PDA

View Full Version : கடவுள் கண் மறைந்து போனார்

ஆதி
25-02-2008, 05:02 AM
கடவுள்
கண் மறைந்து போனார்

அசைவற்றுப் போயின
மதங்கள்

இல்லாத கடவுளுக்கு
இனி எதற்கு மதம்
முழங்க துவங்கின
நாத்தீக மேடைகள்

சற்று முன்கிடைத்த தகவல்
விளம்பரங்கள் கீழே
ஓடவிட்டன சில
தொலைக்காட்சிகள்

சூடான செய்திகளாய்
நெற்றி விளித்தன செய்திதாள்கள்..

'போலி சாமியார்களிடம்
போலிசார் விசாரனை'
'நாத்தீர்கள் மீதும்
புலனாய்வு பார்வை'
தலைப்பு செய்திகளாய் தெறித்தன
செய்தி அலைவரிசைகளில்..

கடவுளை கடத்தினவர்கள்
கடுமையாய் தண்டிக்கப்படுவர்
அரசியல் அரங்கங்கள்
அறிக்கைகளால் அதிர்ந்தன..

சர்வ மதப் பிராத்தனை
சர்வமும் நடந்தது
கடவுளுக்கு எதுவுமாகிவிடக்
கூடாதென..

கருவறையின் பின்புரத்தே
கண்ணுறாதபடி கிடந்தது
ஒரு கடிதம்..

நான் அற்றவர்களில்
நான் இருக்கிறேன்
நான் அற்ற மனதிலும்
நான் இருக்கிறேன்
நான் அற்ற இடத்திலெலாம்
எனைத் தேடி
நான் அற்றவற்றை
நீவீர் செய்வது பொறுக்காமல்
நான் அற்றுப் போகிறேன்
யாரும் எனைத்தேட வேண்டாம்
கடவுள்..

அன்புடன் ஆதி

நன்றி : பூமகளுக்கு

முரணித்த மனிதம் _ கடவுள் ?? எனும் தலைப்பில் இருந்தே எனது நெற்றிப் பொறியில் பற்றிய நெருப்பு இந்த கவிதை..

க.கமலக்கண்ணன்
25-02-2008, 05:23 AM
எங்கும் இருப்பதை
எதிலும் தேடினாலும் கிடைக்கும்
எப்போது அன்பை அள்ளித்தரும் மனிதர்களே
எப்போழுதும் கடவுள் - மிக அற்புதமான கவிதை, நன்றி - ஆதிக்கும் பூமகளுக்கும்

நாகரா
25-02-2008, 05:55 AM
நான் அற்ற இடத்திலெலாம்
எனைத் தேடி
நான் அற்றவற்றை
நீவீர் செய்வது பொறுக்காமல்
நான் அற்றுப் போகிறேன்
யாரும் என்னைத் தேட வேண்டாம்
கடவுள்..

நான் இருக்கும்
மெய்யான இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே!

நல்லதோர் கவிதைக்கு நன்றி பல ஆதி. ஆதியின் இருதயத்திலிருந்து பகவனின் வெளிச்சம் நன்றாகவே தெரிகிறது. அவ்வெளிச்சம் ஆதியின் கவிதையில் சுடச் சுடரும் சுடு வரிகளாய்த் தெறிக்கிறது.

