PDA

View Full Version : தனிமை!!.



அனுராகவன்
23-02-2008, 01:01 AM
தனிமை

அடர்ந்த காட்டில் உள்ள
தனி மரமானேன்;
சோகம் சூழ்ந்தது.

மாதம் சம்பளம் முழுமையாக
கிடைக்குமா??
ஏக்கம் வந்தது.

பள்ளிநாட்களை நினைத்து
அதுபோல் இனிவருமா??
வருத்தம் வருகிறது.

தீயவர்களை கண்டால்
மனதில்
கோபம் ஏற்படுகிறது..

மாறாத் தனிமை
நினைக்க வைக்கிறது..
தனிமை ஒரு வேதனை..


-அனு

.

kavitha
23-02-2008, 05:30 AM
அன்பு அனு,
'தனிமை இனிமை' என நானும் தனிமை பற்றி ஒரு கவிதை எழுதினேன்.

உறவுகளைப்பிரிந்து, அத்தியாவசியத்தேவைகளுக்கு வேண்டிய பணமின்றி தனிமையில் வாழும் பெண்ணின் நிலை... சொல்லொணாத்துயரம்
எனினும்.....
உங்கள் சிந்தனைகளை தயவுசெய்து வேறு கோணத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிடில் தனிமை நினைக்கும் கொடுமை இன்னும் துயரம் தரும்.


தீயவர்களை கண்டால்
மனதில்
கோபம் ஏற்படுகிறது..
உங்கள் தனிமை இத்தகைய தீயவர்களுக்கு அவல் ஆகிவிடும்.
பாடல்கள் கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது, தோழிகளுடன் உரையாடுவது ... போன்றவற்றால் உங்கள் தனிமை போகக்கூடும்.


பள்ளிநாட்களை நினைத்து
அதுபோல் இனிவருமா??
வருத்தம் வருகிறது.
வயது ஏற ஏற வரும் துயர் இது. பணியிடங்களிலும் தோழமை கிடைக்கக்கூடும். நல்லவர்களாகவும், இனியவர்களாகவும் அமைந்துவிட்டால் பணியிடம் கூட சொர்க்கம் ஆகிவிடும்.

நிறைய கவிதைகள் எழுதுங்கள். அதுகூட உங்கள் தனிமையை விரட்டும்.
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை... இது என் கருத்து.



அன்புடன்,
கவிதா

இளசு
23-02-2008, 05:37 AM
கவீ. நலமா?


அனுவின் கவிதைக்கு அனுசரணையான கவி-விமர்சனம் அருமை!

----------------------------------
வந்தது, சூழ்ந்தது என கடந்தகாலச் சொற்களுடன்
வருகிறது, ஏற்படுகிறது என நிகழ்காலம் கலக்கும்போது
படிக்கும் மனதில் நெருடுகிறது...

எல்லாம் ஒரே காலச்சொல் வடிவத்தில் அமைக்க கவனம் செலுத்தலாம்..

வணிகப்பாட்டுகளில் நெருடாமல் எழுதும் உத்திகள் ஏராளம் -
கற்க அவையும் உதவும்.
எ-டு : சொந்தம் வந்தது வந்தது - அந்த
சுகமே மச்சான் தந்தது!

வாழ்த்துகள் அனு... தொடர்ந்து படையுங்கள்!

kavitha
23-02-2008, 05:45 AM
கவீ. நலமா?
நலம் அண்ணா... நீங்களும் நலம் தானே!

----


----------------------------------
வந்தது, சூழ்ந்தது என கடந்தகாலச் சொற்களுடன்
வருகிறது, ஏற்படுகிறது என நிகழ்காலம் கலக்கும்போது
படிக்கும் மனதில் நெருடுகிறது...

எல்லாம் ஒரே காலச்சொல் வடிவத்தில் அமைக்க கவனம் செலுத்தலாம்..

வணிகப்பாட்டுகளில் நெருடாமல் எழுதும் உத்திகள் ஏராளம் -
கற்க அவையும் உதவும்.
எ-டு : சொந்தம் வந்தது வந்தது - அந்த
சுகமே மச்சான் தந்தது!

