PDA

View Full Version : மே மாதம்

ஆதி
22-02-2008, 10:51 AM
பள்ளிக் காலங்களின்
பெருங்கனவு..

எல்லா நாளும்
ஞாயிற்று கிழமையாகிவிடும்
மாதம்

நீண்ட பிரிவுக்கு பிறகு
உறவுகளை சந்திக்கப் போகும்
மகிழ்ச்சியும் ஆவலும்
வழிந்து கொண்டிருக்கும்
பேரூந்துகளிலும்
ரயில்களிலும்..

சூரியன் போன்று
வெகு தாமதமாகத்தான்
திரும்புவோம் வீட்டிற்கு..

அவ்வப்போது துண்டிக்கப்படும்
மின்சாரமும்
எப்போதாவது பெய்யும் மழையும்
அதிகமாக்கிவிடும் வெப்பத்தை..

ஐஸ்குச்சியிலும் குளிர்பானத்திலும்
சில்லிட்டுப் போகும்
தொண்டையும் வெப்பமும்.

நிரம்பி வழியும்
பிள்ளைகளாலும் கிரிக்கட்டாலும்
வறண்ட ஏரிகள்..

மீண்டும் கனத்துவிடும்
மேமாத இறுதிநாளில்
மனதும் ஸ்கூள் பையும்
ஒவ்வொரு ஆண்டும்..

அன்புடன் ஆதி

ஜெகதீசன்
22-02-2008, 11:42 AM
நல்லாருக்கு ஆதி
கவிதையில் மே மாதத்தை அனுபவிக்க முடிகிறது
நன்றி

ஆதி
22-02-2008, 01:49 PM
நல்லாருக்கு ஆதி
கவிதையில் மே மாதத்தை அனுபவிக்க முடிகிறது
நன்றி

சுகமான காலங்களாயிற்றே எவரால் மறக்க முடுயும்.. பின்னூட்டத்திற்கு நன்றி ஜெகதீசன் அவர்களே..

அன்புடன் ஆதி

அமரன்
22-02-2008, 02:57 PM
தாயகத்தில் இருக்கும்வரை மேமாதமும் வழமையானதுதான். அயல்தேசத்தில் விடுமுறை. நமக்கோ விடுமுறை முடிவு.. புலம்பெயர்ந்தபின்னர் மேமாதம் வசந்தகாலம். பனிப்புகாரில்லை. என்பு மச்சை ஊடுறுவும் குளிரில்லை. பார அங்கிகள் உடலழுத்துவதில்லை. முதியோர் முதல் இளையோர்வரை சுமங்கலியான மரங்களுக்கு ஈடாக கலகலவென வீதிகள் நிறைப்பார்கள்.. அடுத்து வரும் மாதங்களில் எந்நாட்டு சொந்தங்களுடன் உறாவாடுவது. எந்த சொந்தம் எனை நாடி வருகிறது. அக்கம் பக்கம் புடைசூழ கடற்கரை விஜய திட்டமிடல்.. கார்னிவல் களியாட்டம்.. அப்பப்பா என்ன ஒரு ஆனந்த மாதமது..

நினைவுகளைக் கிளறி இப்போதே திளைக்கவைத்த ஆதிக்கு நன்றிகள் பற்பல.

அனுராகவன்
22-02-2008, 11:25 PM
மேமாதம் குதுகொளமான மாதம்
பள்ளிகளில் எனக்கு இருந்த காலங்களை நினைவுட்டியது.
அதற்கு என்றே ஒரு படம் வந்ததே..
அந்த நேரத்தில் வரட்சியும் மறுபுறம் கொளுத்தும் வெப்பம்..
அந்த மாத நினைவுகள் ஏராளம்..
அதை நினைவுட்டீய ஆதிக்கு என் நன்றி

ஆதி
23-02-2008, 04:30 AM
தாயகத்தில் இருக்கும்வரை மேமாதமும் வழமையானதுதான். அயல்தேசத்தில் விடுமுறை. நமக்கோ விடுமுறை முடிவு.. புலம்பெயர்ந்தபின்னர் மேமாதம் வசந்தகாலம். பனிப்புகாரில்லை. என்பு மச்சை ஊடுறுவும் குளிரில்லை. பார அங்கிகள் உடலழுத்துவதில்லை. முதியோர் முதல் இளையோர்வரை சுமங்கலியான மரங்களுக்கு ஈடாக கலகலவென வீதிகள் நிறைப்பார்கள்.. அடுத்து வரும் மாதங்களில் எந்நாட்டு சொந்தங்களுடன் உறாவாடுவது. எந்த சொந்தம் எனை நாடி வருகிறது. அக்கம் பக்கம் புடைசூழ கடற்கரை விஜய திட்டமிடல்.. கார்னிவல் களியாட்டம்.. அப்பப்பா என்ன ஒரு ஆனந்த மாதமது..

நினைவுகளைக் கிளறி இப்போதே திளைக்கவைத்த ஆதிக்கு நன்றிகள் பற்பல.

உங்கள் உளக்கருத்தையும் எழுதத்தான் எண்ணினேன் கவிதை மிக நீளமாய் வளர்ந்திடும் திசைமாறி பயணம் கொண்டுவிடும் என்றுதான் அவற்றை தள்ளி வைத்துவிட்டேன்.

வெளிநாட்டில் உறவுகளைப் பிரிந்து வாழும் நம் மக்களின் உணர்வுகளை உங்கள் பின்னூட்டத்தில் படமாக்கிவிட்டீர்கள் அமரன்.. உணர்ச்சிகள் தளும்பும் பின்னூட்டத்திற்கு பாராட்டுகளும் நன்றிகளும்

அன்புடன் ஆதி

ஆதி
23-02-2008, 05:48 AM
அந்த மாத நினைவுகள் ஏராளம்..
[/COLOR][/B]

வெப்பம் பழ வாசமும் உதிரும் சருகுகளின் வாசமும் முகர்ந்துவிட்டால் அந்த பழையக் காலங்களுக்கு நான் திரும்பிவிடுவது உண்டு..

பின்னூட்டத்திற்கு நன்றிகள் அக்கா..

அன்புடன் ஆதி