கடவுள் காலி பண்ணிவிட்டப் பேருக்கு மாத்திரம் புனித இடங்களாக இருக்கும் போலி இடங்களில் குண்டுகள் வெடிப்பதையும் கண்கூடாக நான் காண்கிறேன். தீவிரவாதிகளின் செயல்களை நான் நியாயப் படுத்தவில்லை. ஆனாலும் கேட்கிறேன், கடவுள் உறையும் இடங்கள் என்று பறை சாற்றப்படும் இப்புனித இடங்களைக் குண்டு வெடிப்புகளிலிருந்து காப்பாற்றாமல் ஏன் கடவுள் கை விட்டார்? தீவிரவாதிகள் ஒரு கால் மனம் மாறலாம், ஆனால் கடவுளின் பக்தர்கள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஆனால் நெஞ்சிலே அன்பெனும் ஒருமை ஒரு சிறிதும் இல்லாதவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று கடவுள் நினைக்கிறார் போலும். பெரும் வியாபார நோக்கில் சிக்கி விட்ட போலி ஆன்மீகத்தைக் கடவுள் தண்டிக்கிறார் போலும். மெய்யுடம்பாம் கடவுளின் மெய்யான தேவாலயங்ககள் பசி, பிணி, வறுமை, நோய், தேய்வு, மரணம் என்ற இடிபாடுகளிடையே சிக்கி நசிந்து கொண்டிருக்கும் நிலை மாறவும், தீவிரவாதிகளோடு போலி பக்தர்களும் மனம் மாறித் திருந்தவும், பொருளாதரமும் அரசியலும் உயிரே போனாலும் நெஞ்சில் அன்பே சிவம் என்ற ஒருமையைக் கைவிடாத அருளாளார்கள் கை வசம் வாய்க்கவும், நம் ஒவ்வொருவர் உள்ளுறையும் அருளே வடிவான பெருங்கடவுளை இறைஞ்சுகிறேன்.

இன்பா
25-02-2008, 06:04 AM
ஆதியின் கவிதையும் சூப்பர்...

நாகராவின் பதிப்பும் சூப்பர்...

சிவா.ஜி
25-02-2008, 06:27 AM
கடவுள் காண முடியா நிலையில்தானே எப்போதுமிருக்கிறார்....உன்னிலும் என்னிலும் காணக்கூடிய கடவுளை கல்லிலும் மண்னிலும் காண விழைந்தால் முடியுமா...காணத்தான் கிடைப்பாரா...
நான் அற்ற என்னில் அவனிருப்பான்...நான் நுழையும் போது அங்கே கிடைக்கும் இந்த கடவுளின் கடிதம்...
ஆதியை ஆழ்ந்து சிந்திக்க வைத்த பூமகளுக்கும்...சிந்தனையை அழகாய் சிந்திய ஆதிக்கும் வாழ்த்துகள்.

ஆதி
25-02-2008, 06:54 AM
எப்போது அன்பை அள்ளித்தரும் மனிதர்களே
எப்போழுதும் கடவுள்

உண்மையான வாக்கு கமலக்கண்ணன் அவர்களே, அன்பே தெய்வம்.. தெய்வமே மனிதம்.. இதனை உணர்ந்துவிட்டால் உயிர்களில் பேதமில்லை உறவுகளில் பிளவு இல்லை..

வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல..

அன்புடன் ஆதி

சாலைஜெயராமன்
25-02-2008, 05:04 PM
அன்பு ஆதி, வெளிச்சத்திற்கு வித்திட்டு வைத்துள்ளீர்.

கடவுளுக்கு ஏதும் நாமம், மதம்.

அவனை வெளியாக்க விரும்புவோர் அன்பின் குணத்தை அனுமதித்துக் காட்டினால் எங்கும் அவனே எதிலும் அவனே என்பதை உணரலாமே.

ஆதியின் வழக்கமான கவிதையிலிருந்து சற்றே விலகி வெளியான தீப் பொறி.

இம்மாதிரியான சிந்தனைகள்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் ஆதி. அழகாய் வடித்துவைத்த அற்புத சிதறல்கள். பாராட்டுக்கள்.

