PDA

View Full Version : வெப் டிசைனிங், அனிமேஷன் விளக்குங்களேன்!



அனுராகவன்
24-02-2008, 02:22 AM
வெப் டிசைனிங் & அனிமேஷன் பற்றி தெரிந்தவர்கள் விளக்கம்
தாங்களே..
நான் அதை என் நண்பன் என்னிடம் கேட்டான்..
அதை இங்கு கேட்கலாம் நினைக்கிறேன்..

srisha
24-02-2008, 05:59 AM
எனக்கும் ஓரளவு தெரியும். இருப்பினும் மேலும் கற்க ஆவலோடு உள்ளேன்

praveen
26-02-2008, 07:24 AM
இரண்டும் பெரிய கடல், இதனை ஒருவரியில் கேட்டு எப்படி பதில் பெற/தர இயலும்.

கூகிள் சென்று தேடிப்பாருங்கள்.

நான் பல தரப்பட்ட பக்கங்களில் தேடியதை இங்கே தருகிறேன்.

ஐந்து நிமிடத்தில் அனிமேஷன் கற்றுக்கொள்ளுங்கள் .. !

அனிமேட்டிங் படங்கள் உங்களின் இணையப்பக்கத்துக்கு ஒரு கவர்ச்சியை அளிக்கின்றன என்றால் அது மிகையாகாது.. அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களைவிட மனிதனின் கவனத்தைக் கவரும் என்று உளவியல் கூறுகிறது.. அத்தகைய அனிமேட்டிங் படங்கள் செய்வது பற்றி மிகச்சுருக்கமாகப் பார்க்கலாம் ...

1.அனிமேட்டிங் செய்ய முதலில் நமக்குத் தேவை தனித்தனிச் சட்டங்கள்(frames).. அதாவது படங்கள்.. உங்களுக்குத் தேவையான படங்களை நீங்களே தயாரித்துக்கொள்ளலாம்.. அல்லது www.google.com - ல் image search பயன்படுத்தித் தேவையான படங்களை எடுத்து அல்லது "paint" போன்ற ஏதாவது ஒரு மென்பொருளில் வரைந்து,வெட்டி, ஒட்டி...... உருவாக்கிக் கொள்ளுங்கள்... படங்கள் எந்த வரிசையில் இயங்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வரிசையில் முதலில் பெயர் கொடுத்துக்கொண்டீர்களானால் வசதியாக இருக்கும் .. எடுத்துக்காட்டாக .. 1.jpg , 2.jpg , 3.jpg .....

2.சரி.. இப்போது தனித்தனிப் படங்களைத் தயாராக வைத்துக்கொண்டுவிட்டோம்..அடுத்ததாக அந்தப் படங்கள் அனைத்தையும் ஒரே பைலாக விரும்பிய வரிசையில் தைக்க வேண்டும்.

3.பின்னர் ஒரே படமாகத் தைத்த பைலை இயங்குகின்ற gif பைலாக மாற்றவேண்டும்..
அவ்வளவுதான் இப்போது நீங்கள் இயங்கும் gif படம் செய்துவிட்டீர்கள்.....

இப்போது நம் அனைவருக்கும் வருகின்ற சந்தேகம்... பல படங்களை எப்படி ஒரே படமாகத் தைப்பது? .. அதனை எப்படி இயங்கும் gif பைலாக மாற்றுவது? என்பதுதான்... இதைப்பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப் படவேண்டாம்.. இந்த வேலையை செய்ய உங்களுக்கு நிறைய மென்பொருட்கள் உள்ளன.. அதில் எளிமையான ஒரு மென்பொருளை நீங்கள் இணையத்திலிருந்து இறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்... இதற்காக நிறைய மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கிறது... அவற்றில் ஒன்று "அனிமேட்டர்9" என்பது. இது இந்த இணைப்பில் இலவசமாய்க் கிடைக்கிறது..

http://www.vvcool.com/animator9/download/animator.exe

அந்தக் கோப்பை இறக்கி உங்களின் கணினியில் சேமித்துப் பின்னர் அதன்மேல் இருமுறை கிளிக் செய்தீர்களானால் எந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கேட்கும்.. இடத்தைத்தேர்வுசெய்து நிறுவிக்கொள்ளுங்கள்.. இந்த பைலின் அளவு 500 KB க்கும் குறைவுதான்...

