PDA

View Full Version : 19 வயதுக்கு கீழோர் உலகக் கோப்பை கிரிக்கெட்



ராஜா
24-02-2008, 06:28 AM
மலேசியாவில் தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.

16 அணிகள் 4 பிரிவுகளாக கலந்துகொள்ளும் இப்போட்டிகள் தற்போது காலிறுதி நிலையை எட்டியுள்ளன.

அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கும் இந்தியா சகல விதத்திலும் ஒரு வலுவான அணியாகவே திகழ்கிறது.

சிறந்த மட்டையாளர்கள், இடக்கர மற்றும் வலக்கர வேகப் பந்து வீச்சாளர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள், துவக்க மட்டையாளராகக் களமிறங்கும் விக்கெட் காப்பாளர் என்று பக்கா தொழில்முறை அணியாகவே இந்திய அணி தென்படுகிறது.

அணியின் பயிற்சியாளராக பிரபல டேவ் வாட்மோர் நியமிக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு மேலும் பலம் சேர்க்கிறது.

வெற்றி வாய்ப்புள்ள அணிகளில் இரண்டாவதாக இந்திய அணி கணிக்கப்பட்டிருக்கிறது.

முதல் அணி எது தெரியுமா..? பாகிஸ்தான்..!

எனினும் இந்தியா இந்தப் போட்டியில் இதுவரை எதிர்கொண்ட அணிகள் அவ்வளவாக வலுவற்ற அணிகளாகவே இருப்பது நம் அணியின் வெற்றிவாய்ப்பை சற்று பாதிக்கும் என்று படுகிறது. அரையிறுதி மட்டத்தில் மிகவும் வலுவானதொரு அணியை எதிர்கொள்ளும்போது, நம் இளம்வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ராஜா
24-02-2008, 06:34 AM
இதோ சில வீரர்களின் அறிமுகம்..

http://www.cricket.org/db/PICTURES/CMS/82700/82792.jpg

1. பிரதீப் சங்க்வான்.

இடது கர வேகப்பந்து வீச்சாளர். டெல்லியைச் சேர்ந்தவர். சமீபத்தில் உள்நாட்டில் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் கலந்துகொண்டு பெரிய அண்ணாக்களையே குலை நடுங்க வைத்த குட்டித்தம்பி.

19க்கு கீழோர் உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி "ஆட்ட நாயகன்" விருது பெற்றவர். எதிர்கால இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.

ராஜா
24-02-2008, 06:43 AM
http://content-usa.cricinfo.com/inline/content/image/318605.jpg

2. விராட் கோலி.

19க்கு கீழோர் இந்திய அணித் தலைவர். இளம் தோள்களின் மேல் முதிர்ந்த தலையைக் கொண்டவர் என்று பாராட்டப்படும் புத்திசாலி. வலதுகை நடுவரிசை மட்டையாளர்.. மிதவேகப் பந்துவீச்சாளருங்கூட..!

இவரும் டெல்லி அணியைச் சேர்ந்தவரே..!

ராஜா
24-02-2008, 07:10 AM
http://www.cricinfo.com/db/PICTURES/CMS/82800/82846.jpg

3. தன்மய் ஷ்ரிவஸ்தவ்.


ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்த உத்தரப்பிரதேச அணியைச் சேர்ந்தவர். இடது கர அதிரடி மட்டையாளர்.. ஆஃப் பிரேக் பந்துவீச்சும் தெரியும்.

பாப்புவா நியு கினியா அணிக்கெதிரான போட்டியின் "ஆட்டநாயகன்"

ராஜா
24-02-2008, 07:31 AM
http://www.cricinfo.com/db/PICTURES/CMS/86700/86718.1.jpg

4.தாருவார் கோலி.


10 ராகுல் திராவிட் ஒன்றாகச் சேந்தது போன்ற பொறுமைசாலி. தொழில்நுட்ப ரீதியாக மிக வலுவான வலதுகை மட்டையாளர். 19 க்கு கீழோர் உலகக்கோப்பைப் போட்டிகளில் 4 ஆட்டங்களில் 3 முறை 50 ஓட்டங்களுக்கு மேலும், ஒருமுறை 40 ஓட்டங்களும் எடுத்தவர்.பஞ்சாப்காரர்.

மலையே சாய்ந்தாலும் நிலை குலையாதவர். இந்திய அணியின் எதிர்கால இரும்புச்சுவர்..!

ராஜா
24-02-2008, 07:41 AM
இன்று நடந்த இரண்டு காலிறுதிப்போட்டிகளில், இந்தியா இங்கிலாந்தை 7 விக்கெட் வேறுபாட்டிலும், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசத்தை 201 ஓட்டங்கள் வேறுபாட்டிலும் வென்றன.

நாளை மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஆஸி-பாக் அணிகள் மோதவிருக்கின்றன.

ஸ்டார் கிரிக்கெட் அலைவரிசையில் இப்போட்டியைக் காணலாம்.

ராஜா
24-02-2008, 07:49 AM
காமன்வெல்த் வங்கி முத்தரப்புப் போட்டியில் இன்று இந்தியாவின் நிலை அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை.. [ என்னைக்குதான் அப்படி இருந்துச்சுன்னு கேட்கறீங்களா..? அதுவும் சரிதான்..! ]

318 ஓட்டங்களை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் 15 ஓவர் முடிவில், இந்தியா 73-4 என்ற நிலையில் திணறிக்கொண்டிருக்கிறது.