்றுதான் எண்ணியிருந்தேன்
உன் புன்னகைகளை
இன்னொருவனுடன்
உன்னைப் பார்க்கும் வரை
ஹி...ஹி.... ஹி...
சும்மா எதிர்பதமா சிந்திச்சா எப்படிருக்கும் கறதோட விளைவு..:icon_b:

கவிதை கலக்கல் அண்ணா.... வாழ்த்துக்கள்

அக்னி
25-02-2008, 08:22 AM
எனக்கே எனக்கு
என்றுதான் எண்ணியிருந்தேன்
உன் புன்னகைகளை
இன்னொருவனுடன்
உன்னைப் பார்க்கும் வரை

அப்போதுதான் புரிந்தது.
அவை அன்புப் புன்னகைகள் அல்ல,
அலட்சியப் புன்னைகைகள் என்று.
புண்ணாய்ப்போனேன் நான்.., இன்னும் நகைப்பில் நீ...

சிவா.ஜி
25-02-2008, 08:42 AM
ஆஹா...பின்னூட்டங்களனைத்தும் கவிதைகளாக மின்னுகிறதே...சிரிப்பின் சக்தி எத்தனை பெரிது?
ஆதியின் வரிகளில் என் இதயமும் பிறழ்வு கொண்டதென்றால்...அக்னியின் மறுமொழியில் பிரகாசமானது...செல்வாவின் எதிர்க்கவிதை புன்முறுவல் பூக்க வைத்தது....
அனைத்து தம்பிகளுக்கும் அநேக நன்றிகள்.வாழ்த்துகள்.

அமரன்
25-02-2008, 08:59 AM
சிரிப்புக்கேட்டுப் பலபேரு பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு தெரியுது.. கலக்குங்க மக்கா. கலங்காதீங்க..

சிரிப்பு சிதறல்களை
சேகரிச்சு வெச்சிருக்கீங்க..
சிதற விட்டிருக்கலாம்ல
சில்லறைகளாக!!!!
உங்களுக்கான மின்னல் "பளிச்"சிருக்கும்.

சத்தியமாக உள்குத்து ஒன்றும் இல்லைங்க

அமரன்
25-02-2008, 09:18 AM
சிரிப்பில் தெரிந்தது பாசமா...
சிரிப்பே வேசமா...
என்று தெரியாமல்,
விசமாகக் கொல்கிறதே உன் சிரிப்பு...
யாசகம் கேட்கின்றேன்
உன்னிடம்...
உன் நேசம் கிடைக்குமா..?
உன் சிரிப்பு
எனக்காய் மலர்ந்து
வாசம் வீசுமா..?.

பாசமா, வேசமா, வெசமா, யாசகமா, வாசமா
பா'யாசம் வாசகம் வசமானதா(க) சொல்லுதே
உன் கேசம் கலைந்தது கண்முன் வந்தாடுதே

(சத்தியமா ஒரு பொருள்தான்ய்யா நம்புய்யா)

அனுராகவன்
25-02-2008, 09:32 AM
சிரிப்பு பல
விதம் அதில்
இந்த சிரிப்பு
எந்த விதம்.

நகைப்பு ஒரு
திகைப்பு .
மற்றவரிடம்
நமக்காக
காரியம் ஆக
ஒரு நகைப்பு.
கடன்
வாங்கும் போது
ஒரு நகைப்பு..
அதில் இந்த
இடம்
அந்த சிரிப்பு.
சிந்திப்பதை
விட்டு
சிரிங்க..

சிவா.ஜி
25-02-2008, 09:41 AM
பாசமா, வேசமா, வெசமா, யாசகமா, வாசமா
பா\'யாசம் வாசகம் வசமானதா(க) சொல்லுதே
உன் கேசம் கலைந்தது கண்முன் வந்தாடுதே

(சத்தியமா ஒரு பொருள்தான்ய்யா நம்புய்யா)

அக்னிதானே...நல்லா நம்பிடுவாரு.....வெளியே போயிருக்கார்...திரும்ப வந்து நம்புவார்...(அமரன் எதுக்கும் எச்சரிக்கையா இருந்துகிடுங்க)

சிவா.ஜி
25-02-2008, 09:42 AM
அடடா அனு கலக்குறீங்களே....அருமையா சொல்லியிருக்கீங்க.சிந்திக்கல...சிரிக்கறோம்...சரியா...?