வாழ்த்துகள் அனு... தொடர்ந்து படையுங்கள்!-------------

இதுதான் அண்ணா...

அனு,
இனி நீங்கள் தொடர்ந்து நல்ல நல்ல கவிதைகள் எழுதப்போவது உறுதி.

அனுராகவன்
23-02-2008, 05:57 AM
'தனிமை இனிமை' என நானும் தனிமை பற்றி ஒரு கவிதை எழுதினேன்.
ஒ அப்படியா..
தனிமையில் இனிமையும் கிடைக்கும் ஆனால் அது எவ்வளவு நேரம்..
ஒரு கணம் நம்மை தலைக்கீழாக மாற்றிவிடுமே..
நான் பல பணிப்பெண்கள் வெளிநாடுகளில் படும் தனிமையே என் கண் முன்னே பார்த்திருக்கிறேன்..


உறவுகளைப்பிரிந்து, அத்தியாவசியத்தேவைகளுக்கு வேண்டிய பணமின்றி தனிமையில் வாழும் பெண்ணின் நிலை... சொல்லொணாத்துயரம்
எனினும்.....
உங்கள் சிந்தனைகளை தயவுசெய்து வேறு கோணத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிடில் தனிமை நினைக்கும் கொடுமை இன்னும் துயரம் தரும்.
நன்றி கவிதா..
நானும் என் தனிமையே மாற்ற முயல்கிறேன் ..
ஆனால் திடீரென சில நிமிடம் என்னை தனிமைப்படுத்துகிறது,,..


நிறைய கவிதைகள் எழுதுங்கள். அதுகூட உங்கள் தனிமையை விரட்டும்.
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை... இது என் கருத்து.


உங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் என்னை
நிறைய கவிதை எழுத வைக்கும்.
நல்ல உள்ளங்கள் என்றும் கிடைக்க வேண்டும்..
இறுதியாக உங்கள் கருத்துக்கும் என் நன்றி கவிதா..
என்றென்றும் தொடர்ந்து வாங்க..

அனுராகவன்
23-02-2008, 06:02 AM
வந்தது, சூழ்ந்தது என கடந்தகாலச் சொற்களுடன்
வருகிறது, ஏற்படுகிறது என நிகழ்காலம் கலக்கும்போது
படிக்கும் மனதில் நெருடுகிறது...

எல்லாம் ஒரே காலச்சொல் வடிவத்தில் அமைக்க கவனம் செலுத்தலாம்..

வணிகப்பாட்டுகளில் நெருடாமல் எழுதும் உத்திகள் ஏராளம் -
கற்க அவையும் உதவும்.
எ-டு : சொந்தம் வந்தது வந்தது - அந்த
சுகமே மச்சான் தந்தது!

வாழ்த்துகள் அனு... தொடர்ந்து படையுங்கள்!
நன்றி இளசு அவர்களே!!
நீங்கள் சொன்னபடி எழுது முயல்கிறேன்..
கவிதைக்கு ஒரு கலை சேர்ப்பது முக்கியம்போல..
என் வாழ்த்துக்கள்...

உதயா
23-02-2008, 06:20 AM
அனுவின் இந்த கவிதை... அனு பணத்திற்காக அன்னிய தேசம் வந்தவர் போல் தெரிகிறது. ஆம் எனில்...

நானும் அந்த லிஸ்டில் உள்ளவன் தான். தனிமையில் நாம் இருக்கும் போது நம் பழைய நினைவுகளை அசைபோடமுடியும் அனு. என்ன செய்ய வாழ்க்கை என்பது அப்படி தானே! சில கிடைப்புகளுக்காக, பலதையும் இழக்கவேண்டி வரும்.

கவிதா குறிப்பிட்டது போல்... தனிமையை தவிறுங்கள்.

