PDA

View Full Version : கவனம்!



நாகரா
25-02-2008, 03:05 AM
ஒருமையே வாழ்வு
ஒருமை நழுவிய கணமே
மரணம்

ஒருமையே உயிர்நிலை
ஒருமை நழுவிய கணமே
வெறும் என்புதோற் கூடு

ஒருமையே சிவம்
ஒருமை நழுவிய கணமே
நாறுஞ் சவம்

ஒருமையே இருதயம்
ஒருமை நழுவிய கணமே
வெறும் இயந்திரம்

ஒருமையே உயிர்மெய்
ஒருமை நழுவிய கணமே
மாமிசப் பிண்டம்

ஒருமையே அருளடக்கம்
ஒருமை நழுவிய கணமே
அடங்கா மிருகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14419)

ஒருமையே தலை
ஒருமை நழுவிய கணமே
வீழும் முண்டம்

ஒருமையே பெருந்தவம்
ஒருமை நழுவிய கணமே
அவமே அவம்

ஒருமையே மெய்ப்பொருள்விளக்கம்
ஒருமை நழுவிய கணமே
பொய்யிருட்கலக்கம்

ஒருமையே பூரணம்
ஒருமை நழுவிய கணமே
பூஜ்ஜியம்

மெய்யாம் ஒருமையே
நித்திய ஜீவனின் ஒரே வழி
அவ்வொருமையின்றேல்
வீழ்ந்தாய் நீ
மரணமென்னும் படுகுழி

சுகந்தப்ரீதன்
03-03-2008, 12:51 PM
வாழ்த்துக்கள்....!! மன்னிச்சுக்குங்க நாகரா அண்ணா...!!

ஒருமையை உணரும் அளவுக்கு நான் இன்னும் பூரணத்துவம் அடையலைன்னு நினைக்கிறேன்...!!

அதான் உங்க கவிதையில் அடிக்கடி என்னால் கலக்க முடியாமல் போகிறது..!!

நாகரா
04-03-2008, 06:21 AM
ஒருமையை உணரும் அளவுக்கு நான் இன்னும் பூரணத்துவம் அடையலைன்னு நினைக்கிறேன்...!!


தம்பி, இது உன் மனப் பிரமை, அதை அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டால், அடுத்த கணம் பூரணமாய் ஒருமையை உணர்வாய், அடைவாய். இது அண்ணன் தரும் உறுதி.