அனுராகவன்
25-02-2008, 09:51 AM
நன்றி சிவா..
நானும் கவிதை எழுத ட்ரை பன்னுறேன்..
ஆனா நம் மன்றத்தில பல பேர் நல்ல எழுதுறாங்க..
யாருக்கிட்ட கேட்க.
அதான் மனசில உள்ளதை அப்படியே சொல்லிவிட்டேன்..
ரொம்ப நன்றி சிவா..

சுகந்தப்ரீதன்
25-02-2008, 10:10 AM
நீ கண்களால்
பரிமாறியவை..
பாசமா..? பரிகாசமா..?
இல்லை இரண்டுமற்ற
வெறும் பார்வைதானா...?!
இன்று வரை புரியாமல்
புலம்புகிறேனடி..!!-எனக்காக
ஒருமுறையேனும் உண்மையை
உரைத்துவிட்டு நீ போடி..!!

(நாங்களும் எழுதுவம்ல்ல..?)

வாழ்த்துக்கள் அண்ணா..!!

செல்வா
25-02-2008, 10:14 AM
கவலைப் படாதீங்க அனு அக்கா.... என் குரு இருக்க பயமேன். வேற யாரு அமரன் தான். அவரு கத்துக் கொடுத்து தான் நானும் ஏதோ கிறுக்க ஆரம்பிச்சுருக்கன். அவர விட்டுடாதீங்க..... கவிதைக் கருவூலமவர்...

ஆதி
25-02-2008, 10:25 AM
கவலைப் படாதீங்க அனு அக்கா.... என் குரு இருக்க பயமேன். வேற யாரு அமரன் தான். அவரு கத்துக் கொடுத்து தான் நானும் ஏதோ கிறுக்க ஆரம்பிச்சுருக்கன். அவர விட்டுடாதீங்க..... கவிதைக் கருவூலமவர்...

நிதியரசரே இது கொஞ்சம் ஓவர், அமரன் சிந்தனா ஆசாந்தான் மறுக்கலை ஆனா கவிதை எழுதவே அவர்கிட்டதான் கற்றுகொண்டதா சொன்னா செல்வா சத்தியமா டென்சன் ஆய்டுவேன்.. அப்ப "மாரி அந்தாதி" "நார்காலி முக்காலியானக் கதை" யார் எழுதுனதான் அடக்கம் அமரருள் உய்க்கும் அப்படிங்கரதுக்காக இப்படியா ? :)


அன்புட*ன் ஆதி

சிவா.ஜி
25-02-2008, 10:37 AM
[quote=சுகந்தப்ரீதன்
நீ கண்களால்
பரிமாறியவை..
பாசமா..? பரிகாசமா..?
இல்லை இரண்டுமற்ற
வெறும் பார்வைதானா...?!
இன்று வரை புரியாமல்
புலம்புகிறேனடி..!!-எனக்காக
ஒருமுறையேனும் உண்மையை
உரைத்துவிட்டு நீ போடி..!!

(நாங்களும் எழுதுவம்ல்ல..?)
[/quote]
அதானே நீங்க எழுதாம வேற யார் எழுதுவாங்களாம்...கலக்குறேள் சந்துரு...
அந்த கடைசி வரியைப் படித்ததும் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படப்பாடல்தான் நினைவுக்கு வந்தது..(எமன் வடிவேலு சொல்லும் நீ போடா...)
வாழ்த்துகள் மற்றும் நன்றி சுகந்த்.

ஓவியன்
25-02-2008, 10:47 AM
பாசமா, வேசமா, வெசமா, யாசகமா, வாசமா
பா'யாசம் வாசகம் வசமானதா(க) சொல்லுதே
உன் கேசம் கலைந்தது கண்முன் வந்தாடுதே

பாசமா,
வேசமா,
யாசகமா
என பகுத்தறிவதே
மனிதரின் சிறப்பாம்
ஆறாம் அறிவான
பகுத்தறிவு....!! :icon_b:

அனுராகவன்
25-02-2008, 02:06 PM
கவலைப் படாதீங்க அனு அக்கா.... என் குரு இருக்க பயமேன். வேற யாரு அமரன் தான். அவரு கத்துக் கொடுத்து தான் நானும் ஏதோ கிறுக்க ஆரம்பிச்சுருக்கன். அவர விட்டுடாதீங்க..... கவிதைக் கருவூலமவர்...

