PDA

View Full Version : ஒருமை



நாகரா
25-02-2008, 02:51 AM
பிரபஞ்ச முழுதுமே
ஒரு மையே எழுதிய
ஒரு மெய்
அவ்வொரு மெய்யில்
அவ்வுயிர் மையின்
உயிர்மை
உயிர்மெய்

சுகந்தப்ரீதன்
03-03-2008, 12:52 PM
இது எனக்கு தெளிவா புரியுது...!!

மெய்யுணர்வு பற்றிய உங்கள் கவிதை மெய்யாலுமே மெய்யை சிலிர்க்க வைக்கிறது... வாழ்த்துக்கள் அண்ணா...!!

நாகரா
04-03-2008, 06:16 AM
இது எனக்கு தெளிவா புரியுது...!!

மெய்யுணர்வு பற்றிய உங்கள் கவிதை மெய்யாலுமே மெய்யை சிலிர்க்க வைக்கிறது... வாழ்த்துக்கள் அண்ணா...!!

மெய்யைத் தெளிவாய்ப் புரிந்து அம்மெய்யில் மெய் சிலிர்த்த தம்பிக்கு என் நன்றி

செந்தமிழரசி
04-03-2008, 06:28 AM
ஒரு துகள்
ஒரு துளி
ஒரு வெளி
ஒரு அணு
ஒரு பொறி
ஒருமை ஒரு மெய்
இது மெய்.

ஞானம் பல்கி கசிகிறது பாராட்டுக்கள் நாகாரா

நாகரா
04-03-2008, 06:33 AM
ஒரு துகள்
ஒரு துளி
ஒரு வெளி
ஒரு அணு
ஒரு பொறி
ஒருமை ஒரு மெய்
இது மெய்.

ஞானம் பல்கி கசிகிறது பாராட்டுக்கள் நாகாரா

பாராட்டுக்களுக்கு நன்றி செந்தமிழரசி.

நாகரா
05-03-2008, 12:18 PM
அருட்குறள் சுட்டும் மெய்ஞ்ஞான விஞ்ஞானம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=331282#post331282) விளங்கவும், மாயையின் வலையிலிருந்து மீளவும்

ஒருமையே சத்திய நாமம்
ஒருமை நழுவிய கணமே
தாமசச் சாபம்

ஒருமையே சின்மய உருவம்
ஒருமை நழுவிய கணமே
இராஜசக் குரூரம்

ஒருமையே ஆனந்தக் கொண்டாட்டம்
ஒருமை நழுவிய கணமே
சத்துவத் திமிராட்டம்

ஒருமையே சச்சிதானந்தம்
ஒருமை நழுவிய கணமே
தாமச இராஜச சத்துவம்

ஒருமையே நிர்க்குணப் பிரம்மம்
ஒருமை நழுவிய கணமே
திரிகுண மாயை

ஒருமையே சகுணப் பிரம்மம்
ஒருமை நழுவிய கணமே
துர்க்குண பிரமை

ஒருமையே அருளொளி
ஒருமை நழுவிய கணமே
அஞ்ஞான இருள்

ஒருமையே அருள் விளக்கம்
ஒருமை நழுவிய கணமே
மருள் மயக்கம்

ஒருமையே இயற்கைப் பேருண்மை
ஒருமை நழுவிய கணமே
மயக்கும் பெரும்பொய்

ஒருமையே அனபாம் சிவம்
ஒருமை நழுவிய கணமே
வன்பாம் அவம்

ஒருமையே பேரின்பப் பெருவாழ்வு
ஒருமை நழுவிய கணமே
கடுந்துன்பச் சாக்காடு

ஒருமையே மெய்வழி
ஒருமை நழுவிய கணமே
படுகுழி