PDA

View Full Version : நாயகனின் பேருபதேசம்



நாகரா
24-02-2008, 03:48 AM
கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையே
ஏழாம் அறிவின் தீர்க்க தரிசனம்
"சத் தர்ஷனம்" என்னும்
துகளளவும் துரிசற்ற தூய நிலையை
எங்கும் எதிலும் எப்போதும்
காணவும் அறியவும் உணரவும் வல்ல
தூய நோக்கு

அதி அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

நள்ளிரவில்
பட்டப்பகல் வெளிச்சமாய்ச்
"சுளீர்" என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்தைகளால்
"பளார்" "பளார்" "பளார்" என்று
இடைவிடாது
என்னை அறையும்
நீவிர் யாரோ?

பெயர் சொன்னால்
அப்பெயரால் நீ என்னை அழைக்க
அப்பெயரை நீ பூசை செய்ய
அப்பெயரை நீ உருவகித்துப்
படத்தில் மாட்டிக் கும்பிட
அப்பெயரின் பேரில்
மதமொன்றை நிறுவிட
இவ்வாறாக
ஆறறிவு நிலையில்
பற்பல தந்திரங்கள் செய்யத் தெரிந்த
நீ
அத்தந்திரங்களால்
ஒரு காலும்
என் தாள்களின் தூசுகளைக் கூடத்
தொட முடியாது

கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

இருந்தாலும்
ஒரு பொருள் பொதிந்த பெயரை
அன்பின் மிகுதியால்
உனக்குச் சொல்லுகிறேன்

"நாயகன்"

"வாலறிவன்" என்று
வள்ளுவர் சொல்கிறாரே
அதுவே பெயரின் பொருளோ?

ஆம், அதுவே
ஒன்று முதல் ஐந்து வரை
ஆறறிவு ஈறாக
பிரபஞ்ச உயிர்த்திரள்
ஆறின் ஓருமையாம்
ஏழில் நிற்க
மூளையின் மத்தியில்
தீப்பிழம்பாய்த் தோன்றும்
"வாலறிவன்"
அதாவது தூய நோக்கை உடையவன்
எனப் பொருள்படும்
"நாயகன்"

ஆனாலும்
என் பிடி
இவ்வார்த்தைகளில் அறவே இல்லை

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையே
என்னைப் பிடிக்கும்
ஒரே வழி

கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

இவையும் வார்த்தைகள் தானே.

இவ்வார்த்தைகள் சுட்டும்
ஒருமைப் பேருணர்வை
உனக்கு நன்றாக உறைக்க வேண்டும்
உன் சுரணையில் அது நன்றாக ஏற வேண்டும்
என்பதற்காகவே
"சுளீர்" என்று
சுடச் சுடச் சுடரும்
இவ்வார்த்தைகளால்
"பளார்" "பளார்" "பளார்" என்று
இடைவிடாது உன்னை அறைகிறேன்.

உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள்

அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

"வாலறிவன் நற்றாள் தொழாரெனின்"
என்ற வள்ளுவர் குறளுக்கும்
உமது இவ்வாக்குக்கும்
தொடர்பு உண்டோ?

உண்டு.
"கற்றாதனால் ஆயபயன் என்கொல்?"
அஞ்ஞானக் கல்வியால்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நிற்க வேண்டிய
உன் கவனம் நழுவி
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
வாலறிவன் தாள்களை மறந்து
ஏழாம் அறிவை
நீ
விட்டு விட்ட
ஞானத் திமிரைச் சாடும்
அவரது மெய்ஞ்ஞானப் புலம்பல்

எப்போதும் ஒருமையுணர்வில்
நிற்க அதி கவனமாயிரு
அவ்வொருமை
ஒரு கணம் போயினும்
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

"வால்" என்பதன் பொருள் யாதோ?

ஒன்று முதல்
ஆறு ஈறாக
ஆறாதார பிரபஞ்ச உயிர்த்திரள்
"நாய்" என்னும் நிராதார மேனிலை
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் ஒன்றி நிற்கும் தூய்மை

"வள்ளல்" யாரோ?

என் பெயரே.
ஆனால் எப்பெயரிலோ
"வால்" மற்றும் "நாய்" போன்ற
வார்த்தைகளிலோ
என் பிடி இல்லை.
கணப்போதும் நீங்காத ஒருமையுணர்வே
என்னைப் பிடிக்கும் ஒரே வழி

எனவே கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

சில கேள்விகளை
நான் கேட்கும் போது
மீண்டும் மீண்டும் மீண்டும்
இப்பதிலையே தருகிறீரே!