அய் அட...அப்படியா..
அப்ப நான் அமரனை விடாம கேட்டு
கவிதை எழுத போறேன்..
யாரெல்லாம் வாரது..

யவனிகா
25-02-2008, 03:59 PM
சிவா அண்ணா...எப்படி எல்லா களத்திலும் உங்களால் விளையாட முடிகிறது...என்னுடைய பெரிய ஆச்சர்யம் அது...என்னைக் காதல் கவிதை எழுதச் சொன்னால் இலகுவில் வராது.வந்தாலும் சோபிக்காது.
நிஜமாவே நீங்க ஒரு ஆச்சர்யமான கலவை...

நல்ல கவிதை அண்ணா...ஆனா இன்னும் ஆய்வறிக்கை கையில் கிடைக்கப்பெறாதது தான் ஆச்சர்யம் அளிக்கிறது. உங்க கவிதையெல்லாம் பாத்து எனக்கு உங்கள பிடிச்சதோ இல்லையோ..அண்ணிய பிடிச்சுப் போச்சு...

சரி அண்ணா...சிரிப்பு உங்களுக்கானதா...இல்லையான்னு கண்டுபிடிச்சீங்களா இல்லையா?கவிதைக்கு வந்த பின்னூட்டக் கவிதைகள் எல்லாமே அருமை. சிரிப்பை பொறுக்க எத்தனை பேர் அலைஞ்சிருக்காங்க...விழுந்து விழுந்து பொறுக்கனதுல...பாவம் சிலருக்கு பலத்த அடி வேற...

இப்படித்தான் எம் பொண்ணு காலேஜ் போகும் போது பின்னாடியே சுகந்தன் தினமும் போயிருக்கான்...அவளும் தனியே போறதுக்கு போரடிக்கும்...பின்னாடி ஒரு பேக்கு வந்தா...டைம் பாஸா இருக்கும்ன்னு வெறுமே பல்லுக் காட்டாம சிரிச்சுருக்கா...அவ்வளவு தான்...அன்னிக்கு எழுத ஆரம்பிச்சான் கவிதை...

பல் கூட தெரியவில்லை
உன் சிரிப்பில்...
பாழாய்ப் போனது நெஞ்சம்...
பல்லு தெரிஞ்சிருந்தா
தயிரா திரிஞ்சுருக்குமோ?

இதழ் சிரிக்கும்
பார்த்திருக்கிறேன்
பூவே சிரிக்கிறதே...

இப்படியெல்லாம் ஒரே கவிதயா எழுதித் தள்ள...என் பொண்ணு என் கிட்ட சொல்றா...சிரிப்பு மன்னன்,சிரிப்பு போலீஸு மாதிரி இது சிரிப்பு கிறுக்குமா அப்படின்னு....

அண்ணா...கவிதை நல்லாருக்குண்ணா...கலக்கறீங்கன்னா..தொடருங்கள்.

அக்னி
25-02-2008, 04:37 PM
பாசமா, வேசமா, வெசமா, யாசகமா, வாசமா
பா'யாசம் வாசகம் வசமானதா(க) சொல்லுதே
உன் கேசம் கலைந்தது கண்முன் வந்தாடுதே

(சத்தியமா ஒரு பொருள்தான்ய்யா நம்புய்யா)
சிரிப்புப் பாயாசம் சிந்தாமல் ஏந்த,
என் மனக்குவளை தயார்...
காத்திருந்து, எதிர்பார்த்திருந்து
ஆயாசம் தான் மீதமாக...

(பெண்ணைப் பொருள் என்று உருவகித்த அமரனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
நம்பிட்டேன், உண்மையா நம்பிட்டேன்.)

