PDA

View Full Version : இது காதலா....?.செல்வா
23-02-2008, 04:41 AM
அதிகாலை மணி ஐந்து
ஆண்டுகள் பல கடந்தும்
ஆழ்ந்த தூக்கத்தில்

பார்த்த பள்ளித் தோழரின்
பழகிய முகம் கண்டு
பத்தாம் வகுப்பு
பழைய நினைவுகள்

அன்றும் இதே அதிகாலை மணி ஐந்து
ஆலய மணியும் ஒலித்தது நன்று
அலறிப் புடைத்து எழுந்த என்னை
அன்னை நோக்கினாள் வியப்பில் நனைந்து

ஏழுமணி வரை இழுத்துப் போர்த்து
கழுதை போலவே கத்தி எழுப்பினும்
இழுத்துப் போர்வை பறித்து விலக்கினும்
முழித்துக் கிடப்பினும் முனகிக் கொண்டே

விடு விடு விடம்மா தூக்கம் வருதென
கொடு கொடு கொடம்மா இழுத்த போர்வையை
சூடு சூடு சூடம்மா காலை கதிரொளி
மூடு மூடு மூடம்மா வாசல் கதவை

இப்படி தினம் தினம் உயிரை பறிப்பவன்
எப்படி இன்று மட்டும் பதறி எழுந்து
இப்படி ஓடுகிறான் ஆலயம் நோக்கி
அப்பாடி - வந்ததே இன்றேனும் நல்ல புத்தி

அன்னை நினைத்து ஆறுதல் கொண்டார்
விண்ணை நினைத்தா விடிந்ததும் எழுந்தான் - அல்லது
தன்னை நினைத்தா ஆலயம் சென்றான் - அழகிய
பெண்ணை நினைத்தன்றோ பேராலயம் சென்றான்

(ஆகா.... இப்படியே எழுதுன ஒரு கணக்கு வழக்கில்லாம போகுது பாரு ஒழுங்கா பாதய மாத்துடா

படவா..)

(அட என்னங்க பண்றது எழுத நினைத்தால் எதுகை மோனையின்றி கவிதையா என
கண்ணை மட்டுமில்ல கையும் சேர்ந்து கட்டுதே... சரி சரி கதைக்கு வருவோம் - ஆமாங்க)

அவளைப் பார்க்கத்தான் ஆலயம் சென்றான்....

(அடேய் மாபாவி ... எத்தன தடவதான் இதையே சொல்லுவ.... அக்னி வந்து எரிக்குறதுக்குள்ள

அடுத்தத சொல்லுடா....
முடியலண்ணா அமரன் கிட்ட சொல்லிடு அவரு நறுக்குனு நாலு வரில முடிச்சுருவாரு )

செல்வா
23-02-2008, 04:46 AM
அந்த வகுப்பில் அந்த வருடம் தான்
வந்து சேர்ந்தாள் அவள்
பார்த்துப் பேசிப் பழக பழக
சேர்த்துப் பார்த்து மகிழ்ந்தது மனம்

இருவருக்கும் பொதுவான இயல்புகள் பலப்பல
இருதுருவாய் இல்லாமல் அனைத்திலும் பொதுவாய்
ஒருதுருவாய் எண்ணி எண்ணி -பதித்தது அவள்
திருவுருவை தன் மனத்துள்

(உருப்பட்டாப்புல தான் ஏண்டா நீ திருந்தவே மாட்டியா?)

சொல்லிவிடு சொல்லிவிடு
தள்ளி விட்டான் நண்பன்
எள்ளி விட்டால் என்ன செய்ய ?- சிந்தனையிலேயே
துள்ளிச் சென்றன நாட்கள் மாதங்களாய்

புத்தகம் விரித்தால் எழுத்து வரிகளில்
விரிந்தது அவள்முகம் - கற்பனைக் கனவினில்
சிரித்தது என்மனம்- அவளைக் காதலியாக்கி

அவள் வந்ததால் என் மனம் பூத்தது எவ்வளவோ - அதைவிட
பூத்துக் குலுங்கியது எங்கள் வீட்டுத் தோட்டம்
அவசியத்திற்கு ஒரு குடம் தண்ணீர் மொள்ளவும்
வசியம் செய்யும் மாருந்து தேவை - என்னும் நான்
பூந்தோட்டமே போடும் அளவிற்கு
அடிமையானேன் பூவிற்கு