இந்த "animator9" மென்பொருளைப் பயன்படுத்துவது மிகவும் எளிது... இதிலுள்ள "stitch" என்ற பட்டனைத் தட்டி உங்களின் படங்களைத் தேவையான வரிசையில் தேர்வு செய்து "done" என்ற பட்டனைத் தட்டி அனைத்தையும் ஒரே படமாகத் தைத்துக் கொள்ளலாம்.... பின்னர் "play" என்ற பட்டனை அழுத்தினால் படம் எவ்வாறு இயங்கும் என்று நமக்குத் தெரியும்.. படங்கள் இயங்கும் வேகத்தை "control" என்ற option - ஐ பயன்படுத்திக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.. அதன் பின்னர் "make" என்ற பட்டன் அழுத்தினால் உங்களின் அழகான இயங்கும் படம் தயார்... அப்புறமென்ன .... உங்கள் படம் இயங்குவதைப் பார்த்து ரசிக்கவேண்டியதுதான்..


அனிமேட்டர்9 போன்ற எளிதான மென்பொருள்களும் பல உள்ளன.. அவற்றில் ஒன்று .. மேஜிக் மார்ப் என்பதாகும் ... அதனை இங்கேயிருந்து இறக்கிக்கொள்ளலாம் ( http://www.effectmatrix.com/ ) .. இந்த மென்பொருளைப் பயன்படுத்து பல படங்களைத் தயாரிக்கலாம் ..


என்ன .. நண்பர்களே .. ! இப்போதே நீங்களும் இயங்கும் படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே ...

நன்றி : யாழ்

மனோஜ்
26-02-2008, 07:38 AM
பிலாஸ் அனிமேசன் தயரிக்க என்ன வழி ?:confused:

kavitha
26-02-2008, 07:51 AM
flash- லேயே ஃப்ரேம் செட்டிங்க்ஸ், டைம் செட்டிங்ஸ் இருக்கும். புதிதாகவும் தயாரிக்கலாம்; இருக்கும் படங்களை கோர்த்தும் அனிமேஷன் உருவாக்கலாம். f1 ஹெல்ப் - போய் பார்த்தால் மேலும் விளக்கங்கள் பெறலாம் மனோஜ்.

சூரியன்
03-03-2008, 01:28 PM
http://www.vvcool.com/animator9/download/animator.exe இந்த சுட்டி வேலைசெய்யவில்லை.

அனுராகவன்
17-03-2008, 08:14 AM
நன்றி பிரவிண் அவர்களே!!
எனக்கும் சூரியன் கூறிய சுட்டி வேலை செய்யல..
தொடர்ந்து தாருங்கள்..
ஆவளோடு உள்ளோம்..

வெற்றி
18-03-2008, 09:07 AM
எனக்கும் கூட இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுகனும் ப்ரவீண் ..(தனி மடலில் ஒரு முறை கேட்டு இருந்தேன் ..டெக்ஸ்டு பைலை gif ஆக எப்படி மாற்றுவது என)

நன்றி பிரவிண் அவர்களே!!
எனக்கும் சூரியன் கூறிய சுட்டி வேலை செய்யல..
தொடர்ந்து தாருங்கள்..
ஆவளோடு உள்ளோம்..
http://www.download.com/Animator-9/3000-2186_4-10026029.html
இது வேலை செய்கிறது (இது தானா நீங்கள் சொன்னது??)

நன்றி பிரவீண் என் இப்போதைய மாறும் அவதார் உங்கள் விளக்கப்படி செய்தது....(நல்லா இருக்கா??)