அனுராகவன்
23-02-2008, 06:25 AM
ஆமாம் உதயா அவர்களே!!
பணத்தற்காக எல்லாமே விட்டு இப்படி தனிமையில் ....
நன்றி உதயா..
அப்பரம் துபாய் எப்படி உள்ளது...

உதயா
23-02-2008, 06:45 AM
அப்பரம் துபாய் எப்படி உள்ளது...
துபாய் பரம சுகம். மாட மாளிகைகளாக உருவாகிக்கொண்டிருக்கிறது. நாம (இந்தியர்) தான் உருவாக்கவேண்டி இருக்கிறது. ஆனால் நாமோ... வட்ட 0 வாழ்க்கையிலும், பர்சிலும்.

வாழ்க்கை எதிர்பார்ப்போடு எப்போதும் போல் போய் (ஓடிக்) கொண்டிருக்கிறது.

சிவா.ஜி
23-02-2008, 06:53 AM
தனிமை சில நேரம் சுகம்,பல சமயம் சோகம்.சில நேரம் சாத்தான் விழித்துக்கொள்ளும்,சில நேரம் சுய கழிவிரக்கம் கொல்லும்.
எதையாவது ஒன்றை செய்து கொண்டு எதிலாவது சிந்தனையையை செலுத்திக்கொண்டு இருப்பதுதான் தனிமையை வெல்ல ஒரே வழி.

இளசு சொன்னதையும் கொஞ்சம் கவனியுங்கள் அனு.நல்ல கவிதை நிச்சயம் பிறக்கும்.வார்த்தைக் கோர்வை அவசியம்.சொல்லியுள்ள செய்தி அருமை.வாழ்த்துகள்.

அனுராகவன்
23-02-2008, 01:37 PM
நன்றி உதயா..
என் வாழ்த்துக்கள்
தொடர்ந்து வாங்கள்

அனுராகவன்
23-02-2008, 01:40 PM
நன்றி சிவா.ஜி அவர்களே!!
ஆமாம் தனிமைக்கு சில நேரம் நன்மையாகவும்,..தீமையாகவும் உள்ளது..
அது நம் மனநிலையில் உள்ளது என்பதை நன்கு சொல்லிய உங்களுக்கு என் நன்றி

அமரன்
23-02-2008, 07:49 PM
சோலையிருக்கும் தனிமரமானால் என்ன
சொலைக்குயிலிசை தழுவாதா மெல்ல.
ஒற்றைமரத்திலும் கானக்கருங்குயில் வருமே..
கற்றையாக பழைய அமுதகீதம் பருகத் தருமே..


பள்ளிநாட்களை நினைத்து
அதுபோல் இனிவருமா??
வருத்தம் வருகிறது.
பாலர் பராயத்தில் கட்டுப்பாடுகள் அதிகம்.
பாகுப் பருவத்தில் கடப்பாடுகள் அதிகம்.
கட்டுப்பாடுகளை விடக் கடப்பாடுகள் கொடுமையானவை.
அதன்பொருட்டே பலரால் விரும்பப்படுகிறது பருவக்குழந்தை.

கொல்லும் தனிமைத் தருணங்களை கொன்று பிரசவமாகும் மேன்மை மிகு வலிமை கவிதைகளுக்கு உண்டு கூர்மையான கவனம் இருக்கும் பட்சத்தில்.. பாராட்டுகள்.

அனுராகவன்
26-02-2008, 11:33 PM
நன்றி அமரன் அவர்களே..
தொடர்ந்து வாருங்கள்

க.கமலக்கண்ணன்
27-02-2008, 01:57 AM
தனிமை சில நேரங்களில் நன்மை
தப்பாக நேர்ந்தால்
தவிர்க்க முடிவு எடுக்க முடியும்
தனித்து விடப்பட்டால் கெட்டது உண்டு பள்ளி
தருனங்களை நினைத்தால் அனைவருக்கும் ஏக்கம் வரும்
தகதக என்று எழுதிய அனு அற்புதம்...

அனுராகவன்
18-03-2008, 01:26 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
ஊக்கத்திற்கு என் நன்றி..