PDA

View Full Version : உதவி தேவை



srisha
25-02-2008, 06:53 AM
இணையதளத்தில் சில வலைப்பக்கத்தை தடுக்க முடியுமாமே. எப்படி?.

க.கமலக்கண்ணன்
25-02-2008, 08:08 AM
இந்த மென்பொருளை உபயோகித்து பார்க்கவும்...

http://www.thepcdetective.com/Download/websiteblocker.msi

அக்னி
25-02-2008, 08:18 AM
இந்த மென்பொருளை உபயோகித்து பார்க்கவும்...

http://www.thepcdetective.com/Download/websiteblocker.msi
கிளிக்கினால்,


The site thepcdetective.com (http://thepcdetective.com/) has been disabled. Please contact support.

இப்படி வருகின்றதே... தற்காலிகப் பிரச்சினையோ...

க.கமலக்கண்ணன்
25-02-2008, 08:33 AM
நான் அந்த தளத்திலிருந்து தான் பதிவிறக்கினேன்.

மாற்று சுட்டி இதோ (http://www.website-blocker.com/download/Website-Blocker.msi)

srisha
26-02-2008, 06:33 AM
மென்பொருளை உபயோகித்து இல்லாமல் கணினியை கொன்டு செய்ய முடியுமா

praveen
26-02-2008, 07:33 AM
இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இரண்டு வழி உள்ளது.

ஒன்று நாமே தளங்களை பட்டியலிட்டு தடுப்பது அனுமதிப்பது
இண்டர்நெட் எக்ஸ்புளோரரில், இண்டர்நெட் ஆப்சன் என்பதில் பிரைவசி சென்று பின் வெப் சைட் எடிட் கிளிக் செய்து பாருங்கள்.


மற்றொன்று சிறுவர்கள்\குடும்பத்தவர்கள் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய கண்டெண்ட் அட்வைஸர் எனபிள் செய்வதன் மூலம்.
இதுவும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இன்டர்நெட் ஆப்சன் என்பதில் கண்டன்ட் என்பதில் சென்று எனேபிள் கொடுத்து பின் தேவையான செட்டிங்க்ஸ் படித்து பார்த்து ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும். சும்மா கிளிக் செய்து பாஸ்வேர்டு கொடுக்கும் சமாச்சாரம் இல்லை இது. தவறானல் பின் இனையத்தில் அந்த பிரவுசர் மூலம் நுழைய முடியாது.

srisha
29-02-2008, 07:25 AM
நான் அந்த தளத்திலிருந்து தான் பதிவிறக்கினேன்.

மாற்று சுட்டி இதோ (http://www.website-blocker.com/download/Website-Blocker.msi)


website bloker இன்ஸ்டால் செய்தால் installutilllib.dll:clrCreateManagedinstance(hr=0*80070002): The system cannot find the file specified என்று வருகிறது. உதவி செய்யவும்

praveen
14-03-2008, 12:15 PM
பிறிதொரு திரியில் இதே கேள்விகளை திரி ஆரம்பித்த நண்பர் கேட்டிருந்தார். அவருக்கு அதில் சொன்ன பதில் இங்கே தெரியாதாகையால் இங்கேயும் பதிக்கிறேன். இந்த திரியை காண்பவர் இதையும் புரிந்து கொள்ளட்டும் என்று.


நீங்கள் சுருக்கமாக மென்பொருள் பதிகையில் பிழைச்செய்தி என்று சொன்னதால், சரியான பதில் அளிக்க முடியவில்லை, உங்கள் ஸ்கீரின் சாட் கண்டு பின் விரைந்து உங்கள் பழைய பதிவுகளை பார்த்தால் http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14751 இந்த திரியிலே நீங்கள் பதிந்ததையே இங்கே பதிந்துள்ளது தெரிகிறது. இனி இப்படி ஒன்றின் வாலை மட்டும் வெட்டி அடுத்ததில் ஒட்டாதீர்கள். கேள்வியே புரிந்து கொள்ள முடியாததால் தான் இந்த தாமதம்.

நீங்கள் website-blocker.com என்ற தளத்தின் வெப்-பிளாக்கர் புரோகிராம் பதிகையிலே பிழைச்செய்தி கண்டீர்கள். உண்மையில் அந்த புரோகிராம் பதிவதற்கு குறைந்த பட்ச வன்பொருள்+மென்பொருள் தேவை பற்றி படித்தீர்களா? இதோ ஆங்கிலத்தில் அந்த தளத்தில் கண்டது.

Microsoft 98, ME, 2000 or XP. 128MB RAM, 1MB free disk space. Please note: A free upgrade from Microsoft may be neccessary for few users that dont have Microsofts .NET 1.1 framework. Our installation guide will help you through the simple downloading process.

இதில் மைக்ரோசாப்ட்-ன் டாட் நெட் அவசியமாக தேவை அது இல்லாத காரணத்தால் (அல்லது நீங்கள் அதனை பதிவிறக்கி பதிந்திருப்பது பழைய பதிப்பாக (1.0) இருக்கலாம், இல்லை அது பதிந்த பின் கரப்ட் ஆகி இருக்கலாம்) கீழே கண்ட சுட்டி சென்று புதிதாக பதிவிறக்கி கொள்ளுங்கள்.

http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=262D25E3-F589-4842-8157-034D1E7CF3A3&displaylang=en

அடுத்து கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டுமென்றால் செய்து பதிய முயற்சித்து பாருங்கள்.


நண்பர் கமலகண்ணன் மன்னிப்பீராக. கேள்விகேட்ட நண்பர் srisha விற்கு,


இவ்வளவு முயற்சி எடுத்து நீங்கள் பதிக்கும் இந்த சாப்ட்வேர் ஒன்றும் இலவசமான நிரந்தரமானதல்ல, சிறிது நாள் பயன்பாட்டிற்கு பின் பணம் கொடுத்து வாங்க வேண்டும். மேலும் இதில் அட்வான்ஸ்டு டெக்னிக் எல்லாம் இல்லை. ஹோஸ்ட் என்ற விண்டோசில் உள்ள ஒரு பைலை திருத்தி நாம் டைப்செய்யும்\தடைசெய்யும் தளத்தை ரீடைரக்ட் செய்கிறார்கள். யாராவது ஒரு பிராக்ஸி வெப்தளத்தில் சென்று பிரவுஸ் செய்தால் அதை இது தடுக்காது. மேலும் இது நாம் சொல்லும் தளங்களையே தடை செய்யுமே அன்றி நாம் விரும்பும் வகை தளங்களை அல்ல, நிங்கள் பல தளங்கள் பெயரை இதில் பதிந்து பின் பிளாக் செய்ய வேண்டும். இப்படி நிறைய இருக்கிறது. உங்கள் ஆசைக்கு மேலே நான் சொன்னதை செய்து பதிந்து பின் அறிவீராக.