:medium-smiley-031::medium-smiley-031::medium-smiley-031::medium-smiley-031::medium-smiley-031::medium-smiley-031:

பின்னர் பதித்தது ..மிக்க நன்றி இந்த மென்பொருள் தான் நான் கேட்டது போலும் கண்டு கொண்டேன்...கண்டு கொண்டேன்
இதோ நாங்களும் போடுவோம்ல,,,,,,

thamilan2007
31-03-2008, 04:39 AM
இணையத்தில் பக்கங்களை வடிவமைப்பதற்க்கு மென்பொருள்கள் சில

1.மேக்ரோமீடியா டிரீம்வீவர்

2.மைக்ரோசாப்ட் பிரண்ட்பேஜ்
அனிமேசன் படங்களை உருவாக்க
1.செல்டெக்கோ பேனர்சாப்
bannershop-
www.selteco.com/bannershop

2.செல்டெக்கோ பட்டன் மேக்கர்
buttonmaker-
www.seltecodownload.com/btnm.php

பிளாஷ் படங்களை அமைப்பதற்க்கு


1.செல்டெக்கோ பிளாஷ் டிசைனர்7
flash designer-
www.seltecodownload.com/sfld.php

2.சுவிஷ் மேக்ஷ்2
swish max-
www.swishzone.com/index.php?area=downloads

வெற்றி
01-04-2008, 03:01 AM
அனிமேசன் படங்களை உருவாக்க
1.செல்டெக்கோ பேனர்சாப்
bannershop-
www.selteco.com/bannershop
ஐ இதுவவம் நல்ல இருக்கே நன்றி..தமிழன்
இதோ அதில் செய்த பேனர்

meera
05-04-2008, 09:23 AM
adope photoshopபில் அனிமேஷன் எப்படி செய்வது என்று கற்று தாருங்கள் பிரவீன்.

reader
09-04-2008, 07:05 AM
adope photoshopபில் அனிமேஷன் எப்படி செய்வது என்று கற்று தாருங்கள் பிரவீன்.

அடோப் போட்டோஷாப்பில் படங்களை எடிட் செய்வது மட்டுமே சாத்தியம் அனிமேஷம் அல்ல.......

meera
09-04-2008, 08:24 AM
ஓ அப்படியா? adope photoshop- liquify tool உபயோகித்து எப்போதோ செய்தது போல் ஞாபகம்.அதான் கேட்டேன்.

அக்னி
09-04-2008, 04:08 PM
அடோப் போட்டோஷாப்பில் படங்களை எடிட் செய்வது மட்டுமே சாத்தியம் அனிமேஷம் அல்ல.......
சாத்தியமானதே...
Adobe Photo Shop இல் உள்ள Window இல் Animation ஐக் கிளிக்கினால், Frames ஐக் காணலாம்.
Adobe Photoshop உடன் இணைந்த Adobe Imageready ஐ உபயோகிப்பதன் மூலம் தெளிவான Animation படங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

பிரவீண் அவர்களின் வழிகாட்டலில் நானும் முயன்றுள்ளேன்...

முதலாவது படம் ஒரு தடவை விடிவதுபோல தோன்றி, அப்படியே நிற்கும்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/TamilMantram2.gif

அடுத்த படம், மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/TM-2.gif

இவை Adobe இல் தான் செய்யப்பட்டது.

சூரியன்
10-04-2008, 04:07 PM
அடடே எல்லாரும் பின்றாங்க .!

Keelai Naadaan
11-04-2008, 04:39 AM
பயணுள்ள விஷயங்கள்.
அனைவருக்கும் மிக்க நன்றி

சூரியன்
18-05-2008, 07:33 AM
http://http://www.download.com/Animator-9/3...-10026029.html
இதை எப்படி பயன்படுத்துவது?

SathyaThirunavukkarasu
18-05-2008, 11:50 AM
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

வெற்றி
19-05-2008, 04:16 AM
http://www.download.com/Animator-9/3000-2186_4-10026029.html
அனிமேசன்9 பற்றி எனில் அதைப்பற்றி வரிவரியாக பிரவீண்னின்
விளக்கம் http://www.tamilmantram.com/vb/showpost.php?p=328974&postcount=3 இங்கே..(அதாவது மூன்றாம் பதிப்பு)