ஆதி
26-02-2008, 07:12 AM
கடவுள் காலி பண்ணிவிட்டப் பேருக்கு மாத்திரம் புனித இடங்களாக இருக்கும் போலி இடங்களில் குண்டுகள் வெடிப்பதையும் கண்கூடாக நான் காண்கிறேன். தீவிரவாதிகளின் செயல்களை நான் நியாயப் படுத்தவில்லை. ஆனாலும் கேட்கிறேன், கடவுள் உறையும் இடங்கள் என்று பறை சாற்றப்படும் இப்புனித இடங்களைக் குண்டு வெடிப்புகளிலிருந்து காப்பாற்றாமல் ஏன் கடவுள் கை விட்டார்? தீவிரவாதிகள் ஒரு கால் மனம் மாறலாம், ஆனால் கடவுளின் பக்தர்கள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஆனால் நெஞ்சிலே அன்பெனும் ஒருமை ஒரு சிறிதும் இல்லாதவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று கடவுள் நினைக்கிறார் போலும். பெரும் வியாபார நோக்கில் சிக்கி விட்ட போலி ஆன்மீகத்தைக் கடவுள் தண்டிக்கிறார் போலும். மெய்யுடம்பாம் கடவுளின் மெய்யான தேவாலயங்ககள் பசி, பிணி, வறுமை, நோய், தேய்வு, மரணம் என்ற இடிபாடுகளிடையே சிக்கி நசிந்து கொண்டிருக்கும் நிலை மாறவும், தீவிரவாதிகளோடு போலி பக்தர்களும் மனம் மாறித் திருந்தவும், பொருளாதரமும் அரசியலும் உயிரே போனாலும் நெஞ்சில் அன்பே சிவம் என்ற ஒருமையைக் கைவிடாத அருளாளார்கள் கை வசம் வாய்க்கவும், நம் ஒவ்வொருவர் உள்ளுறையும் அருளே வடிவான பெருங்கடவுளை இறைஞ்சுகிறேன்.

உங்கள் ஞானக்கருத்துக்கு என்றும் அடிமை நான்.. இந்த உங்கள் பின்னூட்டம் கொண்டும் கவிப்பேரரசுவின் கவிதை ஒன்று நினைவின் பொறியில் தெறிக்கிறது..

ஒரு கடவும் மயில் கொண்டான்
ஒரு கடவுள் எலி கொண்டான்
ஆனால் எந்த கடவுளும்
மனிதனை வாகனமாக கொள்ளவில்லை
கடத்திவிடுவான் என்பதால்..

நீங்கள் சொன்னது போல் இரத்தம் பார்க்கும் சித்தம் எப்போது மனிதருக்குள் புகுந்துவிட்டதோ அப்போதே கடவுள் இறந்துவிட்டான் அவனுக்குள்.. மிருகத்தில் இருந்து தெய்வமாக்க நெறிகள் பிறந்தன தெய்வத்தில் இருந்து மிருகம் நோக்கி மனிதன் படி இறங்கி கொண்டிருக்கிறான் நெறிகளை கொன்று..

அன்புட*ன் ஆதி

ஆதி
26-02-2008, 07:18 AM
ஆதியின் கவிதையும் சூப்பர்...

நாகராவின் பதிப்பும் சூப்பர்...

நன்றி வரிப்புலி அவர்களே

அமரன்
26-02-2008, 07:46 AM
சின்ன வயது முதல் எனது தாத்தா எனக்குரைக்கும் ஒரே ஒரு அறிவுரை.. "நான் என்பது கடவுள். நாந்தான் என்பது மாயை/அகங்காரம்" நான் கடவுளெனில் அடுத்தவன் யார் என்பது சுலபமாக புலப்படும். பாராட்டுகள் ஆதி. கவிதையில் ஞானம் சுடர்ந்து பொலிகிறது.

ஆதி
27-02-2008, 06:45 AM
கடவுள் காண முடியா நிலையில்தானே எப்போதுமிருக்கிறார்....உன்னிலும் என்னிலும் காணக்கூடிய கடவுளை கல்லிலும் மண்னிலும் காண விழைந்தால் முடியுமா...காணத்தான் கிடைப்பாரா...
நான் அற்ற என்னில் அவனிருப்பான்...நான் நுழையும் போது அங்கே கிடைக்கும் இந்த கடவுளின் கடிதம்...

உண்மையான கருத்து அண்ணா, ஆனால் யாரும் உணராத கருத்து, அதை நினைக்கும் போதுதான் அடிக்கடி மனம் வருந்து.

பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் அண்ணா

அன்புடன் ஆதி

செந்தமிழரசி
03-03-2008, 05:58 AM
நவீனமாய் ஒரு ஞானம்

தொலைந்தது தெய்வம்
தொலைக்காட்சிகள் ஊடகங்கள்
அதனிலும் வியாபாரமும் அரசியலும் புரிகிறது..

