PDA

View Full Version : அழகு நிலையம்



திவ்யா
23-02-2008, 06:36 AM
என்னை அழகு படுத்த
அழகு நிலையம் எதற்கு
உன்னை நினைத்தாலே போதுமே!!!

ஆதி
23-02-2008, 06:44 AM
நினைத்த அவ(ளி)னின் நினைவுகள் உடன் இருந்தால் முகம் மனது வாழ்க்கை காலம் என எல்லாம் அழகாகித்தான் போகும் நிதர்சன கவிதைக்கு பாராட்டுக்கள் சகோதரி

அன்புடன் ஆதி

அனுராகவன்
23-02-2008, 06:56 AM
நன்றி திவ்யா..
மூவ்வரிகளில் முத்தான கவி..
தொடர்ந்து முயலுங்கள் கவிதை நன்கு வரும்..
ஆமாம் அழகுநிலையம் எல்லாம் புற அழகே மட்டும்தான் சரிசெய்யும்..
அக அழகிற்கு அந்த ஒரு நிமிடமே போதுமே!!

திவ்யா
23-02-2008, 06:58 AM
நினைத்த அவ(ளி)னின் நினைவுகள் உடன் இருந்தால் முகம் மனது வாழ்க்கை காலம் என எல்லாம் அழகாகித்தான் போகும் நிதர்சன கவிதைக்கு பாராட்டுக்கள் சகோதரி

அன்புடன் ஆதி

நன்றி சகோதரரே

சிவா.ஜி
23-02-2008, 07:04 AM
காதலனைக் காதலியோ,காதலியை காதலனோ நினைத்தாலே அவர்கள் அழகாகிவிடுவது காதலின் ரசவாத வித்தை.
சுருங்கச் சொன்னாலும் நன்றாக சொன்னீர்கள் திவ்யா.வாழ்த்துகள்.

இளசு
23-02-2008, 02:28 PM
வாழ்த்துகள் திவ்யா அவர்களே!

------------------------------
அழகானவர்கள் எல்லோரும்
அன்பு செய்யப்படுகிறார்களே இல்லையோ
அன்பு செய்யப்படுபவர்கள் அனைவருமே
அழகானவர்கள் (ஆகிவிடுகிறார்கள்!)

யவனிகா
23-02-2008, 03:39 PM
உண்மை தான் திவ்யா...உணர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

மனோஜ்
23-02-2008, 03:46 PM
அன்புக்கு அழகல்ல மனதுதான்
அருமை திவ்யா அவர்கலே

அமரன்
23-02-2008, 07:26 PM
அழகான நினைவுகளால் அகம்நிறைந்து அழகாகிவிட்டால் முகத்திலழகு முட்டிக்கொண்டு நிற்குமே. அழகாகச் சொல்லியுள்ளீர்கள் அழகுநிலையை. பாராட்டுகள்.


என்னை அழகு படுத்த
அழகு நிலையம் எதற்கு
உன்னை நினைத்தாலே போதுமே!!!
கிட்ட இருப்பவர்களுக்கு
நினைத்ததும் பார்த்துவிடலாம்
கண்ணாடி முன்னாடி
கழிந்துவிட்ட மணிகளின் பின்னாடி..

தொலைவில் இருப்போருக்கு எப்படி??
அலைபேசும்போதும் அழகு"படுத்தியா"??

(கனவில் அழகாயிருக்க
அழகுபடுத்திக்கொண்டு உறங்கிய
"காதல்கோட்டை"பாண்டு
எனது நினைவில் நிழலாக..)

இதுவும் சும்மாதான்.. மன்னிச்சுக்கோங்க

பூமகள்
24-02-2008, 09:19 AM
அகம் முழுக்க
அவர் நினைவால்
பூக்க,
மனம் பூத்த
பூவை
அழகில்லையென
யாரும் சொல்லத்தான்
இயலுமா??

அற்புத கவிதை..!!

அருகிருந்து பார்க்க
ஆயிரம் அலங்காரம்
செய்யலாம்..!!

ஆழிப் பெருங்கடல்
ஆறுகள் கடந்து
பிரிவில் தவிக்கும்
இருவுளம் பேசும்
அந்த அலைபேசி
உரையில்....

பல 'ம்'கள் கொண்டு
நிசப்தம் நிரப்பி
காதலாகி கசிந்துருகி
கடைக்கண் கலங்க
மௌனத்தினை அங்கே
அழகு செய்து கொள்ளும்
நாழிகைகளுக்கு ஈடு ஏதும்
உண்டோ??

'நச்' என்ற அழகிய கவிதை திவ்யா..!!
பாராட்டுகள்..!!
தொடர்ந்து மன்றம் வந்து அசத்துங்க..!! :)

க.கமலக்கண்ணன்
09-03-2008, 10:05 AM
அழகு நிலையம் சென்றால்
அகத்தின் வெளியே உடலை மட்டும்
அழகாக்க முடியும் உன்னை நினைத்தால்
அகத்தையும்
அழகில் மின்ன வைக்க முடியுமே... அற்புதமான கவிதை...

ஆர்.ஈஸ்வரன்
16-03-2008, 10:17 AM
வாழ்த்துகள் திவ்யா அவர்களே