மாடியில் அவள் பெயரும் என் பெயரும் சேர்த்து - அது
வடிவில் பூ விதைகள் விதைத்து -அவ்
விதை வளர்ந்து செடியாகி
இணைந்து இருவர் பெயராக -
பார்த்த என் மனமும்
பூத்தது புன்னகைப் பூவாக

வசந்தம் சென்றது வந்தது கோடையும்
கசந்து போனது கடைசித் தேர்வு
சொல்ல நினைத்து சொல்லாத வார்த்தைகள்
மெல்ல விலகி வீடு போகையில் -என்
மனம் போலே அழுதது
மாலை நேர மேகமும்

ஆண்டு ஒன்று உருண்டது - பழைய பள்ளி
ஆண்டுவிழா அழைப்பும் வந்தது
மீண்டும் கண்டேன் -
மீண்டும் பகிர்ந்தாள்
முதல் பரிசை என்னோடு

மறுபடியும் ஒருதுருவமாக மருகியது மனம்
வேறு வேறு பள்ளிகள்
வேறு வேறு பாதைகள்
மாறி மாறி வந்திடினும்
மறையாமலே மனதில் அவள் முகம்

பாதைகள் மாறின பயணங்கள் மாறின
பல்கலைக் கழகம் கல்லூரி வாழ்க்கை
மனதில் வந்தவர் பதிந்தவர் சென்றவர் பலர் -எனினும்
மங்காது ஓரத்தில் ஒளிர்ந்தாள் அவ்வப்போது

பட்டமும் கிடைத்தது படிப்பும் முடிந்தது
திட்டமின்றியே தேடிய வேலைகள் ஓட
தட்டிப் பார்த்தும் திறக்காத கதவுகள்
எட்டாக் கனியாய் போயின கனவுகள்

எல்லாம் தாண்டி
தலைநகர் நோக்கிய பயணம் - புது
தலைவிதி தேடிய பயணம்
மாறத் தொடங்கியது காலம் -பொருள்
சேர - துவங்கியது பொற்காலம்

ஓடிவிட்டது ஆண்டுகள் ஐந்து
(அடப்பாவி மறுபடியுமா?)

செல்வா
23-02-2008, 04:46 AM
விடுமுறை நேரம்
நண்பனின் தமக்கை திருமணம்
நடக்கிறது உணவுப் பந்தி

பரிமாறுபவனாய் நானும் கையில்
சோற்றுக் குவளையுடன்

அதோ வரிசையில் அமர்ந்திருந்தது
அவளின் அக்கா
அண்ணி நலமா?

ஓ- நலமே நலமாடா?
எனக்கென்ன குறையண்ணி ...
சிறிது நேர விசாரிப்புக்கு பின்..

'அவள்' - நலமா? -
மலர்ச்சியுடன் அண்ணி

முடிந்ததே திருமணம் அறியாயோ -நீ
ஒடிந்தது எனக்குள் ஏதோ.....
இதயத்தின் ஓசை காதுகளுக்குள்

கோவையில் வசிக்கிறாள்
கோவையவள் - கணவனுடன்

உதடு துடித்தது - முகம் கருத்தது -
யாரும் காண்பதற்குள்
காப்பாற்றியது ஒரு குரல்

என்னப்பா... அங்கேயே நிக்கிற
தம்பி சோறு கேக்கிறான் பாரு...

கடமை அழைக்கிறது

இதோ வந்துட்டேன்....
வேற யாருக்குங்க சோறு வேணும்.......

அனுராகவன்
23-02-2008, 04:57 AM
வாழ்த்துக்கள் செல்வா..
பழைய நினைவுகள் ஒரு நிமிடம் நம்மை பழைய நிலைக்கு அழைத்து செல்லும்..
நல்ல நினைவுகள் செல்வா..
காதலியே பார்த்தீர்களா..
அதுக்காக தூக்கத்தைக்கூட தூக்கி வீசுவது அதுவும் காலையில் மிக கடினம்....
என்ன செய்வது அன்னையின் சொல்லுக்குகூட கேட்டவில்லை..
ஆனால் காதலியே பார்க்க கண் தேடுதோ..
ம்ம் என் நன்றி செல்வா..