அக்னிதானே...நல்லா நம்பிடுவாரு.....வெளியே போயிருக்கார்...திரும்ப வந்து நம்புவார்...(அமரன் எதுக்கும் எச்சரிக்கையா இருந்துகிடுங்க)
வந்து நம்பிட்டேங்க... நீங்க போங்களேன் அண்ணிகிட்ட... அப்புறமாத்தான் ஆபிரிக்காவில பொண்ணுகளோட கூத்தடிச்சத ஒருக்கா சும்மா அண்ணி காதிலை போட்டு விடணும். (அது என்ன கம்மலா என்றெல்லாம் கேட்கக் கூடாது.)

அக்னி
25-02-2008, 04:48 PM
சிந்திப்பதை
விட்டு
சிரிங்க..
சிரித்ததால்தானே சிந்தை தொலைந்தது...பல் கூட தெரியவில்லை
உன் சிரிப்பில்...

அப்போ பல்...
விழுந்த கிழவியா... முளைக்காத குழவியா...

சிவா.ஜி
26-02-2008, 03:36 AM
யவனிகா தம்பியைப் பற்றி எழுதிய கவிதை தூள்.சிரிப்பை சேகரிக்கப்போய் சேதாரம் ஆனவர்கள் அதிகம்தான் போலிருக்கிறது.
அப்புறம் நான் எழுதும் காதல் கவிதைகள் அனைத்தும் கற்பனையே....என்று அறிவிப்பு கொடுத்துவிட்டுதான் எழுத வேண்டும் போலிருக்கிறது...நிறைய மக்கள் அண்ணியிடம் போட்டுக் கொடுக்க தீப்பந்தத்துடன் அலைகிறார்கள்(வீட்டுக்கு வாங்க கருகிப் போன தோசையைப் போட்டு பழி தீர்த்துக்கறேன்.(இது தங்கைக்கு அல்ல...வத்திக்குச்சியுடன் அலையும் இத்தாலிக்காரருக்கு))

இன்பா
26-02-2008, 03:41 AM
நல்லா இருக்கு சிவா, பின்னூட்டங்களும் பலே...

உன் சிங்கார சிரிப்பு
எனக்கு பொன்விளங்கு
உன் இதயச்சிறை
சொர்கத்தின் சுகம்

சிவா.ஜி
26-02-2008, 04:03 AM
மிக்க நன்றி வரிப்புலியாரே....ஆமாம் பல சமயங்களில்..சிரிப்பே விலங்காகி விடுகிறது....அந்த சிரிப்பே சிலரை விலங்குகளாக்கி விடுகிறது(திரௌபதியின் சிரிப்பு துரியோதனனை ஆக்கியதைப் போல)

யவனிகா
26-02-2008, 04:47 AM
(வீட்டுக்கு வாங்க கருகிப் போன தோசையைப் போட்டு பழி தீர்த்துக்கறேன்.(இது தங்கைக்கு அல்ல...வத்திக்குச்சியுடன் அலையும் இத்தாலிக்காரருக்கு))

அதான பாத்தேன் நான் கழுவற மீன்ல நழுவற மீன் ஆச்சே...
கைக்கு சிக்கன இத்தாலி மீன நல்லா புளிபோட்டு குழம்பு வெச்சு பார்சல் அனுப்புங்கன்னா...

அக்னி
26-02-2008, 12:42 PM
(வீட்டுக்கு வாங்க கருகிப் போன தோசையைப் போட்டு பழி தீர்த்துக்கறேன்.(இது தங்கைக்கு அல்ல...வத்திக்குச்சியுடன் அலையும் இத்தாலிக்காரருக்கு))
அண்ணி... அண்ணி...
கேட்குதா...
தாலிக்காரன் இல்ல தாலிக்காரராம்... பன்மைல சொல்லுறார் சிவா.ஜி அண்ணா...
கவனிச்சுக்கோங்க...

அதான பாத்தேன் நான் கழுவற மீன்ல நழுவற மீன் ஆச்சே...

இப்பிடிச் சொல்லியும் நழுவ விட்டிடுறானுங்களே...
ஒரு அப்பாவிக்கு கருகிய தோசை... ஏமாத்திறவங்களுக்கு புரியாணியா...
என்ன கொடுமை இது...

அமரன்
26-02-2008, 12:48 PM
சிரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது யாரென்று "வெளிச்சம்" போட்டுக் காட்டுறாங்கப்பா..

சிவா.ஜி
27-02-2008, 03:34 AM
சிரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது யாரென்று \"வெளிச்சம்\" போட்டுக் காட்டுறாங்கப்பா..
வெளிச்சம் இந்தியாவுக்கு வரட்டும்....ஆப்பொன்று அழகாக காத்துக்கொண்டிருக்கிறது...வெளிச்சத்துக்கே வெள்ளையடிச்சுடுவோம்ல....

க.கமலக்கண்ணன்
09-03-2008, 03:46 AM
உன் விழிகளின் பார்வையால் என்

உள்ளத்தில் எழுந்த காதல் சந்தேகத்தை

உதடுகளால் முடிவு சொல்லுமா நேசமானவளே

உன்னுடைய பதிலில்தான் எனது தேர்வின் முடிவுகள் என்று அற்புதமான கவிதை சிவா.ஜி

சிவா.ஜி
09-03-2008, 04:27 AM
நன்றி கமலக்கண்ணன்.புன்னகை எனக்கானது என அறிந்து கொண்டால் பாவையின் அருகாமை பரவசமாக்கும்.ஆனா அதுதானே சட்டென்று விளங்க மாட்டேனென்கிறது.

வசீகரன்
14-03-2008, 12:04 PM
ஏதோ ஒரு சமயத்தில்
இடது புறம் தலை சாய்த்து
விழியின் ஓரத்திலிருந்து
ஒற்றைக் கீற்றை
என்மீது பாய்த்தாயே...
உன் மாலை வருகைக்காய்
என் வேலை விடுத்து
காத்திருக்கிறேன்....
ஆய்வு செய்து அறிவித்துவிடு
இரண்டில் ஒன்றேனும்
எனக்காகவென்றால்
நான் உனக்கானவன் என
உறுதி செய்துகொள்கிறேன்!

எப்படி... எப்படி.... ண்ணா இதெல்லாம்!!!:angel-smiley-033: அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்!
காதலர்களின் மொழியே கண்கள் தாம் யாருக்குமே தெரியாது அந்த அந்த நான்கு கண்களுக்குள் ஒரு உணர்வு போராட்டமே நடக்கும்... உடன் இருக்கும் உலகம் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும்....பெரிதில்லை வாய் மொழி பேசிக்கொள்ள வேண்டிய
அவசியம் இல்லை... அவர்களுக்குள் ஒரு கம்யூனிகேஷன் லிங்க் இருக்கும்.... அதுதான்.... அது...! சூப்பர்னா...!:icon_b:

அமரன்
14-03-2008, 02:12 PM
வெளிச்சம் இந்தியாவுக்கு வரட்டும்....ஆப்பொன்று அழகாக காத்துக்கொண்டிருக்கிறது...வெளிச்சத்துக்கே வெள்ளையடிச்சுடுவோம்ல....
ஆஃப் பாயிலும் தயாரா இருக்கட்டும்.
(மன்றத்தில் யாரும் அரைவேக்காடு இல்லீங்க.. தயவு செய்து நம்புங்க)

சிவா.ஜி
14-03-2008, 03:52 PM
காதலர்களின் மொழியே கண்கள் தாம் யாருக்குமே தெரியாது அந்த அந்த நான்கு கண்களுக்குள் ஒரு உணர்வு போராட்டமே நடக்கும்... உடன் இருக்கும் உலகம் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும்....பெரிதில்லை வாய் மொழி பேசிக்கொள்ள வேண்டிய
அவசியம் இல்லை... அவர்களுக்குள் ஒரு கம்யூனிகேஷன் லிங்க் இருக்கும்.... அதுதான்.... அது...! சூப்பர்னா...!:icon_b:

ரொம்ப சரி வசீகரா....கண்களுக்குள் உணரும் உணர்வு அடுத்தவர் அறிய முடியாதது.ஆனால் சிரிப்பின் அர்த்தம் விளங்கிக்கொண்டால் அது தனக்கானது என்று தெரிந்துகொண்டால்....வேறென்ன வேண்டும்....