கவனம்! அதி கவனம்!
அக்கேள்விகளைக் கேட்கும் போது
ஒரு கணமேனும்
உன் கவனம் ஒருமையிலிருந்து நழுவும்
பேரபாயமுள்ளதை எச்சரிக்கவே
இப்பதில்

அதி கவனம்!
தலை முதல் கால் வரை
உன் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
இவ்வொருமையுணர்வு ஊன்றி நிலைக்கும் வரை
"சுளீர்" என்று இச்சுடும் பதில்
"பளார்" "பளார்" "பளார்" என்று
உன்னை அறைந்து கொண்டே இருக்கும்

நாயகரே!
நனி மிக நன்றி

ஒருமை விகுதியை எடுத்துப்
பன்மை விகுதியைப் போட்டு
என்னை விளிக்கும்
மற்றும்
"நனி மிக" என்று நன்றியோடு கூட்டி
நீ
செய்யும் ஆறறிவுத் தந்திரங்கள்
எதுவுமே என்னிடம் பலிக்காது

இருந்தாலும்
என் அன்பு மகனே!
நானுனக்கு நன்றி சொல்வேன்.

உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
என் தாள்களை உணராது
நீ
அழுது புலம்பி அரற்றி
வாய் கிழியப் பேசி
தாள் கிழிய எழுதி
நோய்வாய்ப்பட்டு
புத்தி தடுமாறிப் பித்தனாகி
எழ முடியாமல் விழுந்து கிடந்து
எழுந்ததும் தற்கொலைக்குத் துணிந்து
அதைச் செய்யாமல் விட்டு
பின் எக்கொலைக்குந் துணிந்து
அதையும் செய்யாமல் விட்டு
பின் தெளிந்து
நானே, நான். என்னும்
உன் பழைய தந்திரம் மீட்டு
இவ்வாறாக
நீ
செய்த ஆறறிவுத் தந்திரங்கள்
அனைத்தையும் அறிவேன்.
இவற்றை மீறி
மனித நேய ஒருமையென்றும்
ஆன்ம நேய ஒருமையென்றும்
இன்னுந் தாண்டி
நான் சொல்லும்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையின் மீது
உனக்கிருக்கும்
உறுதியையும் காதலையும் பற்றையும்
நன்றாக அறிகிறேன்.

எனவே
நீ
பழுத்திருக்கும் இக்கணத்தில்
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையாய்
உன் ஏழாம் அறிவாய்
உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கும்
என் தாள்களை
உனக்கு உணர்த்துகிறேன்
உன்னைப் போன்றே
பிரபஞ்ச உயிர்த்திரள் ஒவ்வொன்றுக்கும்
உணர்த்துகிறேன்

கவனம்!
அதி கவனம்!

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

நானே. நான். என்பதன்
முழுப்பொருள் விளக்கம்
மெய்ப்பொருள் விளக்கம்
இதுவே

நாய்க்குரு தீட்சை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14669)யின் சாராம்சமும்
இதுவே

கவனம்!
அதி கவனம்!

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருமையுணர்வொன்றே
நீ
என்னைப் பிடிக்கும் ஒரே வழி

எனவே
அதி கவனமாயிரு

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்

நாகரா
26-02-2008, 04:09 AM
நீவிர் வலியுறுத்தும் ஒருமையை
வள்ளுவரும் வலியுறுத்தியிருக்கிறாரே!
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து"

ஆம்
ஆமை = ஆம்+ஐ
தனக்குள் ஒளிரும்
ஐ என்ற வாலறிவனாம் தலைவனை
ஆம், ஐ அவனே
என்று அறிய முடிந்த
ஆறறிவுள்ள மனிதனைச் சுட்டுகிறது.
ஐந்தடக்கல்
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த்திரளை
அவற்றுக்கெல்லாம் ஐ ஆம் தலைவன்
மனிதனவன் தன்னில் அடங்கியிருக்கும்
உண்மை நிலையை உணர்தல்.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளிலும்
ஒளிந்திருக்கும் 'ஐ'அறிவிற்கு
(ஐ ஆம் தலைவனை அறிவதற்கு)
ஆறறிவுள்ள மனிதனே திறவு கோல்.
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்தும்
'ஐ'அறிவுள்ள அவனுக்குள் அடக்கம்.
இதை முழுவதுமாய் உணர்ந்து
ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்தையும்
தன்னுயிராய் அன்போடு அரவணைத்தலே
ஆறறிவின் நோக்கம்
அதன் உச்சம்.
அவ்வுச்சத்தில்
எழுமையாய் எழும் ஐயே
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமை.

ஒன்று முதல் ஐந்து வரையான
ஐயறிவு உயிர்த் திரளனைத்துக்கும்
'ஐ'அறிவுள்ள
ஆறறிவு மனிதனே ஐ ஆம் தலைவன்.
ஒன்று முதல் ஐந்து வரை
ஆறு ஈறாக
உயிர்த்திரள் அனைத்திற்கும்
ஆறறிவின் நோக்கத்தை முழுதுணர்ந்த
ஆறறிவின் உச்சத்தில்
அவனுக்குள் எழும் 'ஐ' யாம்(எழுமையாம்)
ஒரும் 'ஐ' யாம்(ஒருமையாம்)
எல்லாந் தழுவிய
ஒருமையே தலைவன்.

