PDA

View Full Version : எங்கே நண்பா எங்கேrajeshkrv
24-02-2008, 02:29 AM
இவையெல்லாம் எங்கே...

கூட வரும் நண்பர் கூட்டம் எங்கே..

ஓடி விளையாடிய அந்த மாந்தோப்பு எங்கே

ஆற்றங்கரையில் அழகாக நாம் கட்டிய வீடுகள் எங்கே

படித்து படித்து சிலாகித்த பாரதியின் கவிதைப்புத்தகங்கள் எங்கே

பெருந்திரளாக மக்கள் கூடும் திருவிழா எங்கே

இவையெல்லாம் விட அந்த அழகான பள்ளிப்பருவம் எங்கே நண்பா எங்கே..


வருமோ இனி அந்த வசந்த காலம் ..

சிவா.ஜி
24-02-2008, 03:19 AM
இவை எல்லாமே அங்கேயேதான் இருக்கிறது நன்பா...நாம்தான் இவையனைத்தையும் விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம்.
பொருள்தேடும் பயணத்தில் சுமையாய் இவை எதற்கு என்று சாலையோரம் வைத்துவிட்டு வந்தவை...ஒரு கட்டத்தில் தேவைப்படுகிறது திரும்பப் போய் அவற்றை எடுத்துவர இயல்வதில்லை....அதனால் மனதை மட்டும் அங்கே அனுப்பி வைக்கிறோம் அவ்வப்போது.
வாழ்த்துகள் ராஜேஷ்.

இளசு
24-02-2008, 05:40 AM
வாங்க குரு..

மகாமகம் போல் - உங்கள் கவிதைப்பக்க வரவு!

இதுவரை ஒன்றிரண்டு கவிதை மட்டுமே உங்களிடமிருந்து..

இக்கவிதைக்கு உங்கள் ரசிக-சீடனின் பாராட்டுகள் முதலில்..

காலங்கள் மாறிவரும்..
காட்சிகள் எங்கே?

வந்தவை எல்லாம் தங்கிவிட்டால் - நம்
வாழ்வில் மற்றவற்றுக்கு இடம் ஏது?

(வைரமுத்து + கண்ணதாசனை இணைத்து ஒரு ஒட்டுச்செடி..)

ஜெயாஸ்தா
24-02-2008, 06:41 AM
வருமோ இனி அந்த வசந்த காலம் ..

நிச்சயம் அந்த காலம்
இனி வரும்...
நமக்கல்ல நம் வாரிசுகளுக்கு...!
அவர்கள் உணர்வை
நம்முணவர்வாய் அனுபவதித்து
மகிழவேண்டியதான்...!
பார்த்துப் பசியாறும்
பக்குவம் பெறவேண்டியதுதான்...!

சுகந்தப்ரீதன்
03-03-2008, 01:01 PM
கவிதைக்கு வாழ்த்துக்கள்..ஆனாலும் கண்டிப்பா திரும்பி வாராது குருவே...!!

படத்துல பாத்து சில நினைவுகளை நினைத்து நமக்கு நாமே சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்...!!

என்னகுரு இது நம்ப ஏரியா பக்கம் இப்பல்லாம் வரவே மாட்டேங்குறிங்க...!! ஜெயப்ரதா ரொம்ப வருத்தப்பட்டாங்க நீங்க வரலன்னு என்கிட்ட...!!

அமரன்
03-03-2008, 05:49 PM
ஹி...ஹி....
இதுக்கு தாமரை அண்ணாவின் நூதன தொழிநுடபம்தான் சரியானது..
வீழும் வரை உடலாலும் உள்ளத்தாலும் வாழ்வோம்..
உள்ளம் காலக்கடிகாரத்தை இயல்புக்கு மாறான வேகத்தில் வலஞ்சுழியாகவும், இடஞ்சுழியாகவும் சுழலவைக்க வல்லது..
நேற்றைய நிஜங்களையும், நாளைய நிஜங்களையும்/நிழல்களையும் கண்டுகளிக்க சிறந்த வசதிவாழ்க்கை..

பாராட்டுகள் அண்ணா!

ஓவியன்
28-03-2008, 12:06 PM
சிவா கூறியது போன்று அவையெல்லாம் அங்கேயேதான் இருக்கின்றன, ஆனால் அவற்றுடன் தான் நாமில்லை....

நாம் தான் மாறிக்கொண்டிருக்கின்றோம், நம்மிடத்தில் நம் வாரிசுகள்...!!

ஆனால், அவை அவையாகவே இன்னும் பசுமையாக........!!

kavitha
17-06-2008, 05:04 AM
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே... பாடலை நினைவு படுத்துகிறது இக்கவிதை. மீண்டும் பள்ளிப்பருவம்...? போகமுடியாது. ஆனால் இந்த நிமிடத்தை அனுபவிக்கமுடியுமே... சமயம் கிடைக்கும்பொழுது பிள்ளைகளுடன் இதே விளையாட்டை விளையாடுங்கள். அவர்களிடமிருந்து அன்னியப்படாமல் இருக்க ஒரு தந்தையால் செய்யக்கூடிய சுலபமான வழி இது. குழந்தைகள் தனது வயதொட்டிய பிள்ளைகளோடு விளையாடுவதை விட அதிகமாக மகிழ்வுறுவர்.

நேசம்
18-06-2008, 04:26 AM
அந்த நினைவுகளால் சந்தோஷப்படலாம்.நம்முடைய வாரிசுகளுக்கு கூட இது போன்று இனிமையான தருணங்கள் அமையுமா என்பது சந்தேகம் தான். நல்ல கவிதை. வாழ்த்துகள் அண்ணா.