இன்றைய நிலையை
இயல்பாய் சொன்னது அழகு

"நான் அற்று" என்பதை வைத்து
கணக்கற்று செய்த வார்த்தையாடல் அருமை

கடைசிப் பத்தியில்
ஒரு பெருஞானத்தை
சிந்திக்கும் வண்ணம் சொல்லியது
சிறப்பு

காதலுக்கு இணையாய்
ஆன்மீகத்தையும் காவிதையாக்க
இயல்வது எனக்கு ஆட்சர்யமே..

பாராட்டுக்கள் ஆதி

பிச்சி
03-03-2008, 12:57 PM
அப்படீன்னா கடவுள் இல்லாத இடங்களில் தேடக் கூடாதா? கடவுள் எல்லா இடத்திலும் இருக்காரே?

நாங்கல் செய்தது பொறுக்காமல் கடவுள் ஓடினால் அதற்கு கடவுள் என்றா பேர்?

கவிதை சூப்பர் ஆதி அவர்களே ஆனால் கரு தான் எனக்கு நெருடலாக இருக்கு

அன்புடன்
பிச்சி

நேசம்
03-03-2008, 01:04 PM
கடவுள் நம்மிடம் தான் இருக்கிறார் என்று பொருள் பட அழகான கவிதை தந்த ஆதிக்கு வாழ்த்துகள்

நாகரா
03-03-2008, 01:12 PM
அப்படீன்னா கடவுள் இல்லாத இடங்களில் தேடக் கூடாதா? கடவுள் எல்லா இடத்திலும் இருக்காரே?

நாங்கல் செய்தது பொறுக்காமல் கடவுள் ஓடினால் அதற்கு கடவுள் என்றா பேர்?

கவிதை சூப்பர் ஆதி அவர்களே ஆனால் கரு தான் எனக்கு நெருடலாக இருக்கு

அன்புடன்
பிச்சி

ஆம், பிச்சி, கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். கடவுள் தன் நிலையிலிருந்து எப்போதும் நழுவுவதுமில்லை. மனிதர்களாகிய நாமே அன்பெனும் ஒருமையாம் கடவுளிலிருந்து நழுவி வன்பெனும் இருளின் பிடியில் அவதிப்படுகிறோம். எனவே கடவுளை நாம் உணர முடிவதில்லை. அன்பே சிவம் என்ற ஒருமையை உணர்ந்து, மற்ற போலித்தனமான வேறுபாடுகளையெல்லாம் மனிதராம் நாம் கைவிட்டாலொழிய, கடவுள் இருந்தும், நமக்கு அவர் இல்லாதற்கு சமமே, இதையே ஆதி கவிதைக்குரிய பாணியில் வலியுறுத்தி இருக்கிறார். நன்றி

பிச்சி
03-03-2008, 01:16 PM

மிக்க நன்றி அண்ணா. ஒருவழியாக எனக்குப் புரிந்தது.
அன்புடன்
பிச்சி

இளசு
04-03-2008, 06:04 AM
பொறி தந்த பூமகள்
ஞான அவல் தந்த ஆதி
கூட்டுச் சுவை சேர்த்த நாகரா, சாலையார், அமரன்

அனைவருக்கும் பாராட்டுகள்..

நுரையீரல்
04-03-2008, 07:03 AM
ரொம்ப ரொம்ப அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் பல ஆதி.

இரத்தம் பார்க்கும் சித்தம் எப்போது மனிதருக்குள் புகுந்துவிட்டதோ அப்போதே கடவுள் இறந்துவிட்டான் அவனுக்குள்.. மிருகத்தில் இருந்து தெய்வமாக்க நெறிகள் பிறந்தன தெய்வத்தில் இருந்து மிருகம் நோக்கி மனிதன் படி இறங்கி கொண்டிருக்கிறான் நெறிகளை கொன்று..
ஒருவன் சிந்திக்க வேண்டுமாயின் அவனுக்கு free time மற்றும் தனிமை வேண்டும். இந்த அவசர யுகத்தில் இது எதுவுமே கிடைக்காத பல மனிதர்கள் இருக்கிறார்கள் ஆதி.

சூழ்நிலையையும் மீறி அவங்கெல்லாம் இந்த மாதிரி யோசிக்கணும்னா வளர்ப்பு முறை நல்லா இருக்கணும். சுற்றுப்புறம் நல்லா இருக்கணும். இப்படி பலப்பல தொடர்பு காரணிகள் இருக்கு ஆதி...

எல்லாருமே சூழ்நிலைக் கைதிகள்.

நீங்க யோசிக்கற மாதிரி என்னால கண்டிப்பா யோசிக்க முடியாது ஆதி. உங்களைப் போல ஆட்களை, என்னைப் போன்றவர்கள் மதித்து மரியாதை வேண்டுமானால் செய்யலாம். ஆனால் உங்களை இளித்தவாயன் என்று நினைத்து மிதித்தவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.

உங்களோட பல எழுத்துல உங்களோட மனதை புரிந்திருக்கிறேன். உங்களைப் போல இருக்க வேண்டுமென்றும் நினைத்திருக்கிறேன். ஆனா பாழாய்ப்போன என் அலைபாயும் மனசு இதுக்கெல்லாம் இடம் கொடுக்கமாட்டேங்குது ஆதி..

நான் பார்க்குற பெரும்பாலான ஆட்களை கெட்டவனாத்தான் உணர்றேன். இது என் பார்வைக் கோளாறா? (அ) அவர்கள் உண்மையாலுமே கெட்டவர்களா என்றும் உறுதியாகக் கூற முடியாது.

எனக்குள் இருக்கும் கடவுளை தூய்மைப்படுத்த நினைப்பதைக்காட்டிலும், எதற்காக தூய்மைப்படுத்தணும் என்று கேள்வி கேட்டே மேன்மேலும் அழுக்காக்கிக் கொண்டிருக்கிறேன்.

எல்லாரும் வெள்ளை காக்கா பறக்குதுனு சொல்லும்போது நான் மட்டும் எதுக்காக காக்கா இல்ல அது புறானு சொல்லணும்னு என்னை நானே ஏமாத்திக்கிட்டு இருக்கேன்.

நாகரா
13-03-2008, 10:35 AM
நான் அற்றவர்களில்
நான் இருக்கிறேன்
நான் அற்ற மனதிலும்
நான் இருக்கிறேன்

தான் அற்றவர்களில்
நான் இருக்கிறேன்
தான் அற்ற மனதிலும்
நான் இருக்கிறேன்

என்றிருந்தால் இன்னும் தெளிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தான் ஆணவத்தையும், நான் இறையாற்றலையும் உணர்த்தும். தான் பராபாரத்தைக் குறிப்பதற்கும் பயன்பட்டாலும், இக்கவிதையில் ஆணவத்தைக் குறிக்க அச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

நன்றி ஆதி.

ஆதி
14-03-2008, 06:01 PM
நான் அற்றவர்களில்
நான் இருக்கிறேன்

ஐய்யா இந்த இரண்டுவரிகள் நாத்தீகம் பேசுபவர்களை குறிக்கும், நான் என்ற அகந்தை இல்லாதவர்களையும் குறிக்கும்.

நான் அற்ற மனதிலும்
நான் இருக்கிறேன்

இந்த இரண்டு வரிகள் நான் என்ற சுயத்தை இழந்து நாம் என்று உலக உயிர்களோடு ஒன்றியவர்களை குறிக்கும்.

இல்லை தான் தான் சிறந்தது என நீங்கள் மீண்டும் கருதினால் அப்படியே மாற்றிவிடலாம் உங்களைவிட இந்த கவிதையில் சொற்கட்டை ஆழ்ந்துணர எழுதிய என்னாலும் முடியாது என்பது என் திண்ணமான எண்ணம்.

அன்புடன் ஆதி

நாகரா
15-03-2008, 04:16 AM

தெளிவு படுத்தியதற்கு நன்றி ஆதி, கவிதையில் மாற்றம் வேண்டாம், அவ்வாறே இருக்கட்டும்.