PDA

View Full Version : வெற்றிக்கு வழி



srisha
25-02-2008, 06:06 AM
கோபத்திலும் பொறுமை
செல்வத்திலும் எளிமை
சொல்லிலும் நேர்மை
தோல்வியிலும் முயற்சி
துன்பத்திலும் துணிவு
பதவியிலும் பணிவு

ஆதி
25-02-2008, 06:09 AM
இரண்டிரண்டு வார்த்தைகளில் எளிமையான தத்துவம் அழகிய கவிதை அனைவரும் உள்ளுற்று நினைவகத்தில் நிரப்பி வாழ வேண்டிய வழி வாழ்த்துக்கள் சகோதரி..


அன்புடன் ஆதி

ஓவியன்
25-02-2008, 06:33 AM
பொறுமை
எளிமை
நேர்மை
முயற்சி
துணிவு
பணிவு இவை ஆறும் இருக்க வேண்டிய இடத்திலே இருந்திட்டால் வாழ்க்கையில் சந்தோசத்தைத் தேடிப் போகவேண்டியதில்லை, மாறாக அதுவாகவே தேடி வரும்....

பாராட்டுக்கள் சகோதரி....!!

srisha
27-02-2008, 08:54 AM
பேசுமுன் கேளுங்கள்
எழுதுமுன் யோசியுங்கள்
ஓய்வுக்குமுன் சேமியுங்கள்
இறப்பதற்க்கு முன் தர்மம் செய்யுங்கள்:icon_b:

சுகந்தப்ரீதன்
03-03-2008, 12:37 PM
எளிமையாகவும் எடுத்துக்காட்டுகளுடனும் எழுதுகிறீர்கள்...!!

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்...!! வார்த்தைகள் வசப்படும் உங்களுக்கு....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...!!

srisha
06-03-2008, 05:44 AM
இளமையில் வெற்றி பெற தேவை
முயற்சியும் சுறுசுறுப்பும்
முதுமையில் வெற்றி பெற தேவை
பொறுமையும், சகிப்புத்தன்மையும்:icon_b:

க.கமலக்கண்ணன்
09-03-2008, 10:00 AM
அருமை அருமை
அடுக்கடுக்காக தொடர்கிறீர்கள்...
அற்புதம் தொடருங்கள்...