PDA

View Full Version : பாயசம் வகைகள்



அனுராகவன்
23-02-2008, 02:19 AM
கொஞ்சம் வித்தியாசமாக பாயசம் செய்ய ரெடியா...


பாதாம் பருப்பு பாயஸம்

நான்கு பேர்களுக்குத் தேவையான சாமான்கள் :

பாதம் பருப்பு 100 கரரிம்
சர்க்கரை 1 கப்
பால் 2 முதல் 3 கப்புகள் வரை
ஏலக்காய் 7 அல்லது 8
முந்திரிப் பருப்பு 6
சாரப்பருப்பு பிஸ்தாபருப்பு (இவை வகைக்கு 1 டேபிள் ஸ்பூன்)
பச்சைக் கற்பூரம்
குங்குமப்பூ அல்லது கேசரிப் பவுடர்,
நெய் 4 டீஸ்பூன்கள்.

முந்திரிப் பருப்பைச் சிறு துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும். சாரப் பருப்பு, பிஸ்தா பருப்பு இவற்றுடன் சேர்த்து நெய்யில் வறுத்துக் கொள்ளிவும்.

பாதம்பருப்பைக் கொஞ்சம் பொறுக்கும் சூடான வெந்நீரில் போட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தோலை எடுத்து விட்டு, (அம்மியில் அல்லது மிக்ஸியில் நைஸாக ஜலத்தை விட்டு) அரைத்து எடுத்து, சுமார் 3 கப்புகள் ஜலத்தை விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து, அடிக்கடி கிளறிவிடவும். பச்சை வாசனை இல்லாமல் நன்றாகக் கொதிக்கவிட்டு, சர்க்கரையைப் போடவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தபின் பாலை விட்டு மற்ற சாமான்களையும் போடவும். குளிர்ச்சியாக இருக்க ஐஸில் வைக்கலாம்.


ஆகா.. உங்கள் வீட்டில் செய்வது மணக்குதே..
மீண்டும் அடுத்து.:)

அனுராகவன்
23-02-2008, 02:49 AM
பாதாங்கீர் பாயசம்


பாதாம்பருப்பு --20

சர்க்கரை --2கரண்டி

பால் --1ஆழாக்கு

ஏலக்காய் --5

குங்குமப்பூ --சிறிது

பிஸ்தா பருப்பு --கொஞ்சம்


பாதாம் பருப்பைக் கொதிக்கும் நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து தோல் உரித்து, நீர் சேர்த்து சிறிது நறநறவென அரைத்துக் கொள்ளவும். அரைத்ததைச் சிறிது நீர்க்க எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடன், சர்க்கரை சேர்த்து அது கரைந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும். காய்ச்சிய பால், ஏலக்காய்ப் பொடி, குங்குமப்பூ, பிஸ்தா பருப்பு சேர்க்கவேண்டும். சூடாகவோ குளிர்ப் பெட்டியில் குளிரவைத்தோ சாப்பிடலாம்.

இது ஒரு தனி சுவையாக இருக்கும்..
ம்ம் டிரை பன்னுங்க..

அனுராகவன்
11-04-2008, 12:09 AM
பாசிப்பருப்பு பாயசம்

தேவையானப் பொருள்கள்;
பாசிப்பருப்பு-100 கிராம்
வெல்லம்-விருப்பத்திற்கேற்ப
தேங்காய் பூ- ,,
நெய் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்,கிஸ்மிஸ் பழம் சுவைக்காக

செய்முறை;

பாசிப்பருப்பை நன்றாக குழைய வேக வைக்க வேண்டும்.கூடுதல் சுவைக்கு பாலிலும் வேக வைக்கலாம்.நன்றாக வெந்த பின் இனிப்பு சுவையை ருசி பார்த்து சிறுக சிறுக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.நெயில் முந்திரி,கிஸ்மிஸ் வறுத்து,ஏலப் பொடி,தேங்காய் பூ சேர்த்து இனிய மணத்துடன் சுவைக்க வேண்டியது தான்.


ஆகா.. உங்கள் வீட்டில் செய்வது மணக்குதே..
மீண்டும் அடுத்து.