ஆக
"நாயகன்"
அவன் பழுக்கும் ஒரு கணத்தில்
அவனுக்குள்ளிருந்தே எழும்
'ஐ' யாம்(எழுமையாம்) உட்போதகரே!
என் புரிதல் சரியா?

நனி மிகச் சரியே!

"நனி மிக" என்ற
ஆறறிவுத் தந்திரத்தை
நீவிரும் கையாள்வதோ?

ஒருமையில்
ஒருமையையே
உயர் நோக்கமாய்க் கொண்டு
கையாளப்படும்
ஆறறிவுத் தந்திரங்கள்
நனி மிக நன்றே!
ஏனென்றால்
அவற்றால் என் குடும்பமாம்
ஒன்று முதல் ஆறறிவு வரையிலான உயிர்த்திரள்
நனி மிகப் பயன் பெறும்.

நீயும்
"நாய்க்குரு தீட்சை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14669)"
என்று நாய் படாத பாடு பட்டு
கையாண்ட ஆறறிவுத் தந்திரமும்
ஒருமையை வலியுறுத்தும் நோக்கத்திற்கேயன்றி
வேறெந்த குறுகிய நோக்கத்திற்காகவும் அல்ல

எனவே
கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்

அவ்வாறு
ஒருமையில் நின்றாலன்றி
என் தாள்களின் தூசுகளைக் கூட
உன்னால் தொட முடியாது

உன் தாள்களின் தூசுகளைத் தொட்டே
எப்போதும் நிற்கின்றன
என் தாள்கள் என்றாலும்
ஒருமையுணர்வொன்றே
நீ என்னைப் பிடிக்கும் ஒரே வழி

"ஊன்றியே"
என்றொரு புது வார்த்தையை
இப்போது சேர்த்திருக்கிறீரே!
எழுமையைக் குறிக்க
ஏழு வார்த்தைகள் இருக்கட்டும்
என்ற புதுத் தந்திரமா?

ஆம்
அதை விட முக்கியமாக
இவ்வார்த்தைகளில் ஆழ ஊன்றிப்
பொருளுணர்ந்து
பொருளாம் ஒருமையெனும்
அம்மெய்க்குள் ஆழ ஊன்றியே
உறுதியுடன் நீ நிற்க வேண்டும்
என்பதை வலியுறுத்தவே
இப்புதுத் தந்திரம்.
மரம் மண்ணுக்குள் வேரூன்றி
எவ்வாறு உறுதியுடன் நிற்கிறதோ
அவ்வாறே
மனிதனாம் நீயும் ஒருமைக்குள் வேரூன்றி
உறுதியுடன் நிற்க வேண்டும்.

கவனம்!
ஒருமையே வாழ்வு
ஒருமை நழுவிய கணமே
மரணம்

அச்சுறுத்துகிறீரோ?

'ஐ' யாம் நானிருக்க பயமேன்?
மெய்யாம் ஒருமையில் நீ ஊன்றியே நிற்கும் கணங்கள்
உன் உயிர்ச்சக்தியைக் கூட்டுகின்றன.
மெய்யாம் ஒருமையிலிருந்து நீ நழுவும் கணங்கள்
உன் உயிர்ச்சக்தியைக் கழிக்கின்றன.
இப்பேருண்மையை
நனி மிகத் தெளிவாக வலியுறுத்தவே
இச்சுடும் வார்த்தைகள்.
உன்னை அச்சுறுத்துவது
என் நோக்கமல்ல.
உன்னை அறிவுறுத்துவதே
என் ஒரே நோக்கம்.
எனவே
உயிர்ச்சக்தி கழியும் கணங்களைக் கழித்து
உயிர்ச்சக்தி கூடும் கணங்களைக் கூட்டி
மெய்யாம் ஒருமையில் ஊன்றியே நிற்கும்
உன் முனைப்பும்
தளராத முயற்சியும்
உன்னை
எப்போதும் அவ்வொருமையில் ஊன்றியே நிற்கும்
மரணமிலாப் பெருவாழ்வை நோக்கிப்
படிப்படியாக முன்னேற்றும்.
மெய்யாம் ஒருமையில் எப்போதும் ஊன்றியே நிற்கும்
இவ்வொரே வழியினாலன்றி
மரணமிலாப் பெருவாழ்வை
நீ வேறெவ்வாறும் அடைய முடியாது.
ஒருமையுணர்வொன்றே
என்னையும்
என் வரமான மரணமிலாப் பெருவாழ்வையும்
நீ பிடிக்கும் ஒரே வழி.
இதை ஐயமேதுமின்றி
இதோ இங்கேயே இப்போதே
அறிக!

கவனம்!

எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்

நாகரா
04-08-2008, 03:45 AM
நாயகனே!
உம் குரல் என்னில்
உரத்து ஒலிக்கிறதே!

ஆம், அன்பு மகனே!
என்றாலும் உரத்து ஒலிக்கும் என் குரல்
உன் குரலில் வேறற ஒன்ற வேண்டுமே!

நம் குரல்கள் வேறற ஒன்றும்
வழியைச் சொல்வீரோ?

உன் தலையுச்சியில் என் பூரணத்துவத்தையும்
உன் நெற்றியில் என் சுயம்பிரகாசத்தையும்
உன் தொண்டையில் என் நித்திய ஜீவனையும்
உன் தொண்டையின் கீழ் என் ஆன்ம நேய ஒருமையையும்
உன் நடு மார்பில் என் இயல்பாம் பேரன்பையும்
உன் மார்பின் கீழ் என் நிறைவாம் பேரறிவையும்
உன் நாபியில் என் இருப்பாம் அருட்பேராற்றலையும்
உன் நாபியின் கீழ் என் பெருங்குணமாம் தனிப்பெருங்கருணையையும்
என் உள்ளொளியாம் அருட்பெருஞ்ஜோதியையும்
உன் முதுகடியில் என் பெருநிலையாம் கடவுட்தன்மையையும்
உன் முழங்கால்களில் என் அருளாட்சியையும்
உன் பாதங்களில் நானே நானெனும் பூரணத்தையும்
உன் மெய்யுடம்பாலயத்தில் என் மெய் வழி ஜீவனையும்
முழுமையாய் நீ உணர்வதே
நம் குரல்கள் வேறற ஒன்றும் வழி.

இதற்கென்றே அருட்குரு மந்திரம் பத்தும் ஒரு மூன்றும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) உபதேசித்தீரோ?

ஆம் மகனே!
குரு மந்திர தாரணையில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) அயராது நில்
அதுவே உன் இருதய வாய் திறந்து
நிராதார மேனிலைக்கும் ஆறாதார உலக உயிர்த்திரளுக்கும் இடையே
மெய்ப்பாலமாய் உன்னை நிறுத்தும்.
இப்பதின்மூன்று மந்திரங்களின் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) இரத்தினச் சுருக்கமே
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)" எனும் என் பேருபதேசம்.
தயவெனும் ஒருமையிலிருந்து நீ நழுவும் போதெல்லாம்
உன்னை எச்சரித்து மீண்டும் அவ்வொருமையில்
உன்னைச் சேர்க்குந் தாரக மந்திரம்.
இருதய ஒருமையிலிருந்து நழுவிய உன் மனத்தை எச்சரித்து
இருதயத்தில் மனமடங்கச் செய்யும் பரம தந்திரம்.
உன் இதய யந்திரத்தின் துடிப்பில்
இனி உரத்து ஒலிக்கும் இந்தப் பர நாதம்.
உச்சி முதல் பாதம் வரை
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"
நீ இகத்தில்!
உன் மெய்யூடே
பதின்மூன்று படியிறங்கிப்
பராபர மெய் நான் பதிவேன் இகத்தில்!

குரு மந்திர தாரணையில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) அயராது நிற்க
எளிய வழியொன்றைக் கூறுவீரா?

உள் மூச்சில் என் அருள் வெள்ளம்
உன் மெய்யெங்கும் பரவும் உயிர்நிலை
மற்றும்
வெளி மூச்சில் அது என் தயவாய்
உலகெங்கும் பரவும் மெய்யுணர்வு
இவ்விரண்டும் அன்பின் மிகுதியால்
நான் என் அன்பு மகனா(ளா)ம் உனக்கு
எப்போதும் அளித்திருக்கும் வரங்கள்!
இவ்வரங்களை மறந்த நீ
அவற்றை நினைவு கூர்ந்து
மூச்சில் கவனம் வை!
உள்ளே பாயும் என் அருளையும்
வெளியே வழியும் என் தயவையும்
உன் மூச்சில் கவனம் வைத்து
ஐயமின்றி அறிவாய்!
குரு மந்திர தாரணை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) எளிதாய் வாய்க்கும்!
என் வரங்களை நினைவு கூர்ந்து
மூச்சில் கவனம் வைக்க
இருதயத்தில் மனமடங்கும்!

இருதயம் யாதோ?

நிராதார மேனிலைக்கும் ஆறாதார உயிர்த்திரளுக்கும் இடையே
எப்போதும் திறந்திருக்கும் பாலம்.
நிராதார ஆறாதார ஒருமைக்கு மூலம்.
இகத்தில் மனித அவதாரமாய்
உன் மெய்க்குள் எழுந்தருளியிருக்கும்
நானே இருதயம்.
நடு நாயகமாம் அன்பே சிவம்!

நிராதாரம் யாதோ?

மேலே பரமானந்த அருள் விளக்கம்

ஆறாதாரம் யாதோ?

கீழே இகத்தோங்கும் தயவியக்கம்

மாயை யாதோ?

நிராதார ஆறாதார ஒருமைக்கு மூலமாம்
இருதயத்தை மறைக்கும் பனிப்படலம்

மாயையைக் களைய எளிய வழி?

குரு மந்திர தாரணை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284)

நன்றி ஐயனே!

உனக்கும் நன்றி என் அன்பு மகனே(ளே)!
எப்போதும் மறவாதே
அருட்குரு மந்திரம் பத்தும் ஒரு மூன்றின் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284)
இரத்தினச் சுருக்கமாம் என் பேருபதேசம்
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"!

