PDA

View Full Version : உதவி மெனு வேலை செய்யவில்லை



srisha
24-02-2008, 05:56 AM
என் கணீனியில் boot cd வைத்து troubleshoot செய்த பிறகு எந்த தொகுப்பிலும் help வேலை செய்யவில்லை. ஏன்?. யாராவது தெரிந்தால் கூறவும்.

praveen
26-02-2008, 07:00 AM
என்ன ஆப்பரேட்ட்டிங் சிஸ்டம் + அதில் எந்த அப்ளிகேசனுக்கு ஹெலப் வரவில்லை என்று விவரம் தாருங்கள்.

திருப்பதியில் காணமல் போனவரை கண்டுபிடிக்க அவர் மொட்டை போட்டிருந்தார் என்று மட்டும் அடையாளம் தருவது போல இருக்கிறது உங்கள் கேள்வி. :)

srisha
26-02-2008, 08:27 AM
தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.
games/solitaireல் help menu சுட்டினால் unable to load windows help application என்று வருகிறது
அதே போல் 3dsmax எனும் தொகுப்பிலும் help menu தற்போது வேலை செய்யவில்லை. என் OS win xp

praveen
26-02-2008, 11:07 AM
நன்று அப்படியே இன்னும் சில கேள்விக்கு பதில் தாருங்கள்,

கம்ப்யூட்டரின் திறந்து வைத்திருக்கும் மற்ற அனைத்து அப்ளிகேசன்களையும் (எம்.எஸ்.வேர்டு, இண்டர்நெட் எக்ஸ்புளோரர், விண்டோஸ் எக்ஸ்புளோரர் இப்படி) மூடி பின் சாலிடெர் இயக்கி அதில் உள்ள ஹெல்ப் இயங்குகிறதா என்று பாருங்கள்.

மேலே உள்ளதற்கு பதில், தற்போது சாலிடெரில் ஹெல்ப் இயங்குகிறது என்றால், உங்கள் சிஸ்டம் ரீசோர்ஸஸில் தான் பிரச்சினை, ராம் இன்னும் அதிகம் தேவை அல்லது தேவையில்லாத புரோகிராமை இயக்குவதை அவசியம் இல்லாததா போது மூடி விடவும். (இம்மாதிரி பிரச்சினை சி.டி பதியும் போது ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று சாலிடெர் விளையாடும் போது வரும்), இல்லை இப்போதும் பிழைச்செய்தி தான் என்றால் கீழே பார்க்கவும்.

சாலிடரில் மட்டும் தான் ஹெல்ப் வேலை செய்யவில்லையா அல்லது மற்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் (கால்குலேட்டர், பெயிண்ட், நோட்பேட் மற்றும் ப்ரிசெல்) ஹெல்ப் வேலை செய்கிறதா என்றும் அறிய தாருங்கள்.

மேலே உள்ளதற்கு விடை மற்றதில் இயங்குகிறது என்றால், சாலிடெரில் தான் பழுது. மற்றதும் இயங்க வில்லை என்றால், உங்கள் கணினியில் ஹெல்ப் பகுதிக்கான (சிஸ்டம்)சர்வீஸ் இயக்கத்தில் பிரச்சினை.

உங்கள் பதிலுக்கு பின் அதை எப்படி சரி செய்வது என்று சொல்கிறேன்.

srisha
27-02-2008, 04:40 AM
தோழரே மற்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் (கால்குலேட்டர், பெயிண்ட், நோட்பேட் மற்றும் ப்ரிசெல்) ஹெல்ப் வேலை செய்யவில்லை

உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

praveen
27-02-2008, 05:30 AM
நண்பரே உங்கள் கம்ப்யூட்டரில் ஹெல்ப் சர்வீஸ் உங்களால் அல்லது வேறு பழுதால் இயங்காமல் உள்ளது.

கீழே கண்ட படவரிசை சென்று இங்கே உதாரணத்திற்கு இன் டக்ஸ் சர்வீஸ் எப்படி டிஸேபிள் செய்வது என்று கூறப்பட்டுள்ளது, அதை விடுத்து அதில் ஹெல்ப் அண்ட் சப்போர்ட் என்பதை கிளிக் செய்து திறந்து அதில் ஸ்டார்ட் அப் என்பதில் ஆட்டோமேடிக் என்று கொடுத்து பின் சர்வீஸை ஸ்டார்ட் செய்தால் போதும். ஒரு முறை கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால் ஹெல்ப் வேலை செய்ய தொடங்கிவிடும்.

http://www.jasonn.com/files/turning_off_windows_services/click_on_start-control_panel.jpg
http://www.jasonn.com/files/turning_off_windows_services/click_on_administrative_tools.jpg

http://www.jasonn.com/files/turning_off_windows_services/click_on_services.jpg

http://www.jasonn.com/files/turning_off_windows_services/choose_service_to_modify.jpg

http://www.jasonn.com/files/turning_off_windows_services/change_service_setting.jpg

பின் குறிப்பு:
எச்சரிக்கை, ஜாக்கிரதையாக நான் சொன்னபடி செய்யவும், அசிரத்தையாக வேறு சேவை எதையாவது விளையாட்டாக தெரியாமல் மாற்றி விட்டால் பின் ஏற்படும் இழப்புகளுக்கு நான் பொறுப்பாக இயலாது. மிகுந்த கவனத்துடன் செய்ய முற்படுங்கள்.

எந்த விதத்திலும் விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்க இயலாது

praveen
27-02-2008, 05:34 AM
மேலே சொன்னது வேலை செய்யவில்லை என்றால், மாற்று வழி

நீங்கள் ரெக்கவரி/ரிப்பேர் டிஸ்க் பயன்படுத்தியதால் சர்வீஸ்பேக்2 மறுபடியும் அப்ளை செய்ய வேண்டும். மற்றும் Internet Explorer மறுபடியும் ரீஇன்ஸ்டால் செய்து பாருங்கள். அது தான் ஹெல்ப்-க்கான CHM பைல்களை திறக்க உதவுகிறது.

srisha
06-03-2008, 05:48 AM
மேலே சொன்னது வேலை செய்யவில்லை என்றால், மாற்று வழி

நீங்கள் ரெக்கவரி/ரிப்பேர் டிஸ்க் பயன்படுத்தியதால் சர்வீஸ்பேக்2 மறுபடியும் அப்ளை செய்ய வேண்டும். மற்றும் Internet Explorer மறுபடியும் ரீஇன்ஸ்டால் செய்து பாருங்கள். அது தான் ஹெல்ப்-க்கான CHM பைல்களை திறக்க உதவுகிறது.

நன்றி. தற்போது என் கணினி ஒழுங்காக வேலை செய்கிறது

praveen
06-03-2008, 06:22 AM
நன்றி. தற்போது என் கணினி ஒழுங்காக வேலை செய்கிறது

நன்றி, உங்களின் திருப்தியான பதில் தான் எனக்கு மறுபடியும் யாராவது இம்மாதிரி கேள்வி கேட்டால் பதில் சொல்ல உற்சாகம் தருகிறது.