PDA

View Full Version : நம்முடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பவர்?



saguni
24-02-2008, 01:16 PM
நண்பர்களே!

நம்முடன் சேட்டிங் செய்துகொண்டிருப்பவர் எந்த நாட்டில் இருந்து சேட்டிங் செய்கிறார் என கண்டுபிடிக்க முடியுமா?

சில செயலிகள் மூலம் அறியாத ஒருவர் என்னுடன் மெச்செஜெரில்வந்து என்னுடைய நுழைவுசொல் ஒவ்வொருமுறையும் எங்கிருந்து சேட் செய்கிறேன் ஆகிய அனைத்து விபரங்களையும் கூறி அசத்துகிறார். அவரிடம் கேட்டால் கூற மறுக்கின்றார் முடிந்தால் உதவுங்களேன்.

praveen
25-02-2008, 06:15 AM
முன்பின் தெரியாதவருடன் ஏன் சாட் செய்கிறிர்கள், இது ஆபத்தானது, அப்படியில்லை நல்லவர் என்றால் ஏன் காரணம்/வழிமுறை சொல்லாமல் இருக்கிறார் என்று யோசியுங்கள்.

உங்கள் கணினியில் கீ லாக்-ர்(key logger) போன்ற புரோகிராம்(நீங்கள் பதிந்ததில்லை) நச்சு மென்பொருள் மூலம் அவர் சொல்லலாம் அல்லது. அவர் உங்கள் அலுவலக/சக/நண்பராக இருந்து முன்னமே உங்களை அறிந்து, சற்று தொலைவில் வேறு இடத்தில் இருந்து உங்களை கலாய்க்கலாம்.

நீங்கள் முதலில் இலவசமாக கிடைக்கும் செக்யூரிட்டி(மேலும் தகவலுக்கு டவுன்லோடு.காம்) மென்பொருள்களை தேடி பதிந்து வையுங்கள். பெயர்களை பொதுவிலே விளம்பரப்படுத்த இயலாது.

உங்கள் கணினியில் ஆண்டிவைரஸ் சாப்ட்வேரேடு, பயர்வால் சாப்ட்வேரும் நிறுவினால் இம்மாதிரி விவர வடியல்களை தடுக்கலாம்.

அக்னி
25-02-2008, 06:51 AM
பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கின்றீர்கள் பிரவீண்...
எமது பாதுகாப்பில் நாம்தான் கவனிப்புடன் இருக்க வேண்டும். வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்...

saguni
25-02-2008, 09:12 AM
மிக்க நன்றி நண்பரே! முயற்சித்துப்பார்த்துவிட்டு சொல்கிறேன்