ஆதி
23-02-2008, 05:03 AM
துள்ளி விளையாடுது எதுகையும் மோனையும், சந்தம் தனியாய் தனக்கொரு பாணியில் ஒலித்துக்கொண்டு போகிறது, பழையாக்கால திரைப்பட வசனம் போல் இனிப்பான கவிதை..

கவிதை ரொம்ப பெரிசு என்றாலும் அது தந்துவிட்டு போகிற வலி அதைவிட பெரிது என்பதும் உண்மை..

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் செல்வா..

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
23-02-2008, 05:06 AM
வாழ்த்துக்கள்... அடிக்கடி நாமிருவரும் ஒரே பாதையில் சந்திக்கிறோம் போலிருக்கு செல்வா..!!

இப்போதுதான் முதன்முதலாக உங்களின் கவிதையை காண்கிறேன்..!!

அடுக்குமல்லி போல் கோர்த்து கட்டிய வார்த்தைகள்... உங்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது.. வாழ்த்துக்கள் செல்வா...தொடருங்கள்...!!

யவனிகா
23-02-2008, 05:08 AM
என்ன செல்வா...இப்படி ஒரு கவிஞரை, உள்ளுக்குள்ளேயே அடைச்சு வெச்சிருந்தீங்களா...
நல்லா இருக்கு செல்வா...ரொம்ப இதமா...அதே நேரம் வாசிக்கவும் சுவையா...சொல்ல வந்ததை நேர்த்தியா சொல்லி இருக்கீங்க...

அப்புறம் என்ன எங்கிருந்தாலும் வாழ்க தானா? அவங்க கொடுப்பினை அவ்வளவுதான் போல...

கவிஞர கட்டி, கவிதை கேக்க வாய்ப்பில்லாமல் போன பேதைப் பெண். போனாப் பொகுது...ஏகப்பட்ட அதிர்ஸ்டத்தோட ஏற்கனவே உனக்கு ஒருத்தி பொறந்தாச்சின்னு அக்கா வீட்டு பல்லி அடிக்கடி சொல்லுது.:)

திரிக்குள்ள வந்தா...ஏற்கனவே சோக கீதம் வாசிக்கும் எந்தம்பி சுகந்தன் வேற அழமாட்டாக் குறையா உனக்கு பின்னூட்டம் அடிச்சிட்டிருக்கான்..எல்லாரும் ஒரே பேமிலியாப்பா?:icon_b:

நல்ல படைப்பு செல்வா...சரி இந்த கேப்பில நீ வேற யாரையும் சந்திக்கவே இல்லையா....என்ன கொடுமை செல்வா இது?:traurig001:

செல்வா
23-02-2008, 05:13 AM
நன்றி ஆதி.... ரொம்ப நாளாச்சு இப்படி எழுதி..... எழுதி சில மணிநேரமானபின்னும் மனதில்
பாரம் இன்னும் இறங்காமல்...

நன்றி ஆதி

செல்வா
23-02-2008, 05:15 AM
வாழ்த்துக்கள்... அடிக்கடி நாமிருவரும் ஒரே பாதையில் சந்திக்கிறோம் போலிருக்கு செல்வா..!!

நன்றி சுகந்தன்....

இன்பா
23-02-2008, 05:16 AM
பலே பலே...

அனுபவித்தால் தான் இப்படி எழுத முடியும்
நான் சொல்வது சரிதானே...? செல்வா...

முதல் கவிதை சூப்பர்...
வாழ்த்துக்கள்

செல்வா
23-02-2008, 05:16 AM
நல்லா இருக்கு செல்வா...ரொம்ப இதமா...அதே நேரம் வாசிக்கவும் சுவையா...சொல்ல வந்ததை நேர்த்தியா சொல்லி இருக்கீங்க...

நன்றி அக்கா.....

செல்வா
23-02-2008, 05:19 AM
வாழ்த்துக்கள் செல்வா..

நன்றி அனு அக்கா...

kavitha
23-02-2008, 05:19 AM
மாடியில் அவள் பெயரும் என் பெயரும் சேர்த்து - அது
வடிவில் பூ விதைகள் விதைத்து -அவ்
விதை வளர்ந்து செடியாகி
இணைந்து இருவர் பெயராக -
பார்த்த என் மனமும்
பூத்தது புன்னகைப் பூவாக
நினைவுப்பரிசுகளாக...
நான் ரசித்த வரிகள்.

கவிதை நன்றாக இருக்கிறது செல்வா. தொடர்ந்து வேறு வேறு களங்களைப்பற்றியும் எழுதுங்கள்.

ஆதி
23-02-2008, 05:19 AM
பாரம் இன்னும் இறங்காமல்...செல்வா நீங்களும் சுகந்தனும் சொல்லீட்டீங்க நான் சொல்லல அவ்வளவு தான் வேறுபாடு உன் பாரத்திற்கு என் கண்ணீரும் ஆறுதலும் என்றும் உண்டு..

நம் எல்லோருடைய ஓடங்களிலும் யாரோ ஒருவர் பயணித்துதான் இறங்கி இருக்கிறார் அந்த நினைவுகளில் இந்த ஓடங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது நாமும் ஓட்டிக்கொண்டாதான் இருக்கிறோம்..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
23-02-2008, 05:20 AM
காதல் படுத்தும் பாடு ஆண்டுகள் பல கழிந்தும் ஐந்து மணிக்கு எழுப்பிவிடுகிறது....வழக்கமான பத்து மணி வரையான உறக்கம்,ஐந்து மணிக்காகும் போது...பழைய நினைவுகள் பக்கம் வரத்தான் செய்யும்.
அக்கா சொன்னதைப் போல எங்கிருந்தாலும் வாழ்க கதைதான்.

அதைப் போலவே உங்களுக்கென்று ஒரு உயிர் எங்கோ பிறந்திருக்கும்.

கவிதைக்கு வருவோம்....சந்தங்களில் விளையாடியிருக்கிறீர்கள்.காதலிக்காக கவிதை என்றாலே எதுகையும் மோனையும் எகிறி வருகிறது.

கதை சொன்ன கவிதை சுவை குன்றாமல் இனிக்கிறது.இன்னும் எழுதினால் மேலும் ரசிக்கலாமே எனத் தோன்றும் வகையில் இருக்கும் கவிதைக்கு பாராட்டுகள் செல்வா....கலக்குங்க....அதனால இனிமே தினமும் ஐந்து மணிக்கே எழுந்திடுங்க....

செல்வா
23-02-2008, 05:21 AM
முதல் கவிதை சூப்பர்...
வாழ்த்துக்கள்
நன்றி.... புலி அவர்களே.... உங்களனைவரின் பின்னூட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது...

சிவா.ஜி
23-02-2008, 05:22 AM
ஆதி,சுகந்த்...அன்பு தம்பிகளுக்கு ஆறுதலாய் ஒரு தேவதை கிடைப்பாள்...கவலை வேண்டாம்...பழம் நினைவுகள் பாரமாக வேண்டாம்.மனதை லேசாக்கி...வரப்போகும் தேவதைக்காக வழி பார்த்திருங்கள்.அதுவரை கவிதை படைத்திடுங்கள்.வாழ்த்துகள்.

சுகந்தப்ரீதன்
23-02-2008, 05:26 AM
திரிக்குள்ள வந்தா...ஏற்கனவே சோக கீதம் வாசிக்கும் எந்தம்பி சுகந்தன் வேற அழமாட்டாக் குறையா உனக்கு பின்னூட்டம் அடிச்சிட்டிருக்கான்..எல்லாரும் ஒரே பேமிலியாப்பா?:icon_b::traurig001:
யக்கா எப்போதும் சுகந்த கீதத்தை வாசிட்டிருந்தா அதை வாசிக்கிறவங்களுக்கு போரடிச்சுடும்ல... அதுக்குதான் அப்பப்ப கோககீதம் வாசிச்சிக்க வேண்டியிருக்கு...!:icon_rollout:

ஆனாலும் நானெல்லாம் செல்வா மாதிரி சுத்த தமிழன் கிடையாது ஒருத்தியை மட்டும் நினைச்சி உருகறதுக்கு... நம்ப ஆட்டோகிராப்ப புரட்டிப் பார்த்தா அந்தந்த பருவத்துலயும் ஒரு பாவை நம்ப வாழ்க்கையில வந்துட்டு போயிருப்பாங்க... என்ன இதுவரைக்கும் எதுவுமே நிரந்தரமா தங்க மாட்டேங்குதுன்னுதான் ஒரு சின்ன வருத்தம்...:fragend005:

அதான் இனி கல்யாணம் கட்டி ஒருத்தியை நிரந்தரமா தங்கவச்சிக்கறதுன்னு முடிவு பண்ணிருக்கேன் அக்கா..! மறக்காம வந்து ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க மாமாக்கூட... ஏன்னா நான் கட்ட போறது மாமா பொண்ணதான்...!:wuerg019:

இளசு
23-02-2008, 05:26 AM
சக்கப்போடு போடு ராஜா - (பாரதவிலாஸ்) என்ற பாட்டில்
கவியரசர் இப்படி '' எசப்பாட்டு'' உத்தியில் எழுதியிருப்பார்.

என் கண்மணி, என் காதலி (சிட்டுக்குருவி) பாட்டிலும் இப்படி
''உள்மனம்'' ஒருபக்கம் குத்தியபடி இருக்கும்.

மன்றத்தில் ராம்பால் '' எதிர்சீட்டு ஆள்'' என்ற பாத்திரத்தையே
கவிதைகளில் தொடர்ந்து பயன்படுத்துவார்.

இங்கே செல்வாவின் நயமான, (நியாயமான?!!!) எதிர்சீட்டுப் பார்வைகளுடன் கூடிய கவிதைக் கதை!

சொற்பிரவாகமா? அசத்தல்..
அதை ஒழுங்குபடுத்திய ஆற்றல் அருமை!

ஆதியின் கவிதைகள் வாசித்தபோது ஆரம்பத்தில் சொன்னேன் -
வைரமுத்துவின் ஆதிகாலக் கவிதைகளின் அதே இளம்துடிப்பென்று..

இங்கே இன்னொரு இயல்புக்கவியின் துடிப்பான கைவரிசை!
வாழ்த்துகள் செல்வா...
உள்ளுள் இருக்கும் கவிஞன் விழித்துவிட்டான்... வெளிப்போந்துவிட்டான்.
இனி அவனை இகல்வெல்லல் உமக்கே அரிது!

பூமகள்
23-02-2008, 05:28 AM
நான் தான் பஸ்ட் படிச்சேன்..!!
ஆனால், சரி முழுதும் சொன்னதுக்கு அப்புறமா பின்னூட்டமிடலாம்னு டிஸ்டர்ப் செய்யாம இருந்தேன்..!! ;)

கவிதையில் சந்தங்களும் அது தந்த சங்கதிகளும் ஏராளம் உணர முடிகிறது.

இப்படி ஒரு கவிஞரை உங்களுக்குள் ஒளிச்சி இத்தனை நாள் எங்களுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியதால் செல்லமாக சுகந்தப்ரீதன் எனக்காக உங்கள் தலையில் ஒரு குட்டு வைப்பார்..!! :D :D

யவனி அக்கா வாழ்த்து படி அமைய எனது வாழ்த்துகள் செல்வா அண்ணா.

தொடரட்டும் உங்கள் கவிகள்..!!
விசாலமாகட்டும் உங்கள் எண்ணங்களின் விலாசங்கள்..!!

பாராட்டுகள் செல்வா அண்ணா. :)

செல்வா
23-02-2008, 05:29 AM
பாராட்டுகள் செல்வா....கலக்குங்க....
நன்றி அண்ணா.... மிக்க நன்றி


அதனால இனிமே தினமும் ஐந்து மணிக்கே எழுந்திடுங்க....
ஏன் இப்படி நல்லாத் தானே போய்ட்டுருந்துச்சு..... முடியல.... :lachen001:

செல்வா
23-02-2008, 05:49 AM
கவிதை நன்றாக இருக்கிறது செல்வா. தொடர்ந்து வேறு வேறு களங்களைப்பற்றியும் எழுதுங்கள்.

நன்றி அக்கா.... கண்டிப்பாக எழுதுகிறேன்....

செல்வா
23-02-2008, 09:44 AM
வாழ்த்துகள் செல்வா...
உள்ளுள் இருக்கும் கவிஞன் விழித்துவிட்டான்... வெளிப்போந்துவிட்டான்.
இனி அவனை இகல்வெல்லல் உமக்கே அரிது!
நன்றி அண்ணா... தங்கள் பாராட்டு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காலையில் கண்ட ஒரு கனவின் வெளிப்பாடு இத்தனையும். எனக்கே ஆச்சரியம் தான் இத்தனையும் எழுதி முடித்தது. கல்லூரி காலங்களில் எழுதியுள்ளேன். ஒரே மூச்சில் நாடகங்கள், கட்டுரைகள் ஆனால் பிற்பாடு வேலை தேடும் படலம் .. வேலை என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லாம் காணாமல் போய்விட்டது. மறுபடியும் மன்றம் வாயிலாக கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டிருக்கிறேன்...

உங்கள் அனைவரின் ஆதரவும் என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

அனைவருக்கும் என் நன்றி

செல்வா
23-02-2008, 09:45 AM
இப்படி ஒரு கவிஞரை உங்களுக்குள் ஒளிச்சி இத்தனை நாள் எங்களுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியதால் செல்லமாக சுகந்தப்ரீதன் எனக்காக உங்கள் தலையில் ஒரு குட்டு வைப்பார்..!! :D :D
பாராட்டுகள் செல்வா அண்ணா. :)

நன்றி பூமகள். எனக்குப் பதிலா அந்த குட்ட சிவா அண்ணா வாங்கிப்பாரு.

மதி
23-02-2008, 10:13 AM
அட்டகாசம் செல்வா...
அப்படியே கண்முன் நடப்பது போலிருந்தது.... சில வேளைகளில் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகிறதே... !

அருமையான வரிகளில் சோகம் உரைத்துள்ளீர்.. நானும் சோககீதம் பாட விரும்பல.. அப்புறம் யவனி அக்காவின் தம்பிகள்... சோகமே உருவாக இருக்காங்கன்னு பேர் வந்துடும்...

தொடர்ந்து எழுதுங்கள்

செல்வா
23-02-2008, 11:18 AM
அட்டகாசம் செல்வா...
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி மதி ... கண்டிப்பாக முயற்சிப்பேன்... காலமும் கற்பனையும் கைகொடுக்க வேண்டும்...

அமரன்
23-02-2008, 11:24 AM
இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று கொக்கரிக்குது எனதுள்ளம். எனக்கு ரொம்பப் பிடிச்ச என்னால் இயலாத காரியம் எதிர்சீ(சி)ட்டு. சொல்(சி)ல்வேந்தர் இச்சதிரில் தெர்ந்தவர். இன்னொருவர் கிடைத்ததில் மகிழ்ச்சி.. மறுபடியும் வருவேன் மக்கா.

செல்வா
28-02-2008, 10:14 AM
இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று கொக்கரிக்குது எனதுள்ளம். மறுபடியும் வருவேன் மக்கா.
மிக்க நன்றி குருவே... வாங்க வாங்க சீக்கிரமா...

ஓவியன்
28-02-2008, 12:07 PM
ஓய்...!!!

உம்மைத் தானோய்....!!

இம்புட்டு நாளும் பொத்தி பொத்தி வைத்திருந்திருக்கிறீரே
இந்த கதையையும், அதைச் சொன்ன கவிதையையும்.....

மனதாரப் பாராட்டுகிறேன் செல்வா...!!
அசத்தல் பதிவிது...!! :icon_b:

தமிழிலக்கணத்தின் சிறப்பம்சங்களிலொன்று அணி இலக்கணம், ஆனால் வேகமாய் வெளிவரும் தமிழ் படைப்புக்களில் இந்த அணிகள் வெகு அரிதாகவே இருக்கின்றன என்பது ஒரு குறையே....

இருந்தாலும் அண்மையில் வெளி வந்த "பிரிவோம் சந்திப்போம்" திரைப்படப் பாடல்களில் அணிகள் பாவிக்கப்பட்டிருந்தன....

இன்று செல்வாவின் சொந்தக் கதை (:D) சொன்ன அழகுக் கவிதையிலும்...விடு விடு விடம்மா தூக்கம் வருதென
கொடு கொடு கொடம்மா இழுத்த போர்வையை
சூடு சூடு சூடம்மா காலை கதிரொளி
மூடு மூடு மூடம்மா வாசல் கதவை

என அடுக்குத் தொடரைக் கண்டதில் கொள்ளை சந்தோசம்...
எதுகை மோனையை சரிவர கையாளத் தெரிந்தமை ஒரு கவிஞனாக செல்வாவின் வெற்றியே...

இங்கே நான் இன்னும் ஒரு விடயத்தைக் கூறியாக வேண்டும், இன்று எழுத்தாளர் சுஜாதா நம்மையெல்லாம் விட்டு நீங்கிய நாள், எழுத்தாளர் சுஜாதா கூறுவாராம்

எதையும் சுருக்கமா சொல்லுங்க.. 'வளவளா'-வே தேவையில்லை.. நேரா விஷயத்துக்கு வாங்க..ஒருத்தர் உங்ககிட்ட சாப்பிட்டாச்சான்னு கேள்வி கேட்டா, சாப்பிட்டாச்சுன்னு பெரிசா ஏழு எழுத்தில் எழுதாம ஆச்சுன்னு மூணு எழுத்தில் சொன்னாவே அர்த்தம் புரியும்..

அதுகூட தேவையில்லை.. சுன்னு ஒரு எழுத்தில் எழுதினால் அது தான் நல்ல எழுத்தாளன் செய்யக் கூடிய வேலை என்று....

ஆனால் சில விடயங்களை கொஞ்சம் நீட்டி முழக்கிக் கூறுவதிலும் ஒரு சுவராசியம் இருக்கத்தான் செய்கிறது...

அதாவது சிலவற்றை கொஞ்சம் நீட்டியும், சிலவற்றை சுருக்கியும் எழுதுவது ஒரு நல்ல படைப்பாளியின் பணி...

அதனால் சுருக்கமாக எழுத முடியவில்லையே என நீங்கள் உங்களையே வருத்தத் தேவையில்லை செல்வா, ஏனென்றால் நீட்டி எழுதியதாக நீங்கள் கூறிய கவிதைகள் கொள்ளை அழகோடு மனதை மயக்கி நிற்கின்றன, ஒரு அழகான பெண்ணைப் போல.....!! :)

செல்வா
14-03-2008, 05:03 PM
அதனால் சுருக்கமாக எழுத முடியவில்லையே என நீங்கள் உங்களையே வருத்தத் தேவையில்லை செல்வா, ஏனென்றால் நீட்டி எழுதியதாக நீங்கள் கூறிய கவிதைகள் கொள்ளை அழகோடு மனதை மயக்கி நிற்கின்றன, ஒரு அழகான பெண்ணைப் போல.....!! :)
நன்றி ஓவியா? சரி எப்போ பணிக்கு திரும்பற.... ஒன்றும் செய்தி இல்லை...

ஓவியன்
15-03-2008, 07:32 AM
நன்றி ஓவியா? சரி எப்போ பணிக்கு திரும்பற.... ஒன்றும் செய்தி இல்லை...

திரும்பிட்டேன், ஆனா புதிய வீட்டில் இன்னமும் இணையம் கிடைக்கலை...
வெகு விரைவில் எல்லாம் சரியாகுமென்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன்...

க.கமலக்கண்ணன்
15-03-2008, 08:42 AM
அன்புச் செல்வா
அனைத்தும் மிகவும்
அருமை ஆனால் ஒன்று
அழகாக பெயர் வாங்கியது பெரிதல்ல
அதை மிக சரியாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும்
அற்புத கவிஞன் விழித்துவிட்டான். உறங்கி விடாமல்
அள்ளித்தருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்...

செல்வா
15-03-2008, 01:34 PM
உறங்கி விடாமல்
அள்ளித்தருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்...
இயன்றவரை முயலுகிறேன் கண்ணனண்ணா...
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி