PDA

View Full Version : அழகன்.



திவ்யா
23-02-2008, 07:46 AM
நீ எப்பொழுது மிக அழகாய் இருக்கிறாய் தெரியுமா?
என்னை காண்பதற்காக
வெகுதூரம் பயணம் செய்து
தூக்கமிழந்து, கேசம் கலைந்து
சோர்வுடன் வந்தாலும்
என்னைப் பார்த்ததும்
மலர்ச்சியுடன் புன்னகைத்து
கண்களால் நலம் விசாரிப்பாயே
அந்த அழகிற்கு எதுவும் ஈடாகாது என் காதலனே!

ஆதி
23-02-2008, 07:57 AM
பொருள்வயிற் பிரிந்தோ அல்லது மற்ற காரணங்களால் பிரிந்து, மீக நீண்ட இடைவெளிக்கு பின் நிகழ்கும் ஒரு சந்திப்பின் சங்கீதம் இந்த உணர்வுகள்.. யாதார்தமான கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி..

அன்புடன் ஆதி

அனுராகவன்
23-02-2008, 08:11 AM
நன்றி திவ்யா..
மிக நல்ல கவி..
என் வாழ்த்துக்கள்

kavitha
23-02-2008, 08:31 AM
வாருங்கள் திவ்யா.
பெண்கள் காதலைப்பற்றி, காதலனைப்பற்றி எழுதுவது வரவேற்கத்தக்க விசயம்.
கவிதையின் பொருள் நன்றாக இருந்தாலும் இன்னும் சற்று கலை நயத்துடன் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அது ஒரு பிழையில்லை என்றாலும், இன்னும் அதன் நளினம் கூடியிருக்குமே... முயற்சிப்பீர்களா?

சுகந்தப்ரீதன்
23-02-2008, 08:53 AM
மனதுக்கு பிடித்துவிட்டால் யாரையுமே எப்போதுமே அழகாகத்தான் காட்டும் காதலில் கட்டுண்ட கண்கள்...!!

தொடருங்கள் திவ்யா...வாழ்த்துக்கள்..!!

இளசு
23-02-2008, 02:29 PM
பசியை மிஞ்சிய ருசியூக்கி இல்லை!
அன்பை விஞ்சிய அழகூட்டி இல்லை!!

பாராட்டுகள் திவ்யா அவர்களே!

பூமகள்
23-02-2008, 04:30 PM
களைப்பை களிப்பாக்குவதும்
வலியை சுகமாக்குவதும்
காதலியின் கடைக்கண்
பார்வையன்றோ??
காதலி பார்வை பட்டுவிட்டால்
காதலன் மன்னாதிமன்னரன்றோ??

அற்புதமான கவிதை..!!
பாராட்டுகள் தோழி திவ்யா..!! :)

அமரன்
23-02-2008, 07:15 PM
நீ எப்பொழுது மிக அழகாய் இருக்கிறாய் தெரியுமா?
என்னை காண்பதற்காக
வெகுதூரம் பயணம் செய்து
தூக்கமிழந்து, கேசம் கலைந்து
சோர்வுடன் வந்தாலும்
என்னைப் பார்த்ததும்
மலர்ச்சியுடன் புன்னகைத்து
கண்களால் நலம் விசாரிப்பாயே
அந்த அழகிற்கு எதுவும் ஈடாகாது என் காதலனே

ஆக்காக்கா...
பித்துப் பிடித்தவன் நிலையில்
அவனைக் காண்பதழகோ!!

ச்சும்மா தமாசுக்கு சொன்னேன்.. தப்பா நினைக்காதீங்க திவ்யா.
+++++++++++++++++++++++

விளையாடி வேர்த்த பிள்ளை
கற்றுக் கண்ணயர்ந்த குழந்தை.
உழைத்துத் தேய்ந்த தந்தை.
சமைத்து அழுக்கான அன்னை.
அளைந்து கசங்கிய இணைச்சேலை
சொல்லிச்செல்ல நெடு வரிசை.
இடையில் நீங்கள் சொன்னதுவும்.


கவீக்கா சொன்னதைக் கவனத்தில் கொண்டு தொடர்ந்து மின்ன வாழ்த்துகள்.

அனுராகவன்
24-02-2008, 12:03 AM
மனதுக்கு பிடித்துவிட்டால் யாரையுமே எப்போதுமே அழகாகத்தான் காட்டும் காதலில் கட்டுண்ட கண்கள்...!!

தொடருங்கள் திவ்யா...வாழ்த்துக்கள்..!!

அனுபவம் போல
காதலில் கண்கள் உண்டா??
மனசுக்கு என்ன தான் பிடிக்கும்..

திவ்யா
24-02-2008, 01:09 AM
ஆக்காக்கா...
பித்துப் பிடித்தவன் நிலையில்
அவனைக் காண்பதழகோ!!

ச்சும்மா தமாசுக்கு சொன்னேன்.. தப்பா நினைக்காதீங்க திவ்யா.
+++++++++++++++++++++++

விளையாடி வேர்த்த பிள்ளை
கற்றுக் கண்ணயர்ந்த குழந்தை.
உழைத்துத் தேய்ந்த தந்தை.
சமைத்து அழுக்கான அன்னை.
அளைந்து கசங்கிய இணைச்சேலை
சொல்லிச்செல்ல நெடு வரிசை.
இடையில் நீங்கள் சொன்னதுவும்.


கவீக்கா சொன்னதைக் கவனத்தில் கொண்டு தொடர்ந்து மின்ன வாழ்த்துகள்.

ஆம். அந்த பித்து பிடிப்பதற்கு காரணமே நான் தானே. நான் ரசிக்காமல் வேறு யார் ரசிப்பது தோழரே:)

திவ்யா
24-02-2008, 01:11 AM
பொருள்வயிற் பிரிந்தோ அல்லது மற்ற காரணங்களால் பிரிந்து, மீக நீண்ட இடைவெளிக்கு பின் நிகழ்கும் ஒரு சந்திப்பின் சங்கீதம் இந்த உணர்வுகள்.. யாதார்தமான கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி..

அன்புடன் ஆதி

பாராட்டுகளுக்கு நன்றி சகோதரரே

திவ்யா
24-02-2008, 01:12 AM
களைப்பை களிப்பாக்குவதும்
வலியை சுகமாக்குவதும்
காதலியின் கடைக்கண்
பார்வையன்றோ??
காதலி பார்வை பட்டுவிட்டால்
காதலன் மன்னாதிமன்னரன்றோ??

அற்புதமான கவிதை..!!
பாராட்டுகள் தோழி திவ்யா..!! :)

சரியாகச் சொன்னீர்கள் தோழி. பாராட்டுக்கு மிக்க நன்றி

திவ்யா
24-02-2008, 01:15 AM
வாருங்கள் திவ்யா.
பெண்கள் காதலைப்பற்றி, காதலனைப்பற்றி எழுதுவது வரவேற்கத்தக்க விசயம்.
கவிதையின் பொருள் நன்றாக இருந்தாலும் இன்னும் சற்று கலை நயத்துடன் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அது ஒரு பிழையில்லை என்றாலும், இன்னும் அதன் நளினம் கூடியிருக்குமே... முயற்சிப்பீர்களா?

தங்கள் கருத்துக்கு நன்றி கவிதா.
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்

க.கமலக்கண்ணன்
09-03-2008, 03:42 AM
காதலனின் அழகை

காத்திருக்கும்

காதலியின் கண்களில் படும்

காட்சியை கவிதையால் அளித்திட்ட திவ்யாவுக்கு நன்றி...