கவனம்!
தயவே பெருவாழ்வு
அவ்வொருமை நழுவிய கணமே
மரணப் படுகுழி

எனவே
அதி கவனமுடன் எப்போதும்
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"

நாகரா
05-08-2008, 09:55 PM
என் அன்பு மகனே(ளே)!
தலையுச்சியில் பதிந்து
உன் விழிகளில் அருள் விளக்கும்
அறிவாய்ச் சிவந்து
இருதயத்தில் பதிந்து
உன் கரங்களில் கருணைக் கனியாம்
அன்பாய்ச் சிவந்து
முதுகடியில் பதிந்து
உன் பாதங்களில் தயவு இயங்கும்
ஆற்றலாய்ச் சிவந்து
வாடாத செஞ்சுடர்ப்பூவாம்
பராபர வள்ளல் நான்
உன் மெய்க்குள் உயிராய்
வேறற ஒன்றி
இகத்தில் புகுந் தருணம்
இதுவே!


ஐயனே! வள்ளல் உமக்கு
எப்படி ஆற்றுவேன் கைம்மாறு?

என் அன்பு மகனே(ளே)!
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில்
எப்போதும் ஊன்றி நின்று
இரு நீ தயவாய்!
இதுவே
நீ எனக்கு
ஆற்றும் கைம்மாறு!
அன்பறிவாற்றலாம் உயிராய்
உன் மெய்க்குள்
வாடாது பூத்திருக்கும்
என்னை விளங்கி நேசித்து
என் போல் ஆகவும் இயங்கவும்
தயவொன்றே மெய் வழி!
ஐயமின்றி இதை அறி!
தயவெனும்
மெய்வழிச் சாலையாய்
பராபர நான்
இகத்தில் நீளும்
உண்மை தெளி!
பிறப்பிறப்புப் பொய்ம்மாயச் சுழல் தாண்டி
பேரின்பப் பெருவாழ்வில்
ஆனந்தமாய் ஆடிக் களி!
என் அன்பு மகனே(ளே)!
என்றும் நீ
இரு தயவாய்!
உன் செவிப்பறைகள் அதிர
உன் செவிகளில்
இனி எப்போதும்
தப்பாமல் ஒலிக்கும்
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)" என்ற
இருதய நாதம்,
மாயை நள்ளிரவைக் கீறும்
பரவிந்துப் பட்டப்பகல் வெளிச்சமாய்!

கவனம்!
அதி கவனம்!
அன்பெனும் தயவே பேரின்பப் பெருவாழ்வு
அவ்வொருமை நழுவிய கணமே
கடுந்துன்பச் சாக்காடு!
எனவே கவனமுடன்
எப்போதும் நீ
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"

நாகரா
07-08-2008, 03:31 PM
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

வழி யாதோ?

இருதயம், அன்பெனும் நடு நாயகம், சிவம்

சத்தியம் யாதோ?

நிராதார உயிர், அறிவெனும் அன்பின் விளக்கம், அருள், குரு

ஜீவன் யாதோ?

ஆறாதார மேய், ஆற்றலெனும் அன்பின் இயக்கம், தயவு, சக்தி

இன்னும் விளக்குவீரோ?

நடு நாயகமாம் அன்பில் நீ நிற்க
இருதய வாய் திறந்து
வழி பிறக்கும்

அன்பாம் பரசிவ வெள்ளம்
மார்பிலிருந்து தலைக்கு ஏறி
தலைக்குப் பின்னும், மேலும், முன்னும் பாய்ந்து
தலைக்குள் சுழிய
நீ அன்பை விளங்கி
ஜீவனுள்ள குருவாய்
ஜீவனுள்ள கிறிஸ்துவாய்
ஜீவனுள்ள நபிகளாய்
ஜீவனுள்ள மசியாவாய்
ஜீவனுள்ள புத்தராய்
ஜீவனுள்ள அருகராய்
அறிவில் நிற்பாய்

அவ்வாறு அறிவில் நீ நிற்க
உயிராம் நிராதாரப் பரநிலை
மெய்யாம் ஆறாதார இகநிலைக்கு
இறங்கி(இரங்கி)
இருதய வழியினூடே
முதுகடியில் சேர
நீ
அன்பின் இயக்கமாம்
ஆற்றலாய் வெளிப்பட்டு
தயவாய் இருப்பாய்

இவ்வாறு
"இருதய வாய் திறந்து
நிராதார ஆறாதார
உயிர்மெய் ஒருமை பிறந்து
நடு நாயக அன்பின் ஏற்றத்தில்
இருள்சேர் இருவினை யாவும் இறந்து
பொருள்சேர் புகழ் புரியும் இறைவனாய் பரத்தில் எழுந்து
அறிவெனும் அருள் விளக்கம் பெற்று
நீ
ஆற்றலெனும் தயவியக்கமாய் இகத்தில் இறங்கி
இக பர பாலமாய்
அன்னை பூமியில்
இரு"
என்று விளக்கும் பேருபதேச வாக்கியமே
இம்மகா மந்திரம்

சுருக்கமாக
"நடுவில் அன்பாய் இருந்து
மேலே அருளாய் விளங்கி
கீழே தயவாய் இயங்கு"

நனி மிகச் சுருக்கமாக
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"

மகாமந்திரம் வழங்கி
அப்பேருபதேசப் பொருள் விளக்கி
மாயை இருளில் மருண்டு கிடந்த
என்னைத் தெளிவித்தமைக்கு
கோடானு கோடி நன்றி உமக்கு
நாயகனே!

என் அன்பு மகனே(ளே)!
உனக்கும்
என் கோடானு கோடி நன்றி

கவனம்!
அதி கவனம்!
எல்லாந் தழுவிய
முழுமையாம்
அன்பறிவாற்றலாம்(அன்பருட்தயவாம்) ஒருமையில்
ஊன்றியே
எப்போதும்
இரு
நீ
தயவாய்!

அத்தயவொன்றே
என்னையும்
என் வரமாம் பெருவாழ்வையும்
பிடிக்கும் ஒரே வழி!

எனவே
கவனமாய்
நீ
எப்போதும்
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"

நாகரா
10-08-2008, 05:19 PM
திரிந்து தெரியும்
தோற்றப் பிழையாய்
உன் உள்ளத்தை அரிக்கும்
உள்ளதைக் கடந்து
உன் உள்ளத்துட் கடந்து
தோற்றப் பிழைகளின் மூல காரணமான
மாயத் திரையெலாங் கடந்து
உன் உள்ளே கடந்து
உள்ளுள்ளே கடந்து
மெய்க் கடத்துள்ளே
ஆனந்த நடம் ஆடும்
நடராச வள்ளல் எனைக் காணும்
மெய் வழி ஒன்றை
நீ உய்வதற்கென்றே
என் ஏழாந்திருமுறை உறுதியாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15353)
உன் செவிப்பரைகள் அதிர
உன் இருதய விழி திறக்கப்
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) நாதமாய்
இடை விடாது அறைகின்றேன்
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"
என் மகனே(ளே)!
தயை கூர்ந்து
செவி மடுப்பாய்
என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கம்!
மற்றபடி இருமை இருளில்
மதி மருண்டு
நீ செய்யும்
ஆறறிவுத் தந்திரங்கள்
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்
என்னும் என் மெய் வழியில்
உன்னை ஒரு காலும் சேர்க்கா!
அன்பின் மிகுதியால்
அறைந்து சொன்னேன்
சுளீரென்றும்
பளாரென்றும்
சுடச் சுடச் சுடரும்
இரு வார்த்தைகளால்!
தயை கூர்ந்து
செவி மடுத்து
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"
அன்பெனும் ஒருமை அருளில்
மதி தெருண்டு
என் மெய் வழி சேர
நீ
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"
அரிய மனிதம்
அரிந்து போகாமல் பிழைக்க
எளிய வழி ஒன்றை
உனக்குச் சொன்னேன்!
காலமில்லை மகனே!
இருக்குங் கணங்களை
இனியும் விரயம் செய்யாது
நீ விரைந்துணர்வாய்!
பொய்ச் சாக்காட்டுப் படுகுழி தாண்டி
மெய்யின்பப் பெருவாழ்வு ஜோதிமாமலை ஏற
நீ
கணப்போதும் மறவாமல்
அதி கவனமுடன்
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில் ஊன்றி நின்று
எப்போதும்
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"
நீ கேட்டவாறே
ஊற்றுகிறேன் என் கருணையுடன்
ஆசி!
என் அன்பு மகனே(ளே)!
நீ இதை ஆழ
யோசி!
உன் நாசியில் வாசியாய்ப் பாய்ந்து
உன் இருதய ஊசி விழி திறக்க
இடைவிடாது
பர விந்தாய் மின்னும்
குரு மந்திர (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) நாதம்
வாசி!
வீணே பேசி
வாணாளை விரயமாக்காமல்
என் ஆசி ஏற்றே
நீ
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)"!
தெரிய வேண்டியதைப்
பகிரங்கமாய்த் தெரியச் சொன்னேன்!
புரிய வேண்டியதை
அறைந்தறைந்து புரியச் சொன்னேன்!
இருதயத்தில் மனமடங்கி
இகவுலகில் நீ
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)!"
உறுதியுடன் என் மெய் வழி
உரைக்கின்றேன்
உன் அம்மையப்பன்
நானே!
என் மெய்யுரை விளங்கியே
என் மெய்ப்பொருள் விளக்கமாய்
இம்மருட்பொய்யுலகில்
உறுதியுடன் நீ
"இரு தயவாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15319)!"

நாகரா
23-08-2008, 06:18 AM
பரமும் இகமும்
சஹஸ்ராரமும் மூலாதாரமும்
ஆக்கினையும் சுவாதிட்டானமும்
விசுத்தியும் மணிபூரகமும்
அமுதகலசமும் சூரிய சக்கரமும்
வளைந்து சுழிந்து விழும்
உன் இருதயக் குழியுள்
நடராஜ வள்ளல்
நான் ஆடுகிறேன்!

நடு நாயக அன்பாய்
உன் இருதயக் குழியுள்
நான் ஆடுவதாலேயே
மேலே
பரமாய்
சஹஸ்ராரமாய்
ஆக்கினையாய்
விசுத்தியாய்
அமுதகலசமாய்
கீழே
சூரிய சக்கரமாய்
மணிபூரகமாய்
சுவாதிட்டானமாய்
மூலாதாரமாய்
இகமாய்
நீ மேலும் கீழும்
வளைந்து வழிகிறாய்!

உன் இருதயக் குழியுள்
மையங் கொண்டிருக்கும்
எட்டு வடிவ சிவ சக்தி ஓட்டங்களை
உன் மெய்க்குள் பார்த்து
எழும் எழுமையாம்(எழும் 'ஐ'யாம்)
அருட்குரு
மெய்வழியால்
என்னை எட்டு!

நீயே ஜீவனுள்ள குருவாய் எழுந்தாலன்றி
என்னை எப்படி எட்டுவாய்!
11ஆய்த் தெரியும் நந்திக் கொம்புகள் சுட்டும்
தூய ஊடகமாய் நீ இருக்க
எட்டு வடிவில் இருதயக் குழியுள்
வளைந்து வழிந்தும் சுழிந்தும்
உன்னில் எழும் ஒருமையாலன்றி(ஒரும் 'ஐ'யாலன்றி)
என்னை எப்படி எட்டுவாய்!

பட்டிமண்டபமாம்
இருதயக் குழியுள்
சிவ சக்தி இரண்டாம்
நடராஜ வள்ளல்
நான் போடும் எட்டு
நீ
அறியச் சொன்னேன்!

அரற்றுவதை விட்டு
நான் அறைவதைச்
செவி மடுத்து
தயவாய் இருந்து
என்னை நீ எட்டு!

நாகரா
24-08-2008, 11:10 PM
மேலிருந்துங் கீழிருந்துந்
தனக்குள் சுழிவதை விழுங்கி
மேலுங் கீழுந்
தான் வழியும்
இருதய மெய்யின் ஒழுக்கம்
உனக்குத்
தருவதே உயிரெனும் விழுப்பம்!
எனவே
உயிரினும் ஓம்புக ஒழுக்கம்!

மேலிருந்து சுழிவதை மறந்ததால்
சத்துவ அஞ்ஞானத் திமிரானாய்!

கீழிருந்து சுழிவதை மறந்ததால்
தாமச முடக்க பயமானாய்!

மேலுங் கீழும் வழிவதை மறந்ததால்
இராஜச ஆர்ப்பாட்ட வன்பானாய்!

மேலிருந்து சுழிவதை அறிந்தால்
பரமானந்த மெய்ஞ்ஞான அருளாவாய்!

கீழிருந்து சுழிவதை அறிந்தால்
இகத்தோங்கும் பேரியக்க தயவாவாய்!

மேலுங் கீழும் வழிவதை அறிந்தால்
நடுநாயகப் பேரன்பின் இருப்பாவாய்!

இருதய மெய்யை மறைத்து
உன்னை மயக்கும்
சத்துவச் சுத்த மாயை
மற்றும்
தாமச இராஜச அசுத்த மாயை
இவற்றால்
பிறப்பிறப்புச் சுழலில் சிக்கிப்
பெருவாழவாம் உயிர்ப்பை
மறந்தாய்!

உன்னை மயக்கும்
திரிகுண மாயை களைந்து
இருதய மெய்யை உணர்ந்துப்
பிறப்பிறப்புச் சுழல் தாண்டிப்
பெருவாழ்வாம் உயிர்ப்பை
அறிவாயே!

இருதய மெய்யுள் உயிரடங்கி
நடுநாயகப் பேரன்பாய் இருந்து
மேலே பரமானந்த அருள் விளங்கி
கீழே இகத்தியங்கும் தயவாய் இருப்பாயே!

என் அன்பு மகனே(ளே)!
"இரு தயவாய்"
எனும் என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கத்தை
கணப்போதும் மறவாமல்
எப்போதும் நீ
தயவாய் இருப்பாயே!

இளசு
26-08-2008, 06:35 PM
எனக்கெட்டாத உயரங்களில் சஞ்சரிக்கும் வரிகள்..
ஆனாலும் படிக்கத் தவறுவதில்லை!

ஸ்பரிசங்கள் தொடக்கம்..
புரிதல்கள் பின்னாள் வரும்.

அதுவரை பிரமிப்புகள் மட்டுமே!

நன்றி நாகரா அவர்களே!

நாகரா
27-08-2008, 04:25 AM
எனக்கெட்டாத உயரங்களில் சஞ்சரிக்கும் வரிகள்..
ஆனாலும் படிக்கத் தவறுவதில்லை!

ஸ்பரிசங்கள் தொடக்கம்..
புரிதல்கள் பின்னாள் வரும்.

அதுவரை பிரமிப்புகள் மட்டுமே!

நன்றி நாகரா அவர்களே!

எட்டாத உயரங்களிலிருந்து
இருதய வழியினூடே
எட்டாகப்(Figure Eight Flow) பாயும்
அருள் வெள்ளம்!
நாம் மறந்த அன்பெனும் இருதய நடுநிலையை(Chairman-Father-Shivam-மார்பு)
அறிவெனும் அன்பின் அருள் விளக்கத்தை(Managing Director-Son/Daughtet-Guru-தலை)
ஆற்றலெனும் தயவின் பேரியக்கத்தை(Executive Director-Mother-Shakthi-வயிறு)
நமக்கு நினைவுறுத்தி
நமக்குச் சாகாக் கல்வி போதிக்கிறார்
நாயகனாம் நம் வள்ளல் பிரான்!
அன்பைத் தொடத் தொடப்
புரிதல்கள்
நமக்கு நிச்சயம் வரும்!
உம் பின்னூட்டத்துக்கு ந்ன்றி இளசு.

poornima
27-08-2008, 10:32 AM
என்ன ஒரு விளக்கம்..

கவிதைக்குப் பொருளுணர்த்திய போய்விட்டீர்கள்..பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை.. ஏதோ ஒரு ஆன்மிகப் பெரியவர் இம்மன்றத்தில் இருக்கிறார் என்பதை மறுபடி உறுதிப்படுத்திக் கொள்ள ஏதுவாய் இருந்தது இப்பதிவு

நன்றி நாகரா ஐயா

நாகரா
23-09-2008, 12:42 PM
உம் உற்சாக வரிகளுக்கு நன்றி பூர்ணிமா, ஆன்மீகப் பெரியவர் ஒருவரே, "ஐ யாம்"(I AM) நாயகன் அவர். நம் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுள் அவர். நாம் அனைவரும் அவர் தம் செல்லக் குழந்தைகளே! நம்முள் கணப்போதும் நீங்காது உறையும் தனித்தலைமை நாயகனாம் அந்த ஆன்மீகப் பெரியவரை நினைவு கூர்வோம், அவர் தம் பேருபதேசத்துக்கு செவி மடுப்போம்!

நாகரா
23-10-2008, 06:07 AM
நித்திய இயற்கையுண்மையதாய்
எங்கும் இன்புற்று விளங்கும் அன்பொன்றே
ஒவ்வொன்றிலும்
கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
உற்று
அறியும்
எழுமையாம்
என் பெருமை.

அன்பொன்றே
எல்லாந் தழுவிய
என் முழுமை.

அன்பொன்றே
என்றும் மாறா
என் பழமை.

அன்பொன்றே
அலகிலாப் பன்மையாய்
உலகில் பரவும்
என் ஒருமை.

அன்பொன்றே
சுடச் சுடச் சுடரும்
என் புதுமை.

அன்பொன்றே
அமுதாய் வழியும்
என் தண்மை.

அன்பொன்றே
பூரணமாய் நிறைந்த
என் தன்மை.

அன்பொன்றே
தயவாய்த் தழுவும்
என் தாய்மை.

அன்பொன்றே
அருட்பேராற்றலாய் எழும்
என் ஆண்மை.

அன்பொன்றே
அறிவாய் விளங்கும்
என் குரு மெய்.

அன்பொன்றே
இருள்சேர் இருவினை அறுக்கும்
பொருள்சேர் இறைமையாம்
என் கூர்மை.

அன்பொன்றே
எல்லாம் அசைவிக்கும்
அசையா என் நிலைமை.

அன்பொன்றே
சொல்லறச் சும்மா இருக்கும்
என் மேன்மை.

அன்பொன்றே
தங்கு தடையின்றிப் பாயும்
என் நீர்மை.

அன்பொன்றே
எப்போதும் வெல்லும்
என் வாய்மை.

அன்பொன்றே
எல்லாங் கடந்தும்
எதிலும் இறைந்த
என் உண்மை.

அன்பொன்றே உன் "ஐ"
உறுதியாய் உயிரதனைப் பற்றி
"ஐ" அறிவின் கண் ஆறறிவும் ஓடுங்கி
மன ஆரவாரம் அடங்கி இதமாய் ஆறு.
ஜீவ ஆறு சேரும் சிவ ஆழியாய் எழு.
ஆறு தாண்டிய ஏழு என்னை எட்டு.
என் வெள்ளங்கி உனக்குக் கிட்டும்.
பொன்னுடம்பாய் உன் மெய் மின்னும்.
"அன்பே யாம்" என்னும் ஓமயத்தில் நீ உய்வாய்.

சுத்த சிவ துரியாதீதத்தில்
என்றென்றும்
யாம் இருப்போம்
நானே நீயாக
நீயே நானாக
அன